முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

c765 பல்கலைக்கழக மாணவர் வெள்ளை வானில் கடத்தல்

பல்கலைக்கழக மாணவர் வெள்ளை வானில் கடத்தல் - இரவோடு இரவாக தொடரும் மாணவர்கள் போராட்டம் களனிப் பல்கலைக்கழகத்தின் மாணவர் செயற்பாட்டாளர் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. களனி பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 4ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இந்த மாணவர் கடத்தப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்கள் விசாரணைக்கு பின்னர் வீதியில் விடப்பட்டுள்ளார். குறித்த மாணவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு அவரின் சுயவிபரங்கள் திரட்டப்பட்டுள்ளது. மேலும்,களனி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய மாணவர் செயற்பாட்டாளர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மாணவர் மீதான இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்த

c 764 ரணில் பதவி துறக்கும் நாளை கணித்த சோதிடர்

ரணில் பதவி துறக்கும் நாளை கணித்த சோதிடர் பதவியை துறப்பார் ரணில் ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகப்படி எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு பின்னர் அவர் அதிபர் பதவியை துறக்க நேரிடும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்னும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையும் பொருளாதார ஸ்திரமின்மையும் நிலவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோட்டாபயவுக்கும் வெளியேறும் நாள் குறிப்பு ரணில் பதவி துறக்கும் நாளை கணித்த சோதிடர் | Ranil Will Leave The Office Of President ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தான் இவை அனைத்தையும் கூறுவதாகவும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்து வெளியேறும் நாளை சரியாக கணித்த கணிப்பாளர் தாம் எனவும் சரச்சந்திர மேலும் தெரிவிக்கின்றார். ரணில் பதவி துறக்கும் நாளை கணித்த சோதிடர் | Ranil Will Leave The Office Of President இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

c763 அதிகாரத் தாக்குதல் வெட்கக்கேடானது

ரணிலின் அதிகாரத் தாக்குதல் வெட்கக்கேடானது! இலங்கை- அமெரிக்க அமைப்பு கண்டனம் தென் கலிபோர்னியாவில் செயற்படும், இலங்கை-அமெரிக்க சம்மேளனம், இலங்கையின் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலான 'கோட்ட கோ கம'விற்கு வெளியில் உள்ள அமைதியான போராட்டத் தளங்கள் மீது ஜூலை 22ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. குறித்த நாளில் அந்த இடத்தை விட்டுச் செல்ல எதிர்ப்பாளர்கள் அதிகாரிகளுக்கு உறுதியளித்த போதிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வகையில், இலங்கையர்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உண்டு இந்தநிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிரான தாக்குதல்களை இலங்கை-அமெரிக்க சம்மேளனம் கடுமையாக கண்டித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு ரணிலின் அதிகாரத் தாக்குதல் வெட்கக்கேடானது! இலங்கை- அமெரிக்க அமைப்பு கண்டனம் | Ranil S Power Attack Sri Lanka Us Organization அத்துடன் நம்பகமான ஆதாரங்களின்படி, மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய போராட்டத் தளங்கள் மீது இராணுவம் மற்றும் பொலிஸார் வன்முறையில் தாக்குதல் நடத்தியதாகவும், அதே நேரத்தில் ஊடகவியலாளர

c 762 பிரபாகரனுடன் நான் இருந்த கடைசி

பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 64 ஆண்டுகள் பூர்த்தி! பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 64 ஆண்டுகள் பூர்த்தி! வாழ்வியல் உரிமைகளுக்காகவும், நீதி, நியாயம், சமத்துவம் வேண்டியும் ஈழத் தமிழர்கள் கடந்த ஆறு தசாப்த காலமாக நடத்திவரும் பல்பரிமாணப் போராட்டங்களை நோக்குபவர்கள் அவை இரண்டு தடங்களில் விரிந்து செல்வதைக் காண்பர். ஒருபுறம் அஹிம்சை வழியிலும், பின்னர் ஆயுத முனையி லும் வெடித்த போராட்டக் களங்களாகவும், மறுபுறம் அமைதி முயற்சிகள் என்ற பெயரில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற சமாதான அரங் குகளாகவும் இரு முனைகளில் அந்த வரலாற்றுத்தடம் நகர்ந்து சென்றிருக்கின்றது. அவ்வப்போது ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசுகளோடு தமிழர் நடத்திய அமைதிப் பேச்சுகள், சிறுபான்மையினரைப் பெரும்பான்மையினர் நம்ப வைத்து ஏமாற்றிய நம்பிக்கைத்துரோக நாடகங்களின் அத்தியாயங்களாகக் கழிந்திருக்கின்றன. அத்தகைய பெரும் வரலாற்றுத் துரோகத்தின் முக்கிய கட்டம் அரங்கேறியதன் 64 வது ஆண்டை இன்று நாம் பூர்த்தி செய்கின் றோம். ஆம். பண்டா செல்வா ஒப்பந்தம் என்ற நம்பிக்கையைத் தமிழருக்கு சிங்களம் வழங்கி இன்று சரியாக 64 ஆண்டுகள் பூர்த்தி

c 761 நெருப்புடன் விளையாடவேண்டாம்

நெருப்புடன் விளையாடவேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதிக்கு சீனா ஜனாதிபதி கடும் எச்சரிக்கை விடுப்பு-! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீனா அதிபர் ஜி ஜிங்பிங் ஆகிய இருவரும் நேற்று தொலைப்பேசி மூலம் பேசினர். சுமார் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் இந்த உரையாடல் நடைபெற்று உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை சீனா அதிபர் ஜியுடன் இதுவரை ஒரு முறை கூட நேரில் சந்திப்பு மேற்கொள்ளவில்லை. நான்கு முறையும் தொலைபேசி மூலம் மட்டுமே உரையாடியுள்ள நிலையில், நேற்று ஐந்தாவது முறையாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர். விரைவில் இரு நாட்டு தலைவர்களும் நேரடி சந்திப்பை மேற்கொள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்துள்ளனர்.இந்த பேச்சு வார்த்தையின் போது தைவான் பிராந்தியத்தின் கொள்கை குறித்து இரு நாட்டு தலைவர்களும் முக்கியமாக விவாதித்துள்ளனர். தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்க

c 760 மூடிய அறையில் இரகசிய உரையாடல்

மூடிய அறையில் இரகசிய உரையாடல்: ஈழத்தமிழர் - இந்தியாவின் உறவில் பெரும் பிளவு..! (VIDEO) த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்ந்த நலன்களை முன்நிலைப்படுத்தாமல், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் விருப்பத்தின் அடிப்படையில் செயற்பட்டது பற்றிய கேள்விகள், விமர்சனங்கள் அரசியல் ஆய்வாளர்களினால் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இலங்கையின் ஜனாதிபதி தெரிவு தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் கலந்துரையாடலின்போது, இந்தியத்தூதரக அதிகாரியின் தொலைபேசி உரையாடலை பகிரங்கப்படுத்திய விவகாரம், டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாவதை அமெரிக்கா விரும்புகின்றது என்று சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள்...- இவைகள் த.தே.கூட்டமைப்பை ஒரு இராஜதந்திர நெருக்கடிக்குள் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகின்றது. அத்தோடு இந்தியாவிடம் இருந்து ஈழத்தமிழரைப் பிரிக்கும் சதி நடவடிக்கை ஒன்று திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதா என்ற சந்தேகமும் சில கூட்டமைப்பு உறுப்பினர்களால் எழுப்பப்பட்டு வருகின்றது. இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்:

c 759 மாதுக்களான இலங்கைப்பெண்கள்!

மிகமோசமான பொருளாதார நெருக்கடி; விலை மாதுக்களான இலங்கைப்பெண்கள்! மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை ஆடைத்தொழிற்துறையில் வேலைவாய்ப்பை இழந்த பெண்கள் பலர் விலை மாதுக்களாகியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கை முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை மக்கள் கடும் நெருக்கடியையும் பட்டினி அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர். தற்போதைய சூழ்நிலையால் உண்டான நெருக்கடி பல குடும்பங்களை வாழ்வின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது, பெருமளவு இலங்கையர்கள் தங்கள் குடும்பங்களை கவனிப்பதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்,உணவையும் அத்தியாவசிப்பொருட்களையும் பெறுவதில் அவர்கள் நாளாந்த பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கின்றனர். மிகமோசமான பொருளாதார நெருக்கடி; விலை மாதுக்களான இலங்கைப்பெண்கள்! | A Severe Economic Crisis Lankan Women இந்த மோசமான நிலைமை நாட்டில் புதிய தகாத விடுதிகள் உருவாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளது, வாழ்வாதாரத்திற்காக பெண்கள் தங்களையே விற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதால் கடந்த சில மாதங்களாக பாலியல் தொழில் 30 வீதமாக

c 758 நிபந்தனைக்கு அடிபணிந்தார் ரணில் 8 மணி நேரம் முன் 0 SHARES Follow us on Google News விளம்பரம் கோட்டாபய தரப்பின் நிபந்தனைக்கு ரணில் இணக்கம் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்தாண்டு முழுமையடையும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இது தொடர்பில் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பொஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதான கோரிக்கை நிபந்தனைக்கு அடிபணிந்தார் ரணில் | Ranil Agrees To The Condition Of Gotabayas Side ரணில் விக்ரமசிங்கவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தற்போதைய நாடாளுமன்றத்தை பதவிக்காலம் முடியும் முன்னர் கலைக்கக்கூடாது என்பது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளில் பிரதான நிபந்தனையாக இருந்துள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள், கடந்த 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டனர். இதனடிப்படையில், நாடாளுமன்றத்தின் பதவிக்காலமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய அதிபருக்கு இருக்கும் அதிகாரங்களுக்கு அமைய தேவையானால், நாடாளுமன்றத்தை இரண்டரை ஆண்டுகளின் பின்னர் எந்த நேரத்திலும் கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிபந்தனைக்கு அடிபணிந்தார் ரணில் கோட்டாபய தரப்பின் நிபந்தனைக்கு ரணில் இணக்கம் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்தாண்டு முழுமையடையும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இது தொடர்பில் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பொஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதான கோரிக்கை நிபந்தனைக்கு அடிபணிந்தார் ரணில் | Ranil Agrees To The Condition Of Gotabayas Side ரணில் விக்ரமசிங்கவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தற்போதைய நாடாளுமன்றத்தை பதவிக்காலம் முடியும் முன்னர் கலைக்கக்கூடாது என்பது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளில்

757 சக போராளியின் மரணம் குறித்து புலிகளின் மனநில

சக போராளியின் மரணம் குறித்து புலிகளின் மனநிலை வீட்டில் உட்கார்ந்து கொண்டு எதுவுமே செய்யாமல் இறந்து போவதைக் காட்டிலும் எமது தாயகத்துக்காக போராடி மரணிப்பது சிறந்தத ு 48ரொய்ட்டர்ஸ் சிறப்புக் கட்டுரை: “சக போராளியின் மரணம் குறித்து புலிகளின் மனநிலை” தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு போராளியின் மரணம் குறித்து இதர போராளிகளின் மனோநிலை என்ன என்பது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் வடிவம்: கழுத்தில் சயனைட் குப்பி சுற்றியிருக்க… கொல்லப்பட்ட போராளி ஒருவரின் உடலை உறவினர்களின் கண்ணீருக்கும் போராளிகளின் கீதத்துக்கும் இடையே புதைத்துவிட்டு நிற்கிறார் மருத்துவர் வாமன். மரணங்களே தம்மை பலப்படுத்துவதாக அவர் கூறுகிறார். 1990 களில் நடந்த யுத்தம் ஒன்றில் தன் காலை அவர் இழந்தார். “தனியரசு பெறுவதற்காக சாவடைய தான் தயாராக இருப்பதாக” வாமன் தெரிவித்தார். போராளிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வீதியோரத்தில் பொருத்தப்பட்ட கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதில் உயிரிழந்த மூன்று போராளிகளில் வாமனின் நண்பரும் சக போராளியுமான லெப்.கேணல் தமிழ்வாணனும் ஒருவர். கெரில்லாத் தாக்கு

c 756 காத்திருந்தவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

மட்டக்களப்பில் எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற வாகனங்கள் இன்று அதிகாலை யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் 07 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 5 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. யானை கூட்டங்கள் வீதியை கடக்க முற்பட்டபோது வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சேதமாக்கிவிட்டு, வீதியை கடந்து சென்றுள்ளதாக மோட்டார் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கட்டாக்காலி யானைக் கூட்டங்களினால் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மூன்று சைக்கிள்கள் முற்றாகவும், 4 சைக்கிள்கள் சிறிதளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

c 755 விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த

விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான் ஏன் தப்பித்து ஓட வேண்டும்! மகிந்த ஆவேசம் "நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கின்றேன். நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் சிலருடன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் உரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான் ஏன் தப்பித்து ஓட வேண்டும்! மகிந்த ஆவேசம் | Why Should Recovering Country Mahinda Obsession இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,"அதியுயர் பதவிகளில் இருந்து ராஜபக்சக்கள் விரட்டியடிக்கப்படும் போராட்டத்துக்குத் திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை எனக்கு தெரியும். எனினும், நான் அமைதியாகவே இருக்கின்றேன். உண்மைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும். காலம் ஒரு நாள் பதில் சொல்லியே தீரும். விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான் ஏன் தப்பித்து ஓட வேண்டும்! மகிந்த ஆவேசம் |

c 754 இலங்கை தமிழ்ப்பெண்! குவியும் சொத்து மதிப்ப

கனடாவில் பிரபலமாகிவரும் இலங்கை தமிழ்ப்பெண்! குவியும் சொத்து மதிப்பு இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவில் பிரபல நடிகையாக மாறியுள்ளார். கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை - தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ராம் செல்வராஜா மற்றும் கிருத்திஹா குலேந்திரன் ஆகியோருக்கு பிறந்த பெண் குழந்தை மைத்ரேயியின் என்பவரே இவ்வாறு பிரபலமாகியுள்ளார். 20 வயதாக மைத்ரேயியின் பல தொடர்களில் நடித்து பிரபலமாக மாறியுள்ளார். கனடாவில் பிரபலமாகிவரும் இலங்கை தமிழ்ப்பெண்! குவியும் சொத்து மதிப்பு | Srilankan Tamil Actress Canada Maitreyi Series மைத்ரேயி ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட வாழ்க்கை மைத்ரேயி ராமகிருஷ்ணன் 30 டிசம்பர் 2001 அன்று கனடாவின் ஒன்ராறியோவில் பிறந்துள்ளார். அவர் இலங்கை-தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும், இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது அவரது பெற்றோர் இலங்கையிலிருந்து கனடாவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.தொழிலதிபர் ராம் செல்வராஜா மற்றும் கிருத்திஹா குலேந்திரன் ஆகியோர் மைத்ரேயியின் பெற்றோராவர். கனடாவில் பிரபலமாகிவரும் இலங்கை தமிழ்ப்பெண்! குவியும் சொத்து மதிப்பு | Srilankan Tamil Actr

c 753 ஜனாதிபதி ரணிலுக்கு போராட்டக்காரர்களின் அதிரடி அறிவிப்பு!

ஜனாதிபதி ரணிலுக்கு போராட்டக்காரர்களின் அதிரடி அறிவிப்பு! அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் விகாரமஹா தேவி பூங்காவிற்கு மாற்றப்படாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். எங்களுக்கு வேண்டிய இடத்தில் போராட்டம் நடத்துவோம். இது நமது அரசியல் சாசன உரிமை என அவர் குறிப்பிட்டுள்ளார். விகாரமஹா தேவி பூங்கா போன்றவற்றை போராட்டக்காரர்களுக்காக ஒதுக்குவதாக அரசாங்கம் கூறியுள்ளது. ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரை தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். ரணில் விக்ரமசிங்கவும் அவரது கூட்டாளிகளும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் திறன் கொண்டவர்கள் அல்ல. ஜனாதிபதி ரணிலுக்கு போராட்டக்காரர்களின் அதிரடி அறிவிப்பு! | Protesters Action Announcement To President Ranil அவர் ஒரு திட்டத்தை முன்மொழிந்தாரா? பிரதமராகுவதற்கு முன்பு அவரது நண்பர்கள் அவர் தொடர்புகள் மூலம் பில்லியன் டொலர்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சில அமைச்சர்கள் போராட்டக்காரர்களை விகாரமஹா தேவி பூங்காவிற்கு மாற்ற விரும்புவதாக ஐ.ம.சு.கூ அழைப்பாளர் தெரிவித்தார

c 752 விடுதலை புலிகளின் தோல்வியின் இரகசியத்தை வெளியிட்ட வைகோ!

விடுதலை புலிகளின் தோல்வியின் இரகசியத்தை வெளியிட்ட வைகோ! இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பனில் ம.தி.மு.க கட்சி பிரமுகரின் திருமண விழாவில் இன்று கலந்து கொண்ட ம.தி.மு.க. பொது செயலாளர்; வைகோ மணமக்களை வாழ்த்தி மேடையில் பேசினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ச குடும்பத்தினர். இப்போது உயிருக்கு பயந்து பல நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோட்டபய இந்தியாவிற்கு வர முயற்சி செய்வதாகவும் தெரிய வருகிறது. விடுதலை புலிகளின் தோல்வியின் இரகசியத்தை வெளியிட்ட வைகோ! | Waiko Revealed The Secret Of The Defeat Of Ltte தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி பெற்றதாக சிங்கள அரசு குறிப்பாக ராஜபக்சே கொண்டாடியபோது எனக்கு தெரியும். இன்னும்

c 751 இந்தியாவுக்கு சீனா பதிலடி

இலங்கை வரும் கப்பலால் முற்றுகிறது முறுகல் - இந்தியாவுக்கு சீனா பதிலடி சீனாவின் பதிலடி சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவது தொடர்பில் இந்தியா வெளியிட்ட கவலைக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. இதன்படி தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தவிர்க்கும் என தாம் நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கை வரும் கப்பலால் முற்றுகிறது முறுகல் - இந்தியாவுக்கு சீனா பதிலடி | China Retaliates To India சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த ஆய்வுக் கப்பலான Yuan Wang 5எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மிக்கவுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் கவலை இந்தநிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக பேச்சாளர், சீனக் கப்பலின் திட்டமிடப்பட்ட வருகையை இந்திய அரசாங்கம் கண்காணித்து வருவதாக நேற்றையதினம் தெரிவித்திருந்தார். அத்துடன் புதுடெல்லி அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை கப்பலின் வருகைக்கு எதிராக இந்தி

c 750 பொன்சேகா அதிரடி அறிவிப்பு

தலைமைத்துவத்தை வழங்கத் தயார் -பொன்சேகா அதிரடி அறிவிப்பு எதிர்வரும் ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி மக்கள் கொழும்பிற்கு வந்தால் தான் தலைமைத்துவத்தை வழங்கத்தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி கொழும்புக்கு வருமாறு மக்களுக்கு பொன்சேகா அழைப்பு விடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தலைமைத்துவத்தை வழங்கத் தயார் -பொன்சேகா அதிரடி அறிவிப்பு | Announcement By Sarath Fonseka 9 ம் திகதி கொழும்புக்கு வந்து ஒரு மாதமாவது கொழும்பில் தங்கியிருந்து இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருமாறு நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என அவர் தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த கொன்சகாவின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எந்த முடிவையும் எடுக்கவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

c 749 முழுஅளவில் தயார் திடுக்கிடும் தகவல்.

தாக்குதல் என்பதற்கு அப்பால் எங்களோடு மோதவர வேண்டாம் என்பதே இதன் கருத்து. எங்களையும் வாழவிடுங்கள். அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த முழுஅளவில் தயார் ; வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு-! ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை அந்நாடு சோதித்து வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இந்த சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இந்நிலையில், அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை சோதித்து அண்டை நாடுகளையும், அமெரிக்காவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது. இந்த சூழலில், கொரிய போரின் 69வது ஆண்டு தின நிகழ்வை நினைவுகூரும் வகையில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, அமெரிக்காவுடனான மோதல் போக்கு அணு ஆயுத ஆபத்துகளை உருவாக்கி விட்டது. சுய பாதுகாப

c 748 காலம் கடந்தும் புலிப் பயத்தில் சிங்களவர்கள் .

காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் - அசேல தர்மசிறி போரினால் பெற்றுக் கொள்ள முடியாததை நாட்டை சீர்குலைத்து அதனை பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என ஐக்கிய போர்வீரர் சமூகத்தின் அழைப்பாளர் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார். 30 ஆண்டு கால யுத்தத்தின் தியாகிகளை நினைவு கூரும் தினத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக ஒரு தந்தையும் தமிழ் இளைஞர்கள் குழுவும் காலி முகத்திடலில் நிகழ்வை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் பிரபாகரனுடன் இணைந்து போராடிய தந்தைகள் போராட்ட களத்தில் காணப்பட்டதாகவும் அது தொடர்பான புகைப்படங்கள் கூட இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கண்டியில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் - அசேல தர்மசிறி | Diaspora Supporters Behind Eviction Protest பிக்குகள் போராட்டத்திற்கு ஆதரவளித்தமை வ

c 747 ரணிலின் செயல்பாட்டை ஆதரிக்கும் அமைச்சர்.

பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் இலங்கையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapaksa) தெரிவித்துள்ளார். பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction அத்துடன் மக்கள் பலத்துடன் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் இந்த போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பாரிய நிலைமையாகும் நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction மக்கள் ஆணைமூலம் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பங்கரமான நிலைமையாகும்.

”c 746 ஆர்ப்பாட்டக்காரர்களைதேடிவலைவீசும் ரணில்.

நாட்டு மக்களுக்கு கூட்டமைப்பு விடுத்துள்ள அறைகூவல் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதில் இவ்வளவு கவனம் செலுத்துகின்ற காவல்துறையினர் நாட்டிலே நடைபெறுகிற பலவிதமான அத்துமீறல்கள், கொலைகள், கொள்ளைகள், அதை விட நாட்டின் சொத்துக்களை சூறையாடியவர்கள் என்பவர்களை கண்டுகொள்வதில்லை. இவ்வாறானவர்களை நாட்டு மக்கள் அப்புறப்படுத்தியிருந்தாலும் காவல்துறையினராலோ, நிர்வாகத்தினராலோ இப்போதுவரை அவர்களை கைது செய்ய முடியவில்லை. ஆகவே மிகவும் நேர்த்தியாக, வரவேற்கத்தக்க விதத்திலே ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்தி நாட்டு மக்கள் விரும்பிய மாற்றத்தை கொண்டு வந்தவர்களை இன்று பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களை கைது செய்ய முனைவது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் இன்று பொதுமக்கள் மீது மோசமான அடக்குமுறைகள் அரசாங்கத்தினாலே பிரயோகிக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டமொன்று 3,4 மா

c 745 கோடிப்பணத்திற்கு ஏலமா? குழம்பும் ரசியர்கள்

வாவ்… அப்படியே அள்ளி கொஞ்சனும்… மாராப்பு போடாமல் மனச காட்டி மயக்கும் ரஷ்மிகா! ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்! கன்னட திரையுலகில் நடிக்க துவங்கி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகி வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மனத்தானா . 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் கீதா கோவிந்தத்தில் தன் சிறப்பான நடிப்பால் இந்திய முழுக்க பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் மூலம் நேரடியாக தமிழில் அறிமுகமானார். இந்நிலையில் தற்போது டெல்லியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் அழகிய தேவதையாய் கவர்ச்சி குயின் போன்று நடந்துவந்த சில புகைப்படங்கள், வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்

c 744 ரணில் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - வசந்த முதலிகே

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டம் நடத்த நாங்கள் தயாராக இல்லை என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். யார் என்ன சொன்னாலும் நாட்டு மக்களுக்கான போராட்டம் காலி முகத்திடலில் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு விகாரை மகாதேவி பூங்காவில் போராட்டக்காரர்களுக்காக இடம் ஒதுக்கப்படும் என அரசாங்கத்தின் பொது பிரதிநிதிகள் கூறுவது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட நாட்டின் எரியும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்காமல் மக்களை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரணில் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - வசந்த முதலிகே | Protest Will Continue Till Ranil Resigns மக்களை அடக்க அரசாங்கம் முயற்சி இந்த போராட்டத்திற்காக விஹார மகாதேவி பூங்காவில் இடம் ஒதுக்கப்படும் என அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தெரி

c 743 எச்சரிக்கை விடுத்த இ.ரா சாணக்கியன்

இதுவே கடைசி வாய்ப்பு... எச்சரிக்கை விடுத்த இ.ரா சாணக்கியன் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றவர்களை அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்: இதுவே கடைசி வாய்ப்பு... எச்சரிக்கை விடுத்த இ.ரா சாணக்கியன் | This Is The Last Chance Shanakyan Gave A Warning இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணியாக காணப்படுகிறது. தற்போதைய அரச தலைவர்கள் வரலாற்று ரீதியிலான தவறை திருத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். இதுவே கடைசி வாய்ப்பு... எச்சரிக்கை விடுத்த இ.ரா சாணக்கியன் | This Is The Last Chance Shanakyan Gave A Warning தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருமித்த வக

c 742 தமிழர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்!

தமிழர்களை கொன்று எங்கே புதைத்தீர்கள்..! செல்வம் எம்.பி நடாளுமன்றத்தில் ஆவேசம் அவசர காலச் சட்டம் சிங்கள் மக்கள் மீது அவசர காலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்ற போது தற்போது அதிகளவில் பேசப்படுகிறது. இதே சட்டத்தை பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை தொடர்பில் எவரும் கரிசனைக்கொள்ளவில்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். கூட்டமைப்பு கடும் எதிரப்பு தமிழர்களை கொன்று எங்கே புதைத்தீர்கள்..! செல்வம் எம்.பி நடாளுமன்றத்தில் ஆவேசம் | Tna Strongly Opposes The Emergency Act இந்த அவசர காலச் சட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக தெரிவித்த அவர், வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் எங்கே எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

c 741விமல்வின் திட்டத்தை சிங்கள அரசு பின்தொடர வேண்டும் இதுவே தமிழர்களிற் விடுதலையைப் பெற்றுத்தரும்.

வடக்கு கிழக்கை பிரிக்க மறைமுக நிகழ்ச்சி நிரல் - வெளிநாட்டு படையை களமிறக்க திட்டம் சிறிலங்காவில் அரச கட்டமைப்பை வீழ்ச்சியடையச் செய்து, வடக்கு கிழக்கை பிரிப்பதே காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவசன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், அரசை வீழ்த்தும் திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கவே உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “நல்லதோ கூடாதோ தேசிய ரீதியான அரசு இருக்க வேண்டும். அரசை வீழ்த்துவது பாவமான செயற்பாடு. சியாரா லியோனில் அவ்வாறு இடம்பெற்றது. ஹைய்ரில் அவ்வாறு இடம்பெற்றது. வடக்கு கிழக்கை பிரிப்பதே காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணி வடக்கு கிழக்கை பிரிக்க மறைமுக நிகழ்ச்சி நிரல் - வெளிநாட்டு படையை களமிறக்க திட்டம் | Covert Agenda To Divide The North East Sl Army இந்த போராட்ட களத்தில் இருப்போர், ஐக்கிய நாடுகள் சபையிடம் சென்று சர்வதேச தலையீட்டை கோரியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

c740 அவுஸ்திரேலியாவில் தாண்டவம்மேலும் 100 பேர் மரணம்

கோவிட்: மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! மேலும் 100 பேர் மரணம்!! விக்டோரியாவில் 40 பேர், குயின்ஸ்லாந்தில் 21 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 30 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 100 இறப்புகள் பதிவாகியுள்ளன. கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மருத்துவமனைகளில் கோவிட் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்களன்று புதிய உச்சம் தொட்டது. திங்களன்று 5,429-ஆக காணப்பட்ட இவ்வெண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்து 5,571 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகம் (TGA) 12-17 வயதுடைய நபர்களுக்கான புரத அடிப்படையிலான Nuvaxovid கோவிட்-19 தடுப்பூசியை தற்காலிகமாக அங்கீகரித்துள்ளது. Nuvaxovid கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டல செல்கள் ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தொடங்குகின்றன. தடுப்பூசியில் நேரடி வைரஸ் இல்லை மற்றும் கோவிட்-19 தொற்றை இது உருவாக்காது. டெல்டா, ஓமிக்ரான் திரிபுகள் மற்றும் கவலைக்குரிய பிற வளர்ந்து வரும் திரிபுகளைக் கண்டறிவ

c 739 நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா

மாத்திரை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும் சர்ச்சை நோய் வந்துவிட்டாலே எந்த வயதினராக இருந்தாலும் வாயைக் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சர்க்கரை அளவு கூடுதலாக உள்ள பழ வகைகளை கூட தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். ஏனெனில் நீரிழிவு நோய் வளர்சிதை மாற்றக் கோளாறு, உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. பலருக்கு அன்னாசிப்பழத்தினை நீரிழிவு நோயாளி சாப்பிடலாமா? கூடாதா என்ற சந்தேகம் இருக்கும். மாத்திரை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும் | Diabetics Patient Eat Pineapple ஏன் என்றால் அன்னாச்சிப்பழம் வெப்பமண்டலத்தைச் சேர்ந்த சத்தான பழமாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் மற்ற சில பழங்களை விட அன்னாசியில் சர்க்கரையின் அளவு அதிகமிருப்பதால், இது இரத்த சர்க்கரையை பாதிக்க கூடியது. எனவே, அன்னாச்சி பழத்தை அளவோடு உட்கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுற

c 738 இந்தியாவில் இயற்கைகை மீறிய பெண்கள் திகில் சம்பவம்.

மாணவியின் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த ஆசிரியர் தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாணவியின் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்திருக்கிறார் ஆசிரியர். ஒடிசா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம் . ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டம். அம் மாவட்டத்தில் பரின்கியா என்கிற பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் தயானதிட்சனா என்பவரிடம் டியூஷன் படித்து வந்திருக்கிறார். டியூஷன் படிக்க வந்த அந்த மாணவியிடம் தொடர்ந்து சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார் அந்த ஆசிரியர். இதனால் பயந்து போன அந்த மாணவி, அந்த டியூஷனுக்கு போவதை நிறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் வீட்டிற்கு அருகே உள்ள கடையில் மாணவி பென்சில் வாங்க சென்றிருக்கிறார். அப்போது தயான திட்சினா மாணவியை வழி மறித்திருக்கிறார். அப்பொழுதும் மாணவியிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு மீண்டும் வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு அந்த மாணவி மறுக்கவும் , அங்கே மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து மாணவியின் தலையில் ஊற்றி இருக்கிறார் . இதில் அந்த மாணவி உடல் முழுவதும் எண்ணெய் பரவி அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்கிறார். திடீரென்று அந்த ஆசிர

c 737 ஆற்பாட்டக்காரர்களை பலி வாங்கும் ரணில்.

விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னர் பலவந்தமாக இறக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்(Video) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து குடிவரவு அதிகாரிகளால் கீழ் இறக்கப்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் திகதி இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற தனிஸ் அலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னர் பலவந்தமாக இறக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்(Video) | Travel Ban For Who Participated In The Protest சந்தேகநபர் துபாய் செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். முதலாம் இணைப்பு இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் இன்றைய தினம் வெளிநாட

c 736 எரிவாயு தட்டுப்பாடு இருக்காது - அரசாங்கம்

முதலாம் திகதியின் பின்னர் எரிவாயு தட்டுப்பாடு இருக்காது - அரசாங்கம் அறிவிப்பு எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சரவைக்கு உறுதிமொழி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய அவர், எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். டிசம்பர் இறுதிக்குள், சமையல் எரிவாயு வரிசைகள் அகற்றப்படும். இதனால், எதிர்வரும் முதலாம் திகதி முதல் மக்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ லங்கா தெரிவித்துள்ளது. முதலாம் திகதியின் பின்னர் எரிவாயு தட்டுப்பாடு இருக்காது - அரசாங்கம் அறிவிப்பு | No Gas Shortage From1 August எரிபொருள் தீவிர பிரச்சினையாக மாறியுள்ளது கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் இன்னல்களுக்கு மத்தியில், அன்றாட சமையல் நடவடிக்கைகள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை நடத்துவதற்கும், தேவையான எரிவாயுவை வழங்குவதற்கும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்ற

c 735 கொழும்பில் அதிகரிக்கும் வன்முறைகள்.

கொழும்பு பகுதியில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்! கொழும்பு, ஒருகொடவத்த மேம்பாலத்துக்கு அருகில் நபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்து சொகுசு கார் ஒன்றில் வந்த இருவரால் குறித்த நபர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் நேற்று (25-07-2022) இரவு இடம்பெற்றுள்ளது. கொழும்பு பகுதியில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்! | Colombo Wellampitiyasri Bridge Murder தாக்குதலில் பலத்த காயமடைந்த மீதொட்டமுல்லை பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர், தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கொழும்பு பகுதியில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்! | Colombo Wellampitiyasri Bridge Murder உயிரிழந்த நபர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளதுடன், அவருக்கு எதிராக இரண்டு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு பகுதியில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்! | Colom

c734 தாயகத்தில் சோக நிகழ்வு

வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட சிறுவன் கைது - யாழில் சம்பவம் வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட சிறுவன் யாழ் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட குற்றத்தில் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்னாலை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் ஏற்றிச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் பொன்னாலை காட்டு பகுதிக்குள் வயோதிப பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, வன்புணர முற்பட்டுள்ளார். தடுப்புக் காவலில் வைத்து விசாரணை அதனை அடுத்து குறித்த பெண் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில், வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

c 733 உகாண்டாவில் தங்களின் பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்துள்ளார்களா?

காணாமல் போன தமிழர்கள் உகாண்டாவில் என சந்தேகம் அரச படையினரிடம் கையளிக்கப்பட்டு அவர்களால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் உகண்டாவில் ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமானது என நம்பப்படும் தொழிற்சாலைகளில் அடிமை பணியை செய்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். “ராஜபக்ச குடும்பத்துக்குச் சொந்தமான உகாண்டாவில் உள்ள 11 தொழிற்சாலைகளில் எங்கள் பிள்ளைகள் ஊதியம் இன்றி தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். கையளித்து காணாமல் போன எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என சொல்ல முடியாதவர்கள் எமது பிள்ளைகளை கூலித்தொழிலாளிகளாக்கி வைத்திருக்கலாம். அந்த தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் வேலுப்பிள்ளை கணநாதன் என்ற தமிழர் இருக்கிறார்,'' என வடக்கு கிழக்கு மாகாண பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் யோகராசா கலைரஞ்சனி தெரிவிக்கின்றார். இந்த வருட ஆரம்பத்தில், மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு திருப்பதிக்கு புனித யாத்திரை செல்வதற்காக உகண்டாவில் உள்ள கோடீஸ்வர தொழிலதிபரும், கென்ன