முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

e 560 மாவீரர் நாள் 2023 - மெல்போர்ன் ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு திரு கொற்றவன் அவர்கள் ஆற்றிய உரை அடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்…..!!! இன ஒழிப்பின் விளிம்பில், நாம் தள்ளப்பட்டும் எமக்கு இன்னும் விடுதலைக்கான விழிப்புணர்ச்சியோ, வீராவேச உணர்ச்சியோ தோன்றவில்லை. பசியும் பஞ்சமுமாக தாங்கொணாத் ஏற்பட்டும் நாம் இன்னும் போராடத் தயாராகவில்லை. இனியும் நாம் பயந்து, பயந்து ஒழிந்து செத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. ஏதோ எங்கிருந்தோ எமக்குப் புறம்பான கைகோர்த்து உதவும் என்று காத்துக்கொண்டிருப்பது அசட்டைத்தனம். நாம் போருக்குத் தயாராக வேண்டும். அடிமைகளாக வீழ்வதை விடப் போராடி வாழ்வத ே மேன்மையானது என்ற இலட்சிய உணர்வோடு நாம் ஆயுதம் ஏந்தத் தயாராக வேண்டும். ஈழத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் விடுதலை வேங்கைகளாக, வீரப்புலிகளாக மாறவேண்டும். தாழ்ந்துபோன தமிழ் இனம் வீரப்புலி இனமாக மாறவேண்டும். விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், முழுச் சமுதாயமுமே பேரழிவை எதிர்நோக்கிய இச் சூழ்நிலையில், எம்மத்தியில் சுயநல உணர்வுகள் களையப்பெற்று சமூக உணர்வு பிறப்பிக்க வேண்டும். பணத்தை ம

e 559 போலிகளின் செயல்பாடுகளால் பொறுமை இழந்த தமிழர்கள்?

  சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அஞ்சலி!             விளம்பரம் சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த நோட்டிஸ்கள் சுவிஸ் இல் உள்ள பல்வேறு அங்காடிகளிலும் கடைகளிலும் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஈழத்தின் இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரிழந்து விட்டதாக, அப்போதைய மஹிந்த ராஜபக்க்ஷ தலமையிலான இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் விடுதலைபுலிகளின் தலைவர் உயிரிழப்பு மர்மமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது, விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நோட்டிஸ்கள் சுவிட்சர்லாந்தில் ஒட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அது தொடர்பிலான புகைப்படங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

e 558 பொறுமை இழந்த நாடு கடந்த மந்திரி?

  போலி துவாரகாவின் காணொளியை நிராகரித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!  By Eunice Ruth  5 மணி நேரம் முன்             விளம்பரம் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் மகள் துவாரகாவின் பெயரில் வெளியான காணொளியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. கிடைக்கப் பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், தமது அவதானங்களின் வழி நின்றும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமர் விசுவநாதன் ருத்ரகுமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழீழத் தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கிறோம். எனவே தான் அவரது மகளாக வேறு ஒருவரை முன்வைப்பது எங்கள் உள்ளங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றது. பொது வெளியிலும், பொதுத்தளத்திலும் தமிழ் மக்கள் இவ்விடயத்தினை நிராகரித்திருந்தமை நம்பிக்கையினை தந்துள்ளதோடு, தகு

e 557 Unmaiyin Tharisanam : போராளிகளை திகைப்புக்குள்ளாக்கிய தலைவர் பிரபாகரனின்...

போராளிகளை திகைப்புக்குள்ளாக்கிய தலைவர் பிரபாகரனின் கட்டளை! (காணொளி)மீழ்பிரசூரம்  By Beulah  3 மணி நேரம் முன்             விளம்பரம் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்  பிரபாகரன்  அவர்களை பற்றி குறிப்பிடும் போராளிகள் அவரை ஒரு தீர்க்கதரிசி என கூறுவார்கள். பின்னாட்களில் நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட விடயங்களை அவர் ஏற்கனவே முன்குறித்து கூறிய பல சம்பவங்களை  பிரபாகரன்  அவர்களோடு கூட இருந்தவர்கள் பின்னாட்களில் வெளிப்படுத்தி இருந்தார்கள். அவருக்கிருந்த ஆழ்ந்த அரசியல் அறிவும், அனுபவ முதிர்ச்சியும் பல விடயங்களில் அவரை ஒரு தீர்க்கதரிசன பார்வையுடன் அணுக வைத்திருந்தாலும், சில சந்தர்பங்களில் ஏதோ ஒரு சக்தி, அப்படி அவரை வழிநடாத்தி இருக்கின்றது என்பதனை கூறுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். பிரபாகரன் அவர்களின் தீர்க்கதரிசன பார்வை தொடர்பாக பல சம்பவங்கள் போராளிகள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சில சம்பவங்களை இன்றைய(01) உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி சுமந்து வருகின்றது. இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியில் காண்க

e 556 சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023.

  சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023. Posted on  November 30, 2023   by  சமர்வீரன்  275  0 தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 திங்களன்று பாசல் மாநிலத்தின் Messe அரங்கில் மிகுந்த உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. 11.00 – 12.30 மணிவரை மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தில் தனித்தன்மையோடு ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு மாண்புடன் நடைபெற்றது. அதனையடுத்து 12.45 மணிக்கு தமிழீழத்தின் பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து சேகரிக்கப்பெற்ற புனித மண்ணையும் கல்லறைக் கற்களையும் சீருடையின் சாட்சியாக எம்மிடம் சேகர்க்கப்பெற்ற பகுதியையும் மாவீரர்களின் பிள்ளைகள் அரங்கிற்கு ஏந்திவருதலுடன் மாவீரர் நாள் 2023 உணர்வெழுச்சியுடன் தொடங்கப்பெற்றது. சுவிஸ் நாட்டின் செய்தி ஊடகங்களின் கருத்துப்படி 5000 இற்கு மேற்பட்ட மக்களுடன் எழுச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர் தியாகங்களை வெள