முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

tamil eELAM NEWS B224

 ஒலிம்பிக் 2020 : ஆஸ்திரேலியாவின் சாதனைப் பயணம்!




ஒரு பக்கம் உலகமே கொரோனா வைரசுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது, பெரும் பரபரப்புகளுக்கிடையே, ஒரு வருட காத்திருப்பிற்கு பின்பு, பார்வையாளர்களின் கைதட்டல்களும், ஆராவாரங்களும் இல்லாமல், டோக்கியோவில், ஒலிம்பிக்ஸ் 2020ல், 3988 வீரர்கள் 52 விளையாட்டுகளில் தங்களுக்குள்ளே போட்டி போட்டனர். ஐப்பான் நாட்டின் ஆதிக்குடிகளின் பண்பாட்டை விவரிக்கும் வண்ணம் நடனங்களை ஆடி, ஆகஸ்ட் 8ம் தேதி ஒலிம்பிக்ஸ் 2020 கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியா, உலக அரங்கில் தன்னை பெருமையான இடத்தில் முன்னிறுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணியைப்பற்றியும், வெற்றி பெற்ற கதைகளையும், பதக்கங்களையும் பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை.



ஆஸ்திரேலிய அணி

ஒலிம்பிக்ஸ் அணியில் கலந்துக்கொள்ள 486 ஆஸ்திரேலிய வீரர்கள் சென்றனர். அவர்களில் 261 பேர் பெண் வீராங்கனைகள். மொத்தம் 33 விளையாட்டுகளில் கலந்துக் கொண்டார்கள். மொத்தம் கலந்து கொண்ட 486 வீரர்களில் 308 பேர் முதன்முதல் ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொள்ளும் வீரர்கள். இதில் 66 வயதுடைய Marry Hanna வயதில் முதியவராகவும், 17 வயதுடைய Mollie O’Callaghan வயதில் ஆக இளையவராகவும் இருந்தது குறிப்பிடத்தகுந்தது.


துவக்க விழாவில் Cate Campbell மற்றும் Patty Mills இருவரும் ஆஸ்திரேலியக் கொடியை பெருமையுடன் ஏந்தி அணியை வழிநடத்தினர். நிறைவு விழாவில் Mat Belcher கொடியை தூக்கிச் சென்றார்.


பதக்கங்கள்

மொத்தம் 527 பதக்கங்கள் கொடுக்கப்பட்டு, விளையாட்டு நிறைவுக்கு வந்த பொழுது, ஆஸ்திரேலியா 17 தங்கப் பதக்கங்களையும், 7 வெள்ளிப் பதக்கங்களையும் 22 வெண்கலப் பதக்கங்களையும், ஆக மொத்தம் 46 பதக்கங்களைப் பெற்று உலக அளவில் ஆறாவது இடத்தைப் பிடித்தது, எல்லா ஆஸ்திரேலியர்களும் பெருமைப்படத்தக்க வகையில் இருந்தது. மொத்தம் பெற்ற 113 பதக்கங்களில், அமெரிக்கா 39 தங்கப்பதக்கங்களைப் பெற்று முதல் இடத்திலும், 88 பதக்கங்களில் 38 தங்கப் பதக்கங்களைப் பெற்று சீனா இரண்டாவது இடத்திலும் வந்தன. அடுத்து ஜப்பான், இங்கிலாந்து, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி மூன்று, நான்கு, ஐந்தாவது இடங்களைப் பிடித்தன.


ஆஸ்திரேலிய அணி, சிட்னி 2000ல் பெற்ற பதக்கங்களைத் தாண்டி, ஏதென்ஸ் 2004ல் பெற்ற 17 தங்கப் பதக்கங்களுக்கு இணையாக மறுபடியும் பெற்று சாதனைப் படைத்தது.

ஆஸ்திரேலியாவும் நீச்சல் குளமும்

ஆஸ்திரேலியாவிற்கும் நீச்சல் குளத்திற்கும் மிகுந்த ராசியிருக்கிறது போலத் தெரிகிறது. அங்கு தான் அதிகப்படியான பதக்கங்களை ஆஸ்திரேலிய வீரர்கள் தட்டி வந்திருக்கிறார்கள். நீச்சல் வீராங்கனை Emma McKeon, 5 தங்கப்பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் 4 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று, ஆஸ்திரேலியாவைப் பெருமைப்படுத்தியது மட்டுமல்ல, வளரும் இளைய தலைமுறைக்கு உற்சாகம் ஊட்டும் முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் நீரில் இறங்கி சாதனை செய்த பொழுது, ஆஸ்திரேலியர்களின் நெஞ்சம் பெருமையில் திளைத்தது.


Four time Tokyo 2020 Gold medalist Emma McKeon (2nd from right) with her fellow medalists.

Four time Tokyo 2020 Gold medalist Emma McKeon (2nd from right) with her fellow medalists.

AAP

நட்சத்திர வீராங்கனை Cate Campbell 4 தங்கப் பதக்கங்களையும் 1 வெள்ளிப் பதக்கத்தையும் 3 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று நீச்சல் அணியினரை வெற்றிக்கு இட்டுச் சென்றார். Ariarne Titmus இரண்டு தங்கப்பதக்கங்களையும் 1 வெள்ளிப் பதக்கத்தையும் 1 வெண்கலப் பதக்கத்தையும் பெற்ற போது குலுங்கிக் குலுங்கி அழுதார். அவரது நீண்டகால உழைப்பின் பலனாக வந்த வெற்றியின் ஆனந்த கண்ணீரும், நீச்சல் குளத்து நீர் போல பெருகியது.


 


Kaylee McKeown, Chelsea Hodges, Emma McKeon மற்றும் Cate Campbell அணியினர் 400 மீட்டர் மெட்லி ரிலேயில் தங்கப்பதக்கத்தைத் தூக்கிய போதும் Ariarne Titmus, Emma McKeon, Madison Wilson மற்றும் Leah Neale அணியினர் 800 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சலில் வெண்கலப் பதக்கம் பெற்ற போதும், உலகமே அசந்து நின்றது. Ariarne Titmus 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைலில் தங்கம் வென்றார். Launcheston ல் Titmus படித்த St Patrick’s கல்லூரியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து அதைக் கண்டு களித்தனர். Cambell Bronte ஒரு தங்கமும் ஒரு வெண்கலமும் பெற்றார். அவருடைய தாயார் ஒரு நீச்சல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்திரேலிய வீராங்கனைகள், இப்படி, அதிரடியாக பதக்கங்களை அள்ளி அள்ளி குவிக்க, இங்கு ஆஸ்திரேலியாவில் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளித் துள்ளிக் குதித்தனர். இது ஒரு புறம் இருக்க Izaac Stubblety-Cook 200 மீட்டரைத் தன் நெஞ்சால் நீந்தி தங்கத்தை தன் நெஞ்சில் எற்றினார். “என் குடும்பத்தாருக்கு நன்றி. அவர்கள் இல்லாமல் இந்த வெற்றி இல்லை. ஐந்து வருடம் கஷ்டப்பட்டேன். ஆனால் இப்பொழுது இந்தக் கணத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.” என்றார். Alaxander Graham, Kyle Chalmers, Zac Incerti மற்றும் Thomas Neill அணியினர் 800 மீட்டர் நீச்சலில் வெண்கலம் வென்றனர். Kyle Chalmers தனியாக, 100 மீட்டர் நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார். Mathew Temple 100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சலில் வெண்கலம் வென்றார். Emily Seebohm 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் வெண்கலம் பெற்றார்.


 



Ariarne Titmus of Australia after winning gold at the women 200m Freestyle final in Tokyo.

Ariarne Titmus of Australia after winning gold at the women 200m Freestyle final in Tokyo.

Sipa USA DPPI/Giorgio Scala / IPA/Sipa US

 


பீச் வாலிபால்

Mariafe Artacho del Solar மற்றும் Taliqua Clancy இருவரும் இணைந்து பீச் வாலிபாலில் பின்னி எடுத்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றனர். இதேப் போட்டியில், 2000 வது ஆண்டில் தங்கம் பெற்ற Nat Cook இந்த விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, ஆஸ்திரேலியர்கள் பதக்கம் பெற்று, வெற்றி பெற்ற போது உடைந்து அழுது விட்டார். “ஆஸ்திரேலியாவிற்கு இரண்டு புதிய கடற்கரை இளவரசிகள் கிடைத்துவிட்டனர்” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.


Canoe மற்றும் Kayak

எல்லோருடைய கண்களையும் அகல விரித்து, நெஞ்சங்களைப் படபட வைத்த இன்னொரு விளையாட்டு Canoe போட்டி. அதில் Jessica Fox ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் பெற்ற போது மகிழ்ச்சித் தாண்டவத்தில் ஆஸ்திரேலியாவே ஆடியது. Tom Green மற்றும் Jean van der Westhuyzen இருவரும் இணைந்து, இருவர் பயணிக்கும் படகை ஓட்டிச் சென்று தங்கத்தைப் பறித்த அழகைக் காண நிச்சயம் கண் கோடி வேண்டும்.


ஸ்கேட் போர்டு

Keegan Palmer 18 வயது நிரம்பிய இளஞ்சிறுவன். அவருடைய சிறிய ஸ்கேட் போர்டை வைத்து, தரையில் அழகிய ஓவியமும், வானில் ஒய்யார நடனமும் என ஓர் அதிசயத்தை நிகழ்த்தி, தங்கப் பதக்கத்தைப் பெற்ற போது, ஆஸ்திரேலியர்கள் எழுப்பிய கரவொலி விண்ணப் பிளந்தது. “என் இரத்தம், வியர்வை, கண்ணீர் என எல்லாவற்றையும் போட்டு கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் வந்து சேர்ந்தது. ஆஸ்திரேலியாவிற்காக இந்தப் பதக்கத்தை வாங்குவதில் பெருமை அடைகிறேன்” என Palmer, ஆஸ்திரேலிய அணியினரின் கொண்டாட்டங்களுக்கிடையே கூறினார்.


Keegan Palmer of Australia reacts after winning the Men's Park Skateboarding Finals at the Tokyo 2020 Olympic Games.

Keegan Palmer of Australia reacts after winning the Men’s Park Skateboarding Finals at the Tokyo 2020 Olympic Games.

EPA

 


கூடைப்பந்து

Patty Mills ஒலிம்பிக்ஸ் போட்டி துவக்க விழாவில், ஆஸ்திரேலியக் கொடியை ஏந்தி அணியை நடத்திச் சென்றது மட்டுமல்ல, Basket Ball என்கிற கூடைப்பந்து விளையாட்டில் முதன் முதலாக பதக்கத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார். விளையாட்டு களத்திலும் சரி, வெளியிலும் சரி, ஒரு தலைவர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என நிருபித்திருக்கிறார். கடைசி விளையாட்டில் தனி நபராக 42 புள்ளிகளை எடுத்ததிலும் சரி, அவரிடம் வருகிற பந்துகளை லாவகமாக தன் அணியினருக்கு பாஸ் செய்வதிலும் சரி, அற நெறியோடு விளையாடுவதிலும் சரி, தன் அணியினரை உற்சாகப் படுத்துவதிலும் சரி, ஒரு நல்ல தலைவர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். ஆஸ்திரேலிய கூடைப்பந்து அணியில் நட்பும் சகோதரத்துவமும் இழைந்து ஓடியதை கண்டுணராமல் இருக்க முடியவில்லை.


 


Australia's Patty Mills holds up a bronze medal for a teammate who was injured after beating Slovenia in the mens bronze medal basketball in Tokyo.

Australia’s Patty Mills holds up a bronze medal for a teammate who was injured after beating Slovenia in the mens bronze medal basketball in Tokyo.

AP

 


உயரம் தாண்டுதல்

Nicola McDermott ஒவ்வொரு முறை தாண்டுவதற்கு முன்பும் தன்னையும் உற்சாகப்படுத்திக்கொண்டு, பிறரையும் உற்சாகப்படுத்த அழைத்தார். ஒவ்வொரு முறை தாண்டி விட்டாலும், தாண்ட முடியாவிட்டாலும், தன் இருக்கைக்குச் சென்று, அவரது உணர்வுகளை ஒரு குறிப்பேட்டில் எழுதினார். அந்த ஒவ்வொரு நொடியிலும், அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலியர்களின் நெஞ்சு பதைபதைத்தது. ஒவ்வொரு முறையும் McDermott தாண்டும் போது, ஆஸ்திரேலியர்கள் தங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலிருந்து சற்றே உயரச் சென்று வந்தார்கள். வெற்றிக்காக அவர் போட்டி போடும் அழகைக் கண்டு வியந்து போனார்கள். அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றாலும் அவருடைய தங்கப் பேச்சை கேட்டு அசந்து போனார்கள்.

“பாரிஸில் நடக்க இருக்கும் 2024 ஒலிம்பிக்ஸிலும் தங்கத்துக்காக தாண்டுவேன். என் முழு உழைப்பையும் போடுவேன். இதைக்கண்டு யாரோ ஒருவர் உற்சாகம் பெற்று, உயரத்தாண்டுதலில் பயிற்சி பெறத் துவங்கினால் அதுவே மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். நான் எவ்வளவு உயரம் தாண்டுகிறேன் என்பது முக்கியமல்ல, சுற்றியிருப்பவர்களை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்பதே முக்கியம்” என்றார். இது தங்கப் பேச்சு தானே!


ஒட்டப்பந்தயம்

ஒலிம்பிக்ஸில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நான்காவதாக வந்தாலும், Peter Bol கோடிக்காணக்கான ஆஸ்திரேலியர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டார். நான்காவதாக வருவது யாருக்குப் பிடிக்கும்? இதோ, இன்னொரு மூச்சில் பதக்கம். ஆனால் மூவர் முந்திவிடுகின்றனர். ஐந்தாவதாக வந்தால் கூட இந்த வலி இருக்காது. ஆனால் Peter Bol வெளிப்படையாக அந்த வலியைக் காண்பிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் தன் ரெக்கார்டுகளையே முறியடித்து ஓடுகின்ற Peter Bol க்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்னவோ உண்மைதான். “ வெல்வது தான் குறிக்கோள். பதக்கம் தான் எண்ணம். ஆனால் இந்த தடவை முடியாவிட்டாலும், நாம் ஓடி வந்திருக்கிற இடம் குறித்து மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். எனக்குப் பின்னால் ஆஸ்திரேலியா என்கிற தேசமே இருக்கிறது.” என அவர் பெருமிதத்துடன் கூறினார்.


Bicycle Motocross (BMX)

இங்கும் அதிசயம் நடந்தது. Logan Martin தன் நண்பர் Jason Watts வுடன் இணைந்து டோக்கியோவில் உள்ள ஸ்கேட் பார்க் போலவே ஒரு ஸ்கேட் பார்க்கை தன் வீட்டுப் பின்பகுதியில் உருவாக்கினார். அதற்கு அவர் செலவு செய்தது வீண் போகவில்லை. முதல் முயற்சியிலேயே 93.3 புள்ளிகளைப் பெற்று முன்னணிக்கு வந்தார். சைக்கிளின் பின்புறத்தையும், முன்புற ஹேண்டிலையும் சுற்றிச் சுற்றி, அவர் சைக்கிளை ஓட்டித் தங்கப்பதக்கத்தைப் பெற்ற போது, எல்லோரும் மூக்கில் கையை வைத்தனர்.


படகோட்டம்

நீச்சல் குளம் போலவே, படகோட்டும் விளையாட்டிலும் ஆஸ்திரேலியா தன் தனி முத்திரையைப் பதித்தது. காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் விமானம் போல, நீரைக் கிழித்துக் கொண்டு Matt Wearn தன் படகைச் செலுத்திய போது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்ற Elise Rechichi மற்றும் Tessa Parkinson இருவரும், பெர்த்தில் உள்ள அவரது படகு பயண குழுமத்திற்கு வந்து போது ஆரம்பித்த Wearn -ன் கனவு டோக்கியோவில் தங்கப் பதக்கத்தில் நிறைவு பெற்றது. “அவர்கள் தங்கம் வாங்குவதைப் பார்த்தேன். அது எனக்கு திருப்புமுனையாக மாறிவிட்டது” என்று படகுத் துடுப்பைத் தூக்கிக் காண்பித்துச் சொன்னார்.


இதைப் போலவே Annabelle McIntyre, Jessica Morrison, Rosemary Popa மற்றும் Lucy Stephan நான்கு பேர் பயணிக்கும் படகைச் செலுத்தி, 2000 மீட்டர் பந்தயத்தில், தங்கம் வென்றனர். அந்த நகம் கடிக்கும் போட்டியைப் பார்த்துக்கொண்டு இருந்தவர்களின் கையும் பரபரத்தது. அவர்கள் வெற்றிக்கோட்டைக் கடந்த போது உடலெங்கும் புல்லரித்தது. அதைப் போல, Alexander Pumell, Spencer Turrin, Jack Hargreaves மற்றும் Alexander Hill படகோட்டத்தில் தங்கப்பதக்கத்தைப் பெற்றனர். அவர்களை எதிர்த்து கடுமையாக காற்று வீசிய போதும், நால்வர் அணி சளைக்காமல் படகோட்டி வெற்றிக்கோட்டைத் தாண்டினர். Mat Belcher ஒற்றையர் ஆண்கள் 470 படகோட்டப் போட்டியில் தங்கத்தைத் தட்டி வந்தார். Will Ryan மற்றும் Mathew Belcher இரட்டையர் 470 படகோட்டப் போட்டியில் தங்கத்தைப் பெற்று வந்தனர். இவர்கள் எல்லோரும் தங்கம் வாங்கியதைப் பார்த்து எத்தனை இளையோர் படகை எடுத்துக் கொண்டு கிளம்புகின்றனரோ?


குதிரையேற்றம்

குதிரையேற்றத்தில் Kevin McNab வெள்ளிப் பதக்கமும் வெண்கலப் பதக்கமும் பெற்றார். இரட்டையர் பிரிவில், அவருடன் சேர்ந்து Shane Rose வெள்ளிப் பதக்கம் பெற்றார். Andrew Hoy, தன் 62 வயதில் குதிரையேற்றத்தில் வெள்ளியும் வெண்கலமும் பெற்று ஆச்சரியமூட்டினார். “ அப்பா! நீ இன்னொரு பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வா என்று என் மகள் குறுஞ்செய்தி அனுப்பினாள். இதோ, எடுத்துச் செல்கிறேன்” என தழுதழுத்த குரலில் Andrew Hoy சொன்னார்.


மாரத்தான்

Sinead Diver, தனது 44 வது வயதில் மாராத்தான் ஓட்டப் பந்தயத்தில் கலந்து இரண்டு மணி நேரம், 31 நிமிடங்கள் 14 நொடிகள் எடுத்து 50 கிலோ மீட்டர் கடந்து, முதலில் வெற்றிக்கோட்டைத் தொட்ட பத்து நபர்களில் ஒருவராக வந்தது பெருமைக்குரியது.


மற்ற விளையாட்டுகள்

Edward Ockenden மற்றும் Aran Zalewski கேப்டன்களாக இருந்து வழிநடத்திய ஹாக்கி விளையாட்டில் இறுதி ஆட்டம் எல்லோருடைய நெஞ்சையும் பதை பதைக்க வைத்தது. பெல்ஜியமும் ஆஸ்திரேலியாவும் ஆளுக்கொரு கோல்கள் போட்டிருந்தனர். ஆட்ட நேரம் முடிவடைந்தது. பெனல்டி ஷூட் அவுட்டில் 2-3 எனப் பெற்று ஆஸ்திரேலியா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. பெண்கள் ஹாக்கி அணியினர் ஆரம்பச் சுற்றுகளிலேயே நாக் அவுட்டாகி கண்ணீருடன் திரும்பினர். அதைப் போல டென்னிஸ் வீராங்கனை Ash Barty ஒற்றையர் ஆட்டத்தில் தோற்றாலும், John Peers வுடன் சேர்ந்து வெண்கலம் வென்றார். Harry Garside குத்துச்சண்டையில் வெண்கலம் பெற்று ஆஸ்திரேலியாவிற்கு, அந்தத் துறையில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார். Javelin throw என்கிற அம்பு எறிகிற ஆட்டத்தில் Kelsey-Lee Barber வெண்கலத்தை எட்டிப் பறித்தார். Decathlon ஆட்டத்தில், கூட ஓடி வந்த சக ஓட்டக்காரர் Cedric Dubler கத்தி உற்சாகப்படுத்த Ash Moloney வெண்கலப்பதக்கத்தைப் பெற்றார்.


 


The Honourable Annastacia Palaszczuk MP, celebrates after Brisbane was announced as the 2032 Summer Olympics host city during the IOC Session at Hotel Okura in Tokyo, Wednesday, July 21, 2021.

The Honourable Annastacia Palaszczuk MP, celebrates after Brisbane was announced as the 2032 Summer Olympics

AP

 



பிரிஸ்பேன் 2032

பிரிஸ்பேனில், 2032ல் நடக்க இருக்கிற ஒலிம்பிக்ஸ்க்காக ஆஸ்திரேலியாவும், இளம் தலைமுறையினரும், இன்றிலிருந்து தயாராக வேண்டும். அதற்குள் 2024ல் பாரிஸிலும் 2028ல் லோஸ் ஏன்ஜெல்ஸிலும் மறுபடி உலக நாடுகள் சந்திக்கும். அப்பொழுது பார்வையாளர்கள் புடைசூழ, விளையாட்டு வீரர்கள் தங்கள் பராக்கிரமங்களை காண்பிக்கும் சூழல் இருக்கும் என்று தான் பரவலாக நம்புகிறார்கள். United by Emotions என்கிற கூற்றுப்படி உணர்வுகளால் ஒன்றிணைந்து, ஒலிம்பிக்ஸின் Faster, Higher, Stronger – Together என்கிற வாசகத்தின்படி உலகமக்கள் ஒருங்கிணைந்து காத்திருப்போம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?