முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news b52

 இறிலங்கா காடையர்கள் அட்டகாசம் யாழில் வன்முறைக் கும்பல் அட்டூழியம்!! துண்டாடப்பட்ட கை - நால்வர் படுகாயம் யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிய வருகையில், சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் வாகனங்கள் உட்பட பெறுமதியான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் குறைந்தது நால்வர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

TAMIL Eelam news b51

 தமிழ்ப்பெண் ஒருவரை வீட்டுவேலையாள் என்ற பெயரில் எட்டு வருடங்கள் அடிமையாக வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், இவர்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது. சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தனது முடிவைத் தெரிவித்த நீதிபதிகள் குழு, குறித்த தம்பதியரை குற்றவாளிகள் என அறிவித்திருந்தது. இதையடுத்து இவர்களது தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னதான விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின. இதன்போது கருத்துவெளியிட்ட நீதிபதி John Champion, குறித்த பெண்ணை 8 ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்தமை தொடர்பில் தம்பதியர் இருவரும் ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் குறித்த பெண்ணை இத்தம்பதியர் உரியமுறையில் கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும், மரணத்திற்கு அருகில் அந்தப் பெண் சென்றிருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் எனவும், ஆனால் இதுதொடர்பில் அவர்கள் மன்னிப்புக்கோரவில்லை எனவும் நீதிபதி John Champion தெரிவித்த

TAMIL Eelam news b50

 கிளிநொச்சியில் மாயமான சீனரின் இடத்தில் அதிர்ச்சி தரும் தடயங்கள் கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் சீனாவின் உடைய கடல் அட்டை பண்ணை பார்வையிடுவதற்கு நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில் அன்மைய நாட்களிலே சர்வதேச ரீதியாக பேசப்படும் ஓர் விடயமாக இலங்கையினுடைய தென் பகுதியிலே சீனாவின் உடைய அகலக் கால்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடக்கு பகுதியில் குறிப்பாக நெடுந்தீவு அனலைதீவு நயினாதீவுகளில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ள நிலையில் தற்பொழுது யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடலட்டை குஞ்சுகளை வளர்ப்பதாக கூறி உருவாக்கப்பட்ட அட்டை பண்ணை ஆனது தற்போது கிளிநொச்சியின் மூலை எல்லையில் கௌதாரிமுனை என்னும் இடத்தில் எந்த அனுமதியும் இன்றி அந்த அட்டை பண்ணையை நடாத்தி வருகின்றார்கள். அத்துடன் யாழ் பாசையூர் மீனவர்கள் கிளிநொச்சி கௌதாரிமுனை மீனவர்கள் கடலட்டை வளர்ப்பிற்கான முன் வைத்த உரிமங்கள் மறுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது சீனர்கள் செய்து வருவதுடன் இயற்கையாகவே இக்கடலில் வளர்கின்ற கடல் அட்டைகளை நிராகரித்து செயற

TAMIL Eelam news b49

 கீர்த்தியும் அனிதாவும் ஒருவருக்கொருவர் தாலிகட்டி திருமணம் செய்த கதை ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் இவ்வகையான திருமணங்கள் பல நடைபெறுவதை காணக்கூடியதாக உள்ளது. கீர்த்தி சேகர் தனது இரண்டு வயதில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்தவர். பிறப்பதற்கு முதலே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மெல்பனில் வசித்து வந்தார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே மருத்துவ படிப்பு படித்ததாக கூறும் கீர்த்தி, மெல்பனில் குடும்ப வைத்தியராக கடமையாற்றி வருகிறார். கீர்த்தி திருமண வயதை அடைந்ததும் அவரின் தாயார் சிவகாமி சேகர் அவருக்கு ஏற்ற வரனை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். பல ஆண்டுகளாக இந்த வரன் தேடும் படலம் நடைபெற்றது. கீர்த்தி தனக்காக பார்க்கப்பட்ட வரன்களுடன் திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, ஆண் ஒருவரை திருமணம் செய்துக்கொள்வதில் ஈடுபாடு இல்லாத தன்மையை உணர்ந்துள்ளார். ஆகவே தனது தாயார் தொடர்ந்து தனக்காக வரன் தேடுவதை நிறுத்தவேண்டும் என்று உணர்ந்த கீர்த்தி, தான் பெண் ஒருவரை வாழ்க்கை துணையாக்கிக்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதனை கேட

TAMIL Eelam news b48

 புலம்பெயர் நாட்டில் இலங்கை தமிழ் பெண்ணை- அவரது கணவரின் நண்பர்களே கற்பழித்துள்ளார்கள் ! இலங்கையிலிருந்து அகதியாக சென்ற இளம் குடும்பப் பெண்ணொருவர், கணவரின் நண்பர்களால் அடுத்தடுத்து இரண்டு நாள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழ் நாட்டையே உலிக்கியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. தமிழகத்தின், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய குறித்த பெண். குடும்ப தகராறு காரணமாக இவர் தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி இரவு இந்த பெண் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்…..   அப்போது அவரது கணவரின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த காண்டீபன் என்பவர் போதையில் இவரது வீட்டு கதவை தட்டினார். இந்த பெண் கதவை திறந்ததும் காண்டீபன் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து காண்டீபன் தனது நண்பன் ஆண்ட்ரிஸ் என்பவரிடம் கூறி உள்ளார். இதனை அறிந்த ஆண்ட்ரிஸ் கடந்த 23ஆம் திகதி இரவு இந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை ஆண்ட்ரிஸ் மிரட்டி பாலியல் பலா

TAMIL Eelam news b47

 முகக்கவசம் அணியாத ஆஸ்திரேலிய துணைப்பிரதமருக்கு அபராதம்! ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும் National கட்சியின் தலைவருமான Barnaby Joyce-க்கு முகக்கவசம் அணியாத குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடமொன்றில் முகக்கவசம் அணியாத குற்றத்திற்காக நாட்டின் துணைப்பிரதமரும் National கட்சியின் தலைவருமான Barnaby Joyce-க்கு 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Armidale என்ற இடத்தில், வாகனத்திற்கு பெற்றோல் நிரப்பியபின் பணம்செலுத்துவதற்காகச் சென்ற Barnaby Joyce, முகக்கவசம் அணியாதிருந்ததை அவதானித்த பொதுமகன் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தததையடுத்து அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொது சுகாதார அறிவுறுத்தல்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துணைப்பிரதமர் Barnaby Joyce உட்பட சுமார் 54 பேருக்கு நேற்றையதினம் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாக State Emergency Operations Controller துணை ஆணையர் Gary Worboys தெரிவித்தார்.

TAMIL Eelam news b46

 கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய வன்முறைக் கும்பல்! யாழில் அடாவடி யாழ். கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். 6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்புக் கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.   வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

TAMIL Eelam news b45

 விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவதை தடுக்க திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனின், அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென, அரசாங்கத்தின் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை நினைவு கூரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஏன் நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல்லவிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த அவர், தமிழீழ வீடுதலைப் புலிகள் அல்ல - யாராக இருந்தாலும் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் நினைவு நிகழ்வுகளை நடத்துவதில் எவ்வித பிரச்சினையுமில்லை. எனினும் பொதுவான நிகழ்வுகளை நடத்துவதில் பிரச்சினை காணப்படுகின்றது. நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்க முடியாது. அவ்வாறு உறுதியளித்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தி

TAMIL Eelam news b44

 வெள்ளைக் கொடி காட்டியது ஸ்ரீலங்கா அரசாங்கம்! வெளிச்சத்திற்கு வந்த தகவல் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஜி.எஸ்.பி. வரிச்சலுகைக்காக அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெள்ளைக்கொடி காண்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதில் எமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. காரணம் தற்போது சிறையிலிருப்பவர்கள் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமது இளமைப்பருவத்தில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களாவர். ஆனால் தற்போது அவர்கள் அந்த மனநிலையிலிருந்து மீண்டிருக்கக் கூடும். எனவே அவர்களில் விடுதலை செய்யக் கூடியவர்களை விடுப்பதற்கும் , புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. என்மீது தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொள்ள உதவிய மொரிஸிடமிருந்து இதனை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவரை விடுதலை செய்தால் வரவேற்பதற்கு நான் தய

TAMIL Eelam news b43

 இலங்கையின் முன்னேற்றத்திற்கு சீனா அவசியம்! அங்கஜன் எம்.பி இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு சீனா போன்ற வெளிநாடுகளின் உதவிகள் தேவைப்படுவதாக ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்று கடலட்டை பண்ணை அமைத்து கடலட்டை பிடித்து வருகின்றமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அங்கஜன் இராமநாதனிடம் வினவிய போது இதனைக் கூறியுள்ளார். கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள் சீன நிறுவனம் அனுமதியின்றி கடலட்டை பண்ணை அமைத்து வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக பிரதேச கடற்றொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். . அங்கஜன் எதிரிகளோடு சேர்ந்து பணியாற்றினாலும் அவர் தூரநோக்கத்தோடு பார்க்கின்றார். சீனா இலங்கையில் இருக்கும்வரை தான் எமது தமிழீழக் கனவு உயிர்ப்போடு இருக்கும் சீனா வெளியேறி விட்டால் அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து நாம் ஜம் பதினாயிரம் போராளிகளின் உயிர் அற்பணிப்பின்னூடாக எழுதிய தமிழீழ வரைபடத்தை அழித்து விடுவார்கள் முழுமையாக அழித்து விடுவார்கள் என்பதை தமிழர்கள் ஒருபோதும் மறந

TAMIL Eelam news b42

 அனுமதியின்றி நாட்டுக்குள் படையெடுக்கும் சீனர்கள் - வெளியான எச்சரிக்கை அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு உட்பட பாதுகாப்பு கட்டமைப்புக்களின் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தியதால் தேசிய பாதுகாப்பு உறுதி பெறாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , புலனாய்வுப்பிரிவு உள்ளிட்டவை வலுப்படுத்தப்பட்டு தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தது பொய்யாகும். அவ்வாறு எந்தவொரு மாற்றமும் புலனாய்வு பிரிவில் ஏற்படுத்தப்படவில்லை. ஒரு பதவிகளில் நியமனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காக தேசிய பாதுகாப்பு வலுவடைந்துவிட்டதாகக் கூற முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. நல்லாட்சி அரசாங

TAMIL Eelam news b41

 போராளி ஜோசெப் மாஸ்டர் /அருளாளன் காலமானார்! விடுதலைப்போராட்டத்தை நேசித்த   போராளியான ஜோசெப் மாஸ்டர் யாழில் காலமானார் ஜோசெப் மாஸ்டர் இறுதி யுத்தத்தின் பின்னராக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு மீள கைதாகி இரண்டுவருடம் சிறையில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தனது மகளையும் மாவீரராக விடுதலைபோராட்டத்திற்கு ஈகம் செய்திருந்த அவர் போரியல் நூல்களை மொழிபெயர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். தாயகம் நோக்கிய பயணம்’ எனும் லியோன் யூரிஸ் எழுதிய அற்புத படைப்பை கச்;சிதமாய் தமிழாக்கம் செய்திருந்தார் ஜோசெப் மாஸ்ரர். ஈழநாதம் வெளியீடாக யாழ்ப்பாணத்திலிருந்து அச்சிடப்பட்ட அந்த நூல் கடுமையான பொருளாதார தடையின் மத்தியிலும் பாடசாலைப்பிள்ளைகள் பயன்படுத்தும் பாடக்கொப்பித்தாளில் அந்நாட்களில் இந்நூல் வெளியிடப்பட்டது. வரிவரியாய் கோடுகள் ஓட அதன் இடையிடையே அச்சடிக்கப்பட்ட கதைகளம் விரிந்து வாசிப்போரை உள்ளீர்த்து. வாசிப்போரை வசியம் செய்யும் மொழிநடை. ஒரு பிறமொழி படப்பை தன் மொழியாற்றலால் தமழ்மொழிபடைப்பு போல தமிழர் தேசமெங்கனும் இரண்டாம் உலகப்போரின் வலியை ஒவ்வொருவர் மனங்களிலும் உறையசெய்தவர். மாஸ்டர் எளிமையானவர் .நட

TAMIL Eelam news b40

 பேத்தியை அடைய துடித்த கணவர்…. துப்பாக்கியால் சுட்டு தள்ளிய மனைவி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!! பிரான்சில் வாழும் valerie என்னும் பெண் கேட்பாரில்லாததால் தன்னுடைய தந்தையான polette யின் வற்புறுத்தலின் பேரில் அவரையே திருமணம் செய்துள்ளார். அவ்வாறு திருமணம் செய்ததின் விளைவாக தன்னுடைய தந்தையின் மூலம் கர்ப்பமுற்று, அழகான ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.   இதனையடுத்து valerie க்கு பிறந்த அந்தப் பெண் பிள்ளை பருவமடைந்த பின் அதன் மீதும் ஆசை வைத்த polette பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த valerie தன்னுடைய மகளை காப்பாற்றுவதற்காக திட்டமிட்டு polette ட்டை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இதனால் valerie யின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் தற்போது valerie மீதான கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரணை செய்த நீதிபதி valerie நீண்டகாலமாக polette டால் கொடுமைப்படுத்தபட்டிருப்பதால் இனி அவர் சிறைக்கு செல்லக்கூடாது என்று கூறி அவரை விடுதலை செய்துள்ளார்.

TAMIL Eelam news b39

 அரசியல் கைதி தீடீர் மரணம் 2006ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான அரசியல் கைதியொருவர் இன்று தீடீரென உயிரிழந்துள்ளார். யாழ்.புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவரே இவ்வாறு மயக்கமுற்று விழுந்த நிலையில் தனது 41வது வயதில் உயிரிழந்துள்ளார். இவர் 2006ம் ஆண்டு பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 2006 ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு ,கொள்ளுபிட்டி பித்தலை சந்தியில் அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன், பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ஸ, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக

TAMIL Eelam news b38

 முல்லைதீவிலும் சிறிலங்கா புலநாய்கள் அட்டகாசம் பெறுமதியான வாகனங்கள் சொத்துக்கள் தீயிட்டு அழிப்பு. முல்லைத்தீவில் வீடு புகுந்து வாள்வெட்டு -வாகனங்களுக்கும் தீவைப்பு -ஸ்தலத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் இன்றிரவு வீடு புகுந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தவர்கள் மீது வாளால் வெட்டியுள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் வாகனமொன்றுக்கு தீ வைத்துள்ளார்கள். இதன் போது வாகனம் ஒன்று முற்றாக எரிந்துள்ளதுடன் ஒரு வாகனம் சேதமடைந்துள்ளது. அத்துடன் வீட்டில் இருந்த ஒருவர் வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAMIL Eelam news b37

 சீன தடுப்பூசியை போட்ட மருத்துவர்கள் பலர் உயிரிழப்பு -இந்தோனேஷியாவில் அதிர்ச்சி இந்தோனேசியாவில் சீனாவின் சைனோவாக் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்கள் நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்குச் சீனாவின் சைனோவாக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய உருமாறிய தொற்றை எதிர்க்கும் செயல் திறன் இந்தத் தடுப்பு மருந்துக்கு குறைவு எனக் கூறப்படும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடூஸ் என்னும் நகரில் மட்டும் 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் குறைந்தது மருத்துவர்கள் 20 பேரும், பிறர் 31 பேரும் உயிரிழந்ததாக இந்தோனேசிய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

TAMIL Eelam news b36

 அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளோடு தொடர்ந்து முறன்பட்டு வரும் இலங்கை . இந்திய வான்படையின் வேண்டுகோளை துாக்கிய எறிந்த இலங்கை அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்திய விமானப்படை தளபதியினூடாக விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளை பரிசீலித்த இலங்கை விமானப்படை அதற்கு அனுமதியை வழங்கமுடியாதென பதிலளித்துள்ளது. இரு நாட்டு படைகளின் ஒத்துழைப்புகளை மேம்படுத்த கடல் மற்றும் வான் பரப்பு பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

TAMIL Eelam news b35

 சிறிலங்கா புலநாய்கள் கட்டகாசம் தமிழர்களின் பெறுமதியான உடமைகள் சேதம். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!! யாழ். புத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது. எனினும் தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.    

TAMIL Eelam news b34

 பூநகரிக்குள் புகுந்தது சீனா - கடலட்டை பண்ணையில் பெருமளவு சீனர்களுக்கு தொழில் கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை கடற்பகுதியில் சீனர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். யாழ்ப்பாணத்தவர்களின் பெயரில் அனுமதி வழங்கப்பட்டுபுதிதாக ஆரம்பிக்கப்பட்ட கடலட்டை பண்ணை ஒன்றில் சீனர்கள் பலர் நிரந்தரமாக தங்கி நின்று பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இந்த கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ள போதிலும் பூநகரி பிரதேச செலாளரினதோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினதோ அனுமதி எதுவும் பெற்ப்படவில்லை. எனினும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதி யாழ்ப்பாணத்தவர்கள் மூவரின் பெயரில் வழங்கப்பட்டுள்ள போதிலும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து சீன நாட்டவரே அதிகம் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

TAMIL Eelam news b33

 மீதியுள்ள அரசியில் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? - ஆனந்தி சசிதரன் அமைச்சரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால், ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஏன் விடுவிக்க முடியாதென, ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான ஆனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணத்தில்,நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நீண்ட காலமாக சிறைகளில் இருந்த அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமையானது, மகிழ்ச்சிக்குரிய விடயமாகுமென்றார். இந்நிலையில், மிகுதியாக உள்ள அரசியல் கைதிகளும் எந்தவித பாரபட்சமுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தினார். அத்துடன், ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு உதவிய குற்றச்சாட்டில், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த பலர், அரசியல் கைதிகளாக இன்னும் சிறையில் உள்ளனரென்றும், அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார்.

b32கரும்புலிகள் படம்,

 அனைத்து நிலையிலும் உள்ள கரும்புலிகள்படம், சத்தியா வீரச்சாவு என்று அறிந்தபோது அதை ஏற்றுக்கொள்ளும் திடம் யாருக்கும் இருக்கவில்லை. சத்தியா… அவளை எப்படித்தான் பிரிந்திருப்பது. அன்பாய் சண்டைபோடும் அவளின் குழந்தைத் தனமான பேச்சு, சின்ன விடயங்களையே தாங்கமாட்டாமல் கசிகின்ற கண்களும் மீண்டும் மீண்டும் அவளை நினைவூட்டுவனவாகவே இருந்தன. சின்னப்பிள்ளை அல்ல கட்டையென்றுதான் அவளைச் சொல்வார்கள். அவ்வளவு உயரம் குறைவு. ஆனால் அவள் சின்னப்பிள்ளையில்லை. 06.02.1978ல் பிறந்தவள். 11ஆம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது போராட்டத்தில் இணைந்துகொண்டவள். நடக்கின்றபோது அவளின் துடியாட்டமான நடை ஒரு உற்சாகமான கறுப்புத் தாரா நடப்பதுபோல் இருக்கும். அவள் “லோ” கட்டினால் அதுவும் அவளும் ஒரேயளவு போல் எண்ணத் தோன்றும். ஆனையிறவுக்குள் நடத்தப்பட்ட பல கரும்புலித் தாக்குதல்களில் இவளைச் சேர்த்துக்கொள்ளவில்லை. தண்ணீருக்குள்ளால் நகர்ந்து செல்லவேண்டிய அநேகமான தாக்குதல்களுக்கு இவள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அவளின் குறைந்த உயரம்தான் அதற்கு ஒரேயொரு காரணம். நித்தமும் இப்படியே வாய்ப்புக்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைத்தால் அவ