முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 919 தேர்தல் நேரத்தில எட்டிப் பார்க்கும் அரசியல்வாதிகளே.

தேர்தல் நேரத்தில எட்டிப் பார்க்கும் அரசியல்வாதிகளே...! இதற்கு தீர்வே கிடையாதா.
.. "நம்ம யாழ்ப்பாணகாரங்கள் இத மானிப்பாய் ரோட்டு எண்டு சொல்லுறத விட பிரசவ ரோட்டு எண்டு சொன்ன நல்லா இருக்கும். அந்தளவுக்கு இருக்குது எங்கட மானிப்பாய் - காரைநகர் ரோட்டு நிலைமை. யாழ்ப்பாணத்தில வெளிக்கிடுற 182 காரைநகர் பஸ் ஓட்டுமட சந்தியில குலுங்க வெளிக்கிட்டா காரைநகர் போகும் வரைக்கும் ஒரே ஆட்டம் தான். அதோட மழைகாலமும் தொடங்கினா சொல்லி வேலை இல்ல. முழு மழைத் தண்ணியையும் இந்த ரோட்டுல சேமிச்சு வைக்கலாம். ரோட்டுல இருக்கிற ஒவ்வொரு கிடங்கும் நாலு ஐஞ்சு அடி ஆழம் வரும். இப்படிப்பட்ட ரோட்டுல தான் எல்லா சனமும் போய்ட்டு வருது." இப்படி அந்த வீதியில் பயணிக்கும்போது கீழே விழுந்த வயோதிபர் தனது ஆத்திரத்தை காண்பித்தார்.
அந்த வயோதிபர் சொன்னது முற்றிலும் உண்மைதான், அவர் மட்டுமல்ல அந்த வீதியை பயன்படுத்தும் ஏராளமான மக்களின் விமர்சனமும் அது தான். யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியமான வீதிகளில், அதுவும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் வீதிகளில் மானிப்பாய் - காரைநகர் வீதியும் ஒன்று. இந்த வீதியின் நிலை பற்றி இன்னும் சிலரிடம் நாங்கள் கேட்டோம், "2019 வரைக்கும் இந்த ரோட்டு ஓரளவு பயணிக்கக் கூடிய போல நல்லா தான் கிடந்த இவங்கள் எப்ப கபேட் ரோட்டு போடுறம் என்டு இருக்கிற ரோட்ட கிளறினாங்களோ அப்ப நாசமாப்போன ரோட்டுத்தான். இந்த ரோட்டு நிலைமை பற்றி மாநகரசபை காரங்கட்ட சொன்னா சரி நாங்க பாக்குறம் என்டுட்டு நாய் எச்சத்துக்கு மண் போடுற மாறி ஒவ்வொரு கிடங்குக்கும் மண்ண அள்ளி கொட்டீட்டு போய்டுவாங்க அது ரெண்டு நாள்ல பழைய நிலைமைக்கு வந்திரும்.
யாழ்ப்பாணத்தில இருக்கிற ரோட்டுலயே இந்த ரோட்டுதான் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு சாபமா கிடக்கு. இதற்கு தீர்வே கிடையாதா... தேர்தல் நேரத்தில எட்டிப் பார்க்கும் அரசியல்வாதிகளே இஞ்ச பாருங்கோ...!! நீங்கள் தேர்தல் நேரத்தில வந்தது போல இப்ப ஒருக்கா இந்த ரோட்டுல வந்தீங்க எண்டால் அடுத்த தேர்தலுக்கு பொல்லோட தான் வரோணும். நாடாளுமன்றத்திலயும், மாநகரசபையிலயும் இருந்து மிக்சர் சாப்பிறதுக்கும், தூங்கிறதுக்கும் பதிலா இதப் பற்றி கொஞ்சம் பேசலாம். 14 வருசமா தமிழர்களுக்கு தீர்வைத்தான் வாங்கித் தரமுடியேல. இப்படிப்பட்ட அடிப்படை தேவைகளை ஆச்சும் பூர்த்தி செய்யுங்கோ." இப்படி இருக்கிறது மக்களின் விமர்சனங்கள்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?