கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் திணைக்களம்? மக்களிடத்தில் பதற்றம்! கிளிநொச்சி- உருத்திரபுரம், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் ஆராய்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுர சிவன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக் கூறி அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்றையதினம் (சனிக்கிழமை) அப்பகுதிக்கு பௌத்த தேரர் ஒருவர் நண்பகல் வேளையில் வருகை தந்ததாகவும் பிக்கு சென்ற சில மணித்தியாலங்களின் பின்னர் அப்பகுதிக்கு பொலிஸார் வந்ததாகவும் பின்னர் மாலை வேளையில் இராணுவத்தினர் வருகை தந்து அவ்விடத்தை பார்த்து சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். பிரிகேடியர் / கேணல்b10. லெப் கேணல் b11. மேஜர் b12 கப்டன் b13 லெப்டின்ட் b14 2ம் லெப்டினன்ட் b15 வீரவேங்கை b16 உதவி யாழர் b17 தலைவர் ஏனைய படம் b18