முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 759 மாதுக்களான இலங்கைப்பெண்கள்!

மிகமோசமான பொருளாதார நெருக்கடி; விலை மாதுக்களான இலங்கைப்பெண்கள்!
மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை ஆடைத்தொழிற்துறையில் வேலைவாய்ப்பை இழந்த பெண்கள் பலர் விலை மாதுக்களாகியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கை முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை மக்கள் கடும் நெருக்கடியையும் பட்டினி அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர். தற்போதைய சூழ்நிலையால் உண்டான நெருக்கடி பல குடும்பங்களை வாழ்வின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது, பெருமளவு இலங்கையர்கள் தங்கள் குடும்பங்களை கவனிப்பதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்,உணவையும் அத்தியாவசிப்பொருட்களையும் பெறுவதில் அவர்கள் நாளாந்த பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கின்றனர். மிகமோசமான பொருளாதார நெருக்கடி; விலை மாதுக்களான இலங்கைப்பெண்கள்! | A Severe Economic Crisis Lankan Women இந்த மோசமான நிலைமை நாட்டில் புதிய தகாத விடுதிகள் உருவாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளது, வாழ்வாதாரத்திற்காக பெண்கள் தங்களையே விற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதால் கடந்த சில மாதங்களாக பாலியல் தொழில் 30 வீதமாக அதிகரித்துள்ளது என பாலியல் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் ஸ்டான்ட் ஒவ் மூவ்மென்ட் லங்கா தெரிவித்துள்ளது. இந்த விடுதிகளில் சில ஸ்பாக்கள் போல இயங்குகின்றன. தங்கள் குடும்பத்திற்கு மூன்றுவேளையும் உணவு வழங்குவதற்கு இதுவே ஒரே வழியாக உள்ளது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆடைத்தொழிற்சாலைகளில் தொழில்புரிந்த பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என அசிலா தந்தெனிய ஏஎன்ஐக்கு தெரிவித்தார். தற்போதைய நெருக்கடியால் பல பெண்கள்பாலியல் தொழிலில் ஈடுபடுவதை நாங்கள் அவதானித்துள்ளோம். அனேகமானவர்கள் ஆடைதொழிற்துறையை சேர்ந்தவர்கள் கொவிட் காரணமாக ஆடை தொழில்துறை பாதிக்கப்பட்டது பலர் வேலை இழந்தனர். மிகமோசமான பொருளாதார நெருக்கடி; விலை மாதுக்களான இலங்கைப்பெண்கள்! | A Severe Economic Crisis Lankan Women தற்போதைய நெருக்கடி வாழ்வாதாரத்திற்காக பாலியல்தொழிலில் ஈடுபடவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 21 வயது ரெஹான( பெயர்மாற்றப்பட்டுள்ளது) தனது நிலை குறித்து ஏஎன்ஐக்கு இவ்வாறு தெரிவித்தார். ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்த தான் எவ்வாறு பாலியல் தொழிலாளியாக மாறினேன் என்பதை அவர் விபரித்தார். ஏழு மாதங்களிற்கு முன்னர் தனது தொழிலை இழந்த அவர் பல மாத இயலாமையின் பின்னர் பாலியல்தொழிலாளியாக மாறியுள்ளார். கடந்த டிசம்பரில் ஆடைத்தொழிற்சாலையில் நான் எனது வேலையை இழந்தேன்இஅதன் பின்னர் நாளாந்த அடிப்படையில் இன்னொரு தொழில் புரிந்தேன். ஆட்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் நான் வேலைக்கு செல்வேன். ஆனால் தொடர்ச்சியாக வேலை இல்லாததன் காரணமாக என்னால் உரிய வருமானத்தை பெற முடியவில்லை. அதோடு கிடைத்த வருமானமும் எனது குடும்பத்தை பராமரிக்க போதுமானதாகயில்லை. மிகமோசமான பொருளாதார நெருக்கடி; விலை மாதுக்களான இலங்கைப்பெண்கள்! | A Severe Economic Crisis Lankan Women பின்னர் ஸ்பா உரிமையாளர் என்னை அணுகினார். தற்போதைய நெருக்கடியால் நான் பாலியல் தொழிலாளியாக மாற தீர்மானித்தேன். அவர் விடுத்தவேண்டுகோளை எனது மனம் ஏற்க மறுத்தது ஆனால் எனது குடும்பத்திற்கு பணம் தேவைப்பட்டது என அவர் தெரிவித்தார். பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 41 வயது ரோசியும் ஒருவர் ( பெயர் மாற்றம்) ஏழு வயது பிள்ளையின் தாயான அவர் விவகாரத்து பெற்றவர் தற்போது பிள்ளையின் கல்விக்கா இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் போதுமானதாகயில்லைஇ எனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் போதுமானதாகயில்லை. இதன் காரணமாகவே நான் இதனை தெரிவுசெய்தேன்இநான் கடையொன்றை நடத்துகின்றேன் அதனை தொடர்ந்து நடத்துவதற்கு பணம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டார். மிகமோசமான பொருளாதார நெருக்கடி; விலை மாதுக்களான இலங்கைப்பெண்கள்! | A Severe Economic Crisis Lankan Women மாதாந்தம் 15000 முதல் 20000 வரை உழைத்த பெண்கள் தற்போது நாளாந்தம் அதே பணத்தை உழைக்கின்றனர் இதுவும் அவர்கள் இந்த தொழிலை தெரிவு செய்வதற்கு ஒரு காரணம் என கூறப்படுகின்றது. பல பாலியல்தொழிலாளர்கள் தங்கள் ஆண் சகாக்களுடன் வாழத்தொடங்கினார்கள் ஆனால் நெருக்கடியால் ஆண்கள் அவர்களை விட்டுவிட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாது பலர் கர்ப்பிணிகளாக உள்ளனர் தற்போது இரண்டு பெண்கள் கர்ப்பிணிகளாக உள்ளனர் நாங்கள் அவர்களை பராமரிக்கவேண்டிய நிலையில் உள்ளோம் அரசாங்க தரப்பிலிருந்து எந்த உதவியும் இல்லை என எஸ்யுஎம்எல்லின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது
.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி