முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 173

 கரும்புலி

மேஜர் அன்பரசன் 

(06.07.1980 — 08.01.2007)



★இவர் 1980 ஆம் ஆண்டு யூலை மாதம் 6 ஆம் தேதி யாழ்மாவட்டம் வல்வெட்டிதுறையில் பிறந்தார்.

1994 ஆம் ஆண்டு அதாவது சரியாக தனது பதினான்காம் அகவையில் தனது அன்னையின் கரங்களால் தமிழன்னையிடம் மண் காக்க தேசியத் தலைவரின் கைகளில் கையளிக்கப்பட்டு, இயக்கத்தால் இளந்திரையன் என்று பெயர் சூட்டப்பட்டு இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளபட்டார். பின்னாளில் இவரது உழைப்புக்கும் அன்புக்கும் நெகிழ்ந்த முக்கிய தளபதி ஒருவரால் அன்பரசன் என்றழைக்கப்பட்டார்.


தாய்மண்ணின் விடுதலைக்காகவே அன்றுமுதல் இயங்க ஆரம்பித்தார். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் ஆரம்ப காலகட்டங்களில் சிறுத்தைப் படையணியில் செயல்பட்டார் இவர். சிறப்பான பயிற்சிகளின் மூலம் தன்னை ஒரு சிறந்த போராளியாக உருவாக்கிக் கொண்டார்.


■ முதலாவது தாக்குதல்

முதலாவது தாக்குதல் 1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்” வெற்றித் தாக்குதல் நடவடிக்கையின் போது முல்லைத்தீவு, அளம்பில் பகுதியில் இலங்கை இராணுவத்தின் தரையிறக்கத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த சிறுத்தைப் படையணியில் இவரும் ஒருவர்.

இந்தத் தாக்குதலின் போது வலது கையில் பலமான காயமடைந்தார் பின்னர் சில காலம் களமருத்துவனாகச் செயல்பட்டார்.

அதன் பின்னர் உந்துருளி படையணியிலும் பின்னர் இம்ரான் பாண்டியன் படையணியிலும் செயலாற்றினார். இக்காலகட்டங்களில் இவரின் சிறப்பான செயல்பாடுகளை கவனித்த தலைமை இவரை வேவுப்புலியாக நியமித்தது. ஆனையிறவு வெற்றி தாக்குதலுக்கு வேவுப்புலிகளின் துல்லியமான நடவடிக்கைகளே மிகமுக்கிய காரணம்.


அந்த வேவுப்புலிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.

2001-2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளாலி பகுதியில் வேவு நடவடிக்கைக்குச் சென்ற வேளை இவருடன் சென்ற ஒரு போராளி இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணம் அடைய அவரின் உடலை இராணுவம் கைப்பற்றி விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அந்த போராளியின் உடலைச் சுமந்து நீந்தி புலிகளின் கட்டுப்பாட்டுக் கரை ஒதுங்கி மயங்கி சாய்ந்தார். இச்சம்பவத்தை தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டி பரிசில் வழங்கினார் என்பதும் இவரது வாழ்வில் குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்…


இவரது திறமான இச்செயற்பாடுகளால் கரும்புலியாக தன்னை இணைத்துக் கொண்டார்.

அக்காலகட்டங்களில் பல தாக்குதல் வெற்றிகரமாக நிகழ்த்தபட்டது. 

இவர் மொத்தமாக இயக்கத்தின் 37 தாக்குதல்களில் பங்கு கொண்டுள்ளார்…

இதில், இவர் பதினெட்டு முறை விழுப்புண் அடைந்தவர்

2007 ஆம் ஆண்டு உள்ளகத் தாக்குதல் நடவடிக்கைக்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமரணம் அடைந்து இராணுவம் இவரின் உடலை எடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக ஒப்படைத்ததனால் உடனடியாக கரும்புலி என அறிவிக்க முடியவில்லை. காரணம், அவ்வாறு கரும்புலி என அறிவித்தால் அது இராணுவத்திற்கு பதவி உயர்வு உருவாகக் காரணமாகி விடும் என்பதனால் மேஜர் அன்பரசன் என்று அறிவிக்கபட்டு விடுதலைபுலிகளால் இவரது உடலம் பெற்றுக்கொள்ளபட்டு பின்னாளில் கரும்புலி என அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.



புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?