முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 90

 தலைவனைக் காட்டிக் கொடுத்து தமிழீழத்தின் தலைவனாக நினைத்த கருணா கிழக்கு மாகாணத்தின் மூத்த போராளி ரம்போ பிரசாத் மட்டக்களப்பு ஆரையம்பதி யின் மூத்த போராளியும் கிழக்கு மாகாண தளபதி ஆக வர வேண்டியவரும் துரோகத்தால் வீழ்த்தப்பட்வரும் ஆகிய மாவீரன் ராம்போ பிரசாத் தேசிய தலைவருடன் வன்னியில் எடுக்கபட்ட அரிய படங்களை தமிழீழ விடுதலைபுலிகளின் ஆவண பகுதி எமக்கு அனுப்பி வைத்துள்ளது இதனை நாம் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடுகின்றோம். தன்னை விட திறமையான போராளிகளை கீழுக்கு தள்ளியும் கொலை செய்தும் எடுத்த பதவி தான் கேணல் கருநாய் ..அதன் பின்பு ஆட்டை கடித்து மாட்டை கடித்து ராம்போ பிரசாத் ஐ கடித்து நீலனையும் கடித்து இறுதியில் தலைவரையும் கடித்தது அந்த நரி ??அது எது என்று மக்களுக்கு தெரியும் இந்த குள்ளநரி அன்று அமைச்சராக இருந்து இன்று சொறிநாயாக வீதி எங்கும் திரியுது. பல்லாயிரம் மாவீரர்களின் இரத்தத்தால் உண்டாக்கப்பட விடுதலை போரை நாசம் செய்த அந்த குள்ள நரி இன்று கூறுகிறது மாற்றத்தை ஏற்படுத்தினாராம்?அன்று கூறியது எதோ 30 பதவியாம் அதில் மட்டக்களப்புக்கு இல்லையாம் ??வாயை திறந்தாலே பொய் ?? ஒரு இனத்தின் துரோகிகள் அதன் எதிரி இ

TAMIL Eelam news 89

 இரண்டு தசாப்த நிறைவில் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்.! விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம். வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டிய இடம் அது. பலருக்கு இதுவே முதற்களம். இது பெண் போராளிகளின் பகுதி என இராணுவத்தால் இனங்காணப்பட்ட இடங்களிலே ஓயாமல் முன்னேறுவதும் தொந்தரவுத் தாக்குதலும் தான். இத்தகைய தொடர் சம்பவங்களால் சோர்வடையாமல் பெண் போராளிகளுக்குத் தெம்பூட்டியது, தலைவர் அவர்கள் சொல்லிவிடுகின்ற நம்பிக்கையான வார்த்தைகளும் உத்திகளும் தான். 1990ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பாரிய முன்னேற்ற முயற்சியொன்றை படையினர் மேற்கொண்டனர்.

TAMIL Eelam news 88

 பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே! மன்னார் ஆட்காட்டி வெளிதனிற் பிறந்து மாலதி யென்னும் பெயர்’தனைத் தாங்கித் தன்னிக ரில்லாத் தமிழிச்சி தானெனத் தனையே ஈந்தாள்! தமிழீழத் தாயவள் இன்னல் களைந்திட எடுத்தடி வைத்தாள்! ஈடிலா மகளிர் அமைப்பினில் இணைந்து பன்னுதற் கரியபல தாக்குதல் புரிந்தே பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே! குறும்புத் தனங்கள் குறைவின்றி ஆற்றும் கொஞ்சும் கிளியாய்க் குலவி நின்றவள் நிறுவிடத் துடித்தனள் தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பினை ஏந்தி நின்றனள்! இறக்கும் போதிலும் ஆயுதங்கள் தம்மை இன்னுயிர் அமைப்பிடம் கொடுத்து மறைந்தனள்! மறக்க வியலா முதற்பெண் புலியாய் மாவீரர் பெயர்களில் மாண்புற இணைந்தவள்! அண்ணன் தன்னிடம் ஐயமறக் கற்ற ஆயுதப் பயிற்சியில் உயரத் திளைத்து எண்பத் தேழில் ஐப்பசித் திங்கள் இந்திய இராணுவம் முற்றுகை யிடவே கண்ணெனத் துமுக்கியைக் கைதனில் ஏந்திக் களத்தினில் இறங்கிக் கயவர் தம்மைப் பெண்ணெனும் தெய்வம் புலியாய்ப் பாய்ந்து பெரிதாய் வீழ்த்தினள் பெரும்படை தனையே! தமிழீழத் தேசிய விடுதலைப்போ ராட்டத்தின் தக்கவே முதுகெலும் பெனவே விளங்கும் அமிழ்தெனத் திகழும் ஆன்றநல் அரிவையர் அவர்தம் தியாகம

TAMIL Eelam news 87

 10/10 1987 நாவக்குளியில் இருந்து முன்னேறிய இந்தியா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது தனது தொண்டையிலே பலமான காயம் ஏற்பட்டு மூச்சு தினறிய நிலையிலும் எனது ஆயுதத்தை அண்னையிடம் கொடுங்கோ என சொல்லியபின் சைனட் அருந்தி வீரச்சாவு அடைத்தார் 2ம் லெப் மாலதி அவர்கள். அவர்களின் 33வது நிலைவு நாளும் தமிழிழ பெண்கள் எழுச்சி நாளும் 10/10/20 அன்று பிற்பகல் 5ந்துமணியளவில் அவுஸ்திரேலியாவில் உள்ள brisbane என்ற இடத்தில்TCC இனரின் ஏற்ப்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அவரின் நினைவு நிகழ்வு  சுமார் 30 புலம்பெயர் தமிழ் உறவுகள் கலந்து அவரின் திருஉருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இவ் நிகழ்வை பெண்களே தலைமை தாங்கி நடாத்தி தங்களின் உணர்வை வெளிப்படுத்தினார்கள். கீழே அவர்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.                                                                      நன்றி K. NIMAL

TAMIL Eelam news 86

 தாண்டிக்குளம், நொச்சிமோட்டை தாக்குதல்…இளைய தலைமுறையினர் பாற்பதற்காக மீழ் பிரசூரம் செய்யப்பட்டுள்ளது. புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம், நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது. ஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்தது. சண்டைகளுக்குத் தேவையான வெடிபொருட்களும், மருத்துவ சாமான்களும் இந்தப்பகுதியிலேயே களஞ்சியப்படுத்தபப்ட்டிருந்த ஆட்லறி குண்டுகள், மோட்டார் எறிகணைகள், யுத்த ராங்கி குண்டுகள் என்பன ஐயசிக்குறுய் பூதத்தின் பிரதான உணவுகளாக இருந்

tamil Eelam news 85

  14ம் ஆண்டு நினைவு வணக்கநாள்– 07.10.2020 “”விக்டர் விசேட கவச எதிர்ப்பு பிரிவுத்தளபதி”” லெப்கேணல் அக்பர் ( வீரபத்திரன்.பேரின்பராசா) கதிரவெளி. மட்டக்களப்பு 30.03.1973 — 07.10.2006 லெப்கேணல் விக்டர் விசேட கவசபடையணி எதிர்ப்பு பிரிவின் தளபதியும்,தமிழீழ தேசியத்துணைப்படையின் வடபோர்முனைத் தளபதியுமான லெப்கேணல் அக்பர் ( அக்பர் -1குறியீட்டுப்பெயர்) அவர்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எதிரியை அழிக்கும் பல தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்தியவர் . எதிரியின் கவசப்படையணியை உடைத்தெறியும் பணியில் பல சாதனைகள் படைத்தவர் . 07.10.2006 அன்று வடபோர்முனைப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் .!!! ★★★வட போர் முனை கட்டளைதொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலைய

TAMIL Eelam news 84

 லெப் கேணல் புலேந்திரனின் வீர வரலாற்று நினைவுகள்… லெப் கேணல் புலேந்திரனின் வீர வரலாற்று நினைவுகள்… மத்தியகுழு உறுப்பினர் – திருமலை மாவட்ட தளபதியாகப் பணியாற்றிய லெப் கேணல் புலேந்திரன் அவர்களின் விடுதலைப் பயணத்தின் போரியல் வரலாறு… அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தானே நம்பியிருக்கவேண்டும் என்ற உண்மையைக் கருப்பசாமி வாயிலாக அன்று இந்தியா உணர்த்தியது. பின்னர் அதே செய்தி உனது மரணம் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது உனது மரணம் தமிழீழத்தையே உலுக்கியது. மாபெரும் வரலாற்றுக் துரோகமல்லவா அது. தமிழீழ வரலாற்றில் உனது பெயர் அழியா இடத்தைப் பெற்றதல்லவா? முதன் முதன் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் (1981 இல் காங்கேசன்துறை வீதிச் சம்பவம் ) பங்கு பற்றியவர்களில் சீலன், ரஞ்சன் ஆகியோர் வீரச்சாவெய்திய பின் நீ தானே எஞ்சியி