முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 447 தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் நிலை

இலங்கை நெருக்கடி: தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் நிலை என்ன? பிரமிளா கிருஷ்ணன்
இலங்கையில் நடைபெற்றுவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக தமிழகத்தில் இருந்து நிரந்தரமாக இலங்கைக்கு செல்லவிருந்த பல அகதிகள் காலவரையின்றி காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒருசிலர் இனி இலங்கைக்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்கவிரும்பவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். கொரோனா காரணமாக மூன்று ஆண்டுகளாக ஏற்கனவே தடைப்பட்டிருந்த பயணம் தற்போது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னை காரணமாக மீண்டும் தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1980களில் தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக பல்லாயிரக்கணக்கில் இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்தவண்ணம் இருந்தனர். இந்நிலையில் 2009ல் போர் முடிவுற்றதால், தங்களது தாயகத்திற்கு செல்ல பலரும் ஆர்வத்துடன் இருந்தனர். இந்தியாவில் இருந்து வெளியேறி இலங்கையில் அவரவர் பூர்வீகத்தில் குடியேற தேவையான உதவிகளை இலங்கை மற்றும் இந்திய அரசு செய்ய முன்வந்த நிலையில், பலரும் குடும்பத்துடன் செல்ல தயாராக இருந்தனர்.
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 108 அகதிகள் முகாம் செயல்படுகின்றன. இதில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ளனர். முகாம்களுக்கு வெளியில் சுமார் 30,000 பேர் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. 2010 முதல் மார்ச் 2022 வரை 15,952 நபர்கள் தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்கு சென்றுள்ளனர் என இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் கூறுகிறது. தற்போதுள்ள அரசியல் நிலைமை காரணமாக இலங்கைக்கு கிளம்ப தயாராக இருந்தவர்கள் மீண்டும் காத்திருக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்று இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் தெரிவிக்கின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை முகாமில் வசிக்கும் குருஷில்டா தர்சினி(28) இலங்கைக்கு திரும்பி போக விரும்பும் ஒருவர். தன்னுடைய வயதான பெற்றோர்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் தனது குடும்பத்துடன் விரைவில் இலங்கை திரும்பவேண்டும் என எதிர்பார்க்கிறார். ''நான் பிறந்து வளர்ந்தது தமிழ்நாடுதான். இலங்கைக்கு செல்லவேண்டும் என்பது பலவருட கனவு. இந்த மாதம் நான் என் கணவர், குழந்தையுடன் பயணம் மேற்கொள்வதற்கான விமான டிக்கெட் எடுத்திருந்தேன். தற்போது அந்த பயணத்தை தள்ளிப்போடவேண்டியதாகிவிட்டது. என் இளைய சகோதரி பள்ளிப்படிப்பை முடித்து இலங்கைக்கு சென்றுவிட்டாள். தற்போது அவள், இலங்கை விமான சேவையில் செவிலியராக வேலைசெய்கிறாள். 30 வயதிற்குள் இலங்கைக்கு சென்றால்தான் அங்கு அரசு வேலை கிடைக்கும். இப்போது அங்கு பிரச்னையாக உள்ளது. ஆனால் என் பெற்றோரை நான் கவனிக்கவேண்டும் என்பதால் விரைவில் அங்கு சென்றாகவேண்டும்,''என்கிறார் குருஷில்டா தர்சினி.
இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் இலங்கைக்கு திரும்பியவர்கள் பொருளாதார சிக்கலில் தற்போது தவிப்பதாகவும், விலைவாசி ஏற்றம் அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதாகவும் உள்ளது என்கிறார்கள். தமிழகத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கைக்கு குடிபெயர்ந்த கனகாம்பிகை சுந்தரலிங்கம் (50) இலங்கையில் தற்போது நிலவும் சூழல் மிகவும் கவலைதருவதாக உள்ளது என்கிறார். ''இந்தியாவில் இருந்து இங்கு வந்தபோது, இங்குள்ள விலைவாசி குறைவாக இருந்தது. எங்களுக்கு கொடுக்கப்பட்ட உதவித்தொகை மற்றும் இங்கு ஈட்டிய வருவாய் உதவியது. நாங்கள் 2020ல் கரூர் மாவட்ட முகாமில் இருந்து எங்கள் சொந்த ஊரான வவுனியாவுக்கு வந்தோம். எங்கள் நிலத்தில் பயிர் செய்தோம். அப்போது எல்லா பொருட்களும் விலைகுறைவாக இருந்தது. ஒரு கிலோ மைதா இலங்கை பணத்தில் ரூ.48ஆக இருந்தது. தற்போது அதே ஒரு கிலோ ரூ.240ஆக உள்ளது. எங்களால் சமாளிக்கமுடியவில்லை,''என்கிறார் அவர். மேலும் அவர் பேசுகையில், ''இந்தியாவிலும் விலைவாசி அதிகரித்துள்ளதை கேள்வியுற்றோம். அதனால், நாங்கள் இங்கு வந்துவிட்டதால் வருத்தம் இல்லை. போர் சூழலை கண்டவர்கள் நாங்கள், தற்போது உள்ள நிலை மாறும் என்று எங்களுக்கு நாங்களே நம்பிக்கை ஊட்டிக்கொள்கிறோம்,''என்கிறார் கனகாம்பிகை. இலங்கை வரலாறு: உள்நாட்டுப் போர் ஏற்பட காரணமான 'கருப்பு ஜூலை' நிகழ்வு திருகோணமலை மக்கள் ரணில், மஹிந்த பற்றி என்ன நினைக்கிறார்கள்? இலங்கையில் தற்போது உள்ள நிலைமை சரியாக வாய்ப்பு குறைவாக இருப்பதாக நம்பும் சிலர் தாய்நாட்டிற்கு செல்லும் திட்டத்தை கைவிட்டதாக கூறுகின்றனர். கும்மிடிபூண்டியில் வசிக்கும் விஸ்வநாதன் சுந்தரமூர்த்தி(44) இலங்கைக்கு செல்லும் விருப்பம் முற்றிலுமாக இல்லை என்கிறார். ''போர் முடிந்து அமைதி வந்தது. ஆனால் மீண்டும் அங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. வெறும் பொருளாதார சிக்கல் மட்டுமல்ல நம் வாழ்க்கையை வாழ்வதற்கான பாதுகாப்பு அங்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. நான் செல்ல முற்பட்டேன். ஆனால் இனி தமிழ்நாட்டில் இருந்துவிடலாம், சொந்தங்களை பார்ப்பதற்கு வேண்டுமானால் போய்வரலாம் என்று முடிவு செய்துவிட்டேன்,''என்கிறார். இலங்கை அகதிகள் பட மூலாதாரம்,OFFER விஸ்வநாதனின் குழந்தைகள் தமிழகத்தில் படிப்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்றும் அங்கு சென்று அவர்களின் வாழ்வை போராட்டத்திற்கு மத்தியில் நடத்துவது தேவையில்லை என்று கருதுவதாகவும் சொல்கிறார். விஸ்வநாதனை போல இலங்கைக்கு செல்வதற்கான திட்டத்தை கைவிட்டவர்கள் பலர் உள்ளனர் என்றும் ஒரு சிலர் தமிழகத்தில் உள்ள குடும்பங்களுடன் திருமண பந்தங்களில் இணைந்துள்ளதால் திரும்பி செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங். ''1983ல் முதன்முதலாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் கரைக்கு இலங்கை தமிழ் அகதிகள் வந்துசேர்ந்தனர். அப்போது முதல் பல அகதிகளை நான் பேட்டி எடுத்திருக்கிறேன். 2009ல் போர் முடிந்தபின்னர் ஒரு சிலருக்கு நாட்டிற்கு செல்லும் விருப்பம் இருந்தது. இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் ஒரு சிலர் சென்றனர். ஆனால் தற்போது உள்ள பொருளாதார நிலைமை சீராக மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என இலங்கை அரசு கூறுகிறது. இந்த நிலையில், மீண்டும் தாய்நாட்டிற்கு செல்லலாம் என்று கருதும் இலங்கையர்களின் எண்ணிக்கை சொற்பமாகத்தான் இருக்கும்,''என்கிறார். ரணில் இலங்கை நாடாளுமன்றத்தில் தனித்து விடப்படுவாரா? இலங்கை நெருக்கடி: ரணிலுக்கு சஜித் பதில்: "பல கட்சி ஆட்சிக்கே இணங்குவோம்" தமிழகத்தில் கிடைக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, முகாமில் உள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை அங்குள்ள சூழலைக் காட்டிலும் மிகவும் திருப்பிதிகாரமாக இருப்பதால், ஒரு சிலர் தமிழ்நாட்டிலேயே தங்கி விடலாம் என்று நினைக்கின்றனர். ''1980களில் தொடங்கி இன்றுவரை தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்திற்கு ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும் அகதிகளுக்கு வசதிகளை வழங்கி வருகின்றனர். தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அகதிகள் முகாம் என்பதற்கு பதிலாக முகாம்களை புனர்வாழ்வு மையம் என்று சொல்லலாம் என்று அறிவித்தார். அதனால், ஒரு சிலர் நிரந்தரமாக இங்கே இருப்பது என முடிவுசெய்துவிட்டார்கள்,''என்கிறார். இலங்கை அகதிகள் பட மூலாதாரம்,OFFER இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்பவர்களுக்கு என்ன வசதிகள் கிடைக்கும் என தெரிந்துகொள்ள, இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தைச் சேர்ந்த சூரியகுமாரியிடம் பேசினோம். ''இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் நேரத்தில் அரசாங்க உதவியும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியும் கிடைக்கும். ஒரு நபருக்கு இலங்கை பணத்தில் ரூ.75,000கிடைக்கும் என்பதால், அங்கு சென்றவுடன் அவர்கள் தங்களது தேவைகளை பூர்த்திசெய்ய உதவித்தொகை இருக்கும். பின்னர், அவர்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் உருவாக்கிக்கொள்ளவேண்டும். தற்போது பொருளாதார நெருக்கடி இலங்கையில் மோசமாக உள்ளது. அதனால் இந்த ஆண்டு செல்லவிருந்த பலரும் அவர்களின் பயணத்தை ரத்து செய்துள்ளனர். நிலைமை சீராவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்,''என்கிறார் சூரியகுமா

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?