முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 540 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 நியூசிலாந்தில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது.

 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 நியூசிலாந்தில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது.

breaking

தமிழீழத்  தேசிய   மாவீரர் நாள்  2023  ஓக்கிலாந்து, நியூசிலாந்தில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது.


27 நவம்பர் 2023 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் Mount Roskill War Memorial Hall இல் மாலை 5.30 மணியளவில் பெருந்திரளான தமிழீழ மற்றும் தமிழக மக்கள் முன்னிலையில் மிக எழுச்சியாக ஆரம்பமானது.


நிகழ்வின் முதல்கட்டமாக பொதுச்சுடரானது  நியூசிலாந்து தமிழ் தேசிய செயற்பாட்டாளரன மோகன் அவர்களால் ஏற்றப்பட்டது. நியூசிலாந்து தேசிய கொடி, நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சுந்தராஜன் அவர்களாலும் நியூசிலாந்து தேசிய பூர்வீக கொடி நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் தயாகரன் அவர்களாலும் ஏற்றப்பட்டது.


தமிழீழ தேசிய கொடியினை கப்டன் கொள்கைபிறை அவர்களின் தாயார் அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழீழ கொடியேற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது.


தொடர்ந்து சரியாக 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.


தொடர்ந்து ஈகைச்சுடரனது மேஜர் சிவா அவர்களின் தாயார் அவர்கள் ஏற்றிவைத்தார். பின்னர் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, தமிழீழ மற்றும் தமிழக மக்களால் எம் தமிழீழ மண்ணின் விதை வேர்களாகிய மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். மேலும் நியூஸிலாந்திலே இருக்கக்கூடிய பெற்றோர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்த மாவீரர்களுக்கு, விதையுடல் தாங்கிய மாதிரி கல்லறை சுமார் முப்பத்தைந்து அமைக்கப்பட்டு, பெற்றோர் மற்றும் சகோதரர்களினால் உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.


பின்னர் எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒருபகுதி ஒலிபரப்பப்பட்டது.


தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவம் தாங்கிய புகைப்படத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட அரங்கத்தினுள்ளே நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.


தொடர்ந்து சிறார்கள் மற்றும் தமிழ் பாடசாலை மாணவர்களின் மாவீரர்களின் நினைவுகளை தாங்கிய பாடல், நடனம் கவிதை போன்ற பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.


தொடர்ந்து பசுமைகட்சியின் துனணதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மறமா டேவிட்சன் அவர்களின் உரை இடம்பெற்றது. அவரது உரையில் தமிழிழத்துக்காக பலவயதுப்பட்டவர்களும் தங்கள் இன்னுயிரை கொடுக்க எத்தனை அர்பணிப்புகளை கொடுத

துள்ளார்கள், இந்த மாவீரரை இங்கு உள்ள மக்கள் எப்படி உணர்வுடன் மனதில் வைத்திருக்கிறார் என்பது நன்கு தெரிகிறது. தமிழருக்கு தனித்தமிழ் ஈழம் கிடைக்கவேண்டும், இதுபோன்று உலகில் போராடும் மக்கள் போராட்டங்கள் வெல்லவேண்டும் என்று கூறினார். அவரது சிறப்புரை மக்களால் வரவேற்கப்பட்டது.


தொடர்ந்து தமிழ் தேசிய உணர்வாளர் சன் மாஸ்டர் மாவீரர் புகழ், அவர்கள் அர்பணிப்பு பற்றி பேசத்தொடங்கினார். தற்போதுய நிலைமைகள் பற்றி தொடர்ந்து பேசியவர், எங்கள் இளைய தலைமுறைக்கு எங்கள் வரலாறையும் தமிழர் என்ற அடையாளத்தையும் ஆளப்பதக்கவேண்டும் என்றும் கூறினார். அவர் உரையை முடிக்கும் போது, இந்தப் பணியை தமிழர் ஒருங்கிணைப்பு குழு - நியூசிலாந்தும், தமிழ் பாடசாலைகளும் முழுமூச்சுடன் செய்யவேண்டும் என்றும் கேட்டுகொண்டார். அவரது சிறப்புரை இன்றைய தேவைகளை மையமாக வைத்து அமைந்திருந்தது.


பின்னர் நிகழ்வின் இறுதியாக  நியூசிலாந்து தேசிய கொடியினை நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சுந்தராஜன் அவர்கள் இறக்கிவைத்தார்.


தமிழீழ தேசிய கொடியினை நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் தயாகரன் இறக்கிவைத்தார்.


நியூசிலாந்து தேசிய பூர்வீக கொடியினை நியூசிலாந்து பசுமைகட்சியின் துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மறமா டேவிட்சன் இறக்கிவைத்தார்.


இத்துடன் தமிழர்களின் புனிதனாளாம் தமிழீழ மாவீரர் நாளானது அதிகமான நியூசிலாந்தில் வாழும் தமிழீழ மற்றும் தமிழக மக்கள் சாட்சியாக தமிழ்த் தேசியம் நோக்கிய பாதையில் ஒரு படிக்கட்டென " நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்......." எழுச்சி பாடலுடன்  இனிதே நிறைவுற்றது.நன்றி


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?