முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news b173

 அன்பான உறவுகளே, அவுஸ்திரேலியாவில் வாழும் அனைத்து மக்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் சனத்தொகை கணக்கெடுப்பில் கலந்துகொள்ளமுடியும். இதனை இணையவழியாக (online) உங்கள் வீட்டுக்கு அனுப்பப்படும் பதிவிலக்கத்தை (Census number) கொண்டு அல்லது நேரடியாக இணையதளம் ஊடாக பதிவிலக்கத்தை பெற்று பூர்த்தி செய்யமுடியும். ஒரு வீட்டில் உள்ள ஒருவரே அவ்வீட்டில் உள்ள ஏனையவர்களுக்கும் பூர்த்தி செய்யமுடியும் என்பதால், இதனை உடனடியாக இணையவழியாக (online) பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். முன்னைய சனத்தொகை கணக்கெடுப்புகளில் தமிழர்களின் எண்ணிக்கை சரியாக பூர்த்தி செய்யப்படாததால், அதனை முழுமைப்படுத்தும் நோக்கோடு அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து தமிழர் அமைப்புகளும் இணைந்து, இச்சனத்தொகை கணக்கெடுப்பில் வீட்டில் பேசப்படும் ஆங்கிலம் தவிர்ந்த இன்னொரு மொழி (Does the person speak a language other than English at home?) என்பதற்கு TAMIL எனவும், எமது பூர்வீகம் (What is the persons ancestry?) என்பதற்கு TAMIL எனவும் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இச்சனத்தொகை கணக்கெடுப்பானது, ஒரு பிரதேசத்திற்கு தேவை

TAMIL Eelam news b172

 நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 170 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் தென்மேற்கு சிட்னியைச் சேர்ந்த 60 வயதுகளிலுள்ள நபர் என தெரிவிக்கப்படுகிறது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 210 பேரில் 88 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 122 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஆகக்குறைந்தது 21 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு வீதமானோர் 40 வயதுக்கு குறைவானோர் என மாநில சுகாதார அமைச்சர் Brad Hazzard தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவும் இப்பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் சுகாதார அமைச்சர் Brad Hazzard கோரிக்கைவிடுத்தார். இந்தப்பின்னணியில் Fairfield,

TAMIL Eelam news b171

 பெண்களை காப்பாற்றச் சென்று பரிதாபமாக உயிரிழந்த இலங்கைத் தமிழ் அகதி! தமிழ் நாட்டில் நெல்லை கோபாலசமுத்திரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில், 52 வயதுடைய சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் கோழி பண்ணையில் வேலை செய்து வந்தார். அவர் திசையன்விளை எம்.ஜி.ஆர். பஸ் நிறுத்தும் இடத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பெண்கள் சிலர் வீதியை கடந்து உள்ளனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க சந்திரன் திடீரென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த போதும், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திசையன்விளை பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

TAMIL Eelam news b170

  LTTE   என்ற பெயரை நினைத்து நினைத்து சிங்களவர்கள் உளவியல்ரீதியாக செத்துக் கொண்டுயிருப்பதாக உலககில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய காலணிகள்? இலங்கை அரசாங்கம் எடுத்த உடனடி நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனையுடன் சித்தரிக்கப்பட்ட நைக் முத்திரை காலணிகள், தம்மால் தயாரிக்கப்படவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நைக் நிறுவனத்தை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனையுடன் சித்தரிக்கப்பட்ட நைக் (NIKE) முத்திரை காலணிகள் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளமை குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நைக் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, குறித்த உற்பத்தி, தம்மால் தயாரிக்கப்படவில்லை என அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தமது புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் நடைமுறைக்கு ஏற்ப பொர

TAMIL Eelam news b169

 யாழில் வீதியோரம் தடுமாறி விழுந்த நபர் பலி! வீதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் திடீரென தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதுமலை மற்றும் உரும்பிராயை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடையவரே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சிவலிங்கப் புலியடியச் சந்தியில் பயணித்த போது, அவர் திடீரென வீதியில் உந்துருளியில் இருந்து சரிந்து வீதியோரத்தில் வீழ்ந்துள்ளார். இதனை அடுத்து அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news b168

 இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு வெளியானது இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிசாலைகளிற்கு தீர்வை காண்பது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் எனவும்  இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பது குறித்த தனது பொறுப்பை இலங்கை நிறைவேற்றவேண்டும் என தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி முரளீதரன் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான தனது எழுத்துமூல பதிலில் இதனை தெரிவித்துள்ளார். பல்லின பல்மத சமூகம் என்ற இலங்கையின் குணாதிசயத்தை பேணுவதற்கான முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளித்து வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுக்குமாறும் தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறும் இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது என முரளீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களும் சமத்துவம் பாதுகாப்பு ஐக்கியத்துடன் வாழக்கூடிய பல்லின பல்மத பல்மொழி சமூகம் என்ற இலங்கையின் குணாதி

TAMIL Eelam news b167

 இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் இத்தனை பேரா இலங்கையில் இன்றைய தினம் இதுவரையில் 2,455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 306,657 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 275,212 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,380 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

TAMIL Eelam news b166

 யாழில் சிறிலங்கா புலநாய்கள் அட்டகாசம் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்! யாழ். பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீதும் அங்கு உள்ள பெண்ணொருவர் மீதும் வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (2021.07.29) பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கம் அல்வாய் பகுதியில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வரோதயம் மேரி ஜோசப்பின் (சந்திரா) என்ற பெண்ணே இவ்வாறு வாள்வெட்டிற்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

TAMIL Eelam news b165

 வன்முறையை பின்தொடரும் தமிழர்கள் அதை பழக்கிய சிங்களவர்கள் வேடிக்கை பார்ப்பு, யாழில் அரச அலுவலகம் ஒன்றில் பெண் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து! யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அதே அலுவலகத்தில் பணியாற்றும் இளம்பெண் உத்தியோகத்தரை கத்தியால் தலையிலும் முகத்திலும் குத்திவிட்டு, குளியல் அறைக்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் நேற்று (28) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் ஒரு தலைக் காதலினாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும் தெரியவருகிறது. அலுவலகத்தில் வைத்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, மலசலகூடத்துக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக்கொண்டு அந்த உத்தியோகத்தர் இருந்து விட்டார். அலுவலக ஊழியர்கள், காயப்பட்ட பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பகுதியால் சிவில் உடையில் வந்த காவல் துறை  சம்பவத்தை அறிந்து, அங்கு சென்றனர். மலசலகூடத்தில் மறைந்திருந்தவரை வெளியில் வருமாறு அழைத்துள்ளனர். எனினும், உள்ளேயிருந்து எந்தப் பதிலும் வராததால் காவல் துறை கை

TAMIL Eelam news b164

 வட்டுவாகலில் 49 ஏக்கரை உரிமைகோரிய சீனர்!  தென்னிலங்கையில் வசித்துவரும் சீன நாட்டவர் ஒருவருக்கு முல்லைத்தீவு வட்டுவாகலில் கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்துடன் தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்டையீட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து ளெியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதை அடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

TAMIL Eelam news b163

 யாழில் தீக்காயங்களுடன் பெண் ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் – கட்டைக்காடு, முள்ளியானை பகுதியில் எரிகாயங்களுக்குள்ளான 2 பிள்ளைகளின் தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கணவன் அடுப்படியில் பெற்றோல் போத்தலை வைத்துள்ளதாகவும், இதை அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் தீ பற்றியுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த யோகேஸ்வரன் பாலரஞ்சிதா (வயது- 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி எரிகாயங்களுக்கு உள்ளான அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் நேற்று காலை உயிரிழந்தார். இதன்போது,இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்று மேற்கொண்டுள்ளார்.

TAMIL Eelam news b162

 புலி வேஷம்…கவனம்! -இதயச்சந்திரன்- எதிரிகளும் எம்மை அழித்தவர்களும், விடுதலைப்புலிகளின் பெயரைச் சொல்லாமல் யாழ்ப்பாணத்தில் காலூன்ற முடியாது என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். மறைந்த மகேஸ்வரனின் தம்பியாரும், விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடனே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தோம் என்கிறார். ஐதேகவில் இருந்தவாறே புலிப்புராணம் பாடுகிறார் விஜயகலா மகேஸ்வரன். இவர்களுக்கு விடுதலைப் புலிகள் மீது ஏன் திடீரென்ற பாசம் பொங்கிக் கொண்டு வருகிறது என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இவர்களின் ஆட்சிதான் யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது. இராணுவம் காவல்துறை எல்லாமே இவர்களின் கட்டுப்பாட்டிலுள்ளது. ஆகவே ‘ஆவா’ வாள்வெட்டுக் குழுக்களின் ரிஷிமூலத்தை இவர்கள் அறியமாட்டார்களா?. புனர்வாழ்வு பெற்றதாகக் கூறப்படும் புலிப்போராளிகளின் நடமாட்டத்தினை ஒவ்வொரு கணமும் அவதானிக்கும் அரச புலனாய்வாளர்களுக்கு, சமூக விரோதக்கும்பல்களையும் ஆவா குழுக்களையும் கண்டு பிடிப்பது அவ்வளவு கடினமான விடயமா?. சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதென ஆட்சியின் பங்காளர்கள் கூறுவது நகைப்பிற்கிடமானது. அதுவும் நல்லாட்சி அரசின் பிரதமராக இருக்கும் ரணில

TAMIL Eelam news b161

 பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்   கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்- தோழி உயிரிழப்பு மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்ஜிஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்த பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். ‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக பல முறை கர்நாடக மாநில விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜெயந்தி கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் தற்போது அவர் மரணமடைந்துள்ளார். இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

TAMIL Eelam news b159

 கொழும்பில் வசிக்கும் பெண் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயன்ற பிரித்தானியா நபர் பெண்ணொருவரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி பிரித்தானியா வசிக்கும் நபரொருவரால் கப்பம் பெற்றுக் கொள்வதற்கு அனுப்பப்பட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கொழும்பு மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினால் நேற்று செவ்வாய்கிழமை கொம்பனி வீதி பிரதேசத்தில் வசிக்கும் நபர்கள் இருவர் 7 இலட்சம் ரூபா கப்பம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய பெண்ணொருவர் கடந்த இரு ஆண்டுகளாக நபரொருவருடன் தொடர்பினைப் பேணி வந்துள்ள நிலையில், பின்னர் இவ்விருவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இருவரும் தொடர்பில் இருந்த போது வட்சப் ஊடாக பெற்றுக் கொண்ட குறித்த பெண்ணின் புகைப்படங்களை இங்கிலாந்தில் வசிக்கும் நபர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார். புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்கு சந்தேகநபர் கு

TAMIL Eelam news b158

 விடுதலைப் புலிகளின் தலைவரை கோபப்படுத்திய மரணம் - களத்திலிருந்த நேரடி சாட்சியின் தகவல் காலம் கடந்து வெளிவரும் உன்மைகள், பாதுகாப்பு பிரிவினருக்கு தேவைப்பட்ட சீலன் என்றழைக்கப்பட்ட சார்ள்ஸ் அன்ரனி, இராணுவ கமாண்டோ படையணியின் தாக்குதலில் மரணமடைந்ததால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடுமையாக கோபமடைந்திருந்ததாக உபாலி பெரேரா தெரிவித்துள்ளார். சார்ள்ஸ் அன்ரனி, பிரபாகரனின் நெருங்கிய நண்பன் என்பதால் பதில் தாக்குதல்களை படையினர் மீது மேற்கொள்வதற்கு அவர் திட்டம் வகுத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று, இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழத்துக்கான முதலாவது நகர்வு, 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை சம்பவத்துடன் ஆரம்பமானது. இந்த நிலையில், யாழ்ப்பாணம், திருநெல்வேலி தாக்குதல்களிலிருந்து தப்பிய இராணுவ அதிகாரியான உபாலி பெரேரா அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பகிர்ந்து கொண்ட விடயத்தை ஊடகமொன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் அவர், அக்காலத்தில், இராணுவத்தில் சேர்ந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான

TAMIL Eelam news b157

 பிரிட்டனில் கொரோனாவின் கதை முடிந்தது ? உண்மையில் பெரும் வெற்றி பெற்று விட்டது ! பிரித்தானியாவில் 7 வது நாளாக, இந்திய உருமாறிய கொரோனா வைரஸ் மற்றும் பிரேசில் உரு மாறிய வைரஸ் இவை இரண்டின் தொற்றும் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை அடுத்து தடுப்பூசிகள் போடப்பட்டதன் பலனை, நாம் பெற்றுள்ளோம் என்று சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இனி பிரித்தானியாவில் கொரோனா தொற்று என்பது ஒரு பெரிய விடையமே அல்ல என்ற அளவு நிலமை மாறிவிட்டது. ஹேட் இமியூனிட்டி என்ற, தடுப்பு சுவர் கொண்ட பாதுகாப்பு வலையம் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் கொரோனா வைரசால் பரவ முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே…   இனி கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் தேவை இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. 3ம் அலை 4ம் அலை என்று இனி எந்த ஒரு அலையும் அடிக்கப் போவது இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

TAMIL Eelam news b156

 இலங்கையில் இன்றைய கொரோனா நிலவரம் நாட்டில் மேலும் 48 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,99,869 ஆக அதிகரித்துள்ளது.

TAMIL Eelam news b155

 முல்லைத்தீவிலும் சீன ஆதிக்கம்? நாளை காணி அளவீடு முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை நில அளவை மேற்கொள்வதற்காக காணி உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நாளை வட்டுவாகலில் காணி அபகரிக்க இராணுவம் முயற்சி செய்யலாம் எனவும், ஒன்று திரண்டு எதிர்க்க அனைவரும் முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக வட்டுவாகலில் 617 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டது. நல்லாட்சி அரசு காலத்திலும் காணி சுவீகரிப்பு இடம் பெற்றது. இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளை சீனாவிற்கு விற்பதற்கான நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன. காணிச் சுவீகரிப்பை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் கட்சிகள் ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு - நிறுத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

TAMI Eelam news b154

 அவுஸ்திரேலியாவில் தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் பலி! அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெல்பன் Dandenong பிரதேச வீடொன்றில் இந்த சம்பவம் நேற்று 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் ரித்திஷ் கிருஷ்ணநீதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டின் Gas heater மூலம் ஏற்பட்ட தீ, பற்றி எரிந்து வேகமாக வீட்டின் ஏனைய இடங்களுக்கும் பரவியிருக்கிறது. ரித்திஷ் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் போகமுடியாதளவுக்கு வீட்டினை தீ சூழ்ந்து எரிந்திருக்கிறது. ரித்திஷின் தாயார் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மகனை காப்பாற்றுவதற்கு முயற்சிசெய்துள்ளார். அவரது கைகளில் படுகாயமேற்பட்டபோதும் மகனைக்காப்பாற்ற முடியவில்லை. இந்த சமயத்தில், அவர்களது அயலவர் ஒருவரும், அந்த வீட்டில் தங்கியிருந்த குடும்ப நண்பரும் இணைந்துஅறையை உடைத்துக்கொண்டு உள்ளே போய் ரித்திஷை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அதற்கிடையில் ரித்திஷ் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்றபோது ரித்திஷின் தகப்பனார் வீட்டிலிருந்து

TAMIL Eelam news b153

 கட்டுப்படுத்த முடியாத பாலியல் வருத்தமும் குழந்தை கொலைகாரர்களாக மாறும் பெண்களும். திருமணமாகாமல் கர்பமான இளம்பெண்…. குழந்தை பிறந்த உடனே தாய் செய்த கொடூரம்…. நீதிமன்றம் கொடுத்த புதுவித தீர்ப்பு…. திருமணமாகாத நேபாள இளம்பெண் கர்ப்பமான நிலையில் குழந்தை பிறந்தவுடன் மண்டை ஓட்டை நசுக்கி கொலை செய்தது தொடர்பான வழக்கில் அவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் புதுவித தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமாகாத தற்போது 24 வயதாகும் பபிதா என்னும் இளம்பெண் 6 மாத கர்ப்பமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருமணமாகாமல் இருந்ததால் தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட பபிதா இங்கிலாந்தில் அல்டர் ஷார்ட் என்னும் நகரத்திலுள்ள பூங்காவிற்கு சென்று அங்கேயே குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.   அதன்பின் இவர் அந்தக் குழந்தையை எடுத்து செல்லாமல் அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சுமார் 4 நாட்கள் கழித்து அப்பகுதிக்கு சென்ற பூங்காவின் தொழிலாளர் ஒருவர் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறை அத

TAMIL Eelam news b152

 சிங்களக்காடையர்கள் இளம் பெண்களைக் கடத்தி பாலியலிக்குப் பின் கொலை செய்வதாகத் தகவல் தமிழர்கள் அச்சத்தில் . யாழில் காணாமல் போன தமிழ் யுவதி!  யாழில் வசித்து வந்த யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.தெல்லிப்பளையில் பொலிஜ் பிரிவில் வசித்து வந்த யுவதியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கட்டுவன் மேற்கு, தெல்லிப்பளை அய்யனார் கோவிலடி பகுதியில் வசித்து வரும் செல்வராசா கீர்த்தனா (27) என்பவர் நேற்று (25) மாலை 4.30 மணியளவில் வீட்டில் இருந்து துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மேலும், மனநிலை பாதிக்கப்பட்ட இவர் ரோஸ் நிற பஞ்சாபி அணிந்திருந்தார். இவரை எங்கு கண்டாலும் உடனடியாக கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.  0762896596,  0765874880, 0763156488

TAMIL Eelam news b151

 ஆலயத்திற்கு சென்று திரும்பிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி - மனைவி பலி: கணவன் மற்றும் பிள்ளை வைத்தியசாலையில் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன், அவரது கணவர் மற்றும் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இதில் திருகோணமலையைச் சேர்ந்த பாமதி ஞானவேல் என்ற ஆசிரியையே பலியாகியுள்ளதுடன், அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், 7 வயதான பிள்ளை திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  வெருகல் முருகன் ஆலயத்திற்கு முச்சக்கரவண்டியில் சென்று திரும்பி வருகின்றபோது காரொன்று கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியின் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.    சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

TAMIL Eelam news b150

 ஜனாதிபதியின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே வடமாகாணசபையின் பிரதம செயலாளராக தமிழ் தெரியாத ஒருவரின் நியமனம் ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வடமாகாணசபையின் பிரதம செயலாளராகத் தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த நியமனம் தொடர்பில் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னைய வடமாகாணசபை உறுப்பினர்களின் எதிர்ப்புக் கூட்டம் யாழ்ப்பாணம் இளம் கலைஞர் மன்றத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், வலு நீங்கிய வடமாகாணசபையின் முன்னைய அங்கத்தவர்கள் பலரையும் ஒருங்கே சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இக் கூட்டத்திற்கு வழி அமைத்த திரு.சிவாஜிலிங்கம், திரு.ஐங்கரநேசன் போன்றோருக்கும் எங்கள் அவைத் தலைவர் திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்! எமது புதிய சிங்கள பிரதம செயலாளர

TAMIL Eelam news b149

 மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட விளாவெட்டுவான், நாவற்காடு பிரதேசத்தில் உள்ள உணவுக்கடை ஒன்றிலிருந்து இளம் குடும்பதஸ்தரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு பிள்ளைகளின் தந்தையான பரமானந்தம்-கிரிதரன் வயது (35) என்பவர் தனது உணவகத்தில் வழமை போன்று உணவுப்பொருட்களை தனது உதவியாளருடன் விற்பனை செய்து இரவுச்சாப்பாடு உண்டு விட்டு தனது கடையின் அறையினுள் இருவருமாக நித்திரை செய்ததாகவும் பின்னர் அவரின் உதவியாளர் அதிகாலை வேளையில் அவரை தட்டி எழுப்பியபோது இறந்த நிலையில் காணப்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவுக்கு அமைய வெல்லாவெளி பிரதேச பிரிவுக்குட்பட்ட திடீர்மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு கட்டளையிட்டார். மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news b148

 நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 141 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் ஒருவர் 30 வயதுகளிலுள்ள பெண் எனவும் இவருக்கு ஏற்கனவே இனங்காணப்பட்ட வேறு நோய்நிலைமைகள் எதுவும் இருந்திருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.  கோவிட் தொற்று இளம் வயதுள்ளவர்களையும் தாக்கும் என்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுவதாக Premier Gladys Berejikilian தெரிவித்தார். உயிரிழந்த மற்றவர் 70 வயதுகளிலுள்ள பெண் ஆவார். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று பதிவாகிவருகிறது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 141 பேரில் 87 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 54 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஆகக்குறைந்தது 38 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவ

TAMIL Eelam news b147

 வெலிக்கடை சிறை படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவு இன்று 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலைகளின் ஒரு முக்கிய படுகொலை சம்பவமாக பதிவாகிய வெலிக்கடை சிறை படுகொலைகளின் 38 ஆம் ஆண்டு நினைவு இன்றாகும். 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட இந்த வெலிக்கடை சிறை படுகொலைகளின் நினைவு கூரல் நிகழ்வுகள் தாயகம் மற்றும் புகலிட நாடுகளில் இடம்பெற்று வருகின்றது. சிறை அதிகாரிகளின் பங்களிப்புடன் தமிழ் அரசியல் கைதிகள் மீதான தமது படுகொலை திட்டத்தின் ஒரு கட்டமாக வெலிக்கடை படுகொலைகள் கறுப்பு யூலை காலகட்டத்தில் இடம்பெற்றிருந்தன. அன்றைய நாளில் கோடாலி, கத்தி, அலவாங்கு சுத்தியல், இரும்பிக் கம்பிகளால் கொடுரமாக தமிழ் கைதிகள் தாக்கிகொல்லப்பட்டிருந்தனர்; 25 ஆந் திகதி 2 மணி முதல் மாலை ஐந்து மணியளவில் முதற் கட்டப் படுகொலைகள் இடம்பெற்றிருந்தன. அதில் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த குட்டிமணி, தங்கதுரை ஜெகன் ஆகியோர் உட்பட மொத்தம் 29 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர். குட்டிமணி மற்றும் ஜெகன் ஆகியோரின் கண்கள் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெக்கப்பட்டு அவரகளது உடல்கள் குத்திக் கிழிக்கப்பட்டு உறு

TAMIL Eelam news b146

 குயின்ஸ்லாந்து விபத்தில் இந்தியச்சிறுமியும் தாயும் மரணம்! தந்தையும் இரு மகன்களும் காயம்!! குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியப்பின்னணி கொண்ட தாயும் மகளும் மரணமடைந்துள்ளனர். இரு மகன்களும் தந்தையும் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். நேற்றுமுன்தினம் வியாழன் அதிகாலை 7.20 மணிக்கு இவ்விபத்து  சம்பவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த 35 வயதான Lotsy Jose மற்றும் அவரது 6 வயது மகள் Catelyn Rose Bipin ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர். Lotsy Jose, கணவர் Bipin Ouseph மற்றும் 3 பிள்ளைகள் என ஐந்துபேர் அடங்கிய குடும்பம், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Orange பகுதியிலிருந்து பிரிஸ்பேனுக்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து சம்பவித்திருக்கிறது. Lotsy Jose குடும்பத்தின் கார் Toowoomba அருகே Captains Mountain பகுதியில் வைத்து ட்ரக் ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. Queensland accident - Supplied இதையடுத்து தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட அதேநேரம் கணவனும் இரு மகன்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குயி

TAMIL Eelam news b145

 இறுக்கமான உடையில் யோகா பண்ணிய கீர்த்தி சுரேஷ்.. ஏங்கிப் போய் மூச்சு வாங்கும் ரசிகர்கள் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னுடைய அழகால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.   தமிழில் மிக விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டார். இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து பார்ப்பதற்கே பரிதாபமாக தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்டார் என்பது ஞாபகம் இருக்கிறதா.   இன்னமும் அதே தோற்றத்தில் தான் மெயின்டெயின் செய்து வருகிறாராம். ஆனால் அது படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. என்ன இருந்தாலும் கீர்த்தி சுரேஷிடம் அந்த பழைய கொலுக்மொழுக் தேகம்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்களாம். இதனால் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவரிடம் தெளிவு படுத்துகிறார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. இ

TAMIL Eelam news b144

 செத்து விட்ட தமிழர்களும் பயத்தில் நாளுக்கு நாள் செத்துக் கொண்டுயிருக்கும் சிங்களக்காடையர்களும், இலங்கைக்கு எதிராக போராட சுவிஸில் உதயமானது ‘ நிதர்சன்’ அமைப்பு -தென்னிலங்கை ஊடகம்    இலங்கைக்கு எதிராக எதிர்காலத்தில் போராட சுவிட்ஸர்லாந்தில் பிறந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதர்சன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பெசல் நகரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, 'தமிழீழ இளைஞர்' என்ற பெயரில் அடையாள அட்டையை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது. சுவிட்ஸர்லாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்படவில்லை என்பதால், தமிழ் இளைஞர்களை இந்த அமைப்பில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்காக மாதாந்தம் 10 சுவிஸ் பிராங்குகளை மக்களிடம் இருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. இலங்கையின் வடக்கில் உள்ள இளைஞர்களும் இந்த அமைப்பில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த புதிய அமைப்பு விடுதலைப் புலிகளின் புதிய தலைமுறை என ஜெனிவாவில் உள்ள தமிழர் தரப்புத் தகவல்கள் கூறுவதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. 

TAMIL Eelam news b143

 சிங்களவர்களிற்கு சார்வாகப்பேசுவபர்கள் கவலைப்படும் காலம் வந்து விட்டது. தமிழே உச்சரிக்கத்தெரியாதவர் வடக்கின் பிரதம செயலாளரா?: சுமந்திரன் கண்டனம் வடக்கு மாகாணத்தின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி உச்சரிக்கத் தெரியாத ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திலேயே பிரதம செயலாளர் பதவிக்குத் தகுதியான 12உத்தியோகத்தர்கள் இதற்காகக் காத்திருந்தனர். அதிலும் குறிப்பாக 1991ஆம்ஆண்டு நிர்வாக சேவைக்குத் தேர்வான7 அதிகாரிகளும், 1995ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்கு தேர்வான 3 அதிகாரிகளும் இதனை எதிர்பார்த்தபோதும் செல்வாக்கை மட்டும் தகுதியாகக்கொண்டு 1995ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்குத் தேர்வானவருக்கு பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டதாகவே காணப்படுகின்றது. பிரதம செயலாளர் பதவி என்பது மக்களோடும் உத்தியோகத்தர்களோடும் நேரடியாகவே தொடர்புபட்ட மாகாண ரீதியிலான ஒரு பணியாகும். அந்தப்

TAMIL Eelam news b142

 லெப். செல்லக்கிளி அம்மான் அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று… யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் 23.07.1983 அன்று சிறிலங்கா படையினர் மீதான கரந்தடி கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைசிறந்த கெரில்லா தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப். செல்லக்கிளி அம்மான் அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று… மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மானின் வீர வணக்க நாளும் வரலாற்று நினைவுகளும். லெப்.செல்லக்கிளி அம்மான் சதாசிவம் செல்வநாயகம்  தமிழீழம்(யாழ் மாவட்டம்) தாய் மடியில் 15.06.1953 மண் மடியில் 23.07.1983 தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்ற திருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்க வளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவ

TAMIL Eelam news b141

 பிள்ளையான், கருணாவுடன் இந்தியா பேச்சு - பின்னணி என்ன? முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரை இந்திய தூதரகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. வெகுவிரைவில் கொழும்பில் உள்ள தூதரகத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. பேச்சுவார்த்தைக்கான காரணங்கள் இதுவரை வெளிவராத நிலையில், இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

TAMIL Eelam news b140

 யாழ் இளைஞர்களின் பொறியில் மாட்டி வசமாக சிக்கிய மோசடி முகவர்கள்! யாழ் மாவட்டம் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற இளைஞர்களை ஏமாற்றிய முகவர்களை , சாவகச்சேரி இளைஞர்கள் பொறி வைத்து பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தில், கொழும்பிலிருந்து வந்த முகவர்கள் உள்ளிட்ட மூவரை, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தடுத்து வைத்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்ற போது, இளைஞர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஆட்களை அனுப்பும் முகவர்கள் மூவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் விடுதி நடத்தும் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மோசடியாளர்களிடம் தென்மராட்சி பிரதேசத்தில் மட்டும் 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோசடியாளர்கள் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 1 இலட்சம் ரூபாவை முதலில் பெற்றுள்ளனர். வெளிநாட்டுக்கு செல்ல முயல்பவர்களிடம், பணத்தை வங்கி மூலம் அல்லாமல் நேரடியா