முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 495 மனம் திறக்கும் இசையாழுமை*ஐவறி அகஸ்ரின்*

ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்

ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம் | Actress Kusboo S Visit To Jaffna Ltte Issue
 By pavan 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்ற ஹரிகரனின் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வர இருந்த நிலையில், ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவரது வருகை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக குஷ்புவுக்கு யாழில் எழுந்த கடும் எதிர்ப்புக்கள் காரணமாகவே தென்னிந்திய நடிகை குஷ்புவின் யாழ்ப்பாண விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நடிகை குஷ்புவின் கருத்துக்கு வடக்கு கிழக்கு தமிழ் தாயகப் பகுதியில் கடும் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மயிலத்தமடுவில் தொடரும் அவலம்: பேரினவாதிகளால் அரங்கேறும் அட்டூழியங்கள்(படங்கள்)

மயிலத்தமடுவில் தொடரும் அவலம்: பேரினவாதிகளால் அரங்கேறும் அட்டூழியங்கள்(படங்கள்)

குஷ்புவின் யாழ் விஜயம் வருகை 

இந்தநிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகைதர இருந்த நிலையில் எதிர்ப்புக்கள் காரணமாக அவரது வருகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நடிகை குஷ்புவிற்கு பதிலாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வருகைத் தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் நடிகை குஷ்பு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறிவினர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன் அவருக்கு எதிராக எதிர்ப்புக்கள் மேலும் வலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,