முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 106

 கப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி.!24ம்ஆண்டு நினைவு நாள்-

ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல நொருங்கி தமிழர்கள் தம் சொந்த கால்களில் நின்றே விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் கோட்பாடுகள் புலப்படத் தொடங்கிய நேரம் அவ்வேளையில் எமது விடுதலை இயக்கத்தின் பிரெஞ்சுப் பணியகம் விடுதலை மாலை என்னும் உணர்வுமிக்க கலைநிகழ்வை மக்கள் மத்தியில் அரங்கேற்றியது.


அந்த விடுதலை விழாவில் மக்களின் சமகால கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்வாங்கி இலக்கியம் என்பது நிகழ்வுகளின் பிரதிபலிப்பு என்ற கோட்பாட்டுடன் மேடையேறியது. இவனா நண்பன் என்ற மண் மணம் சுமந்த நாட்டுக்கூத்து. இதில் எம்மேடைகளுக்கு முற்றிலும் புதிதான இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். இவர்களுள் ஒருவனாக உள்வந்த ஒரு கவிஞன் அன்று முதல் தன்னை தன் தேசத்தின் விடுதலைச் செயற்பாட்டுடன் இணைத்துக் கொண்டான்.


ஆம் நாம் எமது இயக்கம் கவிஞனாகவே கயனை இயக்கத்துக்குள் உள்வாங்கியது. இலக்கியச் சிந்தனை விடுதலை தாகம் சமூக பொறுப்புணர்வுமிக்க ஒரு முற்போக்கு கவிஞனாகவே எமது விடுதலை இயக்கம் கயனை உருவாக்கியது. யாழ்ப்பாணம் கோண்டாவிலில் ஒரு நடுத்தர வர்க்க உழைப்பாளர் குடும்பத்தின் தலைமகனாக பிறந்த கயன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவன். இனவாத புயல் எம் தேசத்தின் வேலிகளை பிய்த்தெறிந்த போது பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்ற மரப ரீதியான சமூக நியதியினால் கட்டாயத்தின் நிமித்தம். இந்த மேற்குலகு நோக்கி பயணித்தவன்.


தன் சகோதரர்களை ஆழமாக நேசித்த அவன் தன் இளமைப் பொழுதுகளை பாரிஸ் நகரத்தின் அடிப்படைத் தொழிலாளர் வர்க்கத்துடன் கலந்தே பணியாற்ற வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டான். குடும்பப் பாசம் கொண்ட கயன் மௌனமாக இருந்தாலும் அவனுக்குள் எழுந்த விடுதலை தாகம் அவனை நீண்டகாலம் மௌனிக்கவிடவில்லை. தன் குடும்பத்தை கவனித்தவாறு தன் போனாவினால் அடக்குமுறை மீது போர்த் தொடுத்தான். இயக்கத்தின் கலை பண்பாட்டு பிரிவிற்காக கலாச்சாரம் என்கின்ற பத்திரிகையை உருவாக்கி அதன் ஆசிரியனாகவும் சில காலம் பங்கேற்றான். கயன் தன் அனுபவங்களை சரியான கோணத்தினுள் உள்வாங்கி அதனை தன் எண்ணங்களினால் செழுமைப்படுத்தி அவற்றை தன் போனாவினுள் நிரப்பி சமூகத்தின் விழிப்புணர்வுக்கான ஆயுதமாக்கினான். கலாச்சாரம் இதழில் அவன் பெற்ற அனுபவம் பிற்காலத்தில் அவனால் ஈழமுரசு என்னும் வார இதழை உருவாக்க முடிந்தது.

இரு ஆண்டுகளுக்கு மேலாக எமது இயக்கத்தின் பகுதி நேர தொண்டனாக இயங்கிய கயன் இயக்கத் தேவைகள் அதிகரித்த போது தன் முழுமையான விடுதலைப் புலி உறுப்பினனாக இணைத்துக் கொண்டான். எமது மூத்த தளபதி கிட்டு அவர்கள் இலண்டனில் குடிகொண்டு அங்கு சர்வதேச தலைமைச் செயலகத்தை வைத்து அனைத்துலக தொடர்பகம் என செயற்பட தொடங்கிய போது அவருக்கு உதவியாக இயங்குவதற்கு பிரெஞ்சு பணியகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் கயன்.


தளபதி கிட்டுவின் ஆளுமை மிக்க வழிகாட்டல் அனுபவம் நிறைந்த அறிவுரைகள் சிந்தனைமிக்க செயற்பாடுகள் என்பன அவருடன் முழுமையாகப் பணிபுரிந்த எமது இயக்கத் தோழர்களை செழுமைப்படுத்தி நெறிப்படுத்தியது. கயன் தளபதி கிட்டுவின் புலம்பெயர் வாழ்வில் அதிக காலம் அவருடன் வாழ்ந்த இயக்க உறுப்பினர். எம்மைப் போல கிட்டுவிடம் பேச்சுவாங்கி வளர்ந்தவன் கயன். பிற்காலத்தில் கயனின் செயற்பாடுகளில் இந்த அடையாளங்கள் பல்வேறு பரிணாமங்களில் வெளிப்படுத்தப்பட்டதை நாங்கள் கண்டிருக்கின்றோம்.


ஈழமுரசு வார இதழை உருவாக்கி அதனை புலம்பெயர்வாழ் மக்களின் தகவல் தொடர்பு மற்றும் கலை பண்பாட்டு ஊடகமாக உருமாற்றிய கயனின் எழுத்தாற்றல் இயக்கத்தின் உத்தியோகபூர்வ சர்வதேசப் பதிப்பான களத்தில் மற்றும் எரிமலை மாத இதழ்களில் வெளிப்பட்டது. இயக்க கலை மாலை கலை பண்பாட்டுப் பிரிவினரால் வெளியிடப்பட்ட ஜீவகானங்கள் மற்றும் ஜீவராகங்கள் ஒலிப்பதிவு நாடாக்களில் அவன் பதித்த கவிதை வரிகள் பல்துறைப் பரிமாணங்களைத் தொட்டு நின்றது.


அவன் மக்கள் போர் பற்றி பரணி பாடினான். கண்ணோடு ஒரு கனவு என அவன் எழுதிய பாடல் அவனது கவித்துவத்திற்கு ஒரு சான்றாகும். கயன் மக்கள் மொழி புரிந்தவன். சிரிக்கச் சிரிக்க அவனால் கதை சொல்ல முடியும். தன்னோடு இருக்கும் நண்பர்களை உற்சாகப்படுத்தவும் அவர்களுடைய ஆற்றல்களை வெளிக்கொணரவும் அவனால் முடியும் அவனோடு பழகாமல் அவனை மேலோட்டமாகப் பார்த்தவர்கள் அவனை புரிந்துக் கொள்ள சிரமமப்படுவர். ஏனெனில் அவன் மிகுந்த பிரயத்தனம் செய்து தனக்குத் தானே அமைத்து வைத்திருந்த ஒரு தனிமைத் தோற்றம் அப்படியாய் இருந்தது.


ஆனால் அந்தப் பிரமையை ஒரு புதிய இயக்க உறுப்பினராய் கூட இலகுவாக உடைத்து விட முடியும். அதனை தடுக்கும் ஆற்றல் கயனிடம் இல்லை. ஏனெனில் தோழமை உணர்வு என்பது அவனால் எதிர்த்து நிற்க முடியாத ஆயுதம். உண்மையான போலித்தனமற்ற கவிஞனாக வாழ்ந்த அவன் எழுதி வைத்த கவிதைகள் அவன் இறப்பால் எமக்கு உருவாக்கிய இடைவெளியை என்றும் ஈடு செய்யும். கயன் என்ற போராளி எம் தேசத்தின் உயர்வுக்காக உலக வரலாறு இருக்கும் வரை பரணி பாடுவான்.கஜன் எமது தமிழினத்துரோககளின் காட்டிக்கொடுப்பிற்கு அமைவாக சிறிலங்கா புலனாய்வாளர்களால் கொலை செய்யப்பட்டார் என்பதை நினை வூட்டுவதோடு எதிர்காலத்தில் புலத்தில்வாழும் போராளிகளை பாதுகற்பாகயிருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?