முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

e 56 கொய்யாப்பழம் நல்ல சிவப்பாக இருக்கும் போதுசாப்பிட்டால் என்ன நடக்கும்

  கொய்யாப்பழம் நல்ல சிவப்பாக இருக்கும் போது சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? மருத்துவர் விளக்கம்!  By DHUSHI  53 நிமிடங்கள் முன்             0 SHARES விளம்பரம் பழங்களின் “ராணி” என  கொய்யாப்பழத்தை  கூறுவார்கள். ஏனெனின் கொய்யாப்பழத்தில் கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, விட்டமின சி, வைட்டமின் ஏ உட்பட பல சத்துக்கள் உள்ளன. இதனால் மனித உடலுக்கு முற்றிலும் நன்மையை மாத்திரம் கொடுக்கும் பழமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் கொய்யாப்பழங்களில் இரண்டு நிறங்கள் இருக்கின்றன. அதில்  சிவப்பு நிற கொய்யாப்பழம்  உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிவப்பு கொய்யா சாப்பிட்டால் என்ன நடக்கும்? 1. சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற கொய்யாவில் அதிக தண்ணீர் மற்றும் குறைவான சர்க்கரை இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதனால் சர்க்கரை நோயுள்ளவர்கள் தாரளமாக எடுத்து கொள்ளலாம். 2. சிவப்பு கொய்யாவை உட்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் தடுக்கப்படுகின்றது. இதனால் ஆண்கள் கட்டாயமாக இந்த பழத்தை எடுத்து கொள்ள வேண்டும். 3. மன அழுத்தம் உள்ளவர்கள் கொய்யாபழங்களை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும

e 55 வெலி ஓயாவாக மாற்றப்பட்ட ஈழத்தின் இதய பூமி முல்லைதீவில் 67ற்கு மேற்பட்ட வ...

முல்லைத்தீவில் 67இற்கு மேற்பட்ட விகாரைகள் - ஈழத்தமிழ் மக்களால் இனி என்ன செய்ய முடியும்...  By Vanan  14 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளால் மலிந்துபோன ஒரு தேசமாக தமிழர் தாயகப்பகுதி மாறிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழர்களின் இருப்பு என்பது அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.  கடந்த காலங்களில் கிழக்கில் அம்பாறையில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புகள் அங்கு தமிழர்களின் இருப்பினை விழுங்கி ஏப்பம்விட்ட நிலையில், இன்று ஒரு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கூட பெற முடியாத அளவிற்கு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதுபோல, ஈழத்தமிழர்களால் தமிழர் தேசத்தின் தலைநகரம் என்று விழிக்கப்படும் திருகோணமலை மிகப்பாரதூரமான ஆக்கிரமிப்புகளால் ஒட்டுமொத்த தமிழினத்தின் உரிமைகோரல்களும் தகர்க்கப்பட்டு முழுமையான சிங்கள முஸ்லிம் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துபோயிருக்கின்றது. இரண்டாம் தர பிரஜைகளாக தமிழ் மக்கள் தங்களது இருப்பையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்க, அங்கிருக்கும் ஏனைய இனங்களைச

e 54 இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து - 18 பேர் காயம்

  இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து - 18 பேர் காயம்  By Beulah  1 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம்  கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (01) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. எதிர்திசையில் இருந்து வந்த பேருந்து ஒன்றுக்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு சறுக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் அனுமதி விபத்தில் சுமார் 18 பேர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

e 53 உன்மைய உனரத்தொடங்கும் இனவாதிகள்?

  இலங்கை மக்கள் அங்கு செல்லவே அச்சப்படுகிறார்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்  By Shankar  3 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் இலங்கை மக்கள் தற்போது பொது வைத்தியசாலைகளுக்குச் செல்லவே அச்சப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் G.L Peiris தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2024, ஒகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 ஆண்டுகளுக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. 2048 இல் நாடு பாரிய முன்னேற்றமடையும் என்று இவர்கள் ஒரு கற்பனைக் கதையைக் கூறுகிறார்கள். தற்போதுள்ள மக்களுக்கு அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்பது தேவையில்லை. நாளை உயிருடன் வாழ்வோமா என்பதுதான் இவர்களின் எதிர்ப்பார்ப்பாகும். இதேவேளை, லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 3 அரை வயது குழந்தையொன்று, கிட்னி பாதிப்பினால் சிசிச்சைப் பெற்றுவந்து, மருந்து இல்லாத காரணத்தினால் 3  நாட்களுக்கு

e 52 மேற்குலக இராஜதந்திரிகளை சந்திப்பதால் நன்மை கிடைக்குமா?

  மேற்குலக இராஜதந்திரிகளை சந்திக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  By Vanan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இடம்பெறும் திகதி மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படமாட்டாது என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சிறிலங்கா அரசு வெளிப்படுத்தும் அதேவேளை, குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்வதன் மூலம் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமாத்திரமன்றி அரசாங்கத்தினால் நிறுவப்படுகின்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட எந்தவொரு உள்ளகப்பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும்,