முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 91

 

1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு இரானுவமுகாம் தாக்குதல் . தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய – கடல் – வெளிச் சமர்.”

இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.

முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.


இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன்றும் நடைபெற்றது.13.07.1991 அன்றைய தாக்குதலில் மேஜர் கேசரி அவர்களும் உதவியாக கப்டன் டக்ளஸ் அவர்களும் ஓட்டிச் சென்ற கனரக வாகனம் மீது இராணுவச் சிப்பாய் வாகனத்தில் ஏறி குண்டைப் போட்டு வெடிக்கவைத்ததால் அன்றைய முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

இரண்டாவது தென்மராட்சிப் பக்கமாக



அதாவது தடைமுகாமை கைப்பற்ற இச் சமரை தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வழிநாடாத்த உள் நடவடிக்கையை தளபதி குணா அவர்கள் வழிநடாத்தினார்.இந் நடவடிக்கை முறையே 11.07 1991அன்றும் இரண்டாவதாக 27.07 1991 அன்றும் நடைபெற்றது.இவ் இராணுவ முகாம் தாக்குதல்களும்.வெட்டவெளியேன்பதால் உழவு இயந்திரங்களுக்கு இரும்புத் தகட்டால் மூடப்பட்டு அதன் பின்னால் போராளிகள் சென்றே தாக்குதல் நடாத்தினார்கள் .இந்த தாக்குதல்களிலிருந்து பட்ட அனுபவங்களின்படி 27.07.1991 அன்றைய தாக்குதல் எமது காவலரணிலிருந்து எதிரியின் காவலரண்களுக்கு அண்மைவரை பதுங்கு குழிகள் வெட்டி அதனூடாக அணிகள் எழும்பி தாக்குதல் நடாத்திக்கொண்டு தடைமுகாமை கைப்பற்றுவதென்றும் .மற்றொரு நடவடிக்கை கனரக வாகனத்துக்கு இரும்புத் தகடு அடிக்கப்பட்டு அதனை காப்பாக பயன்படுத்தி போராளிகள் சென்று தடைமுகாமை கைப்பற்றுவதென்றும்.ஆனால் துரதிஸ்டவசமாக எதிரியின் தாக்குதலால் கனரக வாகனம் எதிரியின் காவலரனுக்கு அண்மையாக செயலிழந்தது.இக்கனரக வாகனத்தை
செலுத்திய தளபதி லெப் கேணல் சரா அவர்களும் உதவியாக சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் வீரச்சாவடைந்தனர்.இச் சமரின் இன்னுமொரு முயற்சியாக மேஜர் சொனி அவர்கள் தலமையிலான ஒரு அணியொன்று சின்ன உப்பளமூடாகச் சென்று இராணுவத்திற்க்கு பின்பக்கமாக தாக்குதல் நடாத்தி தடைமுகாமை கைப்பற்ற எடுத்தநடவடிக்கையும் பலனளிக்கவில்லை.இச் சமரின் உள் நடவடிக்கையை வழி நடாத்திய தளபதி குணா அவர்கள் விழுப்புண்ணைடைந்தார் .அவரை போராளிகள் பின்னுக்குக் கொண்டுவந்தார்கள்.ஆனால் அவரோ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து ஆனையிறவிலே நின்றார்.அதன் பின்னர் மூத்த தளபதி பொட்டு அவர்களால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இது மாதிரியான பலசம்பவங்கள் இச் சமரில் நடைபெற்றன.

மூன்றாவது வெற்றிலைக்கேனி கட்டைக்காடு கடற்கரை இவ்விடத்தில் கடற்படையால் தரையிறக்கலாமென எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் 14.07.1991 அன்று கடுமையான தாக்குதலுக்கும் மத்தியில் தரையிறக்கினான். இச் சமரை வழிநாடாத்திய தளபதி லெப். கேணல் சூட்டி அவர்கள் அன்றைய தினம் வீரச்சாவடைந்தார்.இருந்தும் சண்டை தொடர்ந்தது.முன்னேறிய இராணுவத்தை அதாவது வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்திவரை சங்கிலித்தொடராக நின்ற இராணுவத்தை 21.07.1991அன்று தளபதி சொர்ணம் தலைமையில் தகர்த்தெறிந்து நுழைதல் பாணியிலான ஒரு தாக்குதல் முள்ளியானில் மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதல் திட்டமானது இராணுவத்தை இரண்டாகப் பிரிப்பது ஆனால் இரண்டாகப் பிரிக்க முடியாவிட்டாலும் .பல இராணுவத்தை கொன்று ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.தொடர்ந்து முன்னேறிய படையினரை. கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடர்ச்சியாக தொடுத்தனர்.


கொம்படி வரை வந்த படையினர். கொம்படியிலிருந்து இயக்கச்சி சந்திக்கு வர முயற்சித்தபோது.தளபதி லெப். கேணல் ராஜன்.அவர்கள் தலமையிலான அணிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை எதிர்த்து கடுமையாக போரிட்டதால் படையினர் அம் முயற்சியை கைவிட்டு .அப்படியே கைவிட்டுவிட்டு வேறு பாதையால் முன்னேற்றத்தை தொடர அங்கும் எதிர்த் தாக்குதல் நடைபெற்றது. இச் சமர் பற்றி எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் ஆனால் போராளிகள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல கடற்கரை மணல் உப்பு வெட்டை காப்புகள் ஏதுமற்ற நிலை சுட்டெரிக்கும் வெயில் ஓய்வற்ற நித்திரையற்ற பொழுதுகள் உணவுகள் இருந்தும் உண்ணமுடியாத நிலை இவைகளுக்கும் மத்தியில் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை இவ் அா்ப்பணிப்பு மிக்க இச்சமர். இயக்கத்திற்க்கு பல முக்கியத்துவத்தை உணர்த்திய சமர். இச் சமர் பல படையணிகளின் தோற்றத்தை உருவாக்கிய பல துறைகளின் அவசியத்தை உணர்த்திய சமர் இலங்கையில் இரண்டு இராணுவம் உள்ளதை வெளி உலகுக்கு உணர்த்திய இச் சமர்களை ஒருங்கிணைத்து செவ்வனவே புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் மூத்த தளபதியுமான ச. பொட்டு அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார். ஒரு மாதமாக நடைபெற்ற இவ் இராணுவ நடவடிக்கையில் அறுநூற்றி மூன்று போராளிகள வீரச்சாவடைந்தனர்.






“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

மீள்நினைவுகளுடன் அலையரசி.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?