முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 489

 லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா) அவன் ஒரு புதுமையான மனிதன் 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது? போராளிகளின் முகங்கள் இருண்டு கிடந்தன. சுட்டா அப்பா வீரச்சாவாம். அந்த வார்த்தைகள் உள்நுழையும் முன்னரே அடுத்து எதுவும் செய்யத் தோன்றவில்லை. அப்பாவைப் பிரிந்த பிள்ளைகளைப்போல எல்லோரும் தவித்துப்போனோம். ஏனென்றால் எங்களுக் கெல்லாம் அப்பாவாகவே அவன் இருந்தான். அந்த நினைவுகளைத்தான் இந்தக் குறிப்பு சொல்ல முனைகின்றது. சுட்டாவின் தொடக்ககால வாழ்க்கையே துயரமானது. திருகோணமலை சாம்பல்தீவிலே அவனது குடும்பம் வாழ்ந்து வந்தது. அது சிங்களம் எங்கள் ஊர்களை வல்வளைத்த காலம். சிறிலங்கா படைகளால் தமிழ் உயிர்கள் காரணமில்லாமல் சித்திரவதை செய்து பறிக்கப்பட்ட காலம். இந்த கொடூரத்திற்குள் சுட்டாவின் மூத்த சகோதரனும் பலியாக நேர்ந்தது. சுட்டாவிற்கு மூன்று பெண் சகோதரிகளும் ஒரு தம்பியும் இருந்தனர். தந்தையின் உழைப்பில் இயங்கியது குடும்பம். கொஞ்ச நாளில் தந்தையும் ஊர்தி விபத்தொன்றில் காயமடைந்து வேலைசெய்ய முடியாமற்ப

TAMIL Eelam news 488

 ஐ.நா தீர்மானம் நிறைவேற்றத்தால் இலங்கையில் நிலைமை மாறுமா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உண்மையிலேயே அந்த நடவடிக்கை அந்நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு உதவுமா என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த தீர்மானத்தால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஐ.நா தீர்மானமானது, இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான யோசனையாகவே பார்க்கிறேன். இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கிடையாது. அதற்கான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார். "அந்த தீர்மானத்தில், உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பை இந்த தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைமை அதிகாரிக்கு வழங்கியுள்ளது," என்றும் அம

TAMIL Eelam news 487

 ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கார் பரிசு இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் பலர் காயத்தால் விலகிய நிலையில் இளம் வீரர்கள் பிரமிப்பூட்டும் வகையில் விளையாடியதுடன், பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கும் முடிவு கட்டினர். இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், சுப்மான் கில், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இளம் வீரர்களுக்கு அவர்களது சாதனையை பாராட்டி கார் பரிசாக வழங்கப்படும் என்று மஹிந்திரா குழும சேர்மன் ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தார். இதன்படி அந்தந்த வீரர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் ஷோரூம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தமிழக வீரரான சேலத்தை சேர்ந்த டி.நட

TAMIL Eelam news 486

 நயன்தாராவுக்கும் உதயநிதிக்கும் ரகசிய உறவு இருப்பது உண்மைதான்.. கற்பூரத்தில் சத்தியம் செய்த பிரபலம் ! 68 வயது மதிக்கத்தக்க பிரபலமான நடிகர் ஒருவர் சமீபகாலமாக நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியா ஓபன் ஆக சொல்வது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.   தற்போது அரசியல் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில் ஆங்காங்கே ஒரு கட்சியை பற்றி இன்னொருவர் மாறி மாறி திட்டி பேசி ஓட்டு கேட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு காலத்தில் திமுகவிலிருந்த ராதாரவி நடிகை நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது பிஜேபிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது நயன்தாராவைப் பற்றி பேச விருப்பமில்லை என்று கூறிவிட்டு மிக முக்கியமான விஷயத்தை மீண்டும் குச்சி விட்டு விலகியுள்ளார். அது தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவைப் பற்றி நான் தவறாக பேசியதாக திமுகவினர் தன்னை நீக்கி விட

TAMIL Eelam news 485

தமிழர்கள் சாவடையும் விகிதம் அதிகரிப்பு கண்டறிய முடியாமல் தினறும் வைத்தியர்கள்.  யாழில் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்! யாழ்ப்பாணம் - புலோலி உபயகதிர்காமம் பகுதியில் குடி தண்ணீர் எடுப்பதற்கு சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். நேற்று முற்பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில் முறாவில், புலோலி தெற்கைச் சேர்ந்த 60 வயதான முருகமூர்த்தி யோகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து குடி தண்ணீர் எடுப்பதற்காக சென்ற அவர் குடிதண்ணீர் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் வீதியில் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

TAMIL Eelam news 484

 தமிழர்களுக்காக அரும்பாடுபட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார் மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இன்று யாழ் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக மன்னார் ஆயரில்ல செய்திகள் தெரிவிக்கின்றன. நல்லடக்கம் தொடர்பான செய்தி பின்னர் அறிவிக்கப் படும் எனவும் தற்போது புனித வாரம் அனுஸ்டிக்கப் படுவதனால் வருகின்ற திங்கட்கிழமை நல்லடக்கம் இடம் பெற வாய்பு உள்ளதாகவும் மேலும் தெரிக்கப் படுகிறது. மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை ஆயர் பணியில் 25 வரு­டங்­களை நிறை­வு­செய்து இன்று வெள்­ளி­விழாக் காண்­கிறார். இவர் மன்னார் மறை­மா­வட்­டத்தின் இரண்­டா­வது ஆய­ராக 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார். ஆயர் 16.04.1940 ஆம் ஆண்டு யாழ்ப்­பாணம் நெடுந்­தீவில் பிறந்தார். நெடுந்­தீவு றோ.க. பாட­சாலை, முருங்கன் மகா வித்­தி­யா­லயம், யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி ஆகி­ய­வற்றில் தனது பாட­சாலைக் கல்­வியைத் தொடர்ந்தார். கண்டி தேசிய குரு­மடம், திருச்சி புனித பவுல் குரு­மடம்

TAMIL Eelam news 483

 சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது   சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் மினிகோய் தீவுக்கு அருகில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இலங்கைக்கு சொந்தமான நெடுநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. அதனை சோதனையிட்ட போது 300 கிலோகிராம் ஹெரோயினுக்கு மேலதிகமாக ரஷ்ய உற்பத்தியான ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகளும், அதற்கு பயன்படும் 1000 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

TAMIL Eelam news 482

 ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்… 25ம் ஆண்டு வீரவணக்கநாள்- 30.03.2021 கடற்கரும்புலி  கப்டன் இளையவள் (இராசலிங்கம்.இராஜமலர்) உவர்மலை.திருகோணமலை வீரச்சாவு ::30.03.1996 கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம் கொடுத்துச் சென்றிருந்தாள். இறுதிவரை அந்தக் குப்பியை இளையவள் வைத்திருந்தாள். அவளுக்குக் குப்பி தேவையில்லைத்தான், ஆனாலும் செவ்வானத்தினுடையது என்று வைத்திருப்பதில் தோழமை………………. நட்பு……………… அந்தக் கடல்மடியில் விட்டுச்சென்ற நீங்காத நினைவுகள்…………. அவை ஓயப்போவதில்லை, ஆர்ப்பரித்துச் செல்லும் கடலைகளைப்போல. அப்போது அவள் ஓரளவுதான் நீந்துவாள். ஆழமான கடற்சுழிகள், கொந்தளிப்பு எதற்கும் எதிர்நீச்சல்போடும் திறணற்ற கற்றுக்குட்டி. நீச்சல்காரி, அன்றைய கடற்பயணம் கலகலப்பானதாக இருந்தது. ஆனாலும் கடல்நிலமை அவ்வளவு சரியில்லை. அமைதியாக இருக்கின்ற கடலில் திடீரென அலைகள் உயரக்கிளம்பலாம், காற்றுத் திசைமாறலாம். ஒரு பெரிய அலைவந்து படகு தடுமாறி அவள் விழுந்தேவிட்டாள். அவளோடு இன்னும் இருவர். அவள் ஒருமாதிரி தட்டுத் தடுமாறி மூச்சுத் திணற, மற்றவரின் கழுத்தைப்பிடித்

TAMIL Eelam news 481

 ஐ.நா. போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்கும் தருணத்தில் இலங்கையர்கள் இழந்த உறவினர்களிற்காக காத்திருக்கின்றனர் இலங்கையின் வடபகுதியில் உள்ள மன்னாரின் பள்ளிமுனை கிராமத்திலிருந்து மனுவல் உதயச்சந்திரவின் மகன் Anton Seerado  காணாமல்போய் 13 வருடங்களாகின்றன. ஆனால் இன்றும் நான்கு பிள்ளைகளின் தாயான அவர் தனது மகனின் வருகைக்காக காத்திருக்கின்றார். இது இன்னமும் முடிவிற்கு வரவில்லை என அவர் அராப் செய்திக்கு தெரிவித்தார். இலங்கையின் 26 வருடகால யுத்தத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஆணையைப் பெற்று ஒரு வார காலத்தின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்திற்கும் இன அழிப்பில் இருந்து மக்களைபாதுகாற்க தமிழீழ விடுதலைபுலிகளிற்கும் இடையிலான ஈவிரக்கமற்ற மோதல்கள் காரணமாக 80,000முதல்100,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. இலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்களால் பாகுபாடு காட்டப்பட்ட தமிழ் சமூகத்திற்காக தனிநாடொன்றை உருவாக்குவதே தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கமாக காணப்பட்டது. யுத்தம் 2009 இல் முடிவிற்கு வந்தது.ஆனால் அதற்கு ம

TAMIL Eelam news 480

 கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது! கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது! மயிலாடுதுறை மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவியை பாலியல் கொடுமைப்படுத்தி திருமணத்துக்கு வற்புறுத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.. மயிலாடுதுறை அருகே 17 வயது கல்லூரி மாணவியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய வாலிபரை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வாலிபர் ஒருவர் தனது உறவினர் வீட்டில் 18 வயது நிரம்பாத கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாக குழந்தைகள் நல இலவச அழைப்பு எண்ணிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ரம்யா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார

TAMIL Eelam news 479

 ‘சிங்களத்தில்தான் கடிதம் அனுப்புவோம்… மொழிபெயர்த்து புரிந்து கொள்ளுங்கள்’; தொல்லியல் திணைக்கள அதிகாரி எகத்தாள பதில்! நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத்திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தீவிர விசாரணை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நிலாவரை பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்க தடை ஏற்படுத்தினார் என தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பேசவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டார். அங்கு மல்லாகம் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் சுப்பிரின்டன் என்.டபிள்யூ.ஜே.சி. ஜெயக்கொடி தலைமையில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமுது பிரசன்ன, தொல்லியல் திணைக்களத்தின் யாழ் – கிளிநொச்சிக்குப் பொறுப்பான பணிப்பாளர் நளின் வீரதுங்க ஆகியோர் இருந்தனர். தவிசாளர் பெருமளவானவர்களைத்திரட்டி வந்து தொல்லியல் திணைக்களத்தின் பணிகளை தடைசெய்துள்ளார் என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதனால் அது பற்றி பேசவுள்ள

TAMIL Eelam news 478

 த்ரிஷாவை இப்படி ஒரு கவர்ச்சியான உடையில் பார்த்ததே இல்லையே.. வயசானாலும் அந்த கெத்து போகல ஜோடி என்ற படத்தின் மூலம் சிம்ரனுக்கு தோழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் த்ரிஷா. அதற்கு அடுத்த படமே சூர்யாவுடன் மௌனம் பேசியதே மிகப்பெரிய வெற்றி பெற்றது.  தமிழ் சினிமாவின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்றே கூறலாம். தற்போது வரை த்ரிஷாக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து தான் வருகிறது. முன்னணி ஹீரோக்களான தல அஜித், தளபதி விஜய் என்று டாப் ஹீரோக்களுடன் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் திரிஷா.   சில வருடங்களாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படம் பிலிம்பேர் விருதை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.  தற்போது பொன்னியின் செல்வன், பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2, ராங்கி போன்ற படங்களில் நடித்து முடித்து விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. சில தோல்விகளைச் சந்தித்தாலும் இந்த வருடத்தில் வெளிவரும் த்ரிஷாவின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிய

TAMIL Eelam news 477

 தமிழ் மொழியில், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாம்! தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக இன்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.   இதையொட்டி இன்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த நரேந்திர மோதி அங்கிருந்து காலை 11 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்று கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அடுத்ததாக, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகனுக்கு ஆதரவாக அவர் பரப்புரை செய்தார். ‘வெற்றி வேல், வீர வேல்’ இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய பொதுக்கூட்ட மேடைக்கு வந்த நரேந்திர மோதி, தமது உரையை தொடங்கும் முன் அவருக்கு எல். முருகன் வேல் ஒன்றை பரிசாக வழங்கினார். இதைத்தொடர்ந்து, ‘வெற்றி வேல், வீர வேல்’ என்று கூறி தமது பரப்புரையைத் தொட

TAMIL Eelam news 476

 இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கிய அதிகாரி! பின்னர் நடந்த விபரீதம் கம்பஹா மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கியுள்ளார். இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி போக்குவரத்து சிக்கலை தீர்க்க ஒருவரிடம் இருந்து 10,000 ரூபாய் இலஞ்சமாக பெற்றுள்ளார். இந்த நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்த போது 5,000 ரூபாய் 2 நாணயத்தாளை (10,000) அவர் விழுங்கியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

TAMIL Eelam news 475

  தலைதுண்டிக்கப்பட்டு வீதிகளில் வீசப்பட்ட சடலங்கள்! ஐ.எஸ்ஸின் வெறிச்செயல் மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் 50 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மொசாம்பிக் நாட்டில் வெளிநாட்டவர்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளது. சுமார் 50 பேர்களின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 17 வாகனங்களில், வெளியேறிய நிலையில், அவர்கள் மீது ஐ.எஸ் அமைப்பு சரமாரியான துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து தற்போது அவர்களை கொடூரமாக கொலைசெய்து உள்ளது தெரிய வந்துள்ளது. 53,000 பேர்கள் குடியிருக்கும் சுரங்க நகரமான பால்மாவை சுமார் 100 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கட்டுபாட்க்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சேகரிக்கும் பகுதியாக பால்மா அறியப்படுகிறது. இப்பகுதியில் இருந்து சுமார் 1,400 பேர் படகு மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தெருவில்

TAMIL Eelam news 474

 தளபதி கிட்டுவின் வரலாறு பகைவனைக்கொண்டே மீண்டெழுகிறது மீண்டும் தமிழீழத்தில். 1985களில் யாழ் மக்களின் காவலனாக விளங்கிய வீரத்தளபதி கிட்டுவை இன்று மீண்டும் யாழ் மக்கள் நினைவுகளோடு மீட்டிப்பார்த்து விடுதலையுணர்வை ஒருகணம் நிலைநிறுத்திக்கொள்கின்றனர். இளைய குருத்துகள் யார் தளபதி கிட்டு என தேடித்தேடி ஆராயத்தொடங்குகின்றனர். விழுந்த விதைகள் ஒவ்வொன்றும் வீரியமிக்கதென்பதை வரலாறு உணர்த்தி வருகின்றது. பகைவனே.! உனக்கு நன்றி. பகைவனே எம் தளபதி நினைவான அடையாளச் சின்னத்தின் எச்சத்தையும் அழித்தாய். ஆனால்  எமது நெஞ்சிலிருந்து எம் தளபதியின் நினைவுகளை அழிக்க முடியமா உன்னால். எம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் நினைவுகளை அழிக்க முடியுமா? பகைவனே நீ பற்றவைத்தது  வெறும் அடையாளச் சின்னம் அல்ல.! எம் இலட்சியக் கனல்.. உனது கையைக்கொண்டே அதனை பற்றவைத்துள்ளார் எங்கள் தளபதி. எம் இளைய தலைமுறை எங்கள் தளபதி கிட்டுவை இன்றிலிருந்து தேடத்தொடங்கிவிட்டது. அந்தத் தடத்திலிருந்து புதுப்புலிகள் உருவாகுவார்கள். இது உனக்கு தளபதி கிட்டு வைத்த செக்மேற் என்பதை வரலாறு உணர்

TAMIL Eelam news 473

 ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு   அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளை பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடியதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய 2 மந்திரிகளையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். உள்துறை மந்திரி பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்து. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளையும் பிரதமர் அறிவித்தார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

TAMIL Eelam news 472

 பட வாய்ப்பு இல்லனா என்ன, வேறு வழியில் லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் ரம்யா பாண்டியன்.. எல்லாம் பிக்பாஸ் மாயம்! விஜய் டிவியால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரம்யா பாண்டியன் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் லட்ச லட்சமாக சம்பாதித்து வரும் செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நடிகையாக வந்துவிட வேண்டுமென நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருபவர்தான் ரம்யா பாண்டியன். ஆனால் கிடைத்தது என்னமோ ஏமாற்றம் தான். ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்த சில படங்கள் ஓடவில்லை.   சோகமே சுமையாக சுற்றிக்கொண்டிருந்த ரம்யா பாண்டியனை குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி அழைத்து பெரிய வாழ்க்கையை கொடுத்தது. அதனை தொடர்ந்து காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சீசன் 9க்கு ஜட்ஜாக வந்தார். இந்த இரண்டு நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார். ரம்யா பாண்டியன் தான் டைட்டில் வின்னர் என ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் கடைசியில

TAMIL Eelam news 471

 எங்களைத் தூண்டிவிட்டு அதில் பயனடையப் பார்க்கின்றார்கள் - சாணக்கியன் எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. எமது வடக்க கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குகள் பெற்றெடுத்த ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். திருக்கோவிலில் இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. இது எமது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் இல்மனைட் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. எமது வடக்க கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குகள்

TAMIL Eelam news 470

 இறுதி யுத்தம் தொடர்பான இரகசிய ஆவணம் பிரித்தானியா வசம்- அம்பலப்படுத்திய கல்வியமைச்சர்! இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து பிரித்தானியாவிடம் இரகசிய ஆவணமொன்று இருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கல்வி அமைச்சரும் சட்ட மேதையுமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் பிரித்தானியாவிற்கு ஒரு சட்டமும் இலங்கைக்கு ஒரு சட்டமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமுல்படுத்தப்படுவதாகவும் சாடியுள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், எமது நாட்டை இலக்கு வைத்து ஐ.நா கட்டமைப்பின் சட்டங்களை மீறி கொண்டுவரும் நடவடிக்கைகளை நாம் நிராகரிப்பதுடன், எமது நாட்டிற்கு ஆதரவளித்த நாடுகளுடன் இணைந்து எமது நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமது நாட்டிற்கு ஒரு சட்டமும் பிரித்தானியாவுக்கு இன்னுமொரு சட்டமே உள்ளது. போரின் இறுதிக்கட்டம் குறித்து உண்மையை கண்டறிய 2.8 மில்லியன் டொலர்களை செலவழிப்பதற்

TAMIL Eelam news 469

 இதே நிலைமை நீடித்தால் தோல்வி உறுதி! ராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டு வருவதாகவும் இந்த உண்மையை புரிந்துக்கொண்டு அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவில்லை என்றால், அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் வெற்றி பெற முடியாது எனவும் ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தின் ஜனரஞ்சகம் குறைந்து போயுள்ளது. நாம் யதார்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்க வேண்டிய அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய மக்கள் ஆதரவுடன் தற்போது இருக்கின்றதா? எமக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது. மக்கள் மத்தியில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது. இதனை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், நாம் முன்நோக்கி செல்லும் போது மேலும் கீழ் நோக்கி செல்ல நேரிடும். இப்படியான நிலைமையில் அடுத்த தேர்தலில் அரசாங்கம் எப்படி வெற்றி பெறும் என்பதை சிந்தித்து

TAMIL Eelam news 468

 தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! அரசாங்கத்திற்கு பகிரங்க தகவல் சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்ற அடிப்படைகளில், தம்மை இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நிலைநிறுத்தும் நிலைமையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வாழும், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின், “ஜனநாயகத்துக்கான ஆனந்தியர்கள்” என்ற அமைப்பு நேற்றிரவு நடத்திய இணையரங்கத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆனந்த கல்லூரி இலங்கையின் புகழ் பெற்ற சிங்கள பெளத்த கல்வி நிறுவனம். இலங்கையின் பிரபல சிங்கள அரசியல் நண்பர்களை உருவாக்கிய கல்லூரி இதுவாகும். ஆகவே இதன் பழைய மாணவர்களாகிய நீங்கள், “இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்” என்ற நிகழ்வை நடத்துவது சாலப்பொருத்தமானது. இலங்கையில் சிங்கள மொழி பேசுகின்றவர்கள், பெளத்த மதத்தை பேணுகின்றவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மை. அதில் எமக்கு பிரச்சினை இல்லை. அதுபற்றி உண்மையில் நான் மகிழ்கிறேன். ஆனால், இந்த சிங்கள, பெளத்தம் மட்டும்

TAMIL Eelam news 467

 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், 300-க்கு மேற்பட்ட தனிநபா்களை தடை செய்தார் கோட்டபாயா .. யார் யார் ? பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(28)வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் வசிக்கும் சுமார் 35 தமிழர்களும் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். இவா்களில் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்தவர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளார்.   தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, கனடிய தமிழர் தேசிய அவை, பிரத்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து கனடா தமிழ் இளையோர் அமைப்புக்கள், உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(WTCC) ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சிவரூபன் தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளார். 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மருத்துவ

TAMIL Eelam news 466

 தமிழர்கள் யார் முன்னும் தலை குனிந்தது கிடையாது; ஆனால் இப்போ இப்படியாகிட்டு.. ராகுல்காந்தி பேச்சு! திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார்.   அதனை தொடர்ந்து அடையாறில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது, இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்து போராட நான் இங்கு வந்துள்ளேன் என்பதை எனது அனுபவம் மூலம் உங்களுக்கு கூறுகிறேன். சில காலங்களுக்கு முன்னர் அமேதி தொகுதியில் நான் எம்.பி.யாக இருந்த பொது ஒரு இளமையான தலைவர் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்தார். அந்த தலைவர் பாஜக தலைவர் அமித்ஷாவினை சந்திக்கும் புகைப்படத்தை நான் பார்த்தே. அந்த தலைவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தற்போது பாஜகவில் இணைந்துகொண்டார். அந்த புகைப்படத்தில் அமித்ஷா ஒரு இருக்க