முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

c 493 இலங்கை விமான நிலையங்கள்திடுக்கிடும் தகவல்

31 ஆம் திகதியுடன் மூடப்படுகின்றதா இலங்கை விமான நிலையங்கள் நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மாத்திரமே விமானங்களுக்கான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேசமயம் சில விமானங்கள் சென்னைக்கு சென்று அங்கு எரிபொருளை பெற்று போக்குவரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து விமான நிலையம் உத்தியோக பூர்வமாக எவ்வித அறிவித்தலையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

c 492 அகதிகளை அனுப்புவது சிறிலங்கா புலநாய்வாளர்கள் உறுதிப்படுத்திய மக்கள

அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோத நுழைவு - இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை அவுஸ்திரேலியாவின் கடல் எல்லைப் பகுதியில் தேர்தல் தினமான கடந்த சனிக்கிழமை பிரவேசித்த சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி அனுப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு அண்மித்த கடல் பரப்பில் பிரவேசித்தமை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்புக்கு மத்தியில் படகு எவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு மிக அருகில் வந்தது என்பது குறித்தும் கப்பல் பிரவேசித்தமை தொடர்பான தகவல் வெளியிடப்பட்ட நேரம் குறித்தும் மீளாய்வுகள் இடம்பெறும் என அவுஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்களை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெறால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ் தீவின் மேற்கு கரையோரத்தில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்ட படகில் இலங்கையைச் சேர்ந்த 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோத நுழைவு - இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நில

c491 அமெரிக்காவில்,18 குழந்தைகள்கொலை நடந்து என்ன?

டெக்சாஸ் துப்பாக்கி சூடு: 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெக்சாஸ் துப்பாக்கி சூடு அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடந்தது என்ன? என்ன நடந்தது அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில், 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் ஈவா மி

c 490 இலங்கை தமிழர்களை இலக்குவைப்பவர்கள்யார் ?

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட அரவின் சபேசன்: ஓடும் காரில் இருந்த அரவின்னை சுட்டுக் கொன்றவர்கள் யார் ? கனடாவின் டியூரஹாம், நகரில் இந்த வருடத்தில் நடக்கும் 6வது கொலை இது. அதுவும் ஒரு ஈழத் தமிழர் இளைஞர் சுடப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த வியாழன்(19) அன்று, சாலையில் ஒரு ஹொண்டா காரில் பயணித்துக் கொண்டு இருந்துள்ளார் 20 வயது நிரம்பிய அரவின். பிக்கரிங் என்னும் இடத்தில் உள்ள, Taunton Road சாலை வழியாக அவர் சரியாக 11.30 காரை ஓட்டிச் சென்றுள்ளார். திடீரென அவரது கார் பாதையை விட்டு விலகி இடிபட்டு நின்றுவிட்டது. முதலில் இதனை அவதானித்த மக்கள், இது ஒரு விபத்து என்று நினைத்து பொலிசாரை அழைத்துள்ளார்கள். அங்கே வந்த பொலிசாருக்கு முதலில் புரியவில்லை. பின்னரே அரவின் உடலில் உள்ள துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் பற்றி அம்புலன்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனவே அரவின் காரை ஓட்டிச் செல்லும் வேளையில், எதிர் திசையில், அல்லது அவருக்கு அருகில் வந்து யாரோ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக… பொலிசார் நம்புகிறார்கள். இதனால் குறித்த சாலையில்(Taunton Road) காலை 11.30 தொடக்கம்

c 489 இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கையில் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும், எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்கப்படுத்தப்படவுள்ளது. நிறுவனத் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் இன்று முதல் பொதுத்துறை பணியாளர்கள் பணிபுரிய அழைக்கப்படுவார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிபொருள் நெருக்கடியை நிர்வகிக்கவும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தியாவசியமற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

c 498 உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய்

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை தொற்று! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குரங்கு அம்மை தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் பயன்பாட்டில் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை தொற்று! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நோய் பாதுகாப்பு இந்த வைரஸின் தற்போதைய மாறுபாடு தீவிரமற்ற மாறுபாடாகும் என பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான தற்போதைய சுகாதார நடவடிக்கைகள் குரங்கு அம்மை தொற்றிலிருந்தும் பாதுகாப்பதற்கான முக்கியமான நடைமுறையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்குள் நுழைகிறதா குரங்கு காய்ச்சல்? தற்போது பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பில் இலங்கை வைத்தியசாலை அமைப்பு மற்றும்

c 497 பெட்ரோல்இல்லை பச்சிளம் குழந்தை பலி

இலங்கை பொருளாதார நெருக்கடி: பெட்ரோல் தேட ஏற்பட்ட தாமதத்தால் பச்சிளம் குழந்தை பலி ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, தற்போது உயிரை காவுகொள்ளும் அளவிற்கு உக்கிரமடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வரிசைகளில் காத்திருந்த சில வயோதிகர்கள் கடந்த காலங்களில் உயிரிழந்திருந்தனர். பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பகுதியில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவொன்று நேற்றைய தினம் திடீரென உயிரிழந்துள்ளது. சிசுவிற்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தை அடுத்து, குறித்த சிசுவை மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றோர் முயற்சித்துள்ளனர். இரண்டு நாட்களேயான அந்த சிசு, தாய் பால் குடிப்பதை தவிர்த்தமையினால், சிசுவின் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவடைந்துள்ளது. இந்த நிலையில், குறித்த சிசுவை மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றோர் முயற்சி செய்துள்ளனர். எனினும், உரிய நேரத்தில் சிசுவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை போராட்டம் முச்சக்கரவண்டிக்கு (ஆட்டோ) பெட்ரோல் இல்லாத காரணத்தால் சிசுவை அழைத்து செல்ல முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்

c 496 கனடாவிடம் சீறிப் பாய்ந்த ஜி.எல். பீரிஸ்,

மே 18 தமிழர் இனப்படுகொலை பிரேரணை! கனடாவிடம் முறையாக ஆட்சேபித்த இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை தனது கடுமையான எதிர்ப்பையும் ஆழ்ந்த கவலையையும் பதிவு செய்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட ,இலங்கைக்கான கனடாவின் பதில் உயர் ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானிடம், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், தமது ஆட்சேபனையை வெளியிட்டார். நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பொய்யான உள்ளடக்கத்தை அவர் திட்டவட்டமாக நிராகரித்ததுடன், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை என்ற கனடாவின் நிலைப்பாட்டுடன் பொருள் அடிப்படையில், பிரேரணை முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் குறிப்பிட்ட சட்ட அர்த்தங்களைக் கொண்ட இத்தகைய தொழில்நுட்ப சொற்கள் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார். எனவே இந்த பிரேரணையில் உள்ள தவறுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அரசாங்கத்தை வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்கொண்டார். மே 18 தமிழர் இனப்ப

c 495 என்னை மறந்து விட்டீகளா ?

வித்தியாசமான கவர்ச்சி உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் சின்னத்திரையில் சின்னதம்பி என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர் பாவணி ரெட்டி. இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மக்களின் மத்தியில் பேராதரவைப் பெற்று மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் அமீர் என்பவருடன் காதலில் இருந்தார் என்ற தகவல்கள் பரவின. போட்டியாளர் அமீர் பாவனியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார். மேலும் பிக் பாஸ் படுக்கை அறையில் பாவனியின் கண்ணத்தில் நச்சென முத்தம் கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற்றது. இதனை தொடர்ந்து இணையத்தில் உள்ள பல ஊடகங்களுக்கு பாவனியும் அமீரும் ஜோடியாக பேட்டி கொடுத்து வந்தனர். சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பாக சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் பாவனி. தன்னுடைய நண்பர் பிரதீப் என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்/ திருமணம் செய்த சில மாதங்களிலேயே கணவர் பிரதீப்

c 494 ஜோதிடர்கல்யாணி ஹேரத் மெனிகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய தலைவரால் ஏற்படவுள்ள மாற்றம்! பிரபல ஜோதிடர் வெளியிட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் புதிய தலைவரொருவர் உதயமாகவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டில் பல பாரிய எழுச்சிகள் ஏற்படும் எனவும் பிரபல ஜோதிடர் கல்யாணி ஹேரத் மெனிகே தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஜாதகம் கும்பம் என்றழைக்கப்படும். இலங்கையின் அடையாளம் கும்பம் ஆகும். சனி இப்போது இந்த கும்ப இராசியில் இருக்கின்றார். பொதுவாக இராசியில் இருக்கும் சனி கொடியது. நாட்டை ஆளும் தலைவனுக்குக் கொடியது. பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், நெருக்கடிகள் மற்றும் எதிர்காலத்தில் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. ஜூலை 6ஆம் திகதி முதல் சனி இந்த விலகி ஜனவரி 19, 2023 முதல் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, இந்த நாடு சரியான திசையில் நகரும். அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிற்கு புதிய தலைவர் ஒருவர

c 493 உக்ரைனுக்கு இலங்கை போன்ற நாடுகளிற்கான தேவையற்ற உதவியே தோல்விக்குக்காரணம்

" உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு "முக்கிய உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவார்" என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான "முயற்சிகளை இரட்டிப்பாக்க" போரிஸ் ஜான்சன் உறுதி உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி அழைப்பின் போது, ​​போரிஸ் ஜான்சன் முக்கிய துறைமுக நகரமான ஒடேசாவின் முற்றுகை தொடர்பில் பேசியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், "ஒவ்வொரு நாடும் உக்ரைனின் சுதந்திரப் போராட்டத்தில், இப்போதும் நீண்ட காலத்திலும் உதவ வேண்டிய கடமை உள்ளது," என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் "உக்ரைன் மக்கள் அனைவரும் சேர்ந்து, விரைவில் ஒரு நாள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று தனது ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்."

c 492இலங்கை போராட்டங்கள் ஏனைய நாடுகளுக்கும் பரவலாம்

இலங்கை போராட்டங்கள் ஏனைய நாடுகளுக்கும் பரவலாம் - ஐ.எம்.எவ் கடும் இலங்கையில் வறிய மக்களுக்கான அரசாங்க உதவிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படாவிட்டால் அங்கு இடம்பெறும் போராட்டங்கள் மற்ற நாடுகளிலும் பரவலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கடுமையாக எச்சரித்துள்ளார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பிபிசியிடம் கூறுகையில், உலகெங்கிலும் உள்ள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் போராடி வருகின்றனர். பல அரசாங்கங்கள் சில உதவிகளை வழங்குகின்றன ஆனால் அது போதாது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர் வாழ்க்கைச் செலவு நெருக்கடி என்று வரும்போது, ​​"இரண்டு முன்னுரிமைகள் உள்ளன, ஒன்று மிகவும் ஏழ்மையான மக்கள், சமூகத்தின் பிரிவுகள் இப்போது அதிக உணவு மற்றும் எரிசக்தி விலைகளுடன் போராடுகின்றன". இரண்டாவதாக, உக்ரைனில் நடந்த போரினால் "மிகவும் பாதிக்கப்பட்ட" வணிக செயற்பாட்டை ஆதரிப்பது. உலகப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், செழிப்பை மேம்படுத்தவும் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுவதே சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு ஆகும். எவ்வாறாயினும், இது சவாலானது, ஏனெனில் இந்த ஆண்டு உணவு விலைகள் அதிக உச்சத்தை எ

c 491 வெற்றிக்குப்பின்னரே எங்களை அறியுங்கள்.

சில வெற்றிகளை ஈட்டுவதற்காக தாங்கள் இலங்கைத் தமிழர் என்பதை மறைத்து வருவதாக தகவல் கசிந்து உள்ளது. வெற்றிக்குப்பின்னரே இவர்கள் தங்களை அடையாழப்படுத்தவிரும்புவதாக தமிழ் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.தெல்லிப்பளை பெற்றோருக்கு பிறந்தவர் அவுஸ்ரேலிய எம்.பியானார் அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட மிஷேல் ஆனந்தராஜா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்ட்டுள்ளார். இவர் தெல்லிப்பளையை சேர்ந்த பெற்றோருக்கு தென் ஆபிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர். இவரின் பூர்வீகம், குடும்ப விபரம் என்பன தேர்தல் முடியும் வரை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் பல பத்திரிகைகள் இவரின் பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று கூறி வந்தன. இவர் ஒரு மருத்துவராகவும் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் கடமை புரிந்து வந்துள்ளார்.ஒரு கரும்புலிவீரனின் கதையாகவே தொடரும் தமிழர்களின் வாழ்க்கைபயணம். அவரின் வாக்குமூலம் அவுஸ்திரேலியா புதிய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் மிச்சேல் ஆனந்தராஜா மிச்சேல் ஆனந்தராஜாவின் உண்மையான பிறப்பிடம் வெளியே தெரியாமல் உள்ளதா என்ற கேள்வி

c 490 இந்தியா வழங்கிய மற்றுமொரு உதவி

இலங்கை நெருக்கடி - இந்தியா வழங்கிய மற்றுமொரு உதவி இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக இந்தியா மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட SLR 2 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான அரிசி, பால் மா மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிய கப்பல் இன்றையதினம் கொழும்புத்துறைமுகத்தை அடைந்தது.இந்த உதவிப்பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

c 489 மேலாடை அணியாமல் உக்ரைன் பெண் போராட்டத்தில்ஈடுபட்டார்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி..!! மேலாடை அணியாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் பெண் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பின்போது, பெண் ஒருவர் மேலாடை அணியாமல் தனது உடலில் உக்ரைன் கொடியின் வண்ணங்களை வரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற திரைப்பட விழாவில், ‘எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள்’ என ஒற்றை பெண்ணாக அவர் கோஷம் எழுப்பியது உலக அரங்கை அதிரவைத்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்து செல்வதற்கு முன்பு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அங்கிருந்த புகைப்பட கலைஞர்களுக்கு அவர் மேலாடை இன்றி போஸ் கொடுத்தார். அந்த நேரத்தில், ஜார்ஜ் மில்லர் இயக்கிய ‘ஆயிரம் ஆண்டுகளாக காத்திருக்கிறேன்’ என்ற படத்தை பார்க்க நடிகர்கள் டில்டா ஸ்விண்டன், இட்ரிஸ் எல்பா ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் வந்து கொண்டிருந்தனர். ஆனால், உக்ரைன் பெண் நடத்திய போராட்டம் காரணமாக சிவப்பு கம்பள வரவேற்பில் விருந்தினர்களின் அணிவகுப்பு சற்று நேரம் தடைபட்டது.

c 488 தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்!

தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்! மகிழ்ச்சியை கொண்டாடும் அகதிகள் “எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வரவிருக்கும் அவுஸ்திரேலிய பிரதமரான அந்தோணி அல்பனீஸின் தேர்தல் வெற்றிக்கு எனது வாழ்த்துகளை கூறினேன்,” என தாராளவாத தேசிய கூட்டணியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், அவுஸ்திரேலிய தாராளவாத தேசிய கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேர்தலில் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி தோல்வி அடைந்தது குறித்து பல அகதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். தோல்வியை ஒப்புக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர்! மகிழ்ச்சியை கொண்டாடும் அகதிகள் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சஜத் அஸ்கரி எனும் ஆப்கானிய அகதி, “அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக வந்ததால் சுமார் 15 ஆண்டுகளாக எனது தாயிடமிருந்து நான் பிரிந்திருக்கிறேன். இன்றிரவு (தேர்தல் முடிவு வெளியாகிய நேரம்) நான் அழுதேன், இறுதியாக எனது தாயையும் பிற குடும்ப உறுப்பினர்களையும் பார்ப்பதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி! இரக்கம், கண்ண

c 487 கோட்டாபயவின் வாழ்த்து செய்தி

அவுஸ்திரேலியா புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற முனைப்பு காட்டும் கோட்டாபய அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார். அவுஸ்திரேலியா பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றது மோரிசனின் கூட்டணி பலவீனமடைந்துள்ளது. இதையடுத்து, 31வது பிரதமராக அந்தோணி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளார்.

c 486 இலங்கை தொடர்பில் சீனவின் கருத்து

இலங்கை தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சீனா சாதகமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் தினசரி செய்தியாளர் சந்திப்பில் நேற்று (20ம் திகதி) அதன் பேச்சாளர் வான் வென்பின் இதனைத் தெரிவித்தார். “இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா முழுமையாக அறிந்துள்ளது. இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் வினைத்திறனான பங்கை ஆற்றுவதற்கு சீனா தயாராக உள்ளது. இலங்கை தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு இலங்கையின் சீனத் தரப்பிற்கான கடனுக்கு முறையான தீர்வைக் காண இலங்கையுடன் ஆலோசனை நடத்துவதற்கு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு சீனா உதவுகிறது. தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதுடன், இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்கை தொடர்ந்தும் ஆற்றும். வெளிநாட்டு முதலீடு மற்றும் நிதிப் பங்காளிகளின் நியா

c 485 லேபர் கட்சி வெற்றி பெற்றது.

10 வருடமாக இலங்கை அகதிகளை எடுக்கும் ஒரு கச்சியாக லேபறை தவறான முறையில் பரப்புரை செய்யது தோல்வி அடைய செய்தது லிபரல் . கடுமையான தோல்வி அடைந்தாலும் அவர்களின் குறிக்கோலில் எப்பொழுதும் மாறவில்லை இறுதியாக நடந்த தேர்தலில் கூட தாங்கள் வந்தால் 20000 அகதிகளிற்கு நிலந்தர விசா கொடுப்போம் என சொல்லித்தான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு அவர்கள் வெற்றிவாகை சூட்டினார்கள். இதில் இருந்து அவுஸ்திரேலியாவில் வாழும் மக்கள் நல்லவர்கள் என்பதை லேபர் கட்சி நிருபித்துவிட்டது. நாட்டில் நேற்று (மே 21) நடந்து முடிந்த பெடரல் தேர்தலில் எதிர்கட்சியான லேபர் கட்சி வெற்றி பெற்றது. புதிய பிரதமராக Anthony Albanese திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளார். வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருவதால் லேபர் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் அரசு அமையுமா அல்லது லேபர் தலைமையில் சிறுபான்மை அரசு அமையுமா என்பது விரைவில் தெரியவரும். லேபர் கட்சி ஒருவேளை அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறினாலும், இக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றியிருப்பதால் வெற்றி பெற்றிருக்கும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் லேபர் அரசுக்கு ஆதரவு தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிற

c 484 கொழுப்பை நீக்கி தன்னையும் அழித்த நடிகை

கொழுப்பை நீக்கச் சென்ற 21 வயது நடிகை சிகிச்சையின் போது மரணம் புரட்டிப் போட்ட விடையம் ! பெங்களூருவில் 21 வயது சின்னத்திரை நடிகை கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்துள்ளார்.சேதனா ராஜ் 21 வயது கன்னட சின்னத்திரை நடிகை. கீதா, தோரிசாணி, ஒலவினா நில்தானா ஆகிய சீரியலில் நடித்துள்ளார். ஹவயாமி எனும் கன்னட படத்திலும் நடித்துள்ளார்.செதனா ராஜின் தந்தை கோவிந்த ராஜ் கூரியதவாது : பெற்றோர்களது சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் தகுந்த உபகரணங்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவமனையின் அஜாக்கிரதையாலே எனது மகள் உயிரிழந்துள்ளார். சேதனா ராஜின் தாயர், “எனது மகள் ஆரோக்கியமானவர். எந்த நோயும் இல்லாதவர். அவளுக்கு மார்பின் மீது அதிகமான கொழுப்பு இருக்கிறது யாரோ கூறியதைக் கேட்டு நண்பர்களுடன் மருத்துவமனை வந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். எங்களது சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவமனையின் மீது நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம்” எனக் கூறியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது நுரையீரலில் நீர் தங்கியிருந்ததாலே இறப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியி

c 483 கனடாவில் ஈழத்தமிழர் முக்கிய நகர்வில் முட்டுக்கட்டையாகும் இலங்கை அரசு | #...

கனடாவில் ஈழத்தமிழர்களின் முக்கிய நகர்வில் முட்டுக்கட்டையாகும் இலங்கை அரசு (VIDEO) இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதற்கான சரியான ஆதாரங்கள் எதுவுமில்லையென்ற குற்றச்சாட்டு சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக கனடாவின் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சுயாதீன தீர்ப்பாயத்தை அமைத்து இனப்படுகொலையை கனடா விசாரிக்க வேண்டும் என அனைவரினாலும் கோரப்பட வேண்டுமெனவும், அவை தவறும் பட்சத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து விசாரிக்கும் படி தொடர்ந்து கனடாவிற்கு அழுத்தம் கொடுப்பார்களாயின் உலக நாடுகள் அனைத்தும் இனப்படுகொலையை ஏற்றுக்கொண்டு குரல் கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

c 482 ரஷ்யாவிடம் மண்டியிட்ட உக்ரைன் போராளிகள்

ரஷ்யாவிடம் மண்டியிட்ட உக்ரைன் போராளிகள் - புடினுக்கு சொல்லப்பட்ட தகவல் மரியுபோலின் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் பதுங்கியிருந்த மீதமுள்ள உக்ரைன் போராளிகளும் "சரணடைந்துள்ளனர்" என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சரணடைந்தவர்களில் 531 பேர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலை உக்ரேனிய போராளிகளிடமிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். ரஷ்யாவிடம் மண்டியிட்ட உக்ரைன் போராளிகள் - புடினுக்கு சொல்லப்பட்ட தகவல் அசோவ்ஸ்டல் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோலின் கடைசி பெரிய கோட்டையாகக் கருதப்பட்டது. ஏனெனில் இந்த பகுதி புடினுக்கு மிக முக்கிய இலக்காக காணப்பட்டது. குறித்த பகுதி கிரிமியாவிற்கும் ரஷ்ய சார்பு பிரிவினைவாத கட்டுப்பாட்டு பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் இடையே ஒரு நில நடைபாதையை கொண்டது என சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்நிலையில், குறித்த ஆலையில் உக்ரைன் போராளிகள் பது

c 481 மொழி பிரச்சினையால் உதவியை இளந்த இலங்கையர்

பிரான்ஸில் இலங்கையருக்கு நேர்ந்த பரிதாப நிலை! பிரான்ஸில் வாழ்ந்து வரும் இலங்கையர் ஒருவர் மொழி பிரச்சினையால் தனது மாதாந்த உதவித் தொகையை இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் உதவித் தொகையை அந்நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இழந்துள்ளார். பாரிஸில் வாழும் இந்த இலங்கையர் குடும்ப உதவி நிதி எனப்படும் உதவித் தொகையை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவரது கணக்குகள் சிலவற்றை புகுப்பிக்குமாறு பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவரால் அந்த மொழியை புறிந்துக் கொள்ள முடியவில்லை. அத்துடன் அவரது குடியிருப்பு அனுமதியும் புதுப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவரது குடியிருப்பு அனுமதி பெப்ரவரி மாதம் புதுப்பிக்கப்பட்ட போதிலும் அவர் அதனை சமர்ப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அவருக்கு பிரெஞ்சு மொழி தெரியாதென்பதனால், அவரது ஆவணங்களில், அவரிடமிருந்து கோரப்பட்ட தொகைகளை அவர் செலுத்த தவறியுள்ளார். இந்த நிலையில் அது தொடர்பான அதிகாரிகளிடம் ஆவணங்கள் எடுத்த செல்லப்பட்டுள்ளது. அவர் தனது நண்பருடன் அங்கு சென்று விடயங்களை தெளி

c 480 ரணிலின் கருத்தால் வெடித்தது சர்ச்சை

ரணிலின் கருத்தால் வெடித்தது சர்ச்சை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் போராட்டங்களில் பங்கேற்று புதிய அனுபவத்தைப் பெறலாம் என்று தெரிவித்தமையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரணிலின் கருத்தால் வெடித்தது சர்ச்சை இதேவேளை இந்தப் பேட்டியில் விவசாயத்திற்கு தேவைாயான உரம் இல்லாமையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையினால் கடனை திருப்பி செலுத்த முடியாததை முன்னிட்டு வெட்கப்படுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். அதேபோல் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

c 479 ராஜீவ் காந்தி மரணமும், வழக்கு கடந்து வந்த பாதையும்

ராஜீவ் காந்தி மரணமும், வழக்கு கடந்து வந்த பாதையும் - ஆண்டுவாரியாக நிகழ்ந்தவை என்ன? (இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இன்று வரையிலும் இந்த வழக்கு சூடு குறையாத பேசுபொருளாகவே இருந்து வரும் நிலையில், ராஜீவின் கொலைக்கு முன்னும் பின்னும் என்ன நடந்தது? வழக்கு கடந்து வந்த பாதை என்ன என்பதை ஆண்டுவாரியாக விளக்கும் இந்தக் கட்டுரையை உங்களுக்காக மறுபகிர்வு செய்கிறோம்.) 1991 மே 20: ஒதிஷா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு பகுதிகளில் தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த கிங் ஏர் விமானத்தில் புறப்பட்டார் ராஜீவ்காந்தி. 1991 மே 21 மாலை 6.30 மணி: விசாகப்பட்டணத்தில் இருந்து ராஜீவ் காந்தி சென்னை நோக்கிப் புறப்பட்டார். 1991 மே 21 இரவு 8. 20 மணி: சென்னை பழைய மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அங்கிருந்து வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர், பாதுகாப்பு அதிகாரிகளுடன் புறப்பட்டார் ராஜீவ். விளம்பரம் 1991 மே 21 இரவ

C 478 MAY 18 திருமதி சியாமினா அவர்களின் முள்ளி வாய்க்கால் கவிதை

அவுஸ்திரேலியாவில் 18/05//2022 குயின்ஸ்லாந்து மாதிலத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனவளிப்பு நினைவு நிகள்வில் திருமதி சியாமளா யோகஸ்வரன் அவர்கள் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டே சுமார் 75 மக்கள் முன்னிலையில் தனது உணர்ச்சிக் கவிதையை வாசித்து அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தார். இப்படி உணர்வு உள்ளவர்கள் புலத்திலும். ஈழத்திலும் குறிப்பிட ஒரு சிலரே உள்ளார்கள் என்பதும் குறிப்பிடக்தக்கது.

c477 மீண்டும் கலவரம் வெடித்தது:

மீண்டும் கலவரம் வெடித்தது: கொழும்பில் பாரிய ஆர்பாட்டம் மாணவர்களை கலைக்க முற்படும் பொலிசார் ! கொழும்பில் சற்று முன்னர் பெரும் ஆர்பாட்டம் ஒன்று வெடித்துள்ளது. இது கலவரமாகவும் மாறியுள்ளது. பல்கலைக் கழக மாணவர்கள், கோட்டபாயவை பதவி விலகச் சொல்லி பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை கொண்டு தாக்கி வரும் நிலையில். மாணவர்களுக்கும் பொலிசாருக்கு இடையே மோதல் நிகழ்வதாக அங்கிருந்து அதிர்வின் செய்தியாளர் சற்று முன்னர் அறிவித்துள்ளார். சேத விரபரங்கள் இன்னும் தெரியவில்லை. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

c 476 தமிழர்களை கருவருத்தவர்கள், அதற்க்கான பலனை அனுபவிக்கிறார்கள்! - Nanjil Sa...

தமிழர்களை கருவறுத்தவர்கள், அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் -நாஞ்சில் சம்பத் காலம் ஒரு மருத்துவரைப் போன்றது. அறுப்பதற்கு ஒரு காலம் உண்டு என்றால் விதைப்பதற்கும் ஒரு காலம் உண்டு. 2009 இல் கூலிப்படைகளின் உதவியோடு ஈழத்து சொந்தங்களை கருவறுத்து மலர இருந்த தமிழ் ஈழத்தை மண்ணை அள்ளிப்போட்டு மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். இவ்வாறு தெரிவித்தார் சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத். முள்ளிவாய்க்கால் பெருந்துயரை முன்னிட்டு ஐ.பி.சி தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்தவை காணொலி வடிவில்,

c 475 இதை விட்டால் கதைப்பதற்கு எதுகும்இல்லைகோட்டாபய.

விடுதலைப்புலிகளுடனான போரில் ...கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை. மனிதாபிமான நடவடிக்கை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்று கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர், கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் திகதி முடிவடைந்தது. அந்த திகதி, போரில் உயிர்நீத்த இலங்கை இராணுவ வீரர்களை நினைவுகூரும்வகையில், போர் வீரர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும்அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த இராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது. நமது படைகள், மனிதாபிமான நடவடிக்கை மூலம் போரை முடித்து, அமைதியை கொண்டு வந்தன. அந்த போரில், வெறுப்புணர்வோ, ஆத்திரமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இருந்தது இல்லை. அப்படி அமைதி உருவாக்கப்பட்ட நாட்டில் இனவெறிக்கோ, எந்தவகையான பயங்கரவாதத்துக்கோ இடமில்லை. இதுதான் இலங்கையின் தனித்த பண்பாடு. வெளிநாட்டு குழுக்களை முற