முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 482

 ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்…

25ம் ஆண்டு வீரவணக்கநாள்- 30.03.2021

கடற்கரும்புலி 

கப்டன் இளையவள்

(இராசலிங்கம்.இராஜமலர்)

உவர்மலை.திருகோணமலை

வீரச்சாவு ::30.03.1996


கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம் கொடுத்துச் சென்றிருந்தாள். இறுதிவரை அந்தக் குப்பியை இளையவள் வைத்திருந்தாள். அவளுக்குக் குப்பி தேவையில்லைத்தான், ஆனாலும் செவ்வானத்தினுடையது என்று வைத்திருப்பதில் தோழமை………………. நட்பு……………… அந்தக் கடல்மடியில் விட்டுச்சென்ற நீங்காத நினைவுகள்…………. அவை ஓயப்போவதில்லை, ஆர்ப்பரித்துச் செல்லும் கடலைகளைப்போல.


அப்போது அவள் ஓரளவுதான் நீந்துவாள். ஆழமான கடற்சுழிகள், கொந்தளிப்பு எதற்கும் எதிர்நீச்சல்போடும் திறணற்ற கற்றுக்குட்டி. நீச்சல்காரி, அன்றைய கடற்பயணம் கலகலப்பானதாக இருந்தது. ஆனாலும் கடல்நிலமை அவ்வளவு சரியில்லை. அமைதியாக இருக்கின்ற கடலில் திடீரென அலைகள் உயரக்கிளம்பலாம், காற்றுத் திசைமாறலாம்.


ஒரு பெரிய அலைவந்து படகு தடுமாறி அவள் விழுந்தேவிட்டாள். அவளோடு இன்னும் இருவர். அவள் ஒருமாதிரி தட்டுத் தடுமாறி மூச்சுத் திணற, மற்றவரின் கழுத்தைப்பிடித்து ஆதரவு தேட, இருவரையும் தூக்கிப் பயணம் முடிந்து திருமபினர்.


லெப்.கேணல் மாதவியக்காவிற்கு இந்தக் கதைபோய்விட்டது.


“இளையவள் நீந்தத் தெரியாமல்தானே அப்படிச் செய்தனை?” என்று கேட்க,

“இல்லையக்கா. நான் அவையளுக்கு நீந்தத் தெரியுமோ எண்டு பாக்கிறத்துக்குத்தான் அப்படிச் செய்தனான்”.


என்று சிரிக்காமல் கூறி, நடந்ததை அப்படியே தடம்புரட்டிவிட எல்லோருக்கும் ஒரே சிரிப்பு.


கடைசிக் காலங்கள் எல்லோரையும் குடல் அதிரச் சிரிக்கவைத்த கணப்பொழுதுகள்,,,,,,,,,,,,,, அவளுக்கு முதற் சண்டையும், கடைசிச் சண்டையும் அதுதான். அவளது சாவுக்கான நாள் குறித்தாயிற்று. அந்த நாளில்தான் அவளது பாசமான அண்ணனுக்குத் திருமணவீடு. இவளது வீட்டுக்காரர் இவளை விடுமுறையில் விடுமாறு கேட்க, முதலில் மறுத்துவிட்டாள். ‘நாள்’ தாண்டிப்போனால் தன் வாய்ப்பு போய்விடுமே என்ற ஏக்கம் அவளுக்கு.


“இளையவள் நீங்கள் வீட்டை போங்கோ, இன்னொருதரம் போக வாய்ப்பு உங்களுக்கு வரும்தானே!”


என்றபோதும் ஒரேயடியாய் மறுத்து, பின் தன் தமையனுடன் பொய் ஒரு நாள் நின்றுவிட்டு, கல்யாணத்திற்கு இல்லாமல் வந்துவிட்டாள்.


1996.03.30 அன்று இரவு கடலலைகள் அதிர்ந்து குலைய, எங்கள் இளையவள் கரைந்து போனாள். சுண்டிக்குளம் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப் பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன.


அண்ணனின் திருமணத்திற்கென திருகோணமலையிலிருந்து வந்த அம்மா திரும்பிப்போக முன்னர், தான் போய்விட வேண்டும், இல்லாவிட்டால் அம்மா அலைக்கழிவாரென்ர அவளின் விருப்பப்படியே அவள் போனாள்.


இளையவள் தன் அண்ணனின் மகளைப் பார்த்து வரைந்த ஓவியம்.


களத்தில் (26.06.1996) இதழிலிருந்து


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?