முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 969 உயிரோடு இருக்கும் ஒரு பெண் போராளியின் உணர்வு,

தாய் தகப்பனை விட தனது தோளிகளில் அவர் வைத்துயிருந்த அழவு கடந்த அன்பை வரிகள் வெளிப்படுத்துகின்றது, ஒரு போர்வீரன்தன்னோடு சேர்ந்து போராம் ஒருதனிக்குத்தான் முன்னுருமை கொடுப்பான் இது போர் வீரர்களின் கடமை? 


அப்பா .....

இன்று நீங்கள் எங்களோடு இல்லை...... ஆனால் உங்களுடைய கடைசியும் முதலுமான ஆசையை நிறைவேற்ற முடியாத மகளாக மிகப்பெரும் வலியோடு தவித்து நிற்கின்றேன். நீங்கள் என்னிடம் இன்று வரை எதுவுமே கேட்டதில்லை. முதல் தடவையாக ஒரு தடவை என்னையும் எனது மகளையும் பார்க்க வேண்டும் என கேட்டீர்கள். எப்படியாவது நீங்கள் இருக்கும் காலத்தில் உங்களை பார்த்து விடுவோம் என்ற நம்பிக்கையிலேயே நான் வாழ்ந்து வந்தேன்.

...

ஒரு வாரத்துக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடுவதற்காக தேடி அழைத்தீர்கள். இரண்டு தடவை என்னை கூப்பிட்டு விட்டு பெரிதாக கத்தி அழுதீர்கள். நான் எவ்வளவோ சொல்லியும் நீங்கள் அழுகையை நிறுத்தவே இல்லை.  எப்பவுமே யாருக்காகவும் ,எதற்காகவும் விட்டுக் கொடுக்காத தனித்துவமான திமிர் ஒன்று உங்களிடம் இருக்கும்.


 அன்று அந்த திமிர் உங்களிடம் இல்லவே இல்லை .குழந்தை மாதிரி உடைந்து போய் எப்படியாவது எங்களைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு நீங்கள் அழுதீர்கள். முதல் தடவையாக உங்களுக்காக நான் அன்று அழுதேன். அன்றே நான் உடைந்து போய் விட்டேன் .அதுதான் நீங்கள் என்னோடு கடைசியாக பேசிய வார்த்தைகள் 

.....

14 வயத்தில் இருந்து இன்று வரை நிறையவே கஷ்டத்தை நான் உங்களுக்கு தந்திருக்கிறேன்.

1996ம் ஆண்டு என்னை பார்ப்பதற்காக வன்னிக்கு வந்து திரும்ப சொந்த ஊருக்கு போகாமல் வன்னியிலையே தங்கிஇருந்து எனக்காக நீங்கள் பட்ட கஷ்டம் ஏராளம். 

2009ம் ஆண்டு காலப்பகுதியில் எவ்வளவோ கெஞ்சினேன் நீங்களும் அம்மாவும் கப்பலில் போய்விடுங்கள் என்று, (அதற்கான அனுமதியையும் கையில் வைத்துக் கொண்டு) ஆனால் நீங்கள் கேட்கவே இல்லை.

 என்ன ஆனாலும் சரி  என்னை விட்டுட்டு போக கூடாது என்பதில் முடிவாக இருந்தீர்கள். 


உங்களுக்கு அப்போது ஒரு கால் இயலாது. காலை இழுத்து இழுத்துத் தான் நடப்பீர்கள். யுத்தம் மொளவுனிக்கும் அந்த நாள் வரை எனக்காக நீங்களும் அம்மாவும் பட்ட கஷ்டம் ஏராளம்.  அவற்றை வார்த்தைகளால் சொல்வது மிகவும் சிரமம். அன்று அந்த கடும் யுத்த காலங்களில் என்னுடைய மகளை அவ்வளவு அழகாக வளர்த்து தந்தீர்கள்


. ஒரு தடவை கூட அம்மாவும், நீங்களும் என்னுடைய இலட்சிய பயணத்தை விட்டுட்டு வரும்படி கேட்டதே இல்லை. கடைசி கணம் வரை அத்தனை கஷ்டத்தையும் தாங்கி எனக்கு துணையாக நின்று என் இலட்சிய பயணத்துக்கு உரம் சேர்த்தீர்கள். கடைசி நாள் வரை நான் பணி செய்வதற்கு எனக்கு உறுதுணையாக இருந்து எனது குழந்தையை நன்றாக பார்த்தீர்கள்.


 என்னை பாதுகாப்பாக எமது நாட்டை விட்டு அனுப்பி வைக்கும் வரை அம்மாவோடு இணைந்து நீங்கள் பட்ட கஷ்டம் ஒன்று இரண்டு ,அல்ல

அது மட்டுமின்றி எனது கணவர் தடுப்பு முகாமில் இருந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்ட கிளப்புக்கு ஒவ்வொரு வாரமும் சென்று அவரை பார்வையிட்டு இரண்டரை வருடங்களாக அவரை தடுப்பு முகாமில் இருந்து எடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் வரை நீங்களும் அம்மாவும் சரியாக தூங்கியது கூட இல்லை. 


இயலாத காலுடன் நீங்கள் பட்ட கஷ்டத்தை நான் எப்பவுமே மறந்ததே இல்லை. 

எல்லாமே இழந்து நடைப்பிணமாக நான் நின்ற போது பெரும்பலமாக எனக்கு ஆறுதலாக இருந்தீர்கள் .

புலம்பெயர் தேசத்துக்கு நான் வந்த பின்பு கூட உங்களுக்கு சின்னதாக கூட ஏதும் செய்ய வேண்டும் என்று நினைத்ததே இல்லை.  அதன் பின்பும் எனது லட்சியம், அந்த இலட்சிய பயணத்தில் என்னோடு கூட நின்ற நண்பர்கள், அவர்களுடைய தேவைகள், என சிந்தித்தேனே தவிர உங்களுக்கு என்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை.



 எல்லாமே செய்யக்கூடிய சூழல் இருந்தும் நான் உங்களுக்காக எதுவும் செய்யவில்லை என்பது எனக்கு பெரும் வலியாக உள்ளது.

இன்று நீங்கள் எங்களோடு இல்லை.  ஆனால் என் மனம் ஆறவே இல்லை. இழப்புகளின் வலிகளோடு வாழ்ந்து கொண்டிருப்பவள் நான். 

என்னோடு பயணித்வர்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியாத கையால் ஆகாதவளாய் தவித்திருந்த வேளையில் இன்று உங்கள் இழப்பு எனக்கு மேலும் வலிகளை கூட்டி என்னை பரிதவிக்க வைக்கிறது. வெந்தணலில் விழுந்த புழுவாய் துடிக்கின்றேன்..


..

 உங்கள் ஆசையை நிறைவேற்ற முடியாத ஒரு மகளாய்....

 உங்களுக்கு செய்ய வேண்டிய எந்த கடமைகளையும் செய்யாத  ஒரு மகளாக இன்று நான் நிற்கிறேன். .....

என் உடம்பில் உயிர் இருக்கும் வரை இந்த வலி எனக்குள் இருக்கும் .


மறு பிறப்பொன்று எனக்கு இருந்தால் மீண்டும் உங்கள் மடியில்  பிறக்கும் வரம் கிடைத்தால்..... நான் வேண்டிய கடன் பணிகள் செய்து தீர்த்திட தருணம் கண்டுவிடுவேன்....

இனி தினம் தினம் கைதொழழுது உங்கள் ஆத்மா  சாந்திக்காக வழிதொழுவேன்...

இனி நான் இரு கரம் கூப்பி கைதொழும் தெய்வம்  நீங்கள் ....


 . உங்கள் மகள்

வகி( கலைவிழி)

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?