முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b146

 குயின்ஸ்லாந்து விபத்தில் இந்தியச்சிறுமியும் தாயும் மரணம்! தந்தையும் இரு மகன்களும் காயம்!!



குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியப்பின்னணி கொண்ட தாயும் மகளும் மரணமடைந்துள்ளனர். இரு மகன்களும் தந்தையும் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.


நேற்றுமுன்தினம் வியாழன் அதிகாலை 7.20 மணிக்கு இவ்விபத்து  சம்பவித்துள்ளது.


கேரளாவைச் சேர்ந்த 35 வயதான Lotsy Jose மற்றும் அவரது 6 வயது மகள் Catelyn Rose Bipin ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர்.


Lotsy Jose, கணவர் Bipin Ouseph மற்றும் 3 பிள்ளைகள் என ஐந்துபேர் அடங்கிய குடும்பம், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Orange பகுதியிலிருந்து பிரிஸ்பேனுக்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து சம்பவித்திருக்கிறது.


Lotsy Jose குடும்பத்தின் கார் Toowoomba அருகே Captains Mountain பகுதியில் வைத்து ட்ரக் ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.


Queensland accident -

Supplied

இதையடுத்து தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட அதேநேரம் கணவனும் இரு மகன்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குயின்ஸ்லாந்து சிறுவர் மருத்துவமனையில் தாதியாக பணிபுரிவதற்கான வாய்ப்பு Lotsy Jose-க்கு கிடைத்ததையடுத்து இக்குடும்பம் பிரிஸ்பேனுக்கு குடிபெயர்ந்துசென்றபோதே விபத்து சம்பவித்ததாக இவர்களது உறவினர்கள் SBS மலையாள சேவையிடம் தெரிவித்தனர்.


கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த Lotsy Jose வேலைவாய்ப்புக்காக மிகுந்த சிரமப்பட்டதாகவும், இவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைத்தவுடன் இந்தியாவிலிருந்த கணவரும் 3 பிள்ளைகளும் நான்கு மாதங்களுக்கு முன்னர்; ஆஸ்திரேலியா வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Lotsy Jose-Bipin Ouseph தம்பதியர் ஆஸ்திரேலியாவில் தமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆரம்பிக்கவிருந்த தருணத்தில் பேரிடியாக இச்சம்பவம் இடம்பெற்றுவிட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குடும்பம் முதலில் வியாழக்கிழமையே  Orange-இலிருந்து பிரிஸ்பேனுக்கு புறப்படத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அங்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து புதன்கிழமை பிற்பகலே அவர்கள் புறப்பட்டுவிட்டதாகவும், இடையில் இவ்விபத்து சம்பவித்துவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில் Lotsy Jose குடும்பத்திற்கு உதவும் நோக்கில் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிதிசேகரிப்பு ஊடாக ஒரேநாளில் 3 லட்சம் டொலர்களுக்கு மேல் பண உதவி கிடைத்துள்ளது.


கணவன் Bipin Ouseph-க்கு இன்னமும் வேலைவாய்ப்பு எதுவும் கிடைக்காததால் இப்பணம் அவருக்கும் இரு பிள்ளைகளுக்கும் மிகவும் உதவும் எனவும் இறுதிநிகழ்வுக்கும் இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப்பின்னணியில் குறித்த விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும், 38 வயது ட்ரக் ஓட்டுநருக்கு பாரிய காயமெதுவும் ஏற்படவில்லை எனவும், அவர் தமது விசாரணைகளுக்கு உதவிவருவதாகவும் குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதேநேரம் விபத்து குறித்த தகவல்கள் அல்லது வீடியோ ஆதாரங்கள் இருப்பின் அவற்றைத் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.







கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?