முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b251

 புரட்சிநிலாவின் ஆத்மா நான் பேசுகிறேன்.


இவ்வளவு கத்தி அழுகிறேன் ஏன் இவர்களிற்கு என்குரல் கேட்கவில்லை.அய்யோ நான் என்ன செய்வேன்…?என்குரலை யாராவது கேட்கமாட்டீர்களா….?என்தோழர் தோழிகளே நில்லுங்கள் தயவுசெய்து நான் சொல்வதை கேளுங்கள்…….,ஓடுகிறேன் அவர்கள் பின்பு அவர்கள்முன் இரண்டு கைகளையும் நீட்டி மறிக்கிறேன்,


ஏன் இவர்கள் என்னைப்பார்க்கவில்லை.ஏன் இவர்களிற்கு என்குரல் கேட்கவில்லை,.,?அப்படியாயின் நான் இறந்துவிட்டேனா.? என்னால் இவர்களிற்கு உதவமுடியாதா..?நான் என்ன செய்வேன் என் இனிமையான போராட்ட வாழ்க்கை முடிந்துபோய்விட்டதா..?அப்படியாயின் என் கடந்த காலங்கள்.? அவை முடிந்துபோய்விட்டனவா..? என் கடந்தகாலங்கள் மீட்டிப்பார்க்கிறேன்…..?


என் பெயர் புரட்சிநிலா.நான் சிறுவயதில் இருந்தே போராட்டத்தை நேசித்தவள்,எனக்குள் போராட்ட உணர்வை ஏற்படத்தித்தந்தது என் அண்ணா,அண்ணா ஓர் போராளியாக இருந்தபடியால் விடுமுறையில் வீட்டிற்குவரும்போது வரிச்சீருடையுடன் நல்ல மிடுக்கோடுவருவான்,எமக்கு அண்ணா என்றுசொல்ல அவன் ஒருவனே இருந்தான்.இரண்டு அக்கா ஒரு தம்பி,அப்பா வயல்வேலை செய்துவந்தார்,


கிளிநொச்சியில் பல இடங்களில் எமக்கு வயல்கள் இருந்தது,கஸ்ரங்கள் இன்றி மகிழ்ச்சியான குடும்பவாழ்க்கையோடு ஒன்றித்துபோனது,அண்ணா விடுமுறையில் வரும்போது அண்ணாகூறும் களமுனைக்கதைகளும் ஏன் போராடவேண்டும் என்ற காரணத்தை கூறும்போதே எனக்கும் போராடனும் என்ற உணர்வைத்தத்தது.


நான் போராளியாக இணைந்தபோது எனது அண்ணாவந்து நீ வீட்டபோ நான் இருக்கிறன்தானே என்று கூறினார்,நான் வீட்டிற்குபோக மறுத்துவிட்டேன்,அம்மாவும் போதாக்குறைக்குவந்தழுதா அம்மாவின் கண்ணீரைப்பார்க்க வேதனையாக இருந்தாலும் வீட்டிற்குத்திரும்பிப்போக மறுத்துவிட்டேன்,அதன்பின் நான் படையணியில் இணைந்து அடிப்படை பயிர்ச்சிகள்எடுத்து என்னாலயும் முடியும் என்று பயிர்ச்சியை சிறப்பாக முடித்தேன்.


பின்பு படையணியுடன் இணைந்து என் பணியைதொடங்கினேன்.எனக்கு எல்லாமே பிடித்தபோனது ஒன்றைத்தவிர,அதாவது விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி என்பது அண்ணன்கூற்று.ஆனால் எனக்கு காவல்கடமைதான் முடியாத காரணமாக இருந்தது.நல்ல நித்திரையில் இருக்கும்போது சாமத்தில காவல்கடமைக்கு எழுப்பிவிடுவார்கள்,என்ன செய்வது கடமையில் தூங்கி பலமுறைபொறுப்பாளரிடம் மாட்டி தண்டனை பெற்றுக்கொண்டேன்,ஞாயிறு ஓய்வுநாள்,எமது ஆயுதங்களை சுத்தம் பண்ணிவைத்து எம்கடமைகளை செய்வோம்


கிழமைநாட்களில் காவல்கடமைகளில் நித்திரைகொள்வோர் ஞாயிற்றுக்கிழமையில் தண்டனை அனுபவிப்போம்.என்னடா இது இந்த நித்திரை கொள்ளாம இருக்க என்ன செய்யலாம் என்று யோசிச்சு யோசிச்சு மண்டையை பிச்சு கண்டுபிடிச்சதுதான் காவல்கடமையில் நிற்கும்போது தூக்கம் வந்தால் சிறியதடிக்குச்சியை முறித்து காதினை சும்மா பொழுதுபோக்காக குடைந்தபடி இருப்பதென்று,இந்த குடைச்சலால் நித்திரைதூங்காமல் தண்டனையில் இருந்த தப்பினாலும் காதில் இருந்து இரத்தம் வரத்தொடங்கியது,


என் பாட்டிற்கு காதைக்கிண்டி இரத்தம் வந்ததால் காதுக்குத்தில் மருத்தவமனை சென்று மருந்து எடுத்துவருவேன்,என்ன நடந்தது என்று கேட்டபோது முதல்இரு தடவை பறவாயில்லை என்று குச்சி விடயத்தை கூறினேன் தொடர்ச்சியாக எப்படி இதையே கூறுவது. என் நல்ல பழக்கத்தை விடுவதென முடிவெடுத்தேன்,


அத்தோடு என் சகதோழிகள் நக்கலடிப்பும் ஒரு காரணமாக அமைந்தது,4தடவைவைக்குமேல மருத்தவமனை சென்றபடியால் கூறிவிட்டார்கள்,இனி காதுக்குள் தடிகுச்சிவிட்டுகிண்டினால் காதுகேட்காம போகும் என்று,பயத்தில் என் நல்ல பழக்கத்தைவிட்டுவிட்டேன்.


பல நாட்கள் மாதங்கள் வருடங்கள்பல கடந்தது,களமுனைக்கு சென்றுவிட்டேன்,முகமாலை முன்னரங்கில் காயப்பட்டேன்,உடலில் பெரிய காயம்எற்பட்டது.பரவலாக இராணுவத்தால் பொழியப்படும் எறிகணையால்,எனக்கு வயிற்றில் பெரியகாயம்,பின்களத்திற்கு கொண்டுவரப்பட்டேன்,மருத்தவமனையில் இருந்தபோது என் அம்மா ஓடிவந்து அழுதா,


அம்மாக்கும் இதேவேலைதான்.சண்டையில் நான் காயப்படும்போது இளநீரோட ஓடிவந்து பிள்ளை கொண்ணா இருக்கிறான்தானே நீ வீட்டவாவன் என்று சொல்லிஅழுது ஆக்கினைப்பண்ணிக்கொண்டே இருப்பா,அண்ணாவும் என்னை வந்துபார்த்தவிட்டுபோவான்,


இராணுவ முற்றுகை எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னோக்கி நகர்ந்தபடி இருந்தது,மக்களும் பல இடங்களிற்கு இடம்பெயர்ந்தபடி இருந்தார்கள்.நாங்களும் ஊண் உறக்கம் இன்றி இரவுபகல்பாராது சுழன்றபடி இருந்தோம்.


பல சண்டை பலகாயம் என்று எனது பயணமும் நகர்ந்தது.இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்துவிட்டோம், உணவின்றி மக்கள் தவித்தார்கள்.பொருட்கள் இருந்தால்கூட சமைக்கமுடியாது செல் தாக்குதலில் இருந்து தப்பித்துகொள்ள மக்கள் சேலைகளைவெட்டி உரப்பை போல்செய்து மணலை போட்டு அரணாக அமைத்து உள்ளே படுத்துறங்கினார்கள்,


அதற்குள் செல்விழும்போது குடும்பம் குடும்பமாகவே இறந்தும் போனார்கள்,எப்போதும் செல்மழை,காதெல்லாம் அடைச்சே போனது,போதாக்குறைக்கு பசியிலும் காதடைச்சுக்கொண்டது,எல்லாமே சிறிது காலம்தானே இந்தவேதனை நம் மக்கள் சுதந்திரமாக வாழ்வார்கள்.அவர்களிற்கு நின்மதியான வாழ்வை பெற்றுக்கொடுத்துவிடவேண்டும் என்பதே எம்போராளிகள் அவாவாக இருந்தது.


இராணுவ முற்றுகை வட்டுவாகல் சென்று மக்கள் தங்கினார்கள் அங்கு தறப்பாள் கொட்டில் அமைக்ககூட முடியவில்லை,சேற்றுப்பகுதி மக்கள் வீதிகளிலே படுத்துறங்கினர்.நான்கு பக்கத்தாலும் இராணுவம் முன்னேறிவர பகுதி பகுதியாக மக்கள் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்,மக்கள் சரணடைந்த பகுதிகளில் எறிகணைகள் வீழ்ந்தே பலர் இறந்தார்கள்,எங்கும் மரணஅவலம்,ஓர் எறிகணைக்கு அண்ணளவாக 20ற்கு மேல் மக்கள் இறந்தார்கள்,


17ஆம் திகதி மக்கள் பெருந்தொகையில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.எதுவுமே செய்யமுடியாத சூழலில் போராளிகளும் மக்களோடு இணைந்துகொண்டார்கள்,


மறுநாள் 18 ஆம் திகதி.பொதுமக்களின்தொகை குறைந்துபோனது,போராளிகளே கூடுதலாக இருந்தார்கள்,பல பொதுமக்கள் அங்குநின்ற போராளிகளை தமது பிள்ளைகள் என்றுகூறி அழைத்துசென்று காப்பாற்றினார்கள்,


எங்கு என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியாமல் போனது. எனது தோழர் தோழிகள் களமுனையில் நின்றோம்,நாங்கள் மூவர் காயமடைந்தோம்,ஓர் இடத்திற்கு மருத்துவபிரிவு போராளிகளால் பங்கர் ஒன்றிற்குள் கொண்டுசெல்லப்பட்டு முதலுதவி அழிக்கப்பட்டது,பெரியகாயம் அரைமயக்கம்.என்னோடு வந்திருந்த போராளி காயத்தில் தண்ணீர்கேட்டு அழுதாள்,பெரிய காயம் இனி எதுவும் செய்யமுடியாதென்ற நிலை.எம்மை கொண்டுவந்த போராளிகள் இருவரும் தண்ணீர்தேடி சென்றார்கள் திரும்பிவரவில்லை.


செல் சத்தம் துப்பாக்கி சத்தம் காதைஅடைத்தது.அரைமயக்கமானேன்,அருகில் இருந்தவள் இறந்துபோனால், பெரும் குருதிபெருக்கால்.அரைமயக்கம் பெரும்காயத்தோடு இராணுவம் எம் மூவரையும் பிடித்துகொண்டான்.திடீரென்று குப்பிகடிக்ககூட முடியவில்லை.காயத்தால் உடல் இயக்கங்களும் தளர்ந்தே போயிருந்தது,


எம்மை பிடித்துவிட்டு ஏதோ சொல்லி சிங்களத்தில் கத்தினார்கள்,பல இராணுவம் ஓடிவந்து எம்மை பிடித்துகொண்டார்கள்.இனி என்ன செய்யமுடியும்….?நடப்பதை கண்டுகொள்ள வேண்டியதுதான் என்ன செய்யபோறானோ என்று கலக்கமாக இருந்தது.


எம்மை ஓர் இடத்திற்கு இழுத்துசென்று கண்களைகட்டிவிட்டு ஏதோ சிங்களத்தில் கதைத்தார்கள்.ஓர் துப்பாக்கி சத்தம் மிகஅருகில் கேட்டது,இரண்டாவது வெடி மூன்றாவதாக எனக்கும் விழுந்தது,நான் இறந்துவிட்டேன்,ஆம் என் போராட்டவாழ்க்கை முடிந்துபோய்விட்டது.இவைதான் என்கடந்தகால நிகழ்வுகள்.


அதோ என் தோழிகள் சரணடைய போய்க்கொண்டிருக்கிறார்கள் அவர்களை தடுக்கவேண்டும்,இராணுவம் எம்மை சுட்டதுபோல் உங்களையும் சுட்டுவிடுவான்,போகாதீர்கள் கொடுமையெல்லாம் செய்யபோறான்,நீங்களாகவே குப்பிகடித்து செத்துவிடுங்கள் என்று ஓடுகிறோம்,நாம்தானே இறந்துவிட்டோம்,எப்படி அவர்களிற்கு விளங்கும்,அதோ என் நண்பன் அகவாணன் போகிறான்.அவனோடு மேலும் இருவர்,மறுபுறத்தில் சோலையரசியும் வேறோர்போராளியும் போகிறார்கள்,


அய்யோ போகாதீர்கள் என்று கத்துகிறேன்,அவர்கள் தோளைப்பிடித்து இழுக்கிறேன் அவர்கள் என்னை உணரவில்லை.எனக்கு தண்ணீர் எடுக்கபோனவர்களும் இப்போது என்னோடு ஓடிவருகிறார்கள் அப்படியாயின் அவர்கள் இறந்தபடியால்தான் திரும்பி எம்மிடம் வரவில்லை,நான் என்ன செய்வேன்,அய்யோ பிடித்தவர்களை கொடூரப்படுத்துகிறார்களே,அய்யோ அவர்கள் மானத்தை நான் எப்படி காப்பாற்றுவேன்,என் சகதோழிகள் கதறுகிறார்களே,…..?துவக்கால அடிக்கிறாங்களே…..இழுத்துக்கொண்டு போறாங்களே,கைகள்கட்டி கண் கட்டப்படுகிறது.அப்படியாயின் எம்மை சுட்டதுபோல அவர்களையும் சுடப்போகிறார்களா..?


பலரை இழுத்துகொண்டுபோகிறார்களே,நான் ஓடுகிறேன் முடியவில்லை.எப்படியாவது சுடும்போது அந்த துவக்கினை தள்ளிவிட முயர்ச்சிசெய்கிறேன்.முடியலையே அய்யோ நாங்கள் என்ன செய்வோம்,அதோ இழுத்துக்கொண்டுபோய் வாகனங்களில் ஏற்றுகிறார்களே…..ஓடுகிறேன் ஒடுகிறேன் பதறியடித்தபடி என் கண்மணிகளே நான் உங்களை காப்பாற்ற முடியவில்லை.


என்னை மன்னித்தவிடுங்கள்,உங்களிற்குமுன் எங்களைத்தான் சுட்டுவிட்டார்கள்,நாங்கள் இறந்துவிட்டோம்,ஆம் அய்யோ உங்கள் உயிரை கற்பை கப்பாற்றமுடியாமல் இறந்தவிட்டோம் அம்மா,நீங்கள் கதறுவதை பார்க்கிறோம்,எம்மால் உங்களைமீட்கமுடியவில்லை,எங்களை மன்னியுங்கள்,எம் தோழர் தோழிகளே எம்மை மன்னியுங்கள்…..நாங்கள் போர்க்களத்தில் மரணித்துவிட்டோம்,


உண்மையின் கற்பனை கதாபாத்திரங்களோடு


&&பிரபாஅன்பு&&

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?