முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 107

 எமது தேசியத்தலைவர் ஒரு தளபதியை தெரிவு செய்வதற்கு அவர்களிடம் எதிர் பாக்கும் சில குணங்கள்…….!!! 01. தன்னைப்போல் தான் மற்றைய போராளிகளையும் பார்க்க வேண்டும். 02. சட்டம் என்றால் எல்லோருக்கும் அது ஒன்றாக இருக்க வேண்டும். 03. சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கள் தளபதியாக இருக்கும் இடத்தில் வைத்திருக்க கூடாது. 04. நான் தளபதி என்ற ஆதிக்கம் இருக்க கூடாது. மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் என்ற என்னம் இருக்க கூடாது. 05. தன் உயிரை விட தன்னை நம்பி வந்த போராளிகளின் உயிர் முக்கியம் என்ற என்னத்துடன் செயற்பட வேண்டும். 06. தான் எடுப்பது தான் முடிவு என்று செயற்படக்கூடாது மற்றைய போராளிகளின் ஆலோசனை கேட்டு செயற்பட வேண்டும். 07. ஒரு தாக்குதலுக்கு தாயாரானால் ஒரு தடவை அல்ல பத்து தடவைகள் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். 08. சொந்த மக்களை தங்கள் உயிர்களை விட மேலாக நினைக்க வேண்டும். 09. தாயக மண்ணை மீட்பதே எப்போதும் குறியாக இருக்க வேண்டும். நான் அறிந்த தளபதிகள் இப்படியான குணங்களிலே இருந்தார்கள் அதனால் தான் நான் நினைக்கின்றேன் அவர்களை எம் தலைவர் தளபதிகளாக வைத்திருந்திருக்கின்றார் என்று. யாழ்காந் தமிழீழம்.

TAMIL Eelam news 106

 கப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி.!24ம்ஆண்டு நினைவு நாள்- ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல நொருங்கி தமிழர்கள் தம் சொந்த கால்களில் நின்றே விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் கோட்பாடுகள் புலப்படத் தொடங்கிய நேரம் அவ்வேளையில் எமது விடுதலை இயக்கத்தின் பிரெஞ்சுப் பணியகம் விடுதலை மாலை என்னும் உணர்வுமிக்க கலைநிகழ்வை மக்கள் மத்தியில் அரங்கேற்றியது. அந்த விடுதலை விழாவில் மக்களின் சமகால கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்வாங்கி இலக்கியம் என்பது நிகழ்வுகளின் பிரதிபலிப்பு என்ற கோட்பாட்டுடன் மேடையேறியது. இவனா நண்பன் என்ற மண் மணம் சுமந்த நாட்டுக்கூத்து. இதில் எம்மேடைகளுக்கு முற்றிலும் புதிதான இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். இவர்களுள் ஒருவனாக உள்வந்த ஒரு கவிஞன் அன்று முதல் தன்னை தன் தேசத்தின் விடுதலைச் செயற்பாட்டுடன் இணைத்துக் கொண்டான். ஆம் நாம் எமது இயக்கம் கவிஞனாகவே கயனை இயக்கத்துக்குள் உள்வாங்கியது.

TAMIL Eelam news 105

 லெப்கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன். 24ம் ஆண்டு நினைவு நாள் தூணாக விளங்கிய ஒரு மாவீரன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற ஒரு போராளி. புலம் பெயர் தமிழர் வாழும் பரப்பெங்கும் இயக்கத்தின் செயல்பாடுகளை பரப்பலாக்கி விடுதலைப் போரின் அடிப்படைத் தேவைகளுக்கு தோள் கொடுத்த மாவீரன். 12 ஆண்டுகள் இயக்கத்தின் கால்களாக நின்று ஓடி ஓடி உழைத்த மாவீரன் நாதன். யாழ்ப்பாணம் அரியாலையில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவன். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த நாதன் சிங்கள அரச பயங்கரவாத புயல் எம் தேசத்தை சூறையாடிய போது தாயாலும் சகோரராலும் பிரான்சுக்கு அனுப்பப்பட்டவன். அரச பயங்கரவாத புயல் தமிழர் மண்ணில் விதைத்து விட்ட விடுதலை தாகம் நமது நாதன் உயிரிருப்பை பாதித்து விடக்கூடாது என்பதற்காகவே அல்லது தம் கடைக்குட்டி எங்காவது தப்பிப்பிழைத்து உயிரோடு நிம்மதியாக வாழட்டும் என்ற பேராசையினாலோ அந்தத் தாய் தன் மகனை புலம் பெயர வைத்தாள். பிரான்ஸ் நாதனுக்கு நிம்மதியைத் தரவில்லை. தன் இருப்பின் ஆணிவேர்களை மறந்து விட, மறுத்து விட அவன் தயாராக இல்லை. அகதி வாழ்க்கை, அது தந்த அவலம் சமுதாயத்

TAMIL Eelam news 104

 செம்மலைக் கிராமம்; இருளகற்றி விடிந்து கிடந்தது.1984ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் அங்கே கூடியிருந்த சில இளைஞர்கள் மட்டும்; சுறுசுறுப்பாக அதேநேரம்; பதை பதைப்பாக நின்றனர். விடுதலைப் போராளிகளாகத் தம்மை இணைத்திருந்த அந்த இளைஞர்கள்; இராணுவப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாடு நோக்கிய பயணத்திற்குத் தயாராகி நின்றனர். லெப்.காண்டீபன் தலைமையில் அவர்கள் புறப்பட வேண்டும். செம்மலையிலிருந்து புறப்படும் அவர்கள்; கடற்கரையை அடைந்து அங்கிருந்து வண்டியெடுத்து தமிழ்நாட்டைச் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டைச் சென்றடையும் அவர்கள்; அங்கு நிறுவியிருக்கும் பயிற்சி முகாமில்; தமக்கான இராணுவப் பயிற்சி முடித்து விடுதலை வீரர்களாக வெளியேறுவர். நம்பிக்கையோடு தொடங்கிய பயணம்;; இறுதிவரை நல்லபடியாக முடிய வேண்டும். உழவுப் பொறியொன்றில் எல்லோரும் ஏறினர்; மகிழ்ச்சியோடு அந்தச் செம்மண் வீதிகளைக் கடந்து விரைந்து கொண்டிருந்தனர்; தமது விடுதலைக்கான பயணத்தில். செம்மலையைத் தாண்டி ஒதியமலைக்குக் கிட்டவாக் உழவுப்பொறி விரைந்து கொண்டிருக்க அந்த விடிகாலையை பயங்கரமாக்கி; நடந்தேறியது அந்தத் துயரம். பற்றைக்காடுகளுக்குள் மறைந்து கிடந்த சிங்களப் பேய்கள

TAMIL Eelam news103

 ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர் நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றி காலந்தோறும் தன் புகழைப் பன்மடங்காகப் பெருக்கும் ‘சே’யின் மறைவின் நினைவினை உலகம் அண்மையில் தான் மலர்த்தி முடித்திருந்தது. இவ்வேளையில் இப்பொழுது இன்னொரு பலியெடுப்பு. இன்னொரு கொடுங்கோன்மை அரசால் பொலிவியாவின் வலே கிரான்ட் பகுதியில் இருந்து தமிழீழத்தின் கிளிநொச்சி வரை நீளுகின்ற பலியெடுப்புக்கள ிவை. ஆனால் ஒரு உயரிய போராளிக்குக் கிடைக்கக்கூடிய ஆகக்கூடிய மதிப்பு எதிரியால் கொல்லப்படுவதுதான். அத்தகைய போராளியான பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் வாழ்வும், வரலாறும் பிறருக்காக உழைத்து அவருக்காகவே மகிழ்வோடு மடிந்த வரலாற்று மனிதர்களின் வரலாற்றுத் தடங்களோடு இணைந்துவிட்டது. சர்வதேச ரீதியிலான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான குறியீடாக இன்று ‘சே’ பார்க்கப்படுகின்றார். தமிழின எழுச்சியின் வெளிப்பாடாக இன்று தமிழ்ச்செல்வன் கணிக்கப்படுகின்றார். இப்படிப்பட

TAMIL Eelam news 102

  மணலாறு காட்டிடை மேவிய தளபதி பிரிகேடியர் சொர்ணம் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்கிகள் எதிரியின் வரவை எதிர்பார்த்து விழித்திருந்தன. சோதியா படையணி போராளிகள் மட்டுமல்லாது மணலாறு கட்டளைப்பணியக போராளிகள், தலைமைச் செயலக “மணாளன்” சிறப்பு தாக்குதலணி மற்றும் பூநகரி படையணி போராளிகள், எல்லைப்படை மற்றும் காவல்துறைப் படையணி என பல படையணி போராளிகளை உள்ளடக்கிய போராளிகளணி. இதன் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் பணியாற்றினார். வான் நிலாவின் அழகை ரசித்தபடி சுடுகலன்களை தயாராக வைத்து காத்திருக்கிறது அந்த அணி. அதில் பல புதிய போராளிகள் இருந்தாலும், அவர்கள் விசுவா

TAMIL Eelam news 101

 புலிகள் மீதான தடை நீக்கம்: நடந்தது என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று சொல்லித் தடை செய்துள்ள அரசுகளில் பிரிட்டனும் ஒன்று. இந்தியாவில் போலவே பிரிட்டனிலும் இந்தத் தடையை அவ்வப்போது நீட்டிப்பது அரசின் வாடிக்கையாக இருந்து வந்தது. இப்படிக் கண்ணை மூடிக்கொண்டு தடையைக் காலவரையின்றி நீட்டிச் செல்வதை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ’தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையத்தில்’ முறையீடு செய்தது. நாகதஅ செய்த மேல்முறையீடு சென்ற சூலை 31ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளை பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்கும்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியது.ஓர் அமைப்பு நிகழ்நடப்பில் (பயங்கரவாதச் சட்டம், 2000 தந்துள்ள வரைவிலக்கணப்படி) “’பயங்கரவாதத்தில்’ தொடர்புடையது” என்று உள்துறைச் செயலர்”நியாயமாக நம்பினால்” மட்டுமே அந்த அமைப்பைத் தடைசெய்ய முடியும். ஆனால் தடைக்கான சட்டச் சோதனை தொடர்ந்து நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலை அரசினர் மீளாய்வு செய்வதற்கு எவ்விதப் பொறிமுறையும் இல்லை. அதாவத

TAMIL Eelam news 100

 தமிழ் மன்னன் எல்லாளன் பற்றிய வீர வரலாறு.  எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின் படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஆவான். இவன் “பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்” சேர்ந்தவன் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் க

TAMIL Eelam news 99

 கணபதிபிள்ளை. கணேசன் 64 கல்லாற்றில் பொடியாக மீட்ப்பு சிறிலங்கா புலனாய் வாழர்களின் திட்டமிட்ட இனச்சுத்தகரிப்பாகயிருக்கலாம் என தமிழர்கள் கொதிப்பு? மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு கல்லாற்றில் மிகவும் செல்வந்தராக வாழ்ந்தவரும் ஆத்தியடி கடை முதலாளி என மக்களால் பேர் சூட்டப்ட்ட இவ் முதலாளி மிகவும் செல்வந்தராக கருதப்பட்டவர் ஆவார். கணபதிபிள்ளை. கணேசன் 4 பெண்பிள்ளைகளிற்குத் தகப்பன் எனவும் மனைவியோடு மிகவும் அன்பான இவர் தனது பிள்ளைகளைப் படிப்பிப்பதிலும் மிகவும் முன்னுதாரனமாக மக்களால் கருதப்பட்டவர் ஆவார். 18/10/20 அன்று பிற்பகள் 7 மணிக்கு ஒரு நபரை சந்திக்க வேண்டும் என சொல்லி வெளியே சென்ற திரு கணேசன் அவர்கள் அன்று இரவு வீடு திரும்பவில்லை. 19/10/20 அன்று காலை 9 மணிக்கு ஊரவர்கள் சொன்ன தகவலிற்கு அமைவாக கல்லாற்றில் ஆற்றம் கரையில் அவரின் உடல் மீட்க்குப் பட்டது. சிலர் கூறுகின்றார்கள் பலர் சேர்ந்து தண்ணீருக்குள் தாட்டு கொலை செய்து இருக்கலாம் எனவும் சிலர் குறிப்பிடும்போது தண்ணீருக்குள் தள்ளிவிடப்பட்டு கொலை செய்துயிருக்கலாம் என பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எற்பட்டாலும். கொலைகள் திட்டமிட்டே நடைபெறுவது என

TAMIL Eelam news 98

 யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!  18th October 2020 இலங்கைச் செய்திகள்  யாழ்ப்பாணம்- புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 62 வயது மதிக்கத்தக்க முதியவரே படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற மர்மக் கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TAMIL Eelam news 97

 மாவீரர் ஆனவர்கள் சாதாரணமாக வாழ்ந்தா இப்பெயரை எடுத்தார்கள் கடினமான பய்யிட்சி கடினமான கட்டுப்பாடு கடினமான உளைப்பு இவற்றின்னூடாக பெற்ற பெயர்தான் மாவீரர்நாள். மாவீரர் ஆகாமல் ஒழுக்க கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் இடையில் கலைக்கப்பட்ட அல்லது பிளையென தெரிந்தமையால் தங்களைத் தாங்களே அழித்த சில சம்பவங்களை எதிர்காலச்சந்ததியினர் அறியவேண்டும் என்பதற்காக எழுதுவதற்குக் கடமைப்பட்டுள்ளேன். 1993 அப்பொழுது வலிகாமத்தில் உள்ள நந்தாவில் அம்மன் கோயில்அருகாமையில் எமது பாசறை இருந்தது. ஒருநாள் காலை 6.மணியிருக்கும் மன்னார் மாவட்டத்தை சேர்த்த ஒரு போராளி வலசலம் உள்ளே இருக்கின்றார். நானும் சொர்ணம் அண்ணைய்யும் அவர் வெளியே வர மட்டும் தாமதித்த வண்ணம் இருக்கின்றோம் அவர் வெளியே வந்ததும் நான் சொர்ணம் அண்ணைய்யை உள்ளே போகுமாறு சொல்லுகின்றேன் ஏனெனில் நான் முதலில் வந்த நான் என்றாலும் என்னை விட அவர் வயசில் மூத்தவர் அதைவிட எனது பொறுப்பாளரும் அவர் தான் அதானால் அவரிக்கு நான் முன்னுமை வளங்குகின்றேன். அவர் வெளியே வந்ததும் சொர்ணம் அண்ணைய் அவர் கையை முகர்ந்து பார்க்கின்றார்.அவரின் கையில் கடுமையான சுருட்டு மணம் என்னையும் முகர்ந்து பா

TAMIL Eelam news 96

 தலைவரிடத்தில் நான் கண்ட சிறப்புகள் எனது பார்வையில் தலைவர்.!! -ஈழத்துரோணர்  தலைவர் பிரபாகரனின் தமிழின எழுச்சி ஆரம்பிக்கும்வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை, பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள். ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள், புலிகளென்றால் அது மிகையாகாது. முகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு, ‘தமிழன்’ என்று கூறிப்பாருங்கள், உடனே அவர்களிடமிருந்து வரும் வார்த்தை “நீ தமிழ்ப் புலியா” எனப் புன்னகையுடன் வெளிவரும்.! தமிழ்மொழியை, தாய்மொழியாக் கொண்டவர்களுக்கு புலிகளே இன்று அடையாளம். இங்கேதான் புலி எதிர்ப்பாளர்கள் வெளிவருகின்றனர். பிரபாகரன் என்னும் தாரகமந்திரம், தமிழரை ஒன்றிணைப்பதை, தமிழர் விரோத சக்திகள் விரும்புவதில்லை. இப்போது, உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் ஒரே சொல்லாக தலைவர் பிரபாகரனே இருக்கின்ற

TAMIL Eelam news 95

 வவுனியாவில் இலங்கை புலனாய்வாளர்களால் மூவருக்கு கொடூரமாக வாள்வெட்டு இருபர் அவ்விடத்திலே மரணம் ஒருவர் இயற்கையின் கருனையால் உயிர்தப்பியுள்ளார். மேலும் தெரியவருவதாவது வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சுமார் 10த்திற்கு மேற்பட்ட சிங்களக்காடையர்கள் சென்றுள்ளனர். போனதும் மூபரிற்கும் சரமாரியாக வாள்வெட்டு விழுந்தன இருபர் அவ்விடத்திலே கொல்லப்பட்டனர். ஒருபர் செத்துவிட்டார் என அவர்கள் நம்பி சென்றபோதிலும் அவர் உயர் தப்பி மருத்துவமனை அனுபப்பட்டுள்ளார் புலனாய்வாளர்கள் இதில் சம்மந்தப்பட்தால் காயப்பட்டவர் எந்தத்தகவலும் வெளியே   வந்தால் நீரும் கொல்லப்படுவாய் என கடுமையாகப்பயமுறுத்தப்பட்டுள்ளார். காயம் அடைந்தவர் சுப்பிரமணியம் சிவகரன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் உள்ளார். மாணிக்கர்வளவு கிராமத்தின் அபிவிருத்தித் தலைவர் குகதாசன் 40 எனும் 4 பிள்ளைகளின் தந்தை கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு.மகேந்திரன் வயது 34 என்பர்கள் இருபரும் அவ்யிடத்திலே சடலமாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்னர் இனப்படுகொலை தொடர்கதையாகவே உள்ளது புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தமிழ்

TAMIL Eelam news 94

 மட்டக்களப்பில் சிறிலங்கா புலனாய்வாளர்கள் கட்டகாசம் விலை உயர்ந்த தாலி மற்றும் நகை பணம் என்பன கொள்ளை கணவன் கட்டிவைப்பு? மேலும் தெரியவருவதாவது15/10/ 20 அன்று இரவு 12 மணியளவில் மட்டக்களப்பில் உள்ள இத்துளிற்கு அண்மையில் உள்ள மாவலியாற்றில் உள்ள துரை 35  என்பவரின் வீட்டிற்குள் நுளைந்த 4 பேர் கொண்ட குழுவினர் துரை என்பவரை மரத்தில் கட்டிவைத்து விட்டு மணம் நகைகளை வெளியே எடுக்குமாறு சொல்லி கடுமையாக தடியால் தாக்கியுள்ளனர். பின்னர் கணவனை கொலை செய்யப்போகின்றார்கள் என பயந்த மனைவி தனது தாலி மற்றும் நகை பணம் என்பன அனைத்தையும் கொடுத்துள்ளார் அனைத்தையும் எடுத்துவிட்டு புலனாய்வாளர்கள் தலைமறைவாகியுள்னர். அக்கிராமத்தில் துரை என்பவர் மிகவும் திறமையானவர் எனவும் தோட்டம் செய்வதில் தனது திறமையைக் காட்டி உளைப்பதோடு மட்டும் அல்லாமல் சுமார்25ஐந்து லக்சம் பெறுமதியான கன்டர்ரக வாகனம் இவரிடம் சொந்தமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் ஐக்கி காடுகளின் படைகளின் உதவியை கோருவதைத் தவிர வேறு வளியில்லை என்பதை ஈழத்தில் உள்ளவர்களும் புலத்தில் உள்ளவர்களும் விளங்கிச் செயல்ப்படு

TAMIL Eelam news 93

 ஓர் குடும்ப விருட்சமதிலிருந்து விடுதலைக்காய் ஓர் குடும்ப விருட்சமதிலிருந்து விடுதலைக்காய் உதிர்ந்த தாழையடி மைந்தர்கள்…. தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ஆகிய உடன்பிறப்புக்களில் முதலாவதாக 19.10.1998 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட லெப்டினன்ட் இன்பமுதன் அவர்களின் 21ம் ஆண்டு வீரவணக்கநாள் -16.10.2019 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாவீரர்கள் கணிசமானோர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட குடும்பங்கள் மிகச் சிறிய எண்ணிக்கையே. இவர்களில் வடமராட்சி கிழக்கு தாழையடி, ஆழியவளைச் சேர்ந்த லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்) மற்றும் கப்டன் வளவன் ஆகியோரின் குடும்பமும் அடங்கும் இவ் உடன்பிறப்புக்கள் மூவரும் ஓராண்டிற்குள்ளாகவே தாயக விடுதலைக்கான கடமையின்போது தம்மை ஆகுதியாக்கிக் கொண்டுள்ளனர். ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் வன்னி பெருநிலப்பரப்பை சிறிலங்கா படைகளில் வல்வளைப்பிற்குள் செல்லாது தடுப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தவேளை 19.10.1998 அன்று சிறி

TAMIL Eelam news 92

 தமிழீழத் தேசிய மாவீரர் நாள்…! மாவீரர் என்றால யாரென்று ஒவ்வொரு ஈழத்தமிழ் ஆண், பெண், சிறுவர், சிறுமிக்கும் தெரிந்த விடயம். தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். இவர்கள் வீரத்தின் இலக்கணமாக திகழ்கின்றனர். எதிரியை அழித்தவர்கள். அஞ்சாது எதிரியின் பாசறைமேல் படையெடுத்து வெற்றி கண்டவர்கள். உலகவரலாற்றில் எமது மாவீரர்களுக்கு நிகரானவர்கள் வேறு யாருமில்லை. ஆணும் பெண்ணுமாகப் பால் வேறுபாடின்றிப் போரிட்டுச் சாதனை படைத்த மாவீரர்களைத் தமிழீழம் தவிர்ந்த பிறநாட்டில் காண்பது அரிது. கொடியது அகல, விடுதலை கிடைத்திட உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்த மாவீரர்கள் வணக்கத்துக்குரியவர்கள். தமிழீழ மண்ணெங்கும் நினைவுச்சின்னங்களாய், சிலைகளாய், துயிலுமில்லமாக மாவீரர்கள் குடிக்கொண்டுள்ளனர். அவர்கள் ஈழமண்ணின் விதையாகவும், ஒளிமயமான சுடர் ஒளியாகவும், எம் இனத்தின் பாதுகாப்பு அரணாகவும் இடம் பெறுகின்றனர். எமது தேசமெங்கும் சர்வவியாபியாகி மாவீரர் நிற்கின்றனர். புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமான மாவீரர்கள் வானளாவிக் கால, நேர, இடம், தூர எல்லைகளைக் கடந்து எமது உணர்வோடும் கனவோடும் கலந்துவி

TAMIL Eelam news 91

  1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு இரானுவமுகாம் தாக்குதல் . தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய – கடல் – வெளிச் சமர்.” இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார். இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன்றும் நடைபெற்றது.13.07.1991 அன்றைய தாக்குதலில் மேஜர் கேசரி அவர்களும் உதவியாக கப்டன் டக்ளஸ் அவர்களும் ஓட்டிச் சென்ற கனரக வாகனம் மீது இராணுவச் சிப்பாய் வாகனத்தில் ஏறி குண்டைப் போட்டு வெடிக்கவைத்ததால் அன்றைய முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இரண்டாவது தென்மராட்சிப் பக்கமாக அதாவது தடைமுகாமை கைப்பற்ற இச் சமரை தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வழிநாடாத்த உள் நடவடிக்கையை தளபதி குணா அவர்கள் வழிநடாத்தினார்.இந் நடவடிக்கை முறையே 11.07 1991அன்றும் இரண்டாவதாக 27.07 1991 அன்றும் நடைபெற்றது.இவ் இராணுவ முகாம் தாக்குதல்களும்.வெ