முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 966 அவுஸ்திரேலியா அனைத்து மாநிலங்களிலும் பொருட்கள் வீடுகளின் விலை இரு மடங்காக அதிகரிப்பு

  ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளில் வீடுகளின் விலை எங்கே இருமடங்காக உயர்ந்துள்ளது? இந்த இரண்டு தலைநகரங்களில் 10 ஆண்டுகளுக்குள் வீடுகளின் விலைகள் இரட்டிப்பாகியுள்ளன, ஆனால் ஆஸ்திரேலியாவின் மற்ற இடங்களில் இதற்கு அதிக காலம் எடுக்கிறது. Hobart house prices are increasing more quickly than elsewhere in Australia, according to a new report.  Source: AAP / Dave Hunt சிட்னி மற்றும் ஹோபார்ட்டில் ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலப்பகுதியில் வீட்டு மதிப்புகள் இரட்டிப்பாக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளில் நிலைமை அவ்வாறு இல்லை என்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில் சில சொத்துக்களின் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இதேவேளை அடுத்த ஆண்டில், சில நகரங்களில் வீடுகளின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. Advertisement ஆஸ்திரேலியா முழுவதும் சொத்து மதிப்பு இரட்டிப்பாக எவ்வளவு காலம் எடுத்தது மற்றும் அடுத்த நிதியாண்டில் விலைகள் எவ்வாறு மாறலாம் என்பதை இங்கே பார்க்கலாம். சொத்து மதிப்பு இரட்டிப்பாக்க ஏழு முதல

d 965 குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண் ஜனனி!

  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண் ஜனனி!  By Shankar  55 நிமிடங்கள் முன்             0 SHARES விளம்பரம் தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சிகள் தான் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி. பிக்பாஸ் சீசன் 6 யில் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண் ஜனனி போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். இதனையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஜனனி நடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவ்வாறான நிலையில் அதிக ரசிகர்களை கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இலங்கைப் பெண் ஜனனி கலந்துகொண்டு இருக்கும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

d 964 நாளிற்கு நாள் அதிகரிக்கும் புதிய கண்டுபிடிப்புக்கள்,

  சிறுநீரைக் கொண்டு நாசா விஞ்ஞானிகள் நிகழ்த்திய புதிய சாதனை..!  By Pakirathan  4 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் மனித தேவைகளுக்கு ஏற்ப உலகளவில் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. அந்தவகையில், குடிநீருக்கான மக்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை சேமிப்பதற்கும், சிக்கனமாக பயன்படுத்தவும் பல முயற்சிகள் உலகளவில் எடுக்கப்படுகின்றன. இந்தநிலையில், சிறுநீர் மற்றும் வியர்வையை குடிநீராக மாற்றி புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிய சாதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையை குடிநீராக மாற்றி நாசா புதிய சாதனை படைத்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் சராசரியாக ஒரு நபருக்கு மூன்று லீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ப போதிய தண்ணீர் வழங்குவதில் சிக்கல் காணப்பட்டதால், இதனை சரி செய்ய நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை உள்ளிட்ட கழிவுகளை குடிநீராக மாற்றும் பணியில் நாசா விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர்.

d 963 கட்டுக்குள்கொண்டுவரமுயாதா நாந்தம் நடக்கும் விவத்துக்களை?

யாழ்ப்பாண விபத்தில் உயிரிழந்த இருவர்: முகநூலில் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்ட பதிவு! யாழ் அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (29-06-2023) நண்பகல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண விபத்தில் உயிரிழந்த இருவர்: முகநூலில் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்ட பதிவு! | Jaffna Accident Two People Died Sathiyamoorthy குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதான மகேஸ்வரன் மயூரன், அராலி மத்தியைச் சேர்ந்த 29 வயதான ஜெயசுந்தரம் சரோஜன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நேர் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் இருவர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண விபத்தில் உயிரிழந்த இருவர்: முகநூலில் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்ட பதிவு! | J

d 962 பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ்

பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன சோதனையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆபிரிக்க வம்சாவளி சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அது வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமைதியை நிலைநாட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ் | Riots Broke Out In France Burning About Paris ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிபர் இமானுவேல் மக்ரோன், "இது மன்னிக்கமுடியாத குற்றம். சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டதால் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரிஸ் நகரின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை இரவு சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக

d 961 பெண்போராளிகளின் மனித எச்சங்கள் பச்சை சீருடைகளுடன் மீட்பு

இறுதி சுத்தத்தின் போது ஆயிரக்கானக்கான பெண் போராளிகளை பலத்காரம் செய்தபின் வேறு வேறு இடங்களில் அடக்கம் செய்தனர் அல்லது எரித்தனர் சிங்கள வெறியர்கள் என்பதை நாம் அறிதோம் அல்வா? அதின் பக்கங்கள்தான் இவை, முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மத்தி பகுதியில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பை மேற்கொள்ளும் வகையில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தை தோண்டியுள்ளார்கள். அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் பெண்போராளிகளின் மனித எச்சங்கள் பச்சை சீருடைகளுடன் மீட்பு | Recovery Of Human Remains Of Feminists இதன்போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து கொக்கிளாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் பெண்போராளிகளின் மனித எச்சங்கள் பச்சை சீருடைகளுடன் மீட்பு | Recovery Of Human Remains Of Feminists இது பெண் போரா

d 960 பெண்ணுடன் தவறான உறவு: நோயாளி மீது ஆசிட் வீசிய கணவன்!

பெண்ணுடன் தவறான உறவு: நோயாளி மீது ஆசிட் வீசிய கணவன்! இலங்கையில் சம்பவம் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற வந்த நோயாளி ஒருவர் மீது ஆசிட் வீசியதில் நோயாளி உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாவனெல்ல பிரதேசத்தில் இருந்து வந்த நோயாளர், அந்த பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார். பெண்ணுடன் தவறான உறவு: நோயாளி மீது ஆசிட் வீசிய கணவன்! இலங்கையில் சம்பவம் | Acid Attack On Patient 5 People Injured Peradeniya அந்தப் பெண்ணின் கணவனே இவ்வாறு அசிட் வீசியுள்ளார். அசிட் வீச்சு நடத்திய நபரை பேராதனை போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் இணைந்து பிடித்து பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோன் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

d 959 எல்லைக்குள் வந்தால் போர் வெடிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை

எல்லைக்குள் வந்தால் போர் வெடிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை தங்கள் நாட்டின் சர்வதேச எல்லை பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தாய்வான் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருபக்கம் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் மற்றொரு பக்கம் தாய்வான் - சீனா இடையிலான பதற்றமான நிலை நிலவி வருகிறது. தற்போது, தீவு நாடான தாய்வானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகின்ற நிலையில், தாய்வான் குடியரசு முழு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தங்களை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தி வருகிறது. 12 மைல் மண்டலம் எல்லைக்குள் வந்தால் போர் வெடிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை | Taiwan Chinese Military Forces Enter 12 Mile Zone ஆனால், தாய்வானின் இந்நிலைப்பாட்டை எதிர்த்து சர்வதேச தாய்வான் கடல் எல்லையில் சீனா தங்களது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அத்துமீறி நுழைய செய்வதோடு, பிரமாண்ட போர் ஒத்திகை பயிற்சியையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதனால், இவ்விரு நாடுகளுக்குமிடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் எனும் பதற்றமான சூழ்நிலை உலக நாடுக

d 958 அரசிக்கு உடந்தையாகயிருந்தவர்கள் சிந்திக்கும் காலம் வெகு தூரம் இல்லை,

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வந்தவன் - சிங்களமொழியில் பேசி எச்சரித்த பிள்ளையான் நான் புலிகளில் இருந்து வந்தவன், எங்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் யுத்தம் செய்தோம் என சிங்கள மொழியில் பேசி எச்சரிக்கை விடுத்தார் பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன். மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு உள்ளிட்ட சில விடயங்களை நிறுத்துமாறு உாிய அமைச்சாின் பணிப்பாளருக்கு தெரிவிக்குமாறு மகாவலி அதிகாரிகளிடம் சிங்கள மொழியில் பேசியே அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேய்ச்சல்தரை தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலுக்கு ஏன் வந்தேன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வந்தவன் - சிங்களமொழியில் பேசி எச்சரித்த பிள்ளையான் | Pillaiyan From The Ltte Warned In Sinhala இன்று நாட்டின் நிலை என்ன? பொருளாதார நிலை என்ன? வெளிநாட்டு மக்கள் நிலை என்ன? என்ற விடயங்களை கதைக்க வேண்டும். அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பக்கமாக கர

d 957 சுவிஸ் வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்;

சுவிஸ் வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்; பரிதவிக்கும் மகள்! யாழ் நாவலர் வீதியில் வசித்துவரும் 64 வயதான இரு பெண் பிள்ளைகளின் தாயாரை ஏமாற்றி அவரது பெருமதியான யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டினை சுவிஸ்வாழ் மருமகன் அபரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட தாயாரின் மூத்த மகள் 14 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்து சுவிஸ்லாந்து சென்று வாழ்ந்து வருகின்றார். மற்றைய மகள் திருமணம் முடிக்காத நிலையில், அரச நிறுவனம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக உள்ளார். சுவிஸ் வாழ் மருமகனிடம் ஏமாந்த யாழ்ப்பாண மாமியார்; பரிதவிக்கும் மகள்! | Jaffna Mother In Law Cheated On Swiss Son In Law நீண்டநாட்களின் பின் ஒன்று சேர்ந்த குடும்பம் மூத்த மகள் காதலித்து திருமணம் முடித்ததால் நீண்டகாலம் மகளுடன் தொடர்பில் இல்லாதிருந்த தாயார் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னரே மகள் யாழ்ப்பாணம் வந்த போது தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தனது மகளின் பிள்ளையின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக சுவிஸிற்கு வருமாறு அழைத்த மருமகன் , மாமியாரின் பெறுமதிமிக்க யாழ்ப்பாண வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார். சுவ

d956 புலம்பெயர் தமிழர்களுடன் ரணில் அரசின் தொடர்பு -வெளிப்படுத்திய அமைச்சர்

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை பாராட்டுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனைத்து சமூகங்களினதும் ஒருமித்த கருத்துடன் நீண்ட கால சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் விரைவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் என்றும் அவர் கூறினார். இந்திய விஜயத்தின் போது அங்குள்ள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு புலம்பெயர் தமிழர்களுடன் ரணில் அரசின் தொடர்பு -வெளிப்படுத்திய அமைச்சர் | Ranil Govt In Contact With Diaspora Tamils புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கை மக்கள் மற்றும் தலைவர்களுடன் அரசாங்கம் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவுடன் நாங்கள் எங்கள் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்தோம். இலங்கையில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம். நிதி நெருக்க

d 955 காலம் கடந்தும் கவிதையாக உருவெடுக்கும் தமிழர் உணர்வுகள்

எனக்குள் விழுந்த மழைத்துளி ************************************* மழை ஓய்ந்த அமைதியாய் காலப் பெருவெளியில் கால் பதிக்கும் மௌனத்திரை விலக மனம் ஏதேதோ தேடல் செய்யும்..!! வானத் திடலில் திரண்ட வெண்முகிலாய் நிகழ்வுகள் நெஞ்சில் முட்டும்.__சங்கம் வளர்த்த காதலையும் கண்டு வியந்த வீரத்தையும் __விழி கோர்த்து நிற்கும்.....!! பங்கமில்லா பாதைதனில் பயணித்த பவித்திரத்தை இன்றும் உளம் ஒப்புவிக்கும். நடுநிசி சுவடுகளை காட்சி ஒற்றி எடுக்கும்.....!! இனி அந்த இனிமைகள் மீண்டு வருமா? மீட்டுத் தருமா? கடந்த கனிமங்களை எழுதி தீர்க்க காகிதமும் இல்லை.அதை நேசிக்கஉறவும் இல்லை....!! இதயம் நினைவுகளை இணையத்தில் எழுதித் தீர்க்கிறது. எனக்குள் விழுந்த மழைத் துளியாய் மறுபடியும் மறுபடியும் கனத்திடும் நொடிப் பொழுதை காவு கொள்கிறது.....!! பின்னோக்கிய பயணம் தான் ஆனாலும் பிறை நிலவைக் காண வைக்கிறது. காலங்கள் எதையும் மாற்றலாம் ஆனால் மாண்பு மிகு காதலையும் மறம் போன்றும் வீரத்தையும் மாற்ற முனையாது. வன்னியூர், _____ஆர்.ஜெ.கலா__

d 954 இலங்கையில் சமுக வண்முறை அதிகரிப்பு?

இலங்கையில் யுவதியின் தந்தை - சகோதரனை கொடூரமாக கொன்ற காதலன்! அநுராதபுரம் - கெக்கிராவை பிரதேசத்தில் தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலேயே தந்தையும், மகனும் இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இலங்கையில் யுவதியின் தந்தை - சகோதரனை கொடூரமாக கொன்ற காதலன்! | Daughter Lover Killed Father And Son In Sri Lanka குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கெக்கிராவை பிரதேசத்தில் இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவி ஒருவர், அப்பிரதேசத்திலுள்ள ஓட்டோ சாரதியான இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்குக் மாணவியின் தந்தையும், சகோதரரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இலங்கையில் யுவதியின் தந்தை - சகோதரனை கொடூரமாக கொன்ற காதலன்! | Daughter Lover Killed Father And Son In Sri Lanka இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25-06-2023) மாலை தனது காதலியின் வீட்டுக்கு ஓட்டோவில் சென்ற காதலன், காதலியை வலுக்கட்டாயமாகத் தனது வீட்டுக்கு

d 953 ஐரோப்பிய நாடொன்றில் கோரவிபத்தில் உயிரிழந்த இலங்கையர்!

ஐரோப்பிய நாடொன்றில் கோரவிபத்தில் உயிரிழந்த இலங்கையர்! இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலியின் நாபோலி நகரத்தில் நேற்றையதினம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் 42 வயதான இலங்கை தமிழ் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடொன்றில் கோரவிபத்தில் உயிரிழந்த இலங்கையர்! | Italy Accident Death Srilankan Tamil கட்டுப்பாட்டை இழந்த கார் கார் ஒன்றில் மூன்று பேர் பயணித்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகிலுள்ள தூணில் மோதி விபத்து ஏற்படடுள்ளது. சம்பவத்தில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 42 வயதுடைய இலங்கையரே உயிரிழந்துள்ளார், அதேவேளையில் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம் சாரதியும் ஏனைய பயணிகளும் காப்பாற்றப்பட்2டுள்ளனர். விபத்துக்குள்ளான காரை 27 வயதான இளைஞர் ஒருவரே ஓட்டிச்சென்றதாக கூறப்படும் நிலையில் நிலையில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளி முன்னெடுத்து வருகின்றனர்.

d 952 ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள்

அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் இன்று பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே மறதிதான். இந்த ஞாபக சக்தி குறைப்பாட்டினால் இன்றைய உலகில் நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான பிரதான காரணம், தேவையான சத்துக்கள் உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளாமையே ஆகும். இதனால், நாம் உண்ணும் உணவில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டால் விரைவில் இப்பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். மனித உடலில் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்காக இதோ சில உணவு முறைகள். மீன் அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory மீன் உண்ணும் போது ஒமேகா 3 நிறைந்துள்ள மீனை எடுத்துக்கொண்டால் மூளைக்கு தேவையான ஒமேகா 3 அதிக அளவில் கிடைக்கிறது. இதனால் ஞாபக சக்தி அதிக அளவில் இருக்கும் . வால்நட்ஸ் அடிக்கடி மறதியா - ஞாபக சக்தியை அதிகரிக்க இதோ சில உணவு முறைகள் | Best Foods To Boost Your Brain And Memory வால்நட்ஸ் கர்ப்பிணி பெண்கள் உண்பதால் குழந்தை மூளை வளர்ச்சி அதிகப்படுத்துகிறது

d 951 சட்டத்தின் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொண்ட 23 வயது தெற்கு ஆஸ்திரேலியப் பெண்

சட்டத்தின் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொண்ட 23 வயது தெற்கு ஆஸ்திரேலியப் பெண் தெற்கு ஆஸ்திரேலிய இளம் பெண் ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலத்தின் voluntary assisted dying laws- துன்பமற்ற மரணத்திற்கு உதவுதல் சட்டங்களைப் பயன்படுத்தி உயிர்துறந்துள்ளார். A hand holding the hand of a person in a hospital bed. Voluntary assisted dying laws have passed in every Australian state in the past few years, allowing those who are terminally ill to end their life. Source: Getty / kieferpix/ தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான Lily Thai என்ற பெண், நோய்நிலைமையொன்றின் காரணமாக தனது வாழ்நாளின் பல வருடங்களை வலியுடன் கழித்திருந்த பின்னணியில், துன்பமற்ற மரணத்திற்கு உதவுதல் அதாவது கருணைக்கொலைச் சட்டங்களைப் பயன்படுத்தி கடந்த புதன்கிழமை உயிர்துறந்தார். இப்பெண் தொடர்பான செய்தியை Adelaide Advertiser வெளியிட்டிருந்தது. இனிமேலும் வலியைப் பொறுக்கமுடியாது என்பதால் தெற்கு ஆஸ்திரேலியாவின் கருணைக்கொலைச் சட்டங்களைப் பயன்படுத்த திட்டமிட்டதாகவும், நோயினால் தான் அனுபவித்த துன்பங்களிலிரு

d 950 மல்லாவி பகுதியில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் பலி!

மல்லாவி பகுதியில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் பலி! முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த கமலதாஸ் கபில்தாஸ் (26) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் , மல்லாவி திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் சபேசன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - மல்லாவி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் சிறிய ரக வாகனம் ஒன்று மோதியே குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. மல்லாவி பகுதியில் இடம்பெற்ற விபத்து; ஒருவர் பலி! | An Accident In Mallavi Area One Victim இந்நிலையில் இரண்டு வாகனங்களும் தீபற்றி எறிந்துள்ளதாகவும் அதில் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற இதே வேளை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

d 949 தினமும் 100 பேர் அகால மரணம் - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை..!

தினமும் 100 பேர் அகால மரணம் - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை..! சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் நாட்டில் தினமும் 100 பேர் அகால மரணம் அடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச புகையிலை நிறுவனங்கள் கஞ்சாவை வியாபாரமாக செயற்படுத்துவதற்கு மூலோபாயமாக பணத்தை முதலீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் கஞ்சா பாவனையை முதலீட்டுத் திட்டமாக இலங்கையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது. அனைவரின் பங்களிப்பு தினமும் 100 பேர் அகால மரணம் - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை..! | 100 People Die Prematurely Every Day The Country எனவே சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பாற்ற அனைவரின் பங்களிப்பும் அவசியம் எனவும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது.

d 948 சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் கொடுப்பவர்களுக்கு சம்மானம்!

சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் கொடுப்பவர்களுக்கு சம்மானம்! சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கண்டுபிடிக்க உதவும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கும் சன்மானத் தொகையை அதிகரிக்க பொலிஸ்மா அதிபர் தீர்மானித்துள்ளார். இந்த திட்டம் ஜூன் 25 முதல் ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த காலங்களில் பதிவாகிய சில குற்றச்செயல்கள் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் நாட்டில் புழக்கத்தில் இருப்பதைக் காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் கொடுப்பவர்களுக்கு சம்மானம்! | Those Who Inform About Illegal Firearms Summoned இந்த நிலைமை சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு தடையாக இருப்பதுடன் பொதுமக்கள் அச்சமின்றி வாழக்கூடிய அமைதியான சூழலை ஏற்படுத்துவதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள முழுமையான அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

d 947 மற்றவர்களை புண்படுத்துகின்றார்களா தமிழர்கள்,

இப்படியான குணங்களால் பலர் தொழில்களை இளப்பதைம் நாம் வெளிநாடுகளில் அவதானிக்கின்றோம், மறந்தும் கூட இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம், புலம்பெயர் தமிழ் கடைகளில் இப்படியுமா? பாதிக்கப்பட்டவரின் ஆதங்கம்! கனடா ஸ்காபுரோவிலுள்ள தமிழ் கடை ஒன்றில் மாம்பழங்களை வாங்கிய ஈழத்தமிழர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்ட விதத்தையும் அதனால் ஏற்பட்ட வலியையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது முகநூலில், 14 டொலருக்கு 9 மாம்பழங்களை வாங்கிய நிலையில் மாம்பழங்கள் அனைத்தும் பழுதடைந்திருந்தது. அதனை கொண்டு உரிய கடைக்கு சென்றேன். முதலாளியினை நட்புடன் அணுகி ஓரமாக கூட்டிச்சென்று பழுதடைந்த பழங்களைக்காட்டி அண்ணா இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என கூறி காண்பித்தேன். புலம்பெயர் தமிழ் கடைகளில் இப்படியுமா? பாதிக்கப்பட்டவரின் ஆதங்கம்! | Sale Of Defective Goods In Tamil Shops Abroad வாடிக்கையாளருக்கு ஏமாற்றம்- முதாலாளி விசனம் அதற்கு நீங்களும் இதை பார்த்து அல்லவா எடுத்திருக்க வேண்டும் என கூறியபோது, அது உண்மைதான் அண்னே . நீங்களும் இதை பார்த்து அல்லவா விற்கவேண்டும் என்றேன்.. அதற்கு சற்று தடுமாற்றத்துடன் ம்ம்ம்.