முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news b426

தமிழர் தாயகத்திற்குள் நுழைந்த மற்றுமொரு நாடு - ரகசிய நகர்வு அம்பலம் தமிழர் தாயகத்தில் உள்ள தீவகத்தில் சீனாவின் முதலீடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது சிறிலங்காவிற்கான பாகிஸ்தான் தூதுவரும் இரகசியமான முறையில் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் (Vinthan Kanakaradnam) தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்தியாவிற்கு அருகில் உள்ள குறித்த தீவுப் பகுதிகளில் அதனை எதிரி நாடுகளின ஊடுருவலானது தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் பாரத தேசத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ புலம்பெயர் தேசங்களில் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தெரிவித்திருக்கின்றார். வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா,கனடா, ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர் தேசங்களில் இயங்கக்கூடிய அமைப்புகளை இலங்கை அரசாங்

TAMIL Eelam news b425

காதலியின் அந்தரங்கப்படங்களை கணவனிற்கு அனுப்பிய மாணவன்! சிதைந்த குடும்ப வாழ்க்கை பேஸ்புக் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பிய பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் கடந்த 28ஆம் திகதி கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ரூ. 200,000 பிணையில் மாணவர் விடுவிக்கப்பட்டார். அத்துடன் சந்தேகநபரை நவம்பர் 02 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார். இரத்மலானையில் வசிக்கும் மருத்துவபீட மூன்றாம் ஆண்டு மாணவர் தொடர்பில் அக்மீமனவில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். திருமணமான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், பெண்ணிற்கும், பல்கலைக்கழக மாணவனிற்குமிடையில் பேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களின் நட்பு காதலாகிய நிலையில் இருவரும் பலமுறை நேரில் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளதுடன், வீடியோ அழைப்பு மூலமும் அந்தரங்கமாக தோன்றியபோது, இளம்பெண்ணின் அந்தரங்க காட்சிகளை பல்கலைகழக மாணவன் பதிவு செய்துள்ள

TAMIL Eelam news b424

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை - பிரதமர் மஹிந்தவின் அதிரடி உத்தரவு நாட்டில் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவு குறைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கி, அவற்றுக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகளால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். அதற்கமைய, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அதற்கான தீர்வுகளை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சில இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் தொழில் துறையையும் அதனால் ஏற்றுமதி பொருளாதாரத்தையும் பாதிக்கும் என தொழில்சார் வல்லுநர்கள் அண்மையில் குறிப்பிட்டனர். இந்த நிலையில் அதற்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார் என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

TAMIL Eelam news b423

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிகளிடம் சஜித் விடுத்துள்ள கோரிக்கை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்சார் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க சிறிலங்கா அரசாங்கம் மீது பிரயோகிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) வலியுறுத்தியுள்ளார். எனினும் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்திவிட வேண்டாம் என்றும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்காவுக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினைத் தொடர்ந்து வழங்குவது குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக விஜயம் செய்துள்ள ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று முன்தினம் முதல் தமது மதிப்பீட்டுப்பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிகள் குழு சிறிலங்கா எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை நேற்றுமாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால்

TAMIL Eelam news b422

உள்ளே இருந்த வண்ணம் வெறியர்களின் உளவாளியாக செயல்படும் சுமந்திரன். சுமந்திரனை புறந்தள்ளி இரகசிய சந்திப்பில் கூட்டமைப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்துள்ள நிலையில் அதில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பானது கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது. கடந்த நாட்களில் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு கூட்டமைப்பிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் என்பன பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. ஏற்கனவே உள்வீட்டு விவகாரம் பூதாகரமாக இருந்த நிலையிலேயே மேற்படி பிரச்சினையும் பாரிய மோதலை ஏற்படுத்தியிருந்தது. இதன் பின்னணியிலேதான் இன்று விசேட சந்திப்பிற்கு சம்பந்தன் தலைமையில் ஏற்பாடு இடம்பெற்றுள்ளது. எனினும் இச்சந்திப்பிற்கு சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAMIL Eelam news b421

விரல்கள் மேலே சக்கரம் சுழல்வது போல தெரிகிறதே இதுதான் “கடவுளின் கை” நாசா வெளியிட்ட 1986ம் ஆண்டு கால்பந்தாட்ட உலக கோப்பை தொடரில், மரடோனா அடித்த ஒரு கோல் இந்த வார்த்தையை பொது வெளியில் பிரபலப்படுத்தியது. அதன்பிறகு, இப்போது, நாசா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் கடவுளின் கை என்ற வார்த்தையை பொது வெளியில் பேச வைத்துள்ளது. 1986 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு மரடோனா தலைமைவகித்தார். அந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தியது அர்ஜென்டினா. கோப்பையை வென்றதோடு, தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை மரடோனா பெற்றார். அதேநேரம், அந்த தொடரின் காலிறுதிப் போட்டியில் ஒற்றையாளாகப் பந்தை பாஸ் செய்து எடுத்துச் சென்று கோல் அடித்தார் மரடோனா. அந்த கோல்தான், கடந்த நூற்றாண்டின் சிறந்த கோலாகக் கருதப்படுகிறது. ஆனால், அதே போட்டியில் நடுவர் பார்க்கத் தவறிய நிலையில், மரடோனாவின் கையில் பட்டுச் சென்ற பந்து கோல் ஆகியிருந்தது. அதை கடவுளின் கை என்று வர்ணித்தனர். இப்போது நாசா விஷயத்திற்கு வருவோம். நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிரா

TAMIL Eelam news b420

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழு கூட்டமைப்புடன் ஆராய்வு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை அடுத்து வருடம் நீக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வுகூறியுள்ளது. மிக மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு பதிலாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அதனை பயன்படுத்தி வருவதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவிற்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராயும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழு நேற்று மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை, அதன் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியது. இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

TAMIL Eelam news b419

மட்டக்களப்பில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட கிராண்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்விபத்து சம்பவத்தில் மட்டக்களப்பு களுதாவளை பகுதியில்ச் சேர்ந்த 27 வயது இளைஞனே மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவது, மட்டக்களப்பில் இருந்து சென்ற மோட்டார் சைக்களும், கல்முனையில் இருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

TAMIL Eelam news b418

பிரித்தானியாவில் அதிர்ச்சியை எற்படுத்திய ஆசிரியை கொலை: நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளி ஆரம்பப் பாடசலை ஆசிரியை ஒருவர் லண்டனில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளார். தெற்கு லண்டனில் அவரது வீட்டுக்கு அருகே உள்ள பூங்காவில் 28 வயதான ஆரம்பப் பள்ளி ஆசிரியையான சபீனா நெஸ்ஸா கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொலை குற்றவாளியான அல்பேனியரான கோசி சொலாமஜ், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஈஸ்ட்போர்னில் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெற்கு லண்டனில் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் விமர்சனங்களை எழுப்பியது ஆசிரியை மரணம். இதேவேளை லண்டனில் உயிரிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லண்டனில் உள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து பேரணிகளில் கலந்து கொண்டனர். இதேவேளை ஆசிரியை கொலை தொடர்பாக சிசிரிவி காட்சிகள் வெளியிடப்பட்டு, குற்றவாளியை பொலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சபீனாவைக் கொலை செய்ததாக, கோசி செலாமஜ் என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இன்று (28) ஆஜர்படுத

TAMIL Eelam news b417

மனைவி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசுவதால் மனமுடைந்த கணவன் -குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை திண்டுக்கல் மாவட்டம் மங்கலம் பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி முருகேஸ்வரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருந்தனர். சேலம் மாவட்டத்தில் சங்ககிரி அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் மாஸ்டராக பணிபுரிந்து வந்திருக்கிறார் முருகன். இதையடுத்து அப்பகுதியிலேயே வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வசித்து வந்திருக்கிறார். மனைவி அடிக்கடி யாருடனோ செல்போனில் அதிகநேரம் பேசி வருவதை கண்டித்து வந்திருக்கிறார். அவர் எத்தனையோ முறை கண்டித்தும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வருவதால் மனமுடைந்து போயிருக்கிறார் முருகன். இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு அதை வீடியோவாக எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதற்கான காரணத்தையும் வீடியோவில் அவர் தெரிவித்திருக்கிறார். இதையறித்து பதறிப்போன உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று

TAMIL Eelam news b416

வவுனியாவில் பசுவை வெட்டி குளத்தில் வீசிய விசமிகள்! வவுனியா கன்று ஈனும் நிலையில் இருந்த பசுமாடு ஒன்றினை கத்தியால் வெட்டிய விசமிகள் அதனை அருகில் உள்ள குளத்தில் எறிந்துள்ளனர். இச்சம்பவம் தவசிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் நல்லின வளர்ப்பு மாடு கடந்த இருதினங்களாக காணாமல் போயுள்ளது. இதனையடுத்து அவர் தேடுதல் மேற்கொண்டபோது அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள குளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. குறித்த பசுமாட்டின் தலை மற்றும் உடல் பகுதிகள் கூரிய ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAMIL Eelam news b415

மட்டக்களப்பில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படை! இலங்கை படையினருக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் இடையிலான போர்ப் பயிற்சி மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் இடம்பெற்று வருகிறது. நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு இடம்பெறுகின்றது. குறித்த பயிற்சிகள் கடந்த 22ஆம் திகதிமுதல் வரும் 29ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் தெரியவருகின்றது. இதேவேளை எந்த நாட்டின் படையினர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தொடர்பில் எந்த விவரமும் வெளியாகவில்லை.

TAMIL Eelam news b414

34 ம் ஆண்டு தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வு குயின்ஸ்லாந்து மாநிலம் woodrige என்ற இடத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஞாயற்றுக்கிழமை 26/09/2021 பிற்பகல் ஆறுமணி தொடங்கி இரவு 8 மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்தன. தற்கால கொரண வைரஸ் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் சுமார் 25ற்கும் மேற்பட்ட எமது தமிழீழ உறவுகள். கலந்துகொண்டு தங்களின் உணர்பு பூர்வமான அஞ்சலியை தியகதீபம் அவர்கட்கு செலுத்தினார்கள். பிரதான பொதுச்சுடரை திருமதி ரஞ்சினி அவர்கள் ஏற்றி வைத்தார் தொடர்ந்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை திரு தோமேஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியா பூர்வகக்கொடியை திரு செந்தூரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை அடுத்து தமிழீழத் தேசியக்கொடியை திரு ஜெயா அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச் சுடரை திருமதி ராதிகா அவர்கள் ஏற்றி வைத்த்தார். அடுத்து அகவணக்கத்தோடு பிரதான மலர் மாலையை திரு லெபோன் அவர்கள் அணிவித்தார். சங்கர் அவர்களின் படத்திற்கு மலர் மாலையை திரு பிரவா அவர்கள் அணிவித்தார். திலீபன் அவர்களின் பிரதான கவிதையை மோ டக்சிகா அவர்கள் இரு மொழியிலும் சிறப்பான முறையில்

TAMIL Eelam news b413

தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் பிரித்தானியத் தமிழர்கள் தியாகதீபம் திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு லண்டன் ஒக்ஸ்போர்ட் பிரதேசத்திலுள்ள தமிழர் வரலாற்று மையத்தில் பிரித்தானியத் தமிழர்கள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்

TAMIL Eelam news4 12

ஜனாதிபதி கோட்டாபய புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ஏன்?...வெளியான தகவல் இலங்கையில் நீடிக்கும் இன ரீதியான பிரச்சனைக்கு இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் தேசிய ரீதியில் சுயாதீன முறையில் அதனை தீர்த்து வைப்பதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு விடுத்திருந்தமை குறித்து கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். எங்களிடம் எந்தவித பேதமும் இல்லை. மக்களை இன ரீதியாக பிரிப்பதை நான் விரும்புவதில்லை. அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள். வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களும் எமது நாட்டில் பிறந்த எமது பிரஜைகள் தான். கடந்த காலத்தில் எமக்கு பிரச்சனை இருந்தது அதனை யுத்தம் மூலம் முடிக்கும் துன்பியல் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். இனவாத ரீதியான பிரச்சனைகள் இன்னமும் இருக்கின்றன. அந்தப் பிரச்சனைகளை இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் தேசிய ரீதியில் சுயாதீனமான முறையில் தீர்த்து வ

TAMIL Eelam news b411

பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்… திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள் எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறான் சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும் இன்பம் பெருகப் பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும் உள்ளம் உருக உருகக் கண்ணீர் விட்டுப்பிரிச்ச ஊரும் திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும். எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான். நாளும் பொழுதும் கண்ணைக் கரைத்து நாளை வருவார் நானை வருவார் என்றே தங்கள் இதயம் வதைத்து கொலைஞர் பிடித்த உறவை நினைத்துக் கதறும் மனங்கள் இருக்கும் வரைக்கும் எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான். சதியும் வெறியும் ஒன்றாய்க் கலந்து கருணை கனிமை எதுவும் மறந்து எங்கோ பிறந்து மனிதம் துறந்து எங்கள் மண்ணில் மரணம் விதைத்து துயரச் சுமையுள் எம்மைத் திணிக்கும் கொடுமைப் படைகள் எரியும் வரைக்கும்இ எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான். உயிரை உடலை உறவைத் துறந்து உணர்வு முழுதும்

TAMIL Eelam news b410

கனடாவில் வசித்துவந்த ஈழத்தின் பிரபல பாடகர் வர்ண ராமேஸ்வரன் காலமானார்!! 'தாயகக்கனவுடன்' என்ற மாவீரர் துயிலுமில்லப்பாடல் உட்பட, பல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி திரு வர்ணராமேஸ்வரன் அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017 ஏப்ரலில் லன்டன் 'வெம்லி அரீனாவில்' IBC-தமிழ் நடாத்திய 'IBC தமிழா 2017' நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக கலந்துகொண்டு சிறப்பித்தவர் திரு. வர்ணராமேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. கனத்த இதயத்துடன் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றது IBC தமிழ் குழுமம்

TAMIL Eelam news b409

உள்ளே கோத்தா, வெளியே ருத்ரா - பரபரத்த நியு யோர்க் என கொழும்பு ஊடகம் செய்தி! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது , இலங்கையை சர்தேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பியதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்போது கோட்டாபயவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று ஐ.நாவின் முன்னால் மேற்கொண்டிருந்தது. இதன்போது ஓர் போர்குற்றவாளியை ஐ.நா தனது அரங்கில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டதனை கண்டு நாங்கள் அதிர்ச்சியடைகின்றோம். இனப்படுகொலையாளி ஒமர் அல்-பஷீர் இந்த அரங்கில் உரையாற்றினார் என்ற உண்மையை அறிவோம். உகாண்டா நாட்டு சர்வாதிகாரி இடி அமீன் ஒருமுறை இந்த அரங்கில் உரையாற்றினார் என்பதையும் அறிவோம். இந்நிலையில் இந்த அரங்கில் கோட்டாபய உரையாற்ற அனுமதிக்கப்பட்டதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குரலெழுப்பியிருந்தார். சர்வதேச

TAMIL Eelam news b408

மீண்டுமொருமுறை வாடா திலீபா… திலீபா! குடல் கொடுத்தாய் குரல் கொடுத்தாய் உயிர் கொடுத்தாய் உடல் கொடுத்தாய் உனைக் கொடுத்தாய் – அட எத்தனை ஈகமடா முடித்தாய் அத்தனைக்கும் கட்டணமாய் விடுதலையே நீ விதித்தாய் மீண்டுமொரு முறை வாடா திலீபா வானத்தில் நின்று நீ வாழ்த்தும் தமிழீழம் வந்து சேரும் அந்த நேரம் வரும் வரைக்கும் வந்திறங்கி ஒரு வரம் தா நாங்கள் விடுதலை நீர்குடிக்க உணர்வுக் கடப்பாரையால் உனது வயிற்றிலே கிணறு வெட்டினாய் பசியின் கரங்களை முறித்துச் சிறகாக்கி சுதந்திரப் பசிக்கு நீ இரைதேடிப் பறந்தாய் மீண்டுமொருமுறை வாடா திலீபா விடுதலைத் தென்றல் நீ வெந்துகொண்டிடுந்தாய் தாயாகத் திசைகளெங்கும் புயல் அடித்துக்கொண்டது வானைத் துளைத்துந்தன் ஈகமும் எங்கள் சோகமும் உயர உயர நேசித்த மனங்கள் எங்கும் பூகம்பம் நடந்தது. சாவு வந்துன்னைக் காவு கொள்ளுமெனக் காத்துக் கிடந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்க சாவுந்தன் காலடியில் வாழ்விழந்து விழுந்தது… அது ஆயிரம் ஆயிரம் வீரர்கலாய்ப் பிறந்தது மீண்டுமொருமுறை வாடா திலீபா வந்திறங்கி ஒரு வரம் தா. உரிமைப் பசியெடுத்து நாங்கள் உயிரைக் கொடுக்கையில் உணவுப்பொதி விழுத்தி உள்ளே நுழைந்தவர்கள்

TAMIL Eelam news b408

சிறையில் இருந்தவாறே சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த விடுதலைப்புலிகள் சந்தேகநபர் 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ள நிலையில், பல மாணவர்கள் பல்வேறு சிக்கல்கள், தடங்கல்களுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றி வெற்றிபெற்றுள்ளனர். அந்த வகையில், சிறைச்சாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய விடுதலைப்புலிகள் சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் வட்டரெக்க மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் இருந்து 4 கைதிகள் தோற்றியிருந்தனர். இவர்களில் மெகசின் சிறைச்சாலையில் இருந்து பரீட்சையில் தோற்றிய விடுதலைப்புலிகள் சந்துகநபர் ஒருவரும் மற்றுமொரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கைதிகளின் திறமைகள் குறித்து ஆராய்ந்து அவர்களது திறமையை மேம்படுத்தும் நோக்கில் தொழில் பயிற்சி, மத, கல்வி, சமூக ரீதியிலான

TAMIL elam news b407

இலங்கையில் மேலும் 1,368 பேருக்கு கொரோனா இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 1,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 510,040 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 421,742 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12,376 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b406

காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டார்கள்! பிணை பெற்ற கஜேந்திரன் கூறிய நாட்டினுடைய அரச தலைவர் ஐ.நாவிற்கு சென்று தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகின்றோம் என கூறுகிறார். ஆனால் எங்களுடைய உறவினர்களை, எங்களுக்காக போராடியவர்களை நினைவு கூருவதற்கான உரிமையைக் கூட வழங்க அவர்கள் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்துக்கு சுடரேற்றுவதற்கு நான் தயாராகும் பொழுது அங்கு நின்ற பொலிசார் தடுத்தார்கள். நான் அவர்களிடம் கேட்டேன் நீதிமன்ற தடை உத்தரவு இருக்கின்றதாவென? ஆனால் அவர்கள் நீதிமன்ற தடையுத்தரவை காண்பிக்கவில்லை. நீதிமன்ற தடையுத்தரவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்கள் உரிமையை மீறும் உங்களது செயலை ஏற்கமுடியாதென தெரிவித்தேன். நினைவிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், நினைவிடத்துக்கு முன்பாக நான் நின்ற இடத்திலேயே சுடரேற்றி

TAMIL Eelam news b405

யாழில் தொடரும் துயரம்; அரச உத்தியோகத்தர் பரிதாப மரணம் யாழ் உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமிழினி பிரபாகரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருமதி தமிழினி பிரபாகரன், கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவரும், தாய் சங்க முன்னாள் நிர்வாக சபையின் பொருளாளரும் தற்போது கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான வைரவபிள்ளை பிரபாகரன் அவர்களுடைய மனைவி ஆவார். கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதேவேளை யாழில் அண்மைய நாட்களில் இளம்வயதினர் கொரோனாவுக்கு பலியாகி வருகின்ற சம்பவம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அலக்சியம் கொள்ளாமல்தமிழர்கள் பாதுகாப்பாகயிருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

TAMIL Eelam news b404

தமிழீழ கிழை நிறுவனங்களை வளி காட்டி செல்லும் நாடு நடந்த தமிழீழ அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டது. புலம்பெயர் தமிழர்களை நோக்கிய கோத்தாவின் அழைப்புக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் !! யூத இனப்படுகொலையினைப் புரிந்த ஹிட்லர் ஆட்சியில் இருக்க முடிந்திருந்தால், புலம்பெயர் யூதர்களுடன் பேச ஹிட்லர் அழைப்பது போன்றே, புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதற்கான சிறிலங்கா அதிபர் கோத்தாவின் அழைப்பு உள்ளது.இனப்படுகொலையினை புரிந்த அரசுடன் முக்கிய விடயமான தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக உரையாடல் நடத்துவது கடினமான ஒன்றாகும்.எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் பொறுப்புக்கூறல் என்பது முக்கியமானதொரு முன்னவசிமாகும். இலங்கைத்தீவில் அமைதியை கொண்டுவருவதில் கோத்தாவுக்கு உண்மையான ஆர்வம் இருந்தால், முதற்படியாக, ஐ.நா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையர் அல் {ஹசைன் அவர்கள், 2015ல் பரிந்துரைத்திருந்த ‘ரோம் உடன்படிக்கையில்’ கைச்சாத்திட்டுக் கொள்ள வேண்டும். மேலும் கைச்சித்திட்டு பின்னோக்கி காலத்தையும் உள்வாங்கியதாக வேண்டும். இறுதிப்போரில் நடந்த இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்

TAMIL Eelam news b403

சிறிலங்கா தொடர்பில் அமெரிக்க நிறுவனத்தின் பகிரங்க அறிவித்தல் - வெளிவந்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்துடன் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் New Fortress நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடலில் இயற்கை திரவ வாயு முனையம் ஒன்றை நிர்மாணித்தல், கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் வரை குழாய் கட்டமைப்பை அமைத்தல் ஆகியன ஒப்பந்தத்தில் அடங்குவதாக அமெரிக்க நிறுவனம் இன்று பகிரங்கப்படுத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் ஏற்கனவே 310 மெகாவாட் கொள்ளளவை கொண்டிருப்பதுடன், 2023 ஆம் ஆண்டளவில் மேலதிகமாக 700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என நம்புவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். திறைசேரி தகவல்களுக்கு அமைய, கால எல்லையுடனான உடன்படிக்கைக்கு இணக்கம

TAMIL Eelam news b402

'இனப்படுகொலையாளி கோட்டா' அதிர்ந்தது நியூயோர்க் நகரம் அமெரிக்காவில் இனப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ச என தெரிவித்து அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களே நியூயோர்க் நகரில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியிருந்தார். இந்த நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறியுமாறும், அரசியல் எதிரிகளை அடக்குவதை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டகார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன வேறுபாடுயின்றி பூங்கிஎழுந்த இலங்கை வாழ் மக்கள் .

TAMIL Eelam news b401

விக்டோரிய மாநிலத்தில் 5.8 அளவிலான நிலநடுக்கம் வேறு மாநிலங்களிலும் வெளிப்பட்டது இன்று (புதன்கிழமை) காலை சுமார் 9:15 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதி, மெல்பன் நகரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மான்ஸ்ஃபீல்ட் (Mansfield) என்ற இடத்தில் அமைந்திருந்தது என்று Geoscience Australia கூறியது. நில நடுக்கம் ஏற்பட்ட பின்னர் ஏற்படும் aftershock என்ற இரண்டாவது நடுக்கம் 4.0 அளவில் என்று தாம் பதிவு செய்துள்ளதாக Geoscience Australia மேலும் கூறியது. சிட்னி, கன்பரா மற்றும் விக்டோரிய மாநிலத்தின் பல பிராந்திய இடங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கங்களை மக்கள் அனுபவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

ஜெனீவாவில் மக்கள் போராட்டம் நேரடி நிலவரம் 20 Sep 2021