முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news b317

 திராட்சையில் இப்படி ஒரு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறதா? இனியும் தவிர்க்காதீர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள். மேலும், எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். தினந்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. திராட்சைப்பழத்தில் மாலிக், சிட்ரி

TAMIL Eelam news b316

 தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையில் ஸ்ரீலங்கா அரசாங்கம்- சாணக்கியன் ஆதங்கம்! பாரியளவிலான நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விட்டுவிட்டு விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்கள். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தாங்கள் விவசாயம் செய்துவரும் நிலையில் நெல்லையும் சேமித்து அதனை உரிய காலத்தில் பயன்படுத்திவரும் நிலையில் இன்று அந்த நெல்லை பறிமுதல் செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துவருவதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியாத காரணத்தின

TAMIL Eelam news b315

 வேலைக்கு வந்த பெண் -அந்த இடத்தில் வந்த காயம் -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒப்பந்ததாரராக இருக்கும் பிரவீன் என்பவர் தன்னுடைய மனைவியோடு வசித்து வந்தார் .இவரின் மனைவிக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்தது .அந்த குழந்தையை கவனித்து கொள்வதற்காக அவர் டெல்லியிலிருந்து 13 வயதான பெண்ணை வேலைக்கு வைத்தார் .அப்போது அவரின் பெற்றோர்கள் அந்த வீட்டில் அந்த பெண்ணை கொண்டு வந்து விட்டு விட்டு ஊருக்கு போய் விட்டனர் .   இந்நிலையில் கடந்த வாரம் அந்த பெண்ணை அந்த பிரவீன் பாலியல் பலாத்காரம் செய்து ,கொலை செய்து விட்டார் . அதன் பிறகு அவரை அந்த பிரவீன் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் உணவு விஷத்தால் இறந்து விட்டதாக கூறி சேர்த்தார் .அங்கு அவரை பிரேத பரிசோதனை செய்த டாக்ட்டர்கள் அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர் .அதன் பிறகு அந்த பெண்னின் பெற்றோர் அவருக்கு தனிப்பட்ட இடத்தில காயம் இருப்பதை கண்டுபிடித்தனர் அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த பிரவீன் மீது புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பிரவீனை ஆகஸ்ட் 28 அன்றுபலாத்கார வழக்

TAMIL Eelam news b314

 ஜனாதிபதியினதும் நீதி அமைச்சரினதும் அறிவிப்பினை முற்றாக நிராகரிக்கிறோம் - சுகாஷ் தெரிவிப்பு காணாமல்போனோர் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் கூறிய அறிவிப்பை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும்,பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ்  இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்பதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான, மாறாத நிலைப்பாடு. உள்ளக விசாரணையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்தது மிகச் சரியான முடிவு என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசினதும் சிங்களக் கட்சிகளினதும் உண்மை முகத்தை இப்போதாவது புரிந்து, அவர்களோடு சேர்ந்து வரலாற்றுத் துரோகங்களை புரிந்தவர்கள் தயவு செய்து சரியான தடத்திற்கு திரும்புங்கள். அல்லது தமிழ் இனத்தை அழித்தவர்களுக்கு துணை போனவர்கள் பட்டியலில் நிச்சயம் நீங்களும் வரலாற்றில் இடம்பெறுவீர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAMIL Eelam news b313

 காணாமல்போனோர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இதுவே வழி! தேரர் ஒருவர் கூறிய காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை பொது மன்னிப்பு ஒன்றை கேட்பதாலும் வழங்குவதாலுமே முடிவுக்கு கொண்டுவரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் பிரிவேன கல்வி பிரிவின் உதவிப் பணிப்பாளர் வண. கரவிலக்கொட்டுவ தம்மதிலக தேரர் இதனை தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் தொடர்பான சர்வதேச தினத்தில் OMP Sri Lanka ஏற்பாடு செய்திருந்த உரைகள் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “யுத்தம் முடிவு பெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாது இருப்பது, எமது நாடு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முன்செல்லமுடியாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ், நஷ்ட ஈடு மட்டும் வழங்காது பொது மன்னிப்பு ஒன்றை கேட்பதாலும் வழங்குவதாலுமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரமுடியும். சர்வதேச ரீதியில் அவ்வாறே இதுமாதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக” அவர் மேலும

TAMIL Eelam news b312

 தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை ராஜபக்ஷ அரசு ஏற்குமா. . தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை அழைத்து வரும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று பேசிய அவரிடம், தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்களை மீண்டும் தாயகத்துக்கு அழைத்து வந்து மீள் குடியேற்றம் செய்யப்படுமா என கேட்கப்பட்டது. ஆனால், இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அவர் பதிலளித்தார். இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை கடந்த காலங்களில் அழைத்து வந்தோம். ஆனால், தற்போது அப்படி அழைத்து வருவதில்லை. அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பிலான தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்பதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ சமீபத்தில் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர், தமிழகத்தி

TAMIL Eelam news b311

 அவுஸ்திரேலியாவில் கொரோனா காலத்தில் உணவுக்கே உதவிகளை எதிர்ப்பார்த்திருக்கும்  அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை சமீபத்திய கணக்குப்படி, தங்கள் விசா நிலை பரிசீலிக்கப்படுவதற்காக 302,650 பேர் காத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கொரோனா காலத்தில் உணவுக்கே உதவிகளை எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில் அகதிகள் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை சமீபத்திய கணக்குப்படி, தங்கள் விசா நிலை பரிசீலிக்கப்படுவதற்காக 302,650 பேர் காத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. இதில் பலர் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதாகவும் தங்கள் விசா நிலைக் குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என அறிந்து கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. “நான் பார்க்கக்கூடிய பல அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் அவர்களது சட்ட அந்தஸ்து உறுதிச்செய்யப்படாததால் அரசின் Medicare அல்லது JobKeeper போன்ற நல உதவிகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் அவர்களது குடும்பத்தவர்களுக்கு உணவு வழங்க உதவிகளை நம்பியிருக்கின்றனர்,” எனக் கூறியிருக்கிறார் Sunraysia இனச் சமூகங்களின் கவுன்சிலின் புலம்பெயர

TAMIL Eelam news b310

 அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதா? பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் முன்னும் தமிழ் மக்களின் முன்னும் பசில் நிறுத்தத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கம் எந்தெந்த முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அல்லது எந்தெந்த முனைகளில் இறங்கி வந்து சுதாரிக்க வேண்டி இருக்கிறதோ அந்தந்த முனைகளில் மாற்றத்தின் முகவராக பசில் இறக்கப்க்கப்பட்டிருக்கிறார். முதலாவதாக மேற்கு நாடுகள்.அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. நிதியமைச்சு வழங்கப்பட முன்பு அவர் அமெரிக்காவுக்கு போனார்.அங்கே அவருக்குரிய நிகழ்ச்சிநிரல் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு கதை உண்டு. மேற்கு நாடுகளுக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையில்  டீல் ஒன்றை உருவாக்குவதே அவருடைய அமெரிக்க விஜயத்தின் நோக்கம் என்று கருதப்படுகிறது.அந்த டீலின் பிரகாரம் மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா covid-19இற்கு  எதிரான நடவடிக்கைகளுக்கென்று இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக உதவிகளை புரிந்து வரு

TAMIL Eelam news b309

 சுமந்திரன் என்ற சிங்கள பக்க சார்வான நஞ்சுப் புத்திஜீவி திருந்துவதற்கே சந்தர்ப்பம் இல்லை சிங்களவன் மறந்தாலும் இந்தத் துரோகி மறக்க மாட்டான் விளிப்பாக இருங்கள் தமிழர்களே விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலைகுனிகிறேன் - வெளிப்படையாக கூறிய சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிவதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். அந்தக் குற்றம் தமிழ் மக்களின் பெயரினாலே நடத்தப்பட்டது. இதனாலேயே நான் வெட்கித்தலை குனிகிறேன் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். நான் இப்படி சொன்னதற்கான காரணம் அது இனச் சுத்திகரிப்பு. விசேடமாக தமிழ் மக்கள் மீது நடந்தது இனப

TAMIL Eelam news b308

 இறுதி யுத்தத்தில் சரணடைந்த குழந்தைகளை என்ன செய்தீர்கள்? மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் கேள்வி  இறுதி யுத்தத்தம் முடிவுக்கு வந்த போது சர்வதேச போர்விதிகளுக்கு அமைவாக சிறீலங்கா இராணுவத்திடம் தமது பெற்றோருடன் சரணடைந்த குழந்தைகள் சிறுவர்களை என்ன செய்தீர்கள் என்று அன்று பாதுகாப்பு அமைச்சராக இருந்து யுத்தத்தை வழிநடத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதிலளிக்க வேண்டும் என்று ஆவணி- 30 அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது: ஆகஸ்ட்-30 அனைத்துலக காணமலாக்கப்பட்டோர் தினமாக நினைவு கூறப்படுவது, உலகில் நிகழ்ந்த காணமலாக்கப்பட்டோரின் குமுறல்களுக்கு நீதி அவசியம் என்பதை அனைத்துலக நாடுகளும் உணர வேண்டும் என்ற நோக்கிலேயாகும். எனினும் ஈழத்தமிழர் தங்கள் உறவுகளை முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் இராணுவ காடையர்களிடம் ஒப்படைத்த சாட்சியங்களுடன் இன்று சிங்கள பேரினவாத அரசாங்கத்தினாலேயே காணமலாக்கப்பட்ட  தம் உறவுகளை தேடி நீதி க

TAMIL Eelam news b307

 புரோக்கோலி உண்ணுவதால் ஏற்படும் நன்மைகள்! என்ன தெரியுமா? முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த புரோக்கோலி, தோற்றத்தில் காலிப்ளவர் போன்று அடர்பச்சை நிறத்திலும் இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு காய்கறியாக இருக்கிறது. பெரும்பாலாக சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் கிடைப்பதால் சாதாரண மக்கள் பலருக்கும் இதுகுறித்து தெரிந்திருக்கவில்லை. புரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) உள்ளிட்டவை இருக்கின்றன. புரோக்கோலி நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைகிறது. ஆரோக்கியமான சருமத்திற்கும் தலைமுடி உதிர்வைத் தடுத்து முடி வளரவும் உதவுகிறது. இதன் இலைகளிலும் தண்டுகளிலும் உள்ள பினாலிக், ஆன்டிஆக்ஸிடன்ட்டாக இருப்பதால் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதை இது குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு கப் புரோக்கோலி சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஆற்றலும் கிடைத்து

TAMIL Eelam news b306

 கொரோனா மரணம் தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல் நாட்டில் மேலும் 216 கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 115 ஆண்களும், 101 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு குறைவான 5பேரும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAMIL Eelam news b305

 இலங்கை அரசு தொடர்பில் அமெரிக்காவின் திடீர் மாற்றம் இலங்கையின் பொருளாதார செயல்திறனை, மேம்படுத்திக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைய்னா பி.டெப்லிட்ஸ் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியில் மேலும், உறுதியான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் மாற்றங்களில், இலங்கை ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடனான தனது அண்மைய சந்திப்பு குறித்து கருத்துரைத்துள்ள அவர், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள், வரம்புகள் மற்றும் திறந்த, வெளிப்படையான சூழலின் தேவை பற்றியும், முதலீட்டாளர்களின் ஆபத்து தொடர்பாக தாம் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை உயர்தர முதலீட்டாளர்களை ஈர்க்க விரும்புவதை தாம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதாரம், தற்போது சிறந்த ஆரோக்கிய நிலையில் இல்லை. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம், வழங்கிய வளங்களைப் பயன்படுத்துவதே தீர்வுக்கு வழிவகுக்கும் என

TAMIL Eelam news b304

 பெண்கள் வெளிநாடுகளில் விளிப்பாக இருப்பது அவர்களை பாது கார்க்கும் ரொரன்றோவில்… குப்பை கொட்ட போன இடத்தில்…. சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம்…. ரொரன்றோவில் Stockyards பகுதிக்கு அருகில் குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. அந்த குப்பை தொட்டியில் கனேடிய மெக்கானிக் ஒருவர் கடந்த 25 ஆம் தேதி குப்பை கொட்ட சென்றுள்ளார்.  அப்போது அந்த குப்பை தொட்டிக்கு அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதை மெக்கானிக் பார்த்துள்ளார். பின்னர் அந்த சூட்கேசை மெக்கானிக் எடுத்து வந்து திறந்து பார்த்தபோது அதனுள் உயிரற்ற நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மெக்கானிக் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.  இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   அதன்பின் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சூட்கேசில் உயிரற்ற நிலையில் இருந்த அந்த பெண் 41 வயதுடைய Varsha Gajula என்பதை கண்டுபிடித்துள்ளனர்.  மேலும் இவர் Caledonனை சேர்

TAMIL Eelam news b303

 இதைப் பார்த்து தமிழர்கள் உசார் அடைய வேண்டும் அலக்சியம் எமக்கு வேண்டாம். ஒரு கிழமையில் 5 தடவை நான் ஜிம் போவேன் என்னை கோவிட் தாக்காது என்ற 40 வயது நபர் இறந்த பரிதாபம் ! பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. மீண்டும் வைத்தியசாலை செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . ஐTVல் ஒலிப்பதிவாளராக வேலைபார்த்த 40 வயது நபர், தடுப்பூசி எடுக்க கூடாது என்று பேசி வரும் இடது சாரி இயக்கத்தை பின்பற்றி வந்துள்ளார். ஒரு வாரத்தில் தான் 5 தடவை ஜிம் செல்வதாகவும். தனக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்றும் அவர் கூறி வந்தார். அப்படியே தொற்று ஏற்பட்டாலும் அது தானாக மாறிவிடும் என்று அவர் கூறி வந்த நிலையில்..   அவர் எந்த ஒரு தடுப்பூசியையும் எடுக்கவில்லை. இன் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மனைவி கர்பிணியாக இருக்கிறார் என்பது மேலும் வருத்தம் தரும் செய்தியாக உள்ளது. இப்படி பிரித்தானியாவில் பலர் தடுப்பூசி தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

TAMIL Eelam news b302

 சிங்களக் கைக்கூலிகள் வெறியாட்டம் தொடரும் இன வன்முறை . படையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞரின் அஸ்தி யாழ்.குருநகர் பகுதியில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞரின் அஸ்தி கொட்டடி மயானத்துக்குப் பாடை கட்டி மேள வாத்தியத்துடன் படையினரின் பாதுகாப்புடன் இன்று  எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. குருநகர்ப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜெரோன் (வயது 24) என்கின்ற இளைஞன் உயிரிழந்த நிலையில் மரணத்தின் பின்னரான பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உயிரிழந்தவரின் உறவுகள் ஐயம்கொண்டு நீதிமன்றத்தை நாடியதால் மீ ண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடல் கொரோனா விதிமுறையின் கீழ் தகனம் செய்யப்பட்டு அதன் அஸ்தி உறவுகளிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறு கையளிக்கப்பட்ட அஸ்தியின் இறுதி ஊர்வலமே இன்று நடைபெற்றது. இதன்போது அஸ்தி நிலப்பாவாடை விரித்து மேளவாத்தியத்துடன் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டு கொட்டடி மயானத்தில் இறுதி நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன்,இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

TAMIL Eelam news b301

 16 சிறுவர்களை பலியெடுத்தது கொரோனா லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் இதுவரை 16 சிறுவர்கள் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். தற்போது 160 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 25 -க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தினமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றும் நான்கு சிறுவர்கள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். கொவிட் தொற்று உள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதுமான வசதிகள் இருப்பதாகவும், அவர்களுக்காக இதுவரை 300 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார். "நோய் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு வரவும். எனவே நோய் வராமல் தடுக்க கவனமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

TAMIL Eelam news b300

 கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு...நிதியமைச்சகம் வெளியிட்ட தகவல் கொரோனா பரவல் காரணமாக நாட்டிற்கு மிக பாரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு கடந்த ஒரு வருடகாலமாக 1500 பில்லியன் ருபாய் இழப்பை சந்தித்துள்து என நிதியமைச்சின் செயலாளர் எஸ்ஆர் அட்டிகல தெரிவித்துள்ளார். 2020 மார்ச்சில் கொரோனா வைரஸ்பரவல் ஆரம்பமான காலம் முதல் இலங்கை பல்வேறு செலவீனங்களை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிவாரணங்களிற்கு தொழில்நுட்ப சேவைகளை செய்வதற்கு தனிமைப்படுத்தல் சேவைகள் நிலையங்களைமுன்னெடுப்பதற்கு என பலவிடயங்களிற்கு அரசாங்கம் புதிதாக நிதியை செலவிடவேண்டிய நிலை காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது சுற்றுலாத்துறை வருமானங்கள் உட்பட ஏனைய வருமானங்கள் குறைவடைந்துள்ளன என வும் அவர் தெரிவித்துள்ளார்.  

TAMIL Eelam news b299

 இலங்கையில் 28 நாட்களுக்குள் பதிவான அதிக கோவிட் மரணங்கள் இலங்கையி்ல் கடந்த 28 நாட்களில் அதிகளவான கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. குறித்த காலப்பகுதியில் கோவிட்-19 தொற்றினால் 4,100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஒகஸ்ட் 27 அன்று மாத்திரம் 212 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கைகள் கூறுகின்றன.   இது கோவிட்-19 தொற்றால் இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகபடியான உயிரிழப்பு ஆகும். இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8583 ஆக அதிகரித்துள்ளது.

TAMIL Eelam news b298

 மனைவியின் அந்தரங்க வீடியோ; நண்பர்களுக்கு ஷேரிங்… இன்ஜினீயர் மீது புகார்!   சென்னையைச் சேர்ந்தவர் சுவேதா (பெயர் மாற்றம்). இவர் ஃபேஷன் டிசைனிங் படித்திருக்கிறார். படிக்கும்போது, சுவேதாவும் ஆவடியில் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மதனும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகியிருக்கின்றனர். இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு, மார்ச் 4-ம் தேதி திருமணம் செய்திருக்கிறார்கள். இந்தத் தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சுவேதா, சில தினங்களுக்கு முன் அதிக மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.   அதற்கு முன் நான்கு பக்கங்களுக்கு தற்கொலைக்கான காரணத்தைக் கடிதமாக எழுதிவைத்திருக்கிறார். மயங்கிக்கிடந்த சுவேதாவை மீட்ட அவரின் அம்மா, குரோம்பேட்டை அரசு மருத்துவனையில் சேர்த்தார். சிகிச்சைக்குப் பிறகு சுவேதா நலமாக இருக்கிறார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸார் மதன், அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். சுவேதா எழுதிய கடிதத்தில், “என்னுடைய கணவர், அவரின் குடும்பத்தினரால் மனதளவிலும் உடலளவிலும் நான் பாதிக்கப்பட்டிருக்கிற

TAMIL Eelam news b297

 விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னும் செயல்பாட்டில் இருக்கிறது’ ”மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல… எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன. சத்தியத்துக்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு!’ இப்படிச் சொன்னவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்! நவம்பர் 26ம் தேதி தலைவர் பிரபாகரனுக்கு 63வது பிறந்தநாள். அதாவது அவருக்கு இது மணிவிழா ஆண்டு. வழக்கமாகவே நவம்பர் மாதக் கடைசி என்பது ஈழத்தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் உணர்ச்சிபூர்வமாகக் கொண்டாடும் நாட்களாக அமையும். நவம்பர் 27ம் தேதி புலிகள் அமைப்பின் முதல் களப் போராளியான கேப்டன் சங்கர் மரணித்த நாள். அதற்கு முந்தைய நாள் நவம்பர் 26 தலை

TAMIL Eelam news b296

 தமிழர் பகுதியில் பெரும் சோகம்; பிரபல சட்டத்தரணி கொரோனாவுக்கு பலி திருகோணமலையில் உள்ள சட்டத்தரணிகளின் மத்தியில், தமிழ் தேசிய உணர்வும், ஆளுமையும், கடவுள் பக்தியும் நிறைந்த சட்டத்தரணிகளில் ஒருவராகவும் திகழ்ந்த திரு.கலியுகவரதன் பாலமுருகா கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு வைத்தியயசாலையில் கொரோனா என்ற வைரஸ்னால் பீடிக்கப்பட்டு சிகிற்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவரது இறுதிக்கிரிகைகள் பொலநறுவையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் மறைவு திருகோணமலை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை அன்னாரது மனைவி திருமதி.சந்திரவதனி ஒரு வைத்தியர் என்பதுடன் சென்ற வருடம் அவர் கிழக்கு மாகாண சுகாதார பணிமனையில் கொரோனா தொடர்பான தகவல் வழங்கும் பிரிவில் கடமையாற்றினார். அதன்பின்னர் இவ் வருடம் இடமாற்றலாகி தற்பொழுது அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

TAMIL Eelam news b295

 3 பிரித்தானியர்கள் காபூல் குண்டு வெடிப்பில் இறந்தார்கள்- 1,000 பேர் பணயக் கைதிகளாக அகப்பட்டார்கள் ? பிரித்தானியாவின் வரலாற்றில், சுமார் 1,000 பிரித்தானியர்கள் வெளி நாடு ஒன்றில் பணயக் கைதிகளாக பிடிபட்டது இதுவே முதல் தடவை என்கிறார்கள் . நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 170 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில். 13 அமெரிக்க ராணுவம் மற்றும் 3 பிரித்தானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியா சற்று முன்னர் அறிவித்துள்ளது . இதன் காரணமாக அமெரிக்கா, தனது சேவைகள் அனைத்தையும் இன்றோடு நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஆப்கானில் இருக்கும் சுமார் 1,050 பிரித்தானிய மக்களை மீட்க்க முடியாத நிலை தோன்றியுள்ளது. அவர்கள் அனைவரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைகளில் அல்லது தலிபான்கள் கைகளில் சிக்கும் நிலை தோன்றியுள்ளது.

TAMIL Eelam news b294

 சர்வதேச நாடுகளிற்கு பயந்து சாகும் சிங்களக் கும்பல் .அமெரிக்க மத்தியஸ்த்தை கோரினாரா சுமந்திரன்? வெடித்தது புதிய சர்ச்சை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முன்னெடுப்புகளில் அமெரிக்க மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென தான் தெரிவித்ததாக வெளியாகும் செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நிராகரித்துள்ளார். உள்ளூர் ஊடகமான தி ஐலண்ட் பொய்யான தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டுமெனவும், அந்த தீர்வுகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் மத்தியஸ்தராக அமெரிக்கா இருக்க வேண்டும் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளதாக தி ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த முன்மொழிவுகளுக்கு ஆதரவைப் பெறுவதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர

TAMIL Eelam news b293

 இலங்கையில் ஒரே நாளில் 4,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! இலங்கையில் இன்று இதுவரை 4,561 பேருக்கு கொரோனா தொற்று (Covid19) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 416,931 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 353,191 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,371ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

TAMIL Eelam news b292

 திருகோணமலையில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான குடும்பஸ்தர் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர்-சம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவராசா நவநீதன் வயது (28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த நபரின் சடலம் தற்போது சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பட்டா வாகனத்தைச் செலுத்திச் சென்ற நபரை சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

TAMIL Eelam news b291

 இரண்டு லக்சம் தமிழ் விதவைகளிற்கு இல்லாத பணம் எஜமனிற்கு வளங்கி புகழ் தேடி தமிழன் ஜனாதிபதியிடம் யாழ்.தமிழர் வழங்கிய பல மில்லியன் ரூபாய்!    இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு மாத சம்பளத்தை அமைச்சர்களிடம் கோரியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ‘இடுகம’ கொரோனா சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார். கொரோனா பரவல் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, (Shavendra silva) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் (Gotabaya Rarajapaksa) இதற்கான காசோலையை வழங்கினார். இது குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

TAMIL Eelam news b290

 எவரும் நிரந்தர விசாவை எதிர்பார்க்கத் தேவையில்லை உறுதியாகக் கூறியது அவுஸ் ஆஸ்திரேலியாவில் ஆப்கானியர்கள் நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து தற்போது தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள எவருக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்படாது என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார். “இந்த விவகாரத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு கொள்கைகள் எதுவும் மாறவில்லை என்ற தெளிவான செய்தியை ஆட்கடத்தல்காரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்,” என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் குறிப்பிட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அரசு வட்டார தகவல்கள் படி, தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் கீழ் 4,500 ஆப்கானியர்கள் ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகின்றனர்.

TAMIL Eelam news b289

 கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் மாணவனின் அசத்தலான கண்டுப்பிடிப்பு! கோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. சிறுவர்கள் வீட்டில் தங்கியிருப்பது அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன. எனினும், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தரம் 10 பயிலும் மாணவரான சுந்தரலிங்கம் பிரணவன் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்த்துள்ளார். குறித்த மாணவன் எரிபொருள் இல்லாமல் சோலார் பேனல்களில் இயங்கும் முச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், "கோவிட் தொற்றுநோயால், எங்களுக்கு இப்போது பாடசாலைககள் இல்லை. நாங்கள் இணைம் மூலம் கற்பிக்கப்படுகிறோம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம். இப்போது, ​​கோவிட் பரவலினால் முன்பு போல் நண்பர்களுடன் விளையாடவும் வழியில்லை. அதனால்தான் நான் ஒன்றை உருவாக்க என் தாத்தாவுடன் இணைந்து பணியாற்றினேன்.   எனது சமீபத்திய வடிவமைப்பு சோலார் பேனல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மூன்று சக்கர வண்டியாகும்

TAMIL Eelam news b288

 இலங்கையை உலுக்கும் கொவிட் மரண எண்ணிக்கை கொவிட் தொற்றால் நாட்டில் மேலும் 209 பேர் நேற்று (25) உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில், நாளொன்றில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை முதல் தடவையாக 200ஐ கடந்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 108 ஆண்களும், 101 பெண்களும் அடங்குகின்றனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று(26) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொவிட் மரணங்கள் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று பதிவான 209 மரணங்களையடுத்து, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,157ஆக அதிகரித்துள்ளது.     

TAMIL Eelam news b287

 தாலிபான்களிடம் சரணடைவது என்பது எங்கள் அகராதியிலையே கிடையாது’ – அகமத்  தாலிபான்களிட ஒருபோது சரணடைய மாட்டோம் என தாலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். தாலிபான்களிடம் சரணடைவது எனது அகராதியிலேயே கிடையாது என்று தாலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவர்களில் ஒருவரான அகமத் மசூத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் அகமத் மசூத் பேசும்போது, ‘நான் சரணடைவதைக் காட்டிலும் மரணிக்கவே விரும்புகிறேன். நான் அகமது ஷா மசூதின் மகன்.   தாலிபான்களிடம் சரணடைவது எனது அகராதியில் கிடையாது. எனினும் நாங்கள் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கிறோம். எனது தந்தை எப்போதும் எதிரிகளிடம் பேசுவார். நாங்களும் பேசுவோம்’ என்றார். ஆப்கன் தலைநகர் காபூலைத் தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் தாலிபான்களுக்கு எதிரான போரைத் தாலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவரான அகமத் மசூத் அறிவித்துள்ளார். ஆப்கனின் முக்கிய மலைப் பிரதேசமான பஞ்ச்ஷிர் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அகமத் மசூத். இவர் மறைந்த ஆப்கன

TAMIL Eelam news b286

 நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா உயிரிழப்புக்கள் - அச்சத்தை ஏற்படுத்தும் மரண எண்ணிக்கை நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 30 வயதுக்கு உட்பட்டவர்களில், ஆண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 37 ஆண்களும், 14 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81 ஆண்களும் 65 பெண்களுமாக 198 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,948 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b285

 கண்டிப்பாக இவர்களால் முடியும். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவுக்கோரி தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ள சமதா கட்சி ஈழத் தமிழர்களின் இன்னல்களை அரசியல் ஆக்காமல், பொதுநல நோக்கோடு முன்னெடுக்க சமதா கட்சி முடிவெடுத்துள்ளதாக சமதா கட்சியின் அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் கோன் தெரிவித்துள்ளார். சமதா கட்சியின் நிறுவனரும், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியுமான 'ஜார்ஜ் பெர்னாண்டஸ்' அவர்களின் கனவாகிய 'தமிழ் ஈழம்' அடைந்தே தீரவேண்டும் என்ற குறிக்கோளுடன் சமதா கட்சி பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும், ஈழம் என்றொரு நாடு வேண்டுமென்பதில் சமதா கட்சி உறுதியாக உள்ளதாகவும், அந்தக் கட்சி கூறியுள்ளது. ஈழத் தமிழருக்கு ஆதரவு கோரி இதுவரை இந்திய ஒன்றியத்தின் அனைத்து தலைவர்களையும் சந்தித்துள்ளதாகவும், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும்,தனித் தமிழீழம் அமைக்க ஈழத் தமிழருக்கு உதவும் தமது முயற்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பேனர்ஜி, உதவ் தாக்கரே போன்ற தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள் என்றும் சமதா

TAMIL Eelam news b284

 தமிழீழ கிழை நிறுவனமான உலகத் தமிழர் வரலாற்று மையம்சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றது. பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழில்ல அடிக்கல் நாட்டு விழா பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் தமிழில்ல கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாவீர நினைவாலய நுழைவாயில் மற்றும் வணக்க தளங்களிலிருந்து காவி வரப்பட்ட அடிக்கற்களும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண்ணும் கட்டிடத்திற்கான அத்திவார பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு பொதுச்சுடர், ஈகைச்சுடர், தேசியக்கொடி ஏற்றல் போன்ற அம்சங்களுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் மாவீரர் குடும்பங்கள், போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள், தேச விடுதலையை நேசிக்கும் மக்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது,முள்ளிவாய்க்காலில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித மண்ணினை மாவீரர்களின் துணைவியர் இருவர் அத்திவார பகுதியில் தூவினர். இதனை தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரது கைகளிலும் அடிக்கல் வழங்கப்பட்ட நிலையில், கற்களில்