முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 646 வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தியுள்ளோம்

 

வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தியுள்ளோம் : மனுஷ நாணயக்கார

வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தியுள்ளோம் : மனுஷ நாணயக்கார | Sri Lanka Economic Growth Manuha Nanayakkara
 By Beulah 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலேயே நாம் இந்த நாட்டை பொறுப்பேற்றோம். மத்திய வங்கியின் டொலர் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் எமது புலம்பெயர் தொழிலாளர்களின் கைகளில் இருந்தன என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

பொருளாதார நெருக்கடி

“ஒவ்வொரு முறையும் பிரபலமான முடிவுகள் எடுக்கப்பட்டபோது ஒரு நாடாக நாம் தோல்வியடைந்துள்ளோம்.


இதில் இருந்து எதிர்க்கட்சிகள் கூட தப்ப முடியாது. அவர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக முடிவுகளை எடுக்கும்போது அவற்றை எதிர்த்ததும் பிரபலமான தீர்மானம் என்பதால்தான். மேலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அவற்றை எதிர்த்தனர்.

இறுதியில், நமது நாடு ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து.

நாடு எதிர்கொண்ட நெருக்கடியின் போது, இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால் தான் இந்தப் பொறுப்பை ஏற்க முடியாது எனப் பின்வாங்கினர்.

அவர்களை போலவே அதிபரும் நாமும் இந்தப் பொறுப்பை மறுத்திருந்தால் எதிர்கட்சியினரின் பேரணிகளுக்கு பஸ்களில் கூட மக்கள் வந்திருக்கமாட்டார்கள்.

இப்போது எங்கள் மீது குற்றம் சாட்டும் சிலருக்கு நாங்கள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தமை நினைவில் இல்லை. அவர்கள் அரசாங்கத்தில் இருந்தார்கள். எதிர்க்கட்சியில் இருந்து வந்தே இதனைச் செய்தோம்.

டொலர் கையிருப்பு 

மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு இன்று 3.6 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டால், இந்நாட்டில் டொலர்கள் இல்லாமல், எதையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தியுள்ளோம் : மனுஷ நாணயக்கார | Sri Lanka Economic Growth Manuha Nanayakkara

நாங்கள் ஆட்சிக்கு வருகின்ற காலத்தில் அப்போது, நினைத்தவாறு பணம் அச்சிடப்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு டொலர் 365 ரூபாவாக இருந்தது. டொலரின் பெறுமதி 600 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை அதிகரிக்கும் என்று அக் காலத்தில் எதிர்வுகூறப்பட்டது.

ஆனால் இன்றைய நிலவரப்படி டொலரின் பெறுமதியை சுமார் 320 ரூபாவுக்கு கொண்டு வர முடிந்துள்ளது. டொலரின் பெறுமதி 11% சதவீதத்தினால் குறைந்துள்ளது.

இவ்வாறு நாம் அக்கால நிலைமையை மாற்றவில்லையென்றால் வெளிநாட்டில் கல்வி கற்கும் பிள்ளைக்கு பணத்தை அனுப்ப முடியாத நிலை தோன்றியிருக்கும்.

வட்டி விகிதம்

நாம் இந்த நாட்டை பொறுப்பேற்கும்போது, வட்டி விகிதம் 25 சதவீதத்திற்கு மேல் இருந்தது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கொள்கை ரீதியாக வட்டி விகிதத்தை தனி இலக்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.

வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன்களாக உயர்த்தியுள்ளோம் : மனுஷ நாணயக்கார | Sri Lanka Economic Growth Manuha Nanayakkara

இப்போது வட்டி விகிதம் 9 சதவீதமாகும். வங்கியில் கடன் பெறக் கூடிய நிலைக்கு நாட்டை கொண்டுவந்தோம்.

கடந்த ஆண்டு, ஆறு இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு சுமார் பன்னிரண்டாயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று அந்த நாடுகள் கூறும் நிலை ஏற்பட்டிருந்தது.

இலங்கையில் எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது இந்நிலை மாற்றப்பட்டுள்ளது.

எந்த நாடும் ஒரு டொலர் கூட வழங்காத நாடாக அன்று எமது நாடு இருந்தது. ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 350 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து 200 மில்லியன் டொலர்களும் உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளது.

அண்மைக்காலமாக மக்களும் “சிஸ்டம் சேஞ்” வேண்டும் என்று கூறி வருகின்றனர். இப்போது அவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. வரி சரியாக வசூலிக்கப்படுகிறது. எல்லோரும் வரி செலுத்துகிறார்கள்.

நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அந்த நாடுகளுக்குச் சென்று பெரும் வரியை செலுத்துகின்றனர். சமுர்த்தி கொடுப்பது போன்று வரிச்சலுகைகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

இப்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். அனால் அதனையும் “மீடியா ஷோ” என்று கூறுகின்றார்கள்.

இது இந்நாட்டில் உண்மையாக நடக்க கூடாதா? வீதிகளில் ஒழுக்கம் ஏற்படுத்தப்படுகிறது. கல்விக்கான திட்டம் உருவாக்கப்படுகிறது. உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாடு டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. வெளிநாடுகள் ஈர்க்கப்பட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்றார்.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?