முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 120

 

தமிழீழ காவல் துறை உதயமான நாள் இன்றாகும்…!!!

1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ காவல் துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டிய காவல்துறை ஆகும்.

இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை தாளாமல் போராடி வருகிறார்கள். “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டு பார்க்கிறார்கள். 1991, நவம்பர் 18 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் முன்னிலையில் அணிவகுத்து காட்டி தம் கடமையை கையில் எடுத்த உன்னதமான நாள் ஆகும்.

மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. தமிழீழ எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது இவர்கள் செயற்பட்டுள்ளனர்.

காவல் துறையின் பிரிவுகள். குற்றபிரிவு / விசேட குற்றபிரிவு /போக்குவரத்து பிரிவு /புலனாய்வுபிரிவு /தமிழீழ தேசிய தலைவரின் நேரடி விசாரைண பிரிவு /ஆளணி மற்றும் நிர்வாக பிரிவு /விசேட தாக்குதல் பிரிவு /மக்கள் பொதுநல சேவை பிரிவு போன்றன இயங்கின தமிழீழ காவல் துறை தேசிய தலைவர் பிரபாகரன் நேரடி வழிகாட்டலில் இயங்கியது இதற்கு பொறுப்பாளர்களாக பா.நடேசனும்.பின்னர் இளங்கோ என்ற ரமேசும். இயங்கினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது ‘தமிழீழக் காவற்றுறை’ உருவாக்கம்.

தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை நிறுவி காட்டிய சிறப்பு கொண்டது. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்பட்டு வந்த தமிழ் மண்ணை தமிழர்கள் ஆண்ட காலங்கள் அவை. பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு – கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம்.

அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும். அக்கட்டமைப்பு நிறுவப்பட்டு 19.11.2019 இன்றோடு 28 வருடங்கள் நிறைவாகின்றன. வன்னியில் போர் கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில் மிதிவண்டிகள் மட்டுமே காவற்றுறையின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. பலபத்து மைல்கள் போய் குற்றவாளியொருவரைக் கைதுசெய்து மிதிவண்டியிலேயே அழைத்துவருவார்கள். தாயக எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது காவல் துறையினர் செயற்பட்டார்கள்.

1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘யாழ்தேவி’ முறியடிப்புச் சமர் உட்பட பல சமர்களில் அவர்கள் துணைப்படையணியாகவும் செயற்பட்டார்கள். சிலர் களத்தில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.
ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறை தமிழீழக் காவற்றுறை என்பதோடு எந்த ஒரு குறையும் எங்கள் மண்ணில் படியாமல் காவல் நின்று மாதிரி நேர்த்தியான அரசை நிறுவ துணை நின்றார்கள் . போர்ச்சூழலில் சமூகக் கட்டமைப்புக் குலையாது பாதுகாத்த பெருமை தமிழீழக் காவற்றுறையைச் சாரும். பதினைந்தாண்டுகள் அரும்பங்காற்றிய தமிழீழக் காவற்றுறை 2009 முள்ளிவாய்க்காலோடு அமைதியாகி போனது. அதனால் மக்கள் இன்று அமைதி இன்றி பரிதவிக்கின்றார்கள்.மீழ் பிரசூரம் செய்யப்பட்டுள்ளது


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?