முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 482 சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவுப் பாடல்கள் eelam s...

சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் வரலாறு மின்நூல் !

Brigadier Balraj reserved hero by on Scribd



“லீமா” பெயரை கேட்டாலே மகிழும் போராளிகள்…

எங்கள் பாதை நெடுக பல சோகக் கதைகள்தான் உண்டு எனினும் உற்சாகம் தந்த நாட்களும் கணங்களும் உண்டு.

தரையில் காலூன்றி நின்ற எங்கள்
தாரகைகள் நடுவே – நீ
தங்கத் தண்மதியாய் நின்ற சமர்க்கள நாயகன் எமைப் பாராட்டிய தருணம்தான் அந்த உற்சாக தருணம் ஆகும்.

சோழர்கள்(செம்பியர்கள்) தரையிறங்கிய செம்பியன்பற்றுக்கு மிக அருகே பல நூறு ஆண்டுகளின் பின்னர் தமிழர் படையுடன் தரையிறங்கி பகை வென்ற பெருந்தளபதியைப் பற்றிய சிறு துளியையும் எங்களது உணர்வையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்!

குடாரப்பு தரையிறக்கம்(26/03/2000) நடைபெற்று சில திங்களின் பின் ஒரு நாள் பளைபகுதியில் இருந்த எங்கள் பிரதான மருத்துவ முகாமில் சமர்களநாயகன் #எங்களைச் #சந்தித்தார்.

சமர்களநாயகனின் சந்திப்புகள் அவர் எப்போதுமே வாசம் செய்யும் களமுனையிலோ அல்லது அதனை அண்டிய பிரதேசங்களிலேயேதான் நடைபெறும்.

இச்சந்திப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.

நண்பர் மிரேஸ் இருநிமிட அகவணக்கத்துடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

குடாரப்புத் தரையிறக்கம் தந்த வெற்றியின் பின்னணியில் உழைத்த மருத்துவபோராளிகளையும்

கள மருத்துவர்களையும் பாராட்டுவதுதான் அன்றைய அவரின் சந்திப்பின் பிரதான நோக்கம்.

எழுதுமட்டுவாள் களமுனையில் அஞ்சாநெஞ்சுடன் போராடிய லெப்.கேணல் ராஜசிங்கனையோ அல்லது ஜோயையோ பாராட்டுவது போலவே மருத்துவ போராளிகளைப் பாராட்டினார்.

களமுனை மருத்துவபோரளிகளைக் கடந்து எமது வைத்தியசாலைகளில் உள்ள அனைத்து வைத்தியர்கள்,தாதியர்கள் ,பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியைக் கூறினார் சமர்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ்.

ஆனையிறவை இழந்தவன் விரைவில் மீண்டும் ஒரு பெரும் போரைத் தொடுப்பான் என்பதை முன் கூட்டியே உணர்ந்து எம்மை உற்சாகப்படுத்துகிறார் என ஒரு தடவை நினைத்தாலும் அவரது பாராட்டினால் உண்மையில் எல்லோருக்குள்ளும் உற்சாகமும் உவகையும் தொற்றிக்கொண்டது.

தவறுகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மும்முனைத் தாக்குதலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாகவும் பத்திரமாகவும் 1000இற்குமதிகமான தரைப்புலிகளைத் தரையிறக்கிய கடல்ப்புலிகளின் விநியோக வழிகளை முறியடித்தார்கள் அரச கடற்படையினர்.

முன்னரே நாம் இதை எதிர்பார்த்தால் மூன்று நாட்களும் உணவு இன்றி சோர்ந்து போகவில்லை.தேவையானளவு உலர் உணவுகளை எம்மோடு எடுத்து வந்திருந்தோம்.காயமடைந்தவர்களை அங்கேயே வைத்துப் பராமரிப்பதிலும் சிக்கல் வரவில்லை ஆனால் 26ஆம் தேதி வீரச்சாவு அடைந்தவர்களின் வித்துடல் பழுதடைய ஆரம்பித்ததால் தளபதி செல்வராசா அவர்களின் அனுமதியுடன் விநியோக வேலைகளுக்கு பொறுப்பாகவிருந்த கஜேந்திரனின் உதவியுடன் நாம் தரையிறங்கிய கடற்கரையில் விதைத்தோம்.

வித்துடல்களை விதைத்து சிலமணி நேரங்களின் பின்னர், முன்னரே திட்டமிட்டபடி (சபதமெடுத்தபடி) மருதங்கேணி இராணுவ முகாமை தகர்த்து தாளையடிக் கடற்கரை ஊடகத் தரைவழிப்பாதையை அமைத்துத் தந்தார் வீரத்தளபதி தீபன் அவர்கள்.எனவே வித்துடல்களை விதைத்தத்தில் அவசரப்பட்டுவிட்டதாக கோபத்துடன் சுட்டிக்காட்டினர் சமர்களநாயகன்.

எழுதுமட்டுவாள் பெட்டிச்சசமர் நடந்த பகுதியில் சிக்கிய மூன்று குடும்பங்களை சேர்ந்த ஆறுபேரை பக்குவமாக கிளிநொச்சிக்கு அனுப்பிவைத்தார் சமர்களநாயகன்.

அதில் நான்கு பேர் மிகவும் வயதானவர்கள் அவர்களில் ஒருவர் 93 வயது மூதாட்டி.எழுதுமட்டுவாளுக்கும் செம்பியன்பற்றுக்கும் இடையில் உள்ள நன்னீர் எரியூடகத்தான் அவர்கள் பக்குவமாக அனுப்பப்பட்டார்கள்.

சந்திப்பின் இறுதியில் அந்த மூதாட்டி தற்காலிமாக தங்கியிருந்த அக்கராயன் கிளிநொச்சி விலாசத்தை தனது குறிப்பேட்டில் குறித்துக்கொண்டார்

எழுதியது :மருத்துவர் தணிகை


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,