முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news b621

எந்த இரத்த வகையை சேர்ந்தவர்களை கொரோனா இலகுவில் தொற்றும்? வெளியான ஆய்வு முடிவு டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனை இரத்த வகைகளை அடிப்படையாக கொண்டு கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இதில், AB மற்றும் B இரத்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் திகதி முதல் ஒக்டோபர் 4ம் திகதிவரை தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2,586 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வை ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை நடத்தியது. இந்த ஆய்வில், B இரத்த பிரிவை கொண்ட ஆண் நோயாளிகள் அதே இரத்தக் குழுவைக் கொண்ட பெண் நோயாளிகளைக் காட்டிலும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் AB இரத்த பிரிவை உடைய 60 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.

TAMIL Eelam news b620

தொடரும் சிங்களக் கைக்கூலிகளின் அட்ட அட்டகாசம் யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு (PHOTOS) யாழ். வலிகாமம் கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (வயது 51) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சாவகச்சேரி - தனங்கிளப்பு, அறுகுவெளியில் வீடு ஒன்றிலிருந்து வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வீட்டில் நடமாட்டமில்லாததை அவதானித்த அயல்வீட்டுக்காரர் வீட்டை எட்டிப் பார்த்த போது துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அவர் தகவல் வழங்கியுள்ளார். இதனடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

TAMIL Eelam news b619

வவுனியாவில் கர்பமான 12 வயது சிறுமி ஒரு வேளை சாப்பாட்டிற்காக கற்ப்பை இழந்துள்ளார் ? என்ன ஒரு கேடு கெட்ட தனம் இது ? வவுனியா, ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களுமே, ஆன பாடசாலை மாணவி ஒருவர் வயிறு வலிக்கிறது என்று வைத்தியசாலை செல்ல. மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். அவர் கர்பமாக இருப்பத்தை அறிந்து கொண்டார்கள். கர்பத்தை கலைப்பது, குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகும் என்பதனை வைத்தியர்கள் உணர்ந்த நிலையில். அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். குறித்த சிறுமி தன்னை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், ஓமந்தை மாதர் பனிக்கர்ம கிழங்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரை அடையாளம் காட்டினார்.. இதனை அடுத்து வைத்தியர்கள் பொலிசாருக்கு அறிவிக்கவே அன் நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். அன் நபருக்கும் இந்தச் சிறுமிக்கு எவ்வாறு பழக்கம் ஏற்பட்டது என்று கேட்டால் குலை நடுங்குகிறது… மிக மிக வறுமையில் இந்த 12 வயதுச் சிறுமியின் குடும்பம் இருந்துள்ளது. பல தடவை வடையும் டீயும் வாங்கிக் கொடுத்த இன் நபர். பின்னர் உணவுப் பொட்டலங்களையும் வாங்கிக

TAMIL Eelam news b618

தைரியமிருந்தால் சர்வதேச விசாரணைக்கு வாருங்கள்! சவால் விடுத்த கஜேந்திரன் தற்போதைய அரசாங்கம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபிக்க சர்வதேச விசாரணைக்கு வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendren) தெரிவித்துள்ளார். மேலும், துணிவிருந்தால் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், முள்ளிவாய்க்காலில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரை இராணுவத்தினர் கொடூரமாக தாக்கியுள்ளனர். இது ஒரு மிருகத்தனமான தாக்குதல், இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்துடைப்புக்காக கைது செய்யப்பட்ட 3 இராணுவ வீரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழர்கள் மீது இராணுவம் முன்னெடுத்த பாரிய யுத்தக் குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை அரசாங்கம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூப

TAMIL Eelam news b617

வெளியுறவுக்கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள் ? ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியை ஒருங்கிணைக்க முடியவில்லை. இது ஒரு ஓட்டம். அதேசமயம் சுமந்திரன் தலைமையிலான ஒரு சட்டவாளர் குழு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதாக சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.ஆனால் அக்குழுவில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை.அதுமட்டுமல்ல அப்படி ஒரு குழு போகவிருப்பதுபற்றி தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தெரியாது.எனவே அக்குழுவை கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ குழுவென்றோ அல்லது தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ குழுவென்றோ கூறுவது பொருத்தமாக இருக்காது. இது இன்னொரு ஓட்டம். இந்த இரு ஓட்டங்களுக்குள்ளும் இணையாது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனித்து நி

TAMIL Eelam news b616

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று இன்றிரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை இன்று மதியம் கிணற்றில் விழுந்த நிலையில்,மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றிரவு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

TAMIL Eelam news b615

அவுஸ்திரேலியாவில் கோர விபத்தில் சிக்கிய தமிழ் தம்பதியினர்! கணவருக்கு ஏற்பட்ட பரிதாபம் அவுஸ்திரேலியா - விக்டோரியா மாநிலத்தின் வடக்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மெல்பனிலிருந்து 142 கிலோ மீற்றர் தொலைவில் - Bendigo பிராந்தியத்தில் அமைந்துள்ள - Toolleen என்ற இடத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று படகினை கட்டியிழுத்துக்கொண்டு வடக்கு நெடுஞ்சாலை பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, வீடொன்றிலிருந்து வெளியே வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் மாணிக்கம் இரட்ணவடிவேல் (வயது 68) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,அவரது மனைவி படுகாயங்களுடன் மெல்பன் Alfred வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றைய வாகனத்திலிருந்த பயணியொருவர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TAMIL Eelam news b 614

தகப்பன் உயிரோடு இருக்கும் வரை தான் தாய் பாசம் இது மனித வாழ்க்கையில் நடக்கும் உன்மை ஆனால் இதை எவரும் சொல்ல முன் வருவது இல்லை. கதைகணவன் இறந்த நிலையில் மகனை வீட்டைவிட்டு அடித்து விரட்டிய தாய்: யாழில் இடம்பெற்ற சம்பவம் கொடிகாமம் பகுதியில் 12 வயது மகனைவீட்டை விட்டு விரட்டிய அடித்த தாய் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாயின் கணவர் இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் இருக்க வேண்டாம் என கூறி 12 வயது சிறுவன் அடித்து விரட்டப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் இரவு முழுவதும் வீதியில் நின்று உள்ளார். இதனையடுத்து இன்று காலை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. கொடிகாமம் பொலிசார் இன்று மதியம் தாயை கைது செய்ததுடன் மகனையும் பொலிஸ் காவலில் வைத்துள்ளனர். கடந்த 7ம் திகதி தாய் காயப்படுத்தியதால் குழந்தை ஐந்து நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதேவேளை, சந்தேகநபர் நாளை சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக 4 பெண் பிள்ளைகளோடு வந

TAMIL Elam news b613

சிறப்பான முறையில் நடைபெற்ற மாவீரர் நாள். 27 November 2021 குயின்ஸ்லாந்து மாநிலம் RUNCORN என்ற இடத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. பெரும் திரளான தாயக உறவுகள் கலந்து கொண்டு மாவீரர் செல்வங்களிற்கு அஞ்சலி செலித்தினார்கள். குயின்ஸ்லாந்து மாநில நேரப்படி 6 மணிக்கு நிகழ்வு ஆரம்பம் ஆனது. முதலாவது நிகழ்வான பிரதான பொதுச்சுடரை லெப்ரின் பொற்தேவன் அவர்களின் சகோதரன் பவான் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை கரும்புலி மேஜர் காந்தி அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை திரு ரவி அவர்கள் ஏற்றி வைத்தார். முதன்மை ஈகைச் சுடரை லெப் கேணல் டிக்கான் அவர்களின் சகோதரி. அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மாவீரர் கல்லறைகளிற்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். தொடர்ந்து தாய் நாட்டை மீட்பதற்காகப்போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும் அதன்பால் கொல்லப்பட்ட எமது உறவுகளிற்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் படத்திற

TAMIL Eelam news b 611

பிரித்தானியாவில் புத்துயிர் பெற்றது மாவீரர் தினம் - அலையெனத் திரண்ட மக்கள் ( படங்கள்) பிரித்தானியாவில் ஒக்ஸ்போட்டில் தமிழீழத் தாயகத்தின் மாவீரர் துயிலும் இல்லங்களைப் பிரதிபலிக்கும் கல்லறைகள் அமைத்து உணர்வெளிச்சியுடன் தொடங்கப்பட்டது மாவீரர் நாள். உலகப்பரப்பில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் நடைபெறும் மாவீரர் நாள் என்பதில் ஒக்ஸ்போட்டில் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறும் மாவீரர் நாள் முக்கியத்துவம் பெறுகிறது. மாவீரர் வாரம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து மாவீரர் நினைவெழுச்சி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று இன்று (27) மாவீரர் நாள் புத்தெழுச்சி பெற்றுள்ளது. மாவீரரது பெற்றோர், மாவீரர்களின் துணைவியர் ,மாவீரத் தந்தையின் பிள்ளைகள், மாவீரர் குடும்ப உறவுகள், களங்களில் அவர்களுடன் நின்று களமாடிய நண்பர்கள், உயிரிலும் மேலான தாய்த்தமிழ் சொந்தங்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி விளக்கேற்றும் இத்தருணம் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் மாவீரர் திருமுகங்கள் வந்து நிழலாடி சுடர் விட்டெரிவதை அவர்களது கண்களில் வழிந்தோடும் கண்ணீர் துளிகள் வெளிப்படுத்தி நிற்கிறது.

TAMIL Eelam news b610

வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சி பெற்றது மாவீரர் தினம் (படங்கள்) முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. மாவீரர் மதிவாணனின் தந்தை தர்மகுலசிங்கம்(கிளியன்) பொதுச்சுடரினை ஏற்றி வைக்க, மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈகைச்சுடரினை ஏற்றினர். வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. துயிலுமில்ல வளாகத்தில் இருந்த காவல்துறையினர் அனைவரையும் அஞ்சலி செய்ய துயிலுமில்ல வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை. நூற்றுக்கணக்கானோர் வீதியில் நின்றே அஞ்சலி செலுத்தினர். புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

TAMIL Eelam news b609

யாழில் வீட்டில் விளக்கேற்றியவர்கள் தடுத்து வைப்பு யாழ் சாவகச்சேரியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் வீட்டில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியவர்கள், வீட்டுக்குள்ளேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ந.ரவிராஜின் இல்லத்தில் இன்று அஞ்சலி நிகழ்வு நடந்தது. நிகழ்வுகள் சாவகச்சேரி பிரதேசசபையின் உபதவிசாளர் பாலமயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். அப் பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டில் அஞ்சலி நிகழ்வு நடந்ததையடுத்து, வீட்டை இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மூவரும் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வந்த பின்னரே செல்ல முடியுமென கூறி, அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ந.ரவிராஜின் துணைவியாரான சசிகலா தற்போது கொழும்பில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b608

விடுதலை புலிகளின் பிரிகேடியருக்கு யாழில் அஞ்சலி விடுதலை புலிகளின் பிரிகேடியருக்கு யாழில் உணர்வு பூர்வமாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிக்கேடியர் தீபன், திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை வேலாயுதபிள்ளை தமது வீர புதல்வர்களுக்காக ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தனது விட்டில் செய்துள்ளார். இறந்தவர்களிற்காக அழுதவர்கள் மத்தியில், அழுதவர்களிற்காக உங்கள் வாழ்க்கை அற்பணித்தவர்கள் நீங்கள், எங்கள் இனத்தின் காவல் தெய்வங்கள் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

TAMIL Eelam news b607

பாரீஸில் தலைவரின் பிறந்தநாளை கடை உரிமையாளருடன் சேர்ந்து கொண்டாடிய பிரெஞ்சு பெண்மணி! பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் இன்று (26) தலைவர் பிறந்த நாள் விழா கடைகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஒரு கடையில் தலைவர் படம் வைக்கப்பட்டு இனிப்புக்கள் வழங்கப்பட்டன. மேலும் குறித்த கடைக்கு வந்த பிரெஞ்சு இன பெண்மணி ஒருவர் இவற்றை அழகாக பார்த்து கொண்டிருந்தார், அவருக்கு இனிப்பு வழங்கிய கடையின் உரிமையாளர் இவர் எங்களின் உயிர் தலைவர் என்று குறித்த பெண்மணியிடம் கூறியுள்ளார். அதற்கு ஆச்சரியத்துடன் பார்த்த அந்த பெண்மணி, இவர் எங்களின் பிரான்ஸ் மன்னர் நெப்போலியனை போல் உள்ளார் என்று அடக்கத்துடன் பெருமையாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தான் வீடு சென்று இவற்றை பற்றி தேடி படிக்க போகின்றேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். காலங்கள் செல்ல செல்ல தலைவர் புகழ் அதிகமாகி கொண்டுதான் செல்கின்றது, நிறைய இனத்தவர்கள் தலைவரை பற்றி அறிந்து வைத்துள்ளனர் என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், சில இடங்களில் நாம் எம்மை தமிழர் என்று அறிமுகப்படுத்தும் போது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி நீ புலியா என்றுதான்… அவ்

TAMIL Eelam news b606

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ மக்கள எமது மாநிலதில் தீயசக்திகளின் குழப்பநிலை நடைபெறுவதை தாங்கள் அறிவீர்கள். எமது அமைப்பிற்கு எதிராச் செயல்பட்டு வேறு வேறு பெயர்களை வைத்து தேசிய நிகழ்வுகளை செய்தவர்களிற்கு கடந்த காலங்களில் நீங்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளீர்கள். ஏமாற்றம் அடைந்த எதிரிகள் தற்பொழுது எமது அனுமதியின்றி எமதுஅமைப்பின் பெயரை பயன்படுத்தி மக்களை குழப்புவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். நாம் மூன்று வாரங்களிற்கு முன்னரே சென்ற வருடம் செய்த இடம் முதியவர்கள் . குழந்தைகள் இருப்பதற்கு அதுவசதியற்ற இடமாக காணப்பட்டமையாலும், இம்முறை கடுமையாக மழை பெய்யும் என்ற காரணத்தாலும் நாங்கள் மண்டபத்தோடு சேர்ந்த ஒர் இடத்தை ஏற்பாடு செய்துள்ளோம். எவரும் குழப்பம் அடையாமல் கீழே உள்ள முகவரிக்கு வருகை தருமாறு அன்புடனும் உருமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்

TAMIL Eelam news b605

வல்வெட்டித்துறை இது ஊரல்ல.. ! உணர்ச்சியின் உச்சம் ! வல்வெட்டித்துறை இது ஊரல்ல.. ! உணர்ச்சியின் உச்சம் !இது மண்ணல்ல…! மான ரோசத்தின் மறுபெயர் !! ஊறணி” தொடங்கி.! ஊரிக்காடு” வரைக்கும்.! ஈழம்” மட்டுமே பேச்சு !வ ல்வெட்டி” தொடங்கி.!கம்பர்மலை” வரைக்கும்.! வரலாறாய் ஆகிப் போச்சு !!! 1930 களிலேயே .!அமெரிக்காக் கண்டம் நோக்கி.! அன்னபூரணி” கப்பல் அனுப்பிய.! ஆளுமை கொண்டவர் பிறந்த இடமிது !!! குட்டிமணி, கேணல் கிட்டு,.! ஆழிக்குமரன் ஆனந்தன்,செல்வச்சன்னதி முருகன், இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்…! அமெரிக்க அதிபர் தொட்டு.! அன்றாடக் கூலி வரைக்கும்.! ஆச்சரியத்துடன் கூகிளில் தேடிய அற்புத பூமியிது !!! ஏட்டில் எழுதப்படாத .! எட்டாவது அதிசயம்.! இந்த மண்ணில் தான் நிகழ்ந்தது !!! ஆம்…..! உலகத் தமிழர்களின் !உண்மையான “குலசாமி”! இங்கு தான் பிறந்தான் !!! உன்னையும் , உன் குடும்பத்தையும்.! வெளிநாடு அனுப்பி வைத்துவிட்டு..! தன்னையும் , தன் குடும்பத்தையும்.! நாட்டுக்குக் கொடையாக்கிய நாயகன் அவன் !!! புழுப்புடித்த மாவும் .! புழுங்கிப்போன அரிசியும்.! துருப்பிடித்த பொருட்களும்.! துரோகமும் கண்டும்…..! ஒதுங்கி வாழ்ந்த ஓர் இன

TAMIL Eelam news b604

எப்போ நீ வருவாய் தீயாகி நம் தேசம் எரிகின்றது தெருவெல்லாம் ஓலங்கள் கேட்க்கின்றது, வந்த பகை நம்மினத்தை கொன்றொழிக்க செந்தமிழும் சங்கமம் ஆகின்றது தீயினில் ” பிணங்ளின் வாசனை நம்மை விட்டு போகவில்லை விடியல் பிறக்கும் என்று விடியும் வரை நினைக்கின்றோம் ‘ நீ வருவாய் என நாம் துடிக்கின்றோம் வரும் நாளை எண்ணியே தவிக்கின்றோம் ” கார்த்திகையும் பிறந்திடிச்சு கரிகாலன் உன் பேச்சு கேட்டிட மனசு தவிக்கின்றது ” ஈழவன் தாசன்