முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 607 41 மாதங்களாக அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவிற்கான Skilled recognised graduate visa (subclass 476) விசாவிற்கு விண்ணப்பிக்கும் ஒருவர், அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 41 மாதங்கள் ஆகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
r Subclass 476 விசா என்பது, வெளிநாடுகளிலுள்ள பொறியியல்துறை பட்டதாரிகள், ஆஸ்திரேலியாவில் சுமார் ஒன்றரை ஆண்டுகள்வரை தங்கியிருந்து கல்விகற்க அல்லது பணிபுரிய அனுமதிக்கும் விசாவாகும். இவ்வாறு ஆஸ்திரேலியா வருவதற்கு விண்ணப்பித்துவிட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்வரை காத்திருக்க நேரிடுவதால், வெளிநாட்டு பொறியியல்துறை பட்டதாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் அதேநேரம் அவர்களது காலமும் விரயமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 12 மாதங்களில் பொறியியல்துறை சார்ந்த வேலை வெற்றிடங்களில் சுமார் 97 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக Engineers Australia அமைப்பு தெரிவித்துள்ளதுடன் பொறியிலாளர்களுக்கான பற்றாக்குறையும் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வருவதற்குத் தயாராகவுள்ள பொறியியலாளர்களும் அதற்குரிய விசாவைப் பெறுவதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளதால், நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய பல கட்டுமானப்பணிகள் தாதமடைய நேரிடலாம் என Engineers Australia சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என பல நாடுகளைச் சேர்ந்த பல பட்டதாரிகள், இவ்விசாவைப் பெறுவதற்காக தாம் இன்னமும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளதுடன், தமது விசா தொடர்பில் உள்துறை அமைச்சிடம் தொடர்புகொண்டு பேச முடியாமலுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடுவதால், இடையிடையே புதுப்புது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தற்போது சுமார் 6000 பேரது விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலிக்கப்பட வேண்டிய நிலையில் உள்துறை அமைச்சுவசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர் பற்றாக்குறை மற்றும் கொரோனா பரவல் போன்றவை காரணமாகவே, விசா விண்ணப்ப பரிசீலனை காலப்பகுதி கடந்த 2018 முதல் இந்தளவிற்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?