முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 510 கருணாநிதி சிலை திறப்பு

“எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசியது என்ன?
"எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது" - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன? சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இன்று மாலை சிலையைத் திறந்து வைத்துப் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, "பிற மொழிகளைக் கற்பதிலோ பேசுவதிலோ தவறு இல்லை. ஆனால், தாய்மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். பிற மொழிகளை எதிர்க்க வேண்டாம். நம் மொழியை ஆதரிப்போம்," என்று கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூற்றுப்படி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்னால் அண்ணா சாலை ஓரத்தில் கருணாநிதி சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை ஆற்றியபோது, "ஓமந்தூரார் வளாகத்தில் சட்டப்பேரவையை செங்கல், செங்கல்லாகச் செதுக்கியவர் மு.கருணாநிதி. கருணாநிதியின் சிலையைப் பார்த்தவுடன் நெஞ்சம் உருகிவிட்டது. நேரில் பார்ப்பதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரதமர் மோதி: முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் கச்சத்தீவு விவகாரம்: "தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது" - இலங்கை கடல் தொழில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை: உலக வங்கி பாராட்டு; உள்ளூரில் அவதூறு கருணாநிதியின் சிலையை வைக்கப் பொருத்தமான இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார். அண்ணா சாலையில், காமராஜர், பெரியார், அண்ணா சிலைகளுக்கு அடுத்ததாக, இப்போது கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையைத் திறந்து வைத்து, வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு," என்று கூறினார். நிகழ்ச்சியின்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இன்று எழுப்பப்பட்டு இருக்கக்கூடிய சிலைக்கு இருக்கும் சிறப்பு, தந்தை பெரியாருக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் இடையில் நம்முடைய முத்தமிழறிஞரின் சிலை அமைந்திருக்கிறது. தற்போது மருத்துவமனையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அது கம்பீரமாகக் கலைஞர் அவர்களின் கனக் கோட்டையாகவே எழுந்து நிற்கிறது. அங்குதான் அவருடைய சிலை எழுப்பப்பட்டுள்ளது," என்று கூறினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "இந்தியாவின் ஆற்றல் வாய்ந்தவர்களில் முக்கியமானவர் கருணாநிதி," என்று கூறினார். மேலும், "கருணாநிதி சிலையைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர், அடித்தட்டு மக்களின் நலனையே நோக்கமாகக் கொண்டு பாடுபட்டவர். மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கியவர். நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர்.
"எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது" - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன? பட மூலாதாரம்,TNDIPR கருணாநிதி ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். சமூக நீதிக்காக பாடுபட்டவர். கொள்கை, செயல்படும் விதம், சுறுசுறுப்பு என அனைத்து விதத்திலும் சிறப்பானவர். மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன். சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர். தங்களை செயல்பாடுகளில் மக்களை முன்னிறுத்திய தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். என் மாணவப் பருவத்தில் இருந்தே அண்ணா, கருணாநிதியின் பேச்சைக் கேட்டுள்ளேன். நான் அவருடன் கலந்துரையாடி உள்ளேன். அவரின் சிந்தனையால் இளம் வயதிலேயே மிகவும் ஈர்க்கப்பட்டேன். சென்னை என் மனதுக்கு நெருக்கமானது. அரசியலில் இருந்தபோது கருணாநிதியுடன் நீண்ட காலம் பயணித்துள்ளேன். அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மக்களுக்காக உழைப்பதால் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். இந்தியா வலிமையான அரசாக மாறி வருகிறது. நிலையான அரசாங்கம் நம்மிடம் உள்ளது. நிலையான தலைமை உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மாநிலங்களை ஆளுகின்றன. ஆனால், நாம் அனைவரும் மக்களின் நலனுக்காக மாநிலத்தின் நலனுக்காக ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்பதே என் கருத்து. "எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது" - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன? பட மூலாதாரம்,TNDIPR மாநிலங்கள் வளர்ந்தால், நாடும் வளர்ச்சியடையும். மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல் நாடு முன்னேற முடியாது. இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசும், சாதி, மதம், இனம், மொழி என்று அனைத்துக்கும் அப்பாற்பட்டு, ஒன்றாக இணைந்து டீம் இந்தியாவாகப் பணியாற்ற வேண்டும். நாம் எப்போதும் நம் தாய்மொழிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். அதை எப்போதும் மறக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது பார்வைக்குச் சமமானது. பார்வையை இழந்தால் எப்படி எதுவும் தெரியாதோ அதைப் போன்ற நிலையே தாய் மொழியை இழந்தாலும் ஏற்படும். தாய்மொழியைப் போற்றி, வளர்க்க வேண்டும். எங்கு சென்றாலும், பிறந்த ஊரையும் தாய்மொழியை மறக்கக் கூடாது. பிற மொழிகளைக் கற்பதிலோ பேசுவதிலோ தவறில்லை. ஆனால், தாய்மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும். அனைத்து இளைஞர்களிடமும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். 'மம்மி, டாடி' கலாச்சாரத்தைக் கைவிடுங்கள். பிற மொழிகளை எதிர்க்க வேண்டும். நம் மொழியை ஆதரிப்போம்," என்று கூறினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?