தமிழீழ விடுதலை புலிகளின் ஆரம்பகால புரட்சித் தோழர்கள் நடத்திய தாக்குதல்கள்…! தலைவர் பிரபாகரன் அவர்களின் புரட்சிகர போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர்களாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கத்தை ஆரம்பிக்கும் போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது, யதார்த்தமானது. ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல். 1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும். 1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)