முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 506 எவரையும் நம்ப வேண்டாம்

வவுனியாவில் மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - யாழ்ப்பாண இளம் யுவதி கைது
மயக்க மருந்து வவுனியாவில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த சோடாவை கொடுத்து அவர் மயங்கியதும் அவரிடமிருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியாவில் மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - யாழ்ப்பாண இளம் யுவதி கைது வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் மூதாட்டி சுகயீனம் காரணமாக கடந்த புதன்கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண் வைத்தியசாலையில் இளைப்பாறிய வேளை அங்கு வந்த யுவதி ஒருவர் அவருடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடி வயோதிப பெண் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார். உடல் சுகயீனம் என்பதால் தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்த அந்த யுவதி முச்சக்கர வண்டி ஒன்றில் மூதாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றதுடன் மயக்க மருந்து கலந்து சோடாவையும் பருக கொடுத்துள்ளார். திருடப்பட்ட நகைகள் வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் மூதாட்டி மயக்கமடைந்ததும், அவர் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என ஏழரைப்பவுண் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். வவுனியாவில் மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - யாழ்ப்பாண இளம் யுவதி கைது மயக்கம் தெளிந்து மூதாட்டி எழுந்ததும் நகைகள் திருட்டு போனதை அறிந்து உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப காவல்துறை பரிசோதகர் கியான் தலைமையில் காவல்துறையை சேர்ந்த திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) சங்கயரொகான் (31043), தயாளன் (91792), திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, வவுனியா, மதீனாநகரில் வசித்து வந்த யாழ் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட நகையில் நாலரைப் பவுண் நகை குறித்த யுவதியிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் யுவதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?