முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b51

 தமிழ்ப்பெண் ஒருவரை வீட்டுவேலையாள் என்ற பெயரில் எட்டு வருடங்கள் அடிமையாக வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், இவர்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது.



சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தனது முடிவைத் தெரிவித்த நீதிபதிகள் குழு, குறித்த தம்பதியரை குற்றவாளிகள் என அறிவித்திருந்தது.


இதையடுத்து இவர்களது தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னதான விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின.


இதன்போது கருத்துவெளியிட்ட நீதிபதி John Champion, குறித்த பெண்ணை 8 ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்தமை தொடர்பில் தம்பதியர் இருவரும் ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.



அதுமட்டுமல்லாமல் குறித்த பெண்ணை இத்தம்பதியர் உரியமுறையில் கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும், மரணத்திற்கு அருகில் அந்தப் பெண் சென்றிருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் எனவும், ஆனால் இதுதொடர்பில் அவர்கள் மன்னிப்புக்கோரவில்லை எனவும் நீதிபதி John Champion தெரிவித்தார்.


ஆனால் அவர்கள் வருத்தம் தெரிவித்தால் அது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக அர்த்தப்படக்கூடும் எனவும், இது மேன்முறையீடுகளைப் பாதிக்கும் என்பதாலும், இவ்விடயம் தொடர்பில் அவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்க தயங்குவதாக இத்தம்பதியர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்தார்.


அதுமட்டுமல்லாமல் குறித்த தம்பதியர் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் எனவும், தன்னார்வ பணிகள் ஊடாக சமூகத்திற்கு இவர்கள் பல சேவைகளை ஆற்றியுள்ளதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.


இதுஒருபுறமிருக்க கணவன்-மனைவி இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், கணவனுக்கு இலேசான autism மற்றும் பாரியளவில் depressive disorder இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசூழலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டால் அவரது மனநலம் மேலும் மோசமடையும் என்றும், அவருக்கு ரத்துசெய்யப்பட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இதன்மூலம் விசேட தேவைகளைக் கொண்ட தனது மூன்று குழந்தைகளையும் அவர் பராமரிக்க முடியும் என்றும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் வாதிட்டார்.


இதேவேளை மனைவிக்கு வழங்கப்பட்ட பிணை ரத்துசெய்யப்பட்டுள்ள அதேநேரம் குழந்தைகளை பராமரிப்பதற்காக கணவன்  மட்டும் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவர்களுக்கான தண்டனை எதிர்வரும் ஜுலை 21ம் திகதி விதிக்கப்படவுள்ளது.


தமிழ் பெண்ணை அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டு: மெல்பன் தம்பதி குற்றவாளிகள் என தீர்ப்பு!

இவ்வழக்கின் பின்னணி

மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த தமிழ்ப்பெண், ஒவ்வொரு நாளும் எந்த நேரமும் வேலைசெய்ய தயாரான நிலையில் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதாகவும், அதிகரித்த வேலைப்பளு காரணமாக இரவில் ஒரு மணிநேரம் மாத்திரமே நன்றாக உறங்கக்கூடிய சூழலில் அவர் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.


சிறுவர் பராமரிப்பு, துப்பரவுப் பணி, சமையல், துணி துவைத்தல் போன்ற அனைத்துப் பணிகளுக்குமான ஊதியமாக நாளொன்றுக்கு 3.39 டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், வீட்டுக் கதவைத் திறப்பதென்றால்கூட தம்பதியரின் அனுமதிபெற்றுத்தான் திறக்கமுடியும் எனவும், குறித்த பெண் சார்பில் வாதாடிய Richard Maidment தெரிவித்தார்.


தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இப்பெண் கல்வியறிவு அற்றவர் எனவும், 14 வயதில் திருமணம் செய்து 29 வயதில் பாட்டியாகிவிட்டதாகவும், தனது குடும்பத்திற்கு பண உதவி செய்வதற்காகவே குறித்த தம்பதியருடன் ஆஸ்திரேலியா வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


இரண்டு தடவைகள் ஆஸ்திரேலியா வந்து தங்கியிருந்துவிட்டு திரும்பிய இப்பெண் 2007ம் ஆண்டு இங்கு வந்ததன்பின்னர் வீடுதிரும்ப அனுமதிக்கப்படவில்லை எனவும் அவரது சுற்றுலா விசா எப்போதோ முடிவடைந்துவிட்டபோதிலும் இப்பெண்ணை குறித்த தம்பதியர் தமது வீட்டில் தொடர்ந்தும் அடிமைபோல வைத்திருந்தார்கள் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.


கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் குறித்த பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மெல்பன் தம்பதியர்மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில் சிறுவர் பராமரிப்பு மற்றும் வீட்டுவேலை செய்வதற்கு பணச்செலவின்றி ஒருவரை தங்கவைத்துக்கொண்டு தமது வசதியான வாழ்க்கையைத் தொடர்வதே இத்தம்பதியரின் நோக்கம் என குறித்த பெண் சார்பில் முன்னிலையான வழக்குரைஞர் Richard Maidment தெரிவித்தார்.


ஆனால் குறித்த பெண்ணை அடிமையாக வைத்திருக்கவில்லை என்றும் முழுவிருப்பத்துடனேயே அவர் தம்முடன் தங்கியிருந்ததாகவும், இவை அனைத்தும் தமக்கு எதிராக புனையப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகளே என்றும் மெல்பன் தம்பதியினர் தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்றனர்.


வீட்டு வேலைகளில் உதவிபுரிந்துவந்த அவர் ஒருபோதும் அடிமையாக நடத்தப்படவில்லை எனவும் 'அடிமை' என்ற சொற்பதம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனவும், இதற்கேற்றாற்போல் சம்பவங்களும் மிகைப்படுத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாக அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?