நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்:சம்பவ இடத்திலேயே தாயும் மகனும் பலி By Rakesh 40 நிமிடங்கள் முன் 0 SHARES Report விளம்பரம் காலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கபராதுவை பிரதேசத்தில் நேற்று (31.08.2023) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வானும் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இருவர் உயிரிழப்பு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 23 வயதுடைய இளைஞரும், அதில் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த அவருடைய 51 வயது தாயாரும் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹயஸ் ரக வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)