முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

e 556 சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023.

  சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023. Posted on  November 30, 2023   by  சமர்வீரன்  275  0 தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 திங்களன்று பாசல் மாநிலத்தின் Messe அரங்கில் மிகுந்த உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. 11.00 – 12.30 மணிவரை மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தில் தனித்தன்மையோடு ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு மாண்புடன் நடைபெற்றது. அதனையடுத்து 12.45 மணிக்கு தமிழீழத்தின் பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து சேகரிக்கப்பெற்ற புனித மண்ணையும் கல்லறைக் கற்களையும் சீருடையின் சாட்சியாக எம்மிடம் சேகர்க்கப்பெற்ற பகுதியையும் மாவீரர்களின் பிள்ளைகள் அரங்கிற்கு ஏந்திவருதலுடன் மாவீரர் நாள் 2023 உணர்வெழுச்சியுடன் தொடங்கப்பெற்றது. சுவிஸ் நாட்டின் செய்தி ஊடகங்களின் கருத்துப்படி 5000 இற்கு மேற்பட்ட மக்களுடன் எழுச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர் தியாகங்களை வெள