முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 131

 மாவீரர் நாளில் தமிழர்தேசம் வகுத்துக் கொள்ள வேண்டியது என்ன? பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செய்தி! இறைமை தமிழ்மக்களின் கைகளில் இருக்கின்றது என்ற நோக்குநிலையுடன்,  இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசை மட்டும் மையம் கொண்டிருக்கும் வல்லரசுகளின் ஆட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில்,   அனைத்துலக உறவுக் கொள்கை ஒன்றை தமிழர் தேசம் வகுத்துக் கொள்ளவேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவளை மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினையும் மறுக்கும் சிங்கள அரசுடன் உரையாடி, பேச்சுவார்த்தைகளை நடாத்தி உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனத் தமிழர் தலைவர்கள் எவரும் காத்திருப்பார்களேயானால் இவர்களின் நிலை இலவு காத்த கிளிகளின் கதை போல்தான் இருக்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு நீக்கத்தின் அவசியம், இறுகிவரும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளல், சர்வதேசத்தின் நலன்சார் அரசியலை கையாளுதல், தமிழர் தேசத்துக்கான வெளியுறவுக் கொள்கை என இம்மாவீரர் நாளில் தமிழர் தேசம் வகுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் இராஜ

TAMIL Eelam news130

 அவுஸ்திரேலியாவில் உள்ள QLD மானிலத்தில் புலம்பெயர் தமிழர்களால் தமிமீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27/2020 பிற்பகல் ஐந்து மணிக்கு ஆரம்பித்து 8.30 மணிக்கு அனைத்து நிகள்வுகளும் நிறைவு செய்யப்பட்டது குறிப்பாக இளைய தலைமுறையினர் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். அதைவிட இங்கே உள்ள அவுஸ்திரேலியா மக்களும் தமிழர்களுக்கு சார்பாக தங்களின் ஆதரவை விளிப்படுத்தினர்கள். எனவே அவர்களுக்கும் எமது இணையம் சார்வாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் கீழே நிகழ்வுகளை உலகத் தமிழர்கள் பார்க்கலாம்                                                                     நன்றி.K.NIMAL

TAMIL Eelam news 129

 பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே இன்றைய நாள் எமது சுதந்திர தமிழீழ விடுதலைக்காக தங்களை அற்பணித்த புனிதர்களை வணங்கும் நினைவு நாள். தமிழீழத்தின் விடுதலைக்காக எமது வளிகாட்டிபான மேதகு தலைவர் அவர்களின் சுய ஒழுக்கம் கட்டுப்பாடுகளை ஏற்று கடினமான பயிற்சிகளைப் பெற்று பலமுறை எதிரிகளோடு சமர் ஆடி  விழுப்புண் அடைந்து இருந்தபோதிலும் தொடர்ந்து தனது சாவின்போது ஒரு சாதனை இருக்க வேண்டும் என்ற ஆழமான உணர்வோடு கரும்புலியாக வேவுப்புலியாக பல வடிவங்களாகச் சென்று தங்களின் உயிரை அறிப்பணித்தவர்கள்தான் இந்த மாவீரர்கள்' எமது விடுதலைப் போராட்டத்தில் ஆண் பெண் இருபாலரும் சமத்துவமாகப் போராடி தாய் நாட்டின் விடுதலைக்காக தக்களின் உயிரை அற்பணித்த பெருமையை எமது தமிழீழ  மண் பெற்றுள்ளது. எனவே மாவீரர்களை பெற்று எதிரிககளின் இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட தங்களின் பிள்ளைகளை உபந்தளித்த எமது பெற்றோர் ஆகிய நீங்கள் சந்ததி சந்ததியாக சிரம் தாழ்த்தி கெளவ்ரிவிக்கப்பட வேண்டியவர்கள். தலைமுறை தலைமுறையாக இந்த மாவீரர்களின் தியாகங்களிற்குப் பின்னால் உங்களுடைடைய பெயரும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இ

TAMIL Eelam news128

 புரொண்ட்லைன் சஞ்சிகைக்கு தமிழீழ தேசிய தலைவர் 1987 ம் ஆண்டு வழங்கிய பேட்டி. எனது இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வரை என் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடுவேன் என்று என் மேசையில் எழுதியிருப்பேன் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தவர். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் பிரபாகரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தனது எண்ணக்குமுறல்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தினார். பிரபாகரன் டெல்லியில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளதுடன் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் யாழ்ப்பாணம் திரும்பினார். ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரை பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது. விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்தும் ஒப்பந்தத்தினை பற்றி திருப்தியின்மையையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவையும் அன்பையும் தெளிவாக எடுத்துரைத்தார். இந்தியா மீது கொண்டுள்ள அன்பின் நிமித்தமே இந்திய அமைதி காக்

TAMIL Eelam news 127

 வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி தமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு, இன்று பொன்விழா கொண்டாடிடும், எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தமிழ் தேசியத் தலைவன் தம்பி பிரபாகரன் பற்றி நான் வெளிநாடுகளில் இருந்து வியந்து அவதானித்தவற்றில் சிலவற்றை, அவரின் பொன்விழா சம்பந்தமாக வெளியிடப்படும் இந்த மலரில் பதிவு செய்வதற்கு நான் பாக்கியம் பெற்றிருப்பதோடு, பெருமிதம் அடைய வேண்டியவனாகவும் இருக்கின்றேன். தம்பி பிரபாகரன் 1954ல், பிறந்த வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் உள்ள ஊரில், அவர் பிறப்பதற்கு சில வருடங்கள் முன்னர் பிறந்த ஒருவன் என்ற முறையிலும், 1970ம் ஆண்டு நான் பேராதனைப் பல்கலைக்கழகம் புகுவதற்கு ஆயத்தமாகின்ற வேளையிலே, தமிழ் மாணவர் பேரவையின் அங்குரார்ப்பண பகிரங்க நிகழ்ச்சியான மௌன ஊர்வலத்தில் (திருநெல்வேலிச் சந்தையடியில் ஆரம்பமாகி, யாழ் GREEN FIELD மைதானத்தில் முடிவடைந்த பொதுக்கூட்டத்தில்) கறுப்பு

TAMIL Eelam news 126

 மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம் இணையவழியே ஒன்று கூடி மாவீரர்களை நினைவேந்த தயாராவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாத அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது. இந்நிலையில் தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர் வாரம், மாவீரர் நாள் நிகழ்வுகளை மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக காணமுடியும் எனத் அறிவித்துள்ளது.

TAMIL Eelam news 125

 கல்லறை கண்டு நிமிர்வோம் முதல்நாள் இரவு கண்தூங்கும் பொது அம்மா சொன்னாள் நாளை விடிகாலையில் எழும்போது மாவீரர் ஈகைச்சுடரில் விழித்தெழும்படா மகனே என்று அவர் சாவை மிதித்திட நஞ்சுமாலை நெக்ஞ்சிலடா வாழ்வை மதித்தவர் வானம் பிளந்திட கானம் இசைத்திட வையகம் நடந்தவர் தாய் நிலம் காப்பதற்காய் தம்முயிரை ஈகையாக்கி தளராத துணிவுடன் நடந்துவாடா! தாயை மிதித்தவன் தளம்தேடி நடந்தவர் இனியசாவு எப்படி நடந்ததென உனக்குத் தெரியுமாடா? அப்பா எங்கே அண்ணா எங்கே அக்கா எங்கே தங்கை எங்கே….. எதிரிகளம் புகுந்து உயிர்கொடுத்த உத்தமரது பொன்னடி தொழுது ஏழு விடிவு பிறக்குமடா ! காடும் மலைகளும் எனத் திரிந்தவர்கள் தாலாட்டிய தமிழன் உயிரானவர் உடல் மண்ணுக்கென்றானவர் வாழைபோல் பரம்பரையை விதைத்து வளர்த்திட இரத்தம் பாய்ச்சியவர் மண்ணின் மைந்தர்கள் உறங்கிடும் கல்லறையல்ல செஞ்சூரியனும் துருவ நட்சத்திரங்களுமாய் ஒளிரும் விண்மீன்கள் தினம்தொழுதும் சந்நிதி பூமலர் கொண்டு பாமலர்பாடும் அவர் பொன்னடி அம்மா எனக்குன் துயரம் புரிகிறது அவர்கள் அணிந்த ஆடைகளையும் தூக்கிய சுடுபொறிகளையும் நடந்த பாதைகளையும் நினைக்கிறேன் தேசத்தை நேசித்துவிட்ட அனல் மூச்சுக்களையும் வி

TAMIL Eelam news124

 மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் – நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும் செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும் செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும் மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் இசை: சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம் தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர் கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர் – பகை கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர் தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் – நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் ஆ……ஆ……ஆ மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர் -இன மானம் பெரிதானதென்று சொல்லுக

TAMIL Eelam news 123

 கடலுக்கு அணை போட்டு கண்களை மூடியவர்கள் எமது மாவீரச் செல்வங்கள்…! ஏமது மண்ணை மீட்டெடுக்க தங்கள் உயிரை தாரைவார்த்தவர்கள் தான் மாவீரர்கள்… தமிழினத்தின் கருவையே இலங்கைத் தீவில் இருந்து கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்ற இனவெறிக் கொள்கையோடுஇன்று நேற்றல்ல , புலிகள் பிறக்கும் முன்னரே சிங்களஅரசியல் பிறந்து விட்டது. கொதிக்கும் தார்ப்பீப்பாவுக்குள் துடிக்கத் துடிக்க தமிழ் குழந்தையை போட்டுக் கொன்றார்கள், சிங்கள இனவெறி அன்றே நடைமுறைக்கு வந்து விட்டது. இணைப்பு என்பது சிங்கள இனவாத அரசியல் அகராதியில் தமிழின அழிப்பு என்று அமைந்துள்ளதை உணர்ந்து தமிழன் தன்னைக் காப்பாற்றிக் எழுந்த கொள்ளபோது பிறந்ததே தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பு. நீதியும் நேர்மையும் மனித நெறிகளும் கூறும் நியாயத்தின் தேடுதலே எமது போராட்டம்… இந்த வகையில் அத்துமீறிய சிங்கள ஆக்கிரமிப்புக் கால்களை வெட்டிவீழ்த்தி ணைப்பாதுகாக்கும் எமது வழி தால் அங்கீகரிக்கப்பட்ட வழியே உலகத்தின் பார்வையிலும் சரி நீதியின் பார்வையிலும் சரி நாம் தூக்கியுள்ள ஆயு தம் நீதியை நிலைநிறுத்த எழுந்துள்ள தூண் உலகத்தை ஈழத்தின் பால் திருப்ப ஈழப் பிரச்சினையாக , நீதியின் அறைகூவல

TAMIL Eelam news122

 சிறிலங்கா கூலிப்படையினரான S,T, F படையினரின் அட்டகாசம்? மேலும் தெரியவருவதாவது 18/11/2020 பிற்பகல் 7 மணியளவில் பெருமாள்.மாணிக்கம் 64 என்பவர் தனது கிராமமான மரப்பாலை ஜீயேஸ் பிரிவிக்கு உட்ப்பட்ட வீதியால் நடந்து சென்றவேளை பேர் இரச்சலோடு உந்துதுறுளி ஒன்று வந்து தன் மீது மோதியதாகவும் தான் சுயநினைவு அற்ற நிலையில் தரையில் வீழ்ந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.  இதுதொடர்பாக அயலில் உள்ளவர்கள் தெரிவிக்கும்போது முதியவர் அவ்வீதியால் நடந்து சென்றவேளை ஒரு உந்துறுளியில் இரண்டு இராணுவத்தினர் வேகமாக அவ்வீதியால் வந்து முதியவரை அடித்து வீழ்த்திவிட்டு வேகமாக அவ் இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவித்து உள்ளனர். அம்மா என்ற சத்தம் கேட்டு தாங்கள் ஓடி வந்து அவரை தூக்கி மருத்துவமனை அனுப்பியதாகவும் தற்பொழுது அவர் கால் முறிந்த நிலையில் கோமா நிலையில் மட்டக்களப்பு போதானா மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். செய்திபாளர் S.John

TAMIL Eelam news 121

 கவிஞர் புதுவை இரத்தினதுரை நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் புதுவை இரத்தினதுரை புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை – போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர். “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம் எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்” “துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை… “அட மானுடனே! தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள் பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம் நிலம் சுமப்பதோ நீண்ட காலம். அன்னை மடியில் இருந்து கீழிறங்கி அடுத்த அடியை நீ வைத்தது தாயகத்தின் நெஞ்சில்தானே. இறுதியில் புதைந்தோ அல்லது எரிந்தோ எருவாவதும் தாய்நிலத்தின் மடியில்தானே. நிலமிழந்து போனால் பலமிழந்து போகும் பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும் ஆதலால் மானுடனே! தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்” வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை