முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 466 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தியசிங்கள மக்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திய சிங்கள மக்களின் மனநிலை என்ன?
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில், தென் பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்களிடம் இருந்து தமிழ்த் தரப்புக்கு ஆதரவு வந்ததில்லை என்ற உணர்வு இருந்தது. ஆனால், இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிங்கள மக்களில் இருந்தே குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களுடன், சிங்கள மக்களும் இன்று கைக்கோர்த்து காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தினர். பிரிவினைவாத அடிப்படையில் நடந்த போரின் வடுக்களுக்கு, தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் சிங்கள மக்களும் தமது ஆதரவை தமிழர்களுக்கு வெளிப்படையாகவே இன்று வெளியிட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த பாதிப்புக்கள், தமிழ் அரசியல் கைதி விவகாரங்கள், படுகொலைகள் ஆகியவற்றுக்கு நீதி கோரி குரல் தமிழர்களோடு இணைந்து சிங்களர்களும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். விளம்பரம் பேரறிவாளன் வீட்டில் கொண்டாட்டம்: "இனிதான் கொஞ்சம் காற்றை நான் சுவாசிக்க வேண்டும்" கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் ஆகின்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர வேறு எந்தவொரு பகுதியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. மாறாக மே மாதம் 19ம் தேதி தேசிய படைவீரர்கள் தினம் என்ற ஒன்றை நடத்தி, ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்களை இலங்கை அரசாங்கம் கொண்டாடி வந்தது. எனினும், இந்த ஆண்டு தேசிய படைவீரர்கள் தினத்தை கொண்டாடுவதற்கு, தென் பகுதி வாழ் மக்கள் முற்றுபுள்ளி வைக்கும் வகையிலான நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் இந்நிலையில், காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்ற சிங்களர்களுக்கு தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் என்ன மாதிரி கருத்து உள்ளது என்பதை அறிய அவர்களோடு பிபிசி தமிழ் உரையாடியது. இலங்கையில் 30 வருட கால யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அருட் சகோதரி தீபா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டார். '30 ஆண்டுகள் துன்பம் அனுபவித்த, மரணித்த மக்களை நினைவு கூர்வது உரிமை' ''30 ஆண்டுகளுக்கு மேல் துன்பம் அனுபவித்த, மரணித்த அன்புக்குரிய அந்த மக்களை, நினைவு கூர்வது எமது உரிமை. இந்த உரிமையையே எம்மிடமிருந்து பறித்துள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் மிக உற்சாகமாக வெற்றி கொண்டாட்டமாக இதனை கொழும்பில் நினைவு கூர்ந்தார்கள். போர் வெற்றியாகவே அதைக் கொண்டாடினார்கள். யுத்தம் செய்து அழித்தோம் என்ற உற்சவத்தையே கொழும்பில் கொண்டாடினார்கள்;. அவ்வாறான உற்சவங்களை நடத்த முடியும். ஆனால், எமக்கு இன்று இதுதான் தேவைப்பட்டது. உயிர் நீத்தவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் ஆகியோரை நினைவு கூர்வதே எமக்கு தேவைப்பட்டது. இது இன்று எமக்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமைகின்றது. நான் சிங்கள மக்கள் என்ற விதத்தில், இந்த சந்தர்ப்பத்திலேனும் கவலை அடைந்து மாத்திரம் போதாது. இதற்கு துன்பப்பட்டு மாத்திரம் போதாது. இந்த ஆண்டிலாவது அல்லது இந்த சந்தர்ப்பத்திலாவது அந்த தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அச்சம், சந்தேகம் அடைந்து மறைந்து செய்ய வேண்டிய ஒன்று அல்ல இது. அருட்சகோதரி தீபா
இது பகிரங்கமாகவே செய்யக்கூடிய நினைவு நிகழ்வாக இருக்க வேண்டும். சிங்கள மற்றும் இளைய சமூகம் அனைவரும் ஒன்றிணைந்து அங்கு இடம்பெற்ற அநீதிகளுக்கும், அழிவுகளுக்கும் நாம் குரல் எழுப்ப வேண்டும். குரல் எழுப்பி மாத்திரம் போதாது. துன்பப்பட வேண்டும். அவ்வாறு துன்பப்பட்டால் மாத்திரமே உண்மையான நல்லிணக்கத்தை நோக்கி எம்மால் நகர முடியும். நல்லிணக்கத்தின் பேரில் நாம் பல்வேறு விடயங்களை செய்கின்றோம். எனினும், அதை தமிழ் மக்களினால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை" என அவர் கூறுகின்றார். யுத்தம் காலத்தில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படையாக அரசாங்கம் கூறி, அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என அருட் சகோதரி தீபா, குறிப்பிடுகின்றார். ''அவர்கள் இழந்த அந்த மக்கள், அந்த அன்புக்குரியவர்களை ஏதோ ஒரு எதிர்பார்ப்புடனேயே ராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். அப்படியென்றால், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது?. அவர்களை கொலை செய்திருந்தால், அவர்களை கொலை செய்து விட்டோம் என்று பகிரங்கமாகவே கூற வேண்டும். எதற்காக கொலை செய்தோம் என்பதையும் அவர்கள் கூற வேண்டும். அதுமாத்திரமல்ல, கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த விடயங்கள் கட்டாயம் நடந்தேற வேண்டும். மறுபுறத்தில் நட்டஈடு வழங்குவதாக கூறுவதை விடவும், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இந்த நட்டஈட்டையும் வழங்க வேண்டும். அதையும் விட, நேர்ந்த சம்பவங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொண்டு, அதற்கான பொறுப்பை ஏற்று, அதற்கு நீதி, நியாயம் கட்டாயம் கிடைக்க வேண்டும். அதனை செய்யக்கூடிய மிக சிறந்த காலம் இது. இதுவரை காணப்பட்ட தடைகள் ஏதோ ஒரு வகையில், இந்த போராட்டத்தின் பெறுபேறாக இல்லாது போயுள்ளது. ஏதோ ஒரு வகையில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை தவறவிடாமல் இருப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் என்ற நான் அவதானிக்கின்றேன்." என அருட் சகோதரி தீபா தெரிவிக்கின்றார். ஒரு லட்சத்து 44 ஆயிரம் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது? - குரல் எழுப்பும் சிங்கள இளைஞர் அசங்க அபேரத்ன படக்குறிப்பு, அசங்க அபேரத்ன இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு லட்சத்து 44 ஆயிரம் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் அசங்க அபேரத்ன தெரிவிக்கின்றார். ''இன்று 18ம் தேதி. மே மாதம் 18ம் தேதி என்பது எமது இதயங்களில் வேதனையே காணப்படுகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறக்கக்கூடாது, எமது நாட்டில் 30 வருட காலம் இனவாத யுத்தம் ஒன்று இருந்தது. தென் பகுதியில் ஏற்பட்ட சிவில் வன்முறைகளில் பெரும்பாலான எமது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டார்கள். பல்வேறு ஆபத்துக்களை சந்தித்தார்கள். அதேபோன்று தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக, வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் எமது தமிழ் மக்கள் பெருமளவில் கொலை செய்யப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டார்கள். பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், ராணுவத்திடம் சரணடைந்த சுமார் ஒரு லட்சத்து 44 ஆயிரம் எமது தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இலங்கை என்பது காணாமல் ஆக்கப்படுவோர் பட்டியலில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள நாடாக இருக்கின்றது. யுத்தம், அரசியல் வன்முறைகள், அரசியல் கலவரங்கள் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நாம் இன்று நினைவு கூர்கின்றோம். இவ்வாறான யுத்தம், வன்முறைகள் போன்ற இழிவான செயற்பாடுகள் இனியும் இந்த பூமியில் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே நாம் இன்று இந்த இடத்தில் நினைவு கூர்கின்றோம். இது வெற்றி கிடையாது. யுத்தத்தின் பின்னர் வெற்றி எதுவும் கிடையாது. ஏனெனில், எமது மக்கள் கொலை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட நாடொன்றில் யுத்தம் முடிவு என்பது வெற்றி கிடையாது." என அவர் குறிப்பிடுகிறார். தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்திய துப்பாக்கியை, ராஜபக்ஷ குடும்பம், தென் பகுதி மக்களை நோக்கி தற்போது திருப்பியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் அசங்க அபேரத்ன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இலங்கையில் எதிர்காலத்தில் யுத்தம், படுகொலை செய்தல், காணாமல் ஆக்குதல், கடத்தப்படுதல் போன்றவற்றை செய்யாதிருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தாம் அழுத்தம் பிரயோகிப்பதாகவும் அவர் கூறுகிறார். ''2009ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் யுத்தத்தை வெற்றிக் கொண்டதாக கூறிய ராஜபக்ஷ குடும்பத்தினர், அதே துப்பாக்கியை தற்போது தென் பகுதியிலுள்ள மக்களை நோக்கி திருப்பியுள்ளனர். கடந்த 9ம் தேதி அதே ராணுவத்தை கொண்டு இந்தப் போராட்டத்தை கலைக்க முயன்றார்கள். இது அவர்களின் வெற்றி மாத்திரமே தவிர, இது மக்களின் வெற்றி கிடையாது. வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் காணி பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை. அந்த மக்களுக்கு ஜனநாயக பிரச்சினை இன்றும் காணப்படுகின்றது. அந்த பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். இன்றும் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு சரியான குற்றச்சாட்டுக்கள் எதுவும் கிடையாது. வழக்கு எதுவும் இன்றி, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நினைவு கூர்தலின் ஊடாக, அரசாங்கத்திற்கு ஒரு தகவலை வழங்க விரும்புகின்றோம். அரசாங்கத்திற்கு இதனூடாக அழுத்தங்களை பிரயோகிக்கின்றோம். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான நட்ட ஈட்டை வழங்க வேண்டும். அதற்கு நீதி மற்றும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று, நாடு என்ற ரீதியில் மீண்டும் அவ்வாறான இழிவான யுத்தம், படுகொலை செய்தல், காணாமல் ஆக்குதல், கடத்தப்படுதல் போன்றவற்றை மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் செய்யாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த சந்தர்ப்பத்தில் நாம் அரசாங்கத்திற்கு அழுத்தமாக கூறிக் கொள்கின்றோம்" என்றார் அவர். தமிழர்களை கொலை செய்வது பரவாயில்லை என கூறியது சிங்கள பௌத்த இனவாதிகள் பிரிட்டோ ஃபெர்ணாண்டோ
89 வன்முறை முதல் 2009 யுத்தம் முடிவு வரை பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவிக்கிறார். ''மக்கள் செறிந்து காணப்படும் ஒரு பகுதியில் நீண்ட தினங்களுக்கு பின்னர் நாம் முள்ளிவாய்க்கால் சம்பவத்தை நினைவு கூர்கிறோம். இந்த நிகழ்வை அந்த பகுதியிலும் நினைவு கூர்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு இடையூறு காணப்பட்டது. கொழும்பில் இன்று மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நினைவு கூர்கின்றோம். காணாமல் ஆக்கப்படுவதில் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்த நாடு. நாம் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு ஒருவர் கொலை செய்துக்கொண்டோம். 70, 80களில் வடக்கில் போரை நடத்த பல காரணங்கள் கூறப்பட்டன. இதில் சாதாரண பொதுமக்கள் உயிரிழந்தார்கள். ராணுவத்தினர் உயிரிழந்தார்கள். இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், இடம்பெற்ற சம்பவங்களுக்கான நியாயத்தை பெற்றுக்கொடுக்க முன்னிற்க வேண்டும். எனினும், 'சிங்கள பௌத்த' என்ற ஒரு எண்ணத்தை சிங்கள இனவாதிகள் கொண்டு வந்தார்கள். வடக்கிலுள்ள தமிழ் மக்களை கொலை செய்து, காணாமல் ஆக்குவது பரவாயில்லை என கூறினார்கள். எனினும், 89ம் ஆண்டு இதே விதத்தில் அவர்களின் மக்கள், குழந்தைகள், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோர் அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்திற்காக கொலை செய்யப்பட்டார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 89ம் ஆண்டிலிருந்து இதற்காக முன்னின்று குரல் கொடுத்தாலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், நட்ட ஈட்டை பெறுவதற்கு 30 வருடங்கள் எமக்கு செலவிட வேண்டி ஏற்பட்டது. அவ்வாறு பெற்றுக்கொண்டாலும், அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. இந்த நாட்டிலுள்ள எந்தவொரு முறையும் தமக்கு பதில் வழங்காது என வடக்கிலுள்ள தாய்மார் கூறுகின்றார்கள். எனினும், எமக்கு வேறு வழி கிடையாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் வந்தால், அரசாங்கத்தை சர்வதேசமே பாதுகாக்கும். கடன்களை வழங்கும், ஆயுதங்களை வழங்கும், ராணுவத்தை வழங்கும். அவ்வாறே கடந்த முறை யுத்தத்தையும் ஒடுக்கினார்கள். அதனால், தெற்கில் 89ம் ஆண்டு முதல் காணாமல் போனோரின் தாய்மார்களும் வடக்கிலுள்ளவர்களும் ஒன்றிணையாமல் இதனை வெற்றிக் கொள்ள முடியாது. ஏனென்றால், இந்த அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். எனினும், நாம் இன்று மக்கள் செறிந்துள்ள ஒரு பகுதியில் முன்னோக்கி ஒரு நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றோம். கோட்டா கே கம பகுதியில் இதனை செய்வதை இட்டு நான் நன்றி தெரிவிக்கிறேன். தமது கருத்துக்களை ஒரு இடத்திலிருந்து கூறுவதற்கு இதற்கு முன்னர் பலருக்கு தைரியம் இருக்கவில்லை. கோட்டா மீதான பயத்தை இல்லாது செய்ததை தொடர்ந்து, மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள். தமது மனங்களிலுள்ள விடயங்களை செய்கின்றார்கள். நாம் ஒன்றிணைந்து செய்வோம். தென் பகுதி மக்களும் அதற்காக முன்நிற்கின்றார்கள் என்பது வடக்கிற்கு நல்ல செய்தியாக இருக்கும்" என அவர் குறிப்பிடுகின்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?