முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

c 362 கப்டன் லிங்கம்

கப்டன் லிங்கம் யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட (படுகொலை செய்யப்பட்ட) தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கப்டன் லிங்கம் ஆகிய மாவீரரின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லிங்கத்தின் மறைவு விடுதலைப்போரில் திருப்புமுனை………. லிங்கம் 16.12.1960ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். இந்துக்கல்லூரியில், படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளரானார். 1980ம் ஆண்டில், 12ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இயக்கத்தின் உதவியாளனாகச் செயல்பட ஆரம்பித்தார். எமது விடுதலை குறித்து சுவரொட்டிகளை ஒட்டுதல், சுலோங்களைச் சுவர்களில் எழுதுதல் போன்ற வேலைகளை ஆர்வத்துடன் செய்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈட

c 361 புகழ்பெற்ற விமானி மரணம்

ரஷ்யாவின் 40 விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைனின் புகழ்பெற்ற விமானி மரணம் ரஷ்யாவின் நாற்பது விமானங்களைச் சுட்டு வீழ்த்திய உக்ரைனின் சிறந்த விமானியான ஸ்டீபன் தாராபல்கா போரில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதே ஆன விமானி தாராபல்கா ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே அந்நாட்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்திப் புகழ்பெற்றுள்ளார். ஐந்துக்கு மேற்பட்ட விமானங்களை வீழ்த்தியதற்காகச் சிறந்த விமானி என்கிற பட்டத்தையும், கீவின் ஆவி என்கிற பட்டப்பெயரையும் பெற்றுள்ளார். போர் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த போது மிக்-29 போர் விமானத்தில் சண்டையில் ஈடுபட்டிருந்த போது, மார்ச் 13ஆம் திகதி அவர் போரில் உயிரிழந்துள்ளதாகவும், இறக்கும் வரை ரஷ்யாவின் 40 விமானங்களை அவர் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய வீரமரணத்தை தொடர்ந்து, தற்போது அவரது ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகள் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளன. இது குறித்து உக்ரைனிய அரசோ, அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகமோ எந்தவிதமாக கருத்துக்களையும் தெரிவிக்கைவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

c 360 கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மே தின நிகழ்விற்கு அழைப்பு

கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மே தின நிகழ்விற்கு அழைப்ப விடுத்துள்ள நாடாளுமன்ற எமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கு மே தினத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வுகள் நாளைய தினம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள மே தின நிகழ்வுகளையொட்டி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு இருக்கின்றன.இந்த மே தினத்தில் நாங்கள் எங்கள் அறைகூவலை கொடுக்க இருக்கின்றோம். நாளை கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து பசுமை பூங்கா வளாகம் வரை பேரணியாக சென்று அங்கே பொதுக்கூட்டம், கண்டன உரை நடைபெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

c 359 தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது இது தான்

இலங்கை மக்களுக்கு உதவ தயாராகவே இருக்கிறோம்! - தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை மக்களுக்கு நிவாரணங்களை கொண்டு செல்ல தாம் தயாராகவே இருப்பதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என்று கோரி, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட்டுள்ளது முதலமைச்சரின் யோசனைப்படி, 80 கோடி மதிப்பிலான 40,000 தொன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகளுக்கான 500 தொன் பால் மா மற்றும் பிற பொருட்களை அனுப்ப தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் மூலம் இந்த பொருட்கள் அனுப்பப்படவுள்ளன. இந்தநிலையில் முதலமைச்சரின் திட்டத்துக்கு ஆதரவு வெளியிட்டுள்ள ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்க தலைவர் ஜேசுராஜா, தமிழகத்தின் நிவாரணப்பொருட்களை தங்கள் இயந்திர படகுகள் மூலம் இலங்கைக்கு எடுத்துச் செல்ல தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்

c 358 காத்தான்குடியில் 17 வயது சிறுமி விபரீத முடிவு

காத்தான்குடியில் 17 வயது சிறுமி விபரீத முடிவு மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வநகர் கிழக்கு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 17 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய அரநாதன் ரோஜாவின் சடலமே செல்வநகர் கிழக்கில் மீட்கப்பட்டுள்ளது. காத்தான்குடியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தோட்டத்தைப் பராமரிப்பதற்காக ஒரு குடும்பத்தை தனது வீட்டில் குடியமர்த்தினார். நேற்று மாலை 6 மணியளவில் வீட்டின் மின்விசிறியில் கயிற்றால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் காதல் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

c 357 பொறுப்பற்ற இலங்கை அரச அதிகாரிகள்

பொறுப்பற்ற இலங்கை அரச அதிகாரிகள் - இந்திய பிரதமர் கேட்டறிந்த விடயம் பல சிரேஷ்ட அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சில இன்னும் பெறப்படவில்லை என தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாக நெருக்கடி என்ற போர்வையில் குறிப்பிட்ட சில அரச அதிகாரிகள் தமது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் மிலிந்த மொரகொட தெரிவித்ததையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அரச தலைவர் கோட்டாபய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரத ஸ்டேட் வங்கி கடன் வசதியை வழங்குகிறது மேலும் இந்தக் கடனின் கீழ் இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களை நிதி அமைச்சகம் தீர்மானிக்கிறது. எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தனி கடன் உள்ளது, அதில் 468 மில்லியன் அ

c 356 இப்போதுதான் புரிந்து கொள்கிறோம்'

இலங்கை போராட்டம்: 'சிங்கள முஸ்லிம் மக்களை இப்போதுதான் புரிந்து கொள்கிறோம்' - இலங்கையில் ஒரு போராட்டக் குரல் எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையில் இருந்து... பொருளாதார நெருக்கடியின்போது, வேறுபாடுகளைக் கடந்து நடக்கும் போராட்டங்களின்போதுதான் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார் போராட்டங்களில் பங்கேற்கும் ஆட்டோ ஓட்டுநரான ஜெகன். சிலமாதங்களுக்கு முன்பிருந்தது போல அவரது வாழ்க்கை இப்போது இல்லை. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி சாமானிய மக்களை கூடுதலாகப் பாதித்திருக்கிறது என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. இலங்கை காலி முகத் திடலில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்திருக்கிறது. வார இறுதி நாள்களில் மற்ற நாள்களை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஜெகனும் அவ்வப்போது அங்கு சென்று போராட்டத்தில் பங்கேற்கும் நபர்களில் ஒருவர். "மலையகத்தில் இருந்து வந்து சுமார் 12 ஆண்டுகளாக கொழும்பு நகரில் ஆட்டோ ஓட்டுகிறேன். சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. பெட்ரோல் விலை, அத்தியவசியப் பொருள்களின் விலை ஆகியவை வாழ்க்க

c 355 சினிமா துறையில் நடிகைகள் கடும் போட்டி யார் கூட சம்பாரிப்பது.

“என்ன பொண்ணுடா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – இணையத்தை சூடேற்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளவர் பிரக்யா நாக்ரா. இவர், நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. நான் வட இந்தியப் பெண். ஜம்முதான் எனக்கு சொந்த ஊர். தமிழில் முதல் படத்திலேயே ஜீவாவுக்கு ஜோடியாக நடிப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது. இன்னும் பெயர் வைக்கவில்லை. 99 சதவீத வேலைகள் முடிந்துவிட்டன. நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ, அதுபோலவே, படத்திலும் பப்ளியான கதாபாத்திரம். பாலக்காடு பார்டரில் இருந்து கோயம்புத்தூரில் செட்டிலான மலையாளப் பெண்ணாக நடிக்கிறேன். இதற்கு முன்பு, அருள்நிதி நடிப்பில் ‘டி பிளாக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. அடுத்தடுத்து தமிழில் 2 புதிய கதைகள் கேட்டுள்ளேன். விரைவில் அதுபற்றிய அறிவிப்பு இருக்கும்’’ என்கிறார் பிரக்யா நாக்ரா. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற

c 354 மூழ்கி இலங்கை பெண் பொறியியலாளர் பலி

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பெண் பொறியியலாளர் பலி அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் கம்பஹா, யக்கல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், குறித்த பெண் தற்போது அவுஸ்திரேலியாவின் கான்பராவில் வசித்து வருவதாகவும், அவரது கணவரும் அவுஸ்திரேலியாவில் பொறியாளராக பணிபுரிவதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பெண் தனது கணவர் உட்பட மற்றொரு குழுவுடன் கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது இந்த அனர்த்தத்திற்கு இடம்பெற்றுள்ளது. கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அவுஸ்திரேலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

c 353 பேய்களுக்கு பயப்படாவிட்டால்

பேய்களுக்கு பயப்படாவிட்டால் .... -மகிந்தவிற்கு நடிகை விடுத்துள்ள சவால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்னும் அமைதியாக இருப்பதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (ஏப்ரல் 29) அலரிமாளிகைக்கு முன்பாக நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இன்று ஒரே நேரத்தில் இரண்டாயிரம் ரூபா காஸ் விலை உயர்த்தப்படும் போது, ​​பெட்ரோல், டீசல் இருநூறு, முந்நூறு என உயர்த்தப்படும் போது, ​​இப்படி அல்ல மக்கள் உங்களுக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டும்.எனினும் மக்கள் இன்னும் அமைதியாக இருக்கிறார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கும் அவர் பதிலளித்துள்ளார். “பேய்களுக்கு பயந்தால் புதைகுழியில் வீடுகளை கட்டமாட்டேன் என்று மகிந்த ராஜபக்ச கூறுகிறார். பிசாசுக்கு பயந்தால் நாங்கள் கல்லறையில் வீடுகளை கட்டியவர்கள் அல்ல. பேய்களுக்கு பயப்படாவிட்டால் கல்லறையில் வீடுகள் கட்டப்படாது என்று பெரிதாகச் சொல்லாதீர்கள். அப்படியானால், இங்கே வாருங்கள். பயப்படாவிட்டால். மக்கள் மத்தியில் இறங்குங்கள். இது என்ன வெட்கமற்ற செயல்? மக்கள் இப்படி ஏமாந்து போனார்கள், நாடு முழுவதும். இப்

c 352மகிந்த பதவி விலகவில்லை எனில்

மகிந்த பதவி விலகவில்லை எனில் .... - மல்வத்து விகாரை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என சியாம் நிகாயாவின் மல்வத்து பிரிவின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் தெரிவித்துள்ளார். மகிந்த பதவி விலகவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பாகிஸ்தானில் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான்கானை நீக்கியது போல நீக்க வேண்டும் என தெரிவித்தார். அரசாங்கத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து பின்வரிசை உறுப்பினர்கள் அஸ்கிரிய மல்வத்து மகாநாயக்கரை தரிசித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

c 350 இலங்கையில் மஹிந்த இல்லாத அமைச்சரவையா?

இலங்கையில் மஹிந்த இல்லாத அமைச்சரவையா? சிறிசேனவின் தகவலுடன் முரண்படும் இலங்கையில் தற்போது நீடித்து வரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாத புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய இணக்க அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அனைத்து கட்சிகளுடன் விரைவில் பேசும் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்று கூறினார். இலங்கையில் மஹிந்த இல்லாத புதிய அமைச்சரவை கொண்ட இடைக்கால அரசு, 15 முதல் 20 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மனித உரிமை ஆர்வலர் மஹிந்த: ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை இலங்கை போராட்டக் களத்தில் மருத்துவ உதவி செய்யும் தமிழ் இளைஞர் தமது கட்சியின் யோசனைக்கு அமைய, தேசிய சபையை அமைக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்

c 349 மறக்க முடியாத வலிகள்

மே18 2009 “நான் கீழே விழுந்தவுடன் நெஞ்சில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டு இருந்தது இத்தனை பேரின் உழைப்பும் மிககுறுகிய நேரத்தில் எனக்கு கிடைத்தபடியால் தான் நான் இன்று உயிரோடு இருக்கின்றேன். என் உயிரை காப்பாற்ற துடித்தவர்கள் அனைவரும் ஏற்கனவே போர்க்காலங்களில் வலிகளைச் சுமந்தவர்களே! ஒரு பத்திரிகையாளனான என் உயிரை மீட்டதற்காக என்ன நன்றிகடன் செய்யப்போறனோ தெரியவில்லை. ………….. முந்தைய தொடர்ச்சி….. “நான் கீழே விழுந்தவுடன் நெஞ்சில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டு இருந்தது. கடற்கரை மணல் எடுத்து நெஞ்சில அடைத்தேன். அதன் பிறகுதான் அப்படியே மூக்காலயும் வாயாலயும் இரத்தம் வந்தபடியே மயங்கிவிட்டேன். …………… சிறிது நேரத்தில் “சுரேன் முடிஞ்சா ஓடிவா ஆமி உங்கால தான் அடிக்கிறான்” என்று மோகன் அண்ணையின் குரல் கேட்கிறது. அரைமயக்கம் ஒன்றுமே தெரியல்ல. குரல் வந்த திசையை நோக்கி ஓடினேன்.(மோகன் அண்ணை சொல்லித்தான் தெரியும்)…… ………… அரைமயக்கம், சத்தங்கள் கேட்கிறது. நான் சாகப்போறன் போல இருந்தது. “சுரேன் கொஸ்பிட்லுக்கு போவம்” என்று மோகன் அண்ணை சொல்லிக்கொண்டுஇருக்கிறார். நான் “கறுப்பு கொம்பூட்டர், கறுப்ப

c 348 தமிழர்களே ஜாக்கிரதை பல போலியான

தமிழர்களே ஜாக்கிரதை பல போலியான Sun-Flower Oil விற்பனையில்: உணவங்கள் தரம் கெட்ட எண்ணையில் பொரிக்கிறார்கள் தமிழர்களே லண்டனில் நீங்கள் கவனித்து இருப்பீர்கள், தமிழ் உணவங்களில் மட்டன் றோல்ஸ் தொடக்கம் பொரியல் உணவுகளின் விலை கடுமையாக ஏற்றப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, லண்டனில் எல்லா இடங்களிலும் சூரிய காந்தி எண்ணையின் விலை 2 மடங்காக அதிகரித்துள்ள நிலையில். பல உணவங்கள் தரம் கெட்ட எண்ணையை பாவித்து தமது உணவுகளை பொரித்து வருகிறார்கள். இது உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்க வல்லவை. காலஸ்ரோலை 12 மடங்கால் அதிகரிக்க வல்லவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உணவங்களில் பொரித்த உணவுகளை வாங்கும் தமிழர்களே மிகவும் ஜாக்கிரதை. அந்த உணவில் வித்தியாசமான மனம் இருந்தால் ? எந்த எண்ணையில் பொரித்தீர்கள் என்ற கேள்வியை அடுத்ததாக கேளுங்கள் . இது மிக மிக முக்கியம். மேலும் பிரித்தானியாவில் பல இடங்களில் இந்தியாவில் கலப்படம் செய்யப்பட்ட … சூரிய காந்தி எண்ணை விற்பனை செய்யப்படுகிறது. உக்கிரைன் நாடு உலகிற்க்கு 23% சத விகிதமான நல்ல தரமான சூரிய காந்தி எண்ணையை ஏற்றுமதி செய்து வந்தது. ரஷ்யா 33% சத விகித எண்ணையை ஏற்றுமதி ச

c 347 யாழில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் கும்பல்

யாழில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் கும்பல்: இருவர் கைது யாழில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் அலைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் பொலி்ஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் இளைஞர் ஒருவரிடம் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அலைபேசியை அபகரித்துச் சென்ற நிலையில் யாழ்ப்பாணம் பொலி்ஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலி்ஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாநகரில் கடந்த ஒரு வாரத்துக்குள் 3 வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் அலைபேசிகள் அபகரிக்கப்பட்டன. நூதனமான முறையில் இளைஞர்களை மறித்து தமது சகோதரியுடன் கதைப்பதாகவும் அவருடைய படத்தை பணப்பையில் (பேஸில்) வைத்திருப்பதாகவும் அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்து அலைபேசி மற்றும் பணத்தை அபகரித்து கும்பல் தப்பித்து வந்துள்ளது. இந்த நிலையில் 4ஆவது சம்பவமாக யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இளைஞர் ஒருவரை அதே பாணியில் அச்சுறுத்தி 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும்

c 346 வக்குக் கிழக்குத் தமிழர்கள் பங்குகொள்ளவில்லையா?

போராட்டங்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பங்குகொள்ளவில்லையா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு (Gotabaya Rajapaksa) எதிரான போராட்டங்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் ஏன் பங்குகொள்ளவில்லை என்ற கேள்விகள் சிங்கள சமூகவலைத்தளங்களில் தொடர் விவாதங்களாக வருகின்றன. பலர் இனவாத நோக்கில் தமிழர்கள் குறித்துப் பதிவிடுகின்றனர். வேறு சிலர் தமிழர்களின் அரசியல் போராட்டங்களை நியாயப்படுத்திப் பதிவிடுகின்றனர். சனத் பாலசூரிய என்ற சிங்கள ஊடகவியலாளர் ஒருவரின் பதிவுக்கு இலங்கையின் முத்த பத்திரிகையாளர் Amirthanayagam Nixon பதில் பதிவு இட்டபோது, Sandali Rathnayake-என்ற சிங்கள பெண் ஒருவர் இனவாதக் கேள்விகளை என்னிடம் முன்வைத்தார். (இவர் போன்று வேறு சிலரும் என்னுடன் முரண்படுகின்றனர்) தனது கேள்விக்குப் பதில் வழங்காமல் ஓடவேண்டாம் எனக் கிண்டலாகவும் பதிவிட்டிருந்தார். அவருக்கு நான் வழங்கிய பதில் பதிவு கீழே உண்டு. இப்படியான இனவாதக் கேள்விகளைக் கேட்டு சிங்கள அரசியல் தலைவர்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தாதீர்கள். இனப்பிரச்சினை உருவானதன் காரணம் நீங்கள் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே தமிழர்களுக்கு அநீத

c 345 நடிகை வெறிஆட்டம்

குட்டியான ட்ரவுசர்… காருக்குள் கொளுகொளு தொடையை காட்டி செல்ஃபி..! – சூட்டை கிளப்பும் இளம் நடிகை..! மேகாலி மீனாட்சி (Meghali Meenakshi) தமிழ்த் திரைப்படங்களில் தோன்றி நடித்துவரும் இந்திய நடிகையாவார். நடிகரும் பாடலாசிரியருமான பா. விஜய் இயக்கத்தில் “ஆருத்ரா” என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். ஏப்ரல் 2018இல் வெளிவந்து, விக்ரம் – தமன்னா நடித்திருந்த ஸ்கெட்ச் என்ற படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே கோலிவுட்டில் மற்ற திட்டங்களில் பரபரப்புடன் இருக்கிறார். இவர் இப்போது “இரகதம்” என்ற புதிய தமிழ் படத்தில் பணிபுரிகிறார். இதில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா இயக்கிய “பாண்டி முனி” என்ற தமிழ் திரைப்படத்தில் ஜாக்கி செராப்புடன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் மிலன் பௌமிக் இயக்கிய “நிர்பயா” என்ற வங்காளத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சம்பிட் மீடியா மற்றும் புரொடக்‌ஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் சஞ்சிப் சமதார் இதை தயாரித்தார். இந்த படம் 2012 தில்லி கும்பல் வல்லுறவு வழக்கை அடிப்படையாகக் கொண்டது. பட வாய்ப்புக்காக அடிக்கடி கவ

c 344 சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும்

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள முஸ்லிம் மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் நிலைமைக்கு காரணமான ஆட்சியாளர்களை வீட்டுக்கு செல் என காலிமுகத்திடல் தொடக்கம் நாடு பூராகவும் போராட்டம் இடம்பெறுகின்றது. இந்த போராட்டங்கள் ஜனநாயகரீதியான போராட்டம் என்பதால் எவரையும் கைது செய்யவில்லை. அந்த வகையில் நாமும் இதனை வரவேற்பதோடு போராட்டத்திற்கான ஆதரவை தெரிவிக்கின்றோம். அத்துடன் ஜனநாயக ரீதியான இப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு யுத்தகாலத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை சகோதர சிங்கள மக்களும் தெரிவித்து வருகின்றனர். இது இந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய மாற்றமாகும். இந்நிலையில் தமிழ் மக்களின் மனங

c 343 ஒதுங்கியிருப்பதே நல்லது: எம் கே.சிவாஜிலிங்கம்

நாளைய போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது: எம் கே.சிவாஜிலிங்கம் நாளைய போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது என்றும் ஆட்சியாளர்களிடமிருந்து எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, “இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அரசாங்கத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக மாபெரும் போராட்டங்கள் தெற்கிலே வெடித்திருக்கின்றது. பல்லாயிரக்கணக்கானவர்கள் கொழும்பு பிரதான வீதிகளிலே அதேபோல கண்டியிலிருந்து பேரணிகள், பல்வேறு மாவட்டங்களிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அடிக்கடி முழு நாட்டுக்கும் ஆனா ஒரு பொது வேலை நிறுத்தத்தை அழைப்பிலே நாங்கள் இணைந்து கொள்வதா இல்லையா என்ற ஒரு கேள்வி எழுகிறது? இதிலே எங்களுடைய பிரதானமான எந்த கோரிக்கைகளும் இல்லாமல் இதில் ஆகக்குறைந்தது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண

c342 தமிழர் மர்மமான முறையில் மரணம்

கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம் கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13ம் திகதி சென்ற நிலையில் குறித்த இளைஞர் மர்மமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 35 வயதான மகிந்தன் தயாபரராஜா எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தேனீர் வாங்குவதற்காக விடுதியை விட்டு வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். இதனையடுத்து காணாமல்போன 3 நாட்களின் பின்னர் மேல் மருவத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் வீதியோரம் மகிந்தன் தயாபரராஜா வீழ்ந்து கிடந்துள்ளார். வீதியோரத்தில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞரை வீதியால் சென்ற மருத்துவர் ஒருவரும், அங்கு இருந்தவர்களும் இலவச நோயாளர் காவு வண்டி எண் 108 இற்கு தகவல் தெரிவித்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நில

c341 முதலீடுசெய்வதைத் தவிர்க்கவும்

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுசெய்வதைத் தவிர்க்கும்படி விடுதலைப்புலிகள் கோரிக்கை!! சிங்கள அரசியல் தலைமைகள் வகுத்துவருகின்ற திட்டத்தில் புலம்பெயர் மக்கள் விழுந்துவிடக்கூடாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிங்கள அரசியல் தலைமைகள் விரித்துள்ள வலைக்குள் புலம்பெயர் மக்களோ, வர்த்தகப் பெருந்தகைகளோ, முதலீட்டாளர்களோ சிக்கி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், உங்கள் உடன்பிறப்புக்களைக் கொன்றழிக்கச் செலவான சிறீலங்கா அரசின் கடனை ஈடுசெய்ய நீங்கள் முதலீடு செய்வதைப் புறக்கணித்து, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உங்கள் முதலீடுகள் நேரடியாக அம் மக்களைச் சென்றடைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர

c340 அகதிகள் மீண்டும் ஆஸ்திரேலியா வர நிரந்தர தடை!

நியூசிலாந்தில் குடியமர்த்தப்படும் அகதிகள் மீண்டும் ஆஸ்திரேலியா வர நிரந்தர தடை! ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தத்தின்கீழ் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படும் அகதிகள், வாழ்நாள் முழுவதும் ஆஸ்திரேலியாவிற்கு வரமுடியாதபடி தடைவிதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட அகதிகளை, நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் அண்மையில் இருநாடுகளுக்கிடையில் எட்டப்பட்டது. இதன்படி வருடமொன்றுக்கு 150 அகதிகள் என்ற அடிப்படையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படவுள்ளனர். தற்போது நவுறுவிலுள்ள அகதிகள், மற்றும் கடல்கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு இங்கு தற்காலிக விசாவுடன் தங்கியுள்ள அகதிகள், இந்த ஒப்பந்தத்தின்கீழ் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கு தகுதிபெறுவர். இவ்வாறு நியூசிலாந்தில் குடியமர்த்தப்படும் அகதிகள், அந்நாட்டு குடியுரிமை பெற்றுக்கொண்ட பின்னர், ஆஸ்திரேலியாவிற்கு வரமுடியாதபடி நிரந்தர தடை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது

c 339 யாழில் விபத்து: பெண் ஒருவர் பலி (Photos)

யாழில் விபத்து: பெண் ஒருவர் பலி (Photos) யாழ். பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று(26) இடம்பெற்றுள்ளது. விபத்துச் சம்பவத்தில் உடுத்துறை வடக்கு தாளையாடி பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் தவமலர்(60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்துடன் முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இயக்கச்சியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு திரும்ப முற்பட்ட போது மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

c 338 கொலைவெறியில் சிங்களவர்கள்

நியூஸிலாந்திலிருந்து இலங்கை வந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்! பகீர் சம்பவம் வேபொட - வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு கணவன் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் மனைவியின் சகோதரி மற்றும் நண்பியும் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரான கணவர் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த நிலையில் அயலவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் வேபொட - வடக்கு பிரதேசத்தை சேர்ந்த அப்ஸரா கல்பனி என்ற 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளார். கணவர் மாத்தறை, கெகனதுர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் மற்றும் மனைவி பட்டாரிகளாகும். அவர்கள் நியூஸிலாந்திற்கு செல்ல தயாராகியிருந்த போது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி மாத்திரம் நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையில

c 337 வைத்தியர்களின் அலக்ஸ்சியித்தால் உயிர் பறிபோனது.

யாழில் தெரு நாயால் குடும்பத் தலைவருக்கு நேர்ந்த சோகம்! யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளிலும் விசர் நாய் கடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த குடும்பத் தலைவருக்கு கடந்த மாசி மாதம் தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக அடுத்த நாள் காலை பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் மருத்துவரின் ஆலோசனையில் ஏற்பு தடுப்பூசி வழங்கப்பட்டது. இருப்பினும், விலங்கு விசர் நோய் தடுப்பூசி வழங்கப்படவில்லை. இதேவேளை குறித்த குடும்பத் தலைவருக்கு நேற்றையதினம் திடீரென சுகயீனம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் உயிரிழந்துள்ளார். குறித்த மரண விசாரனையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் முன்னெடுத்ததுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

c 336 தூரநோக்கோடு தமிழர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்

ராஜபக்ச அதிருப்தியாளர்களால் தமிழர்களுக்கு ஆபத்துஅவர்கள் சொல்ல வருவது விமல் வீரவன்ச அல்ல அதற்கு பின்னால் இருக்கும் நரிக்கே பயப்பிடுகின்றார்கள். அந்த நரியின் பெயரைக் குறிப்பிட முடியாது. இது தான் தமிழர்களின் சிக்கல். இலங்கையில் ராஜபக்ச அதிருப்தியாளர்களில் ஒருவர் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களின் நிலைமை மேலும் கேள்விக்குறியாகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். இதனால் ராஜபக்சக்களை வீட்டுக்குச் செல்லுமாறு போராடும் தரப்பினர் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக் கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை வலியுறுத்தினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ இன்று ராஜபக்ச ஆட்சியில் இருந்து அதிருப்தியாளர்கள் பலர் வெளியேறியிருக்கின்றார்கள். இந்த நிலையில், அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வரப்பட இருக்கின்றது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்று ஆட்சி மாற்றமொன்று

c 335 உன்மையை வெளியிட்டார் மனோ,

தமிழர்களின் நியாய மறுப்பால் இலங்கைக்கு திண்டாட்டம் தமிழர்களுக்கு உரித்தான நியாயமான விடயங்களை மறுத்த காரணத்தினால் தான் தேசிய இனப்பிரச்சினை இன்று தொடர்கிறது. ஜனநாயக ரீதியான வழிமுறைகள் எல்லாம் தோல்வியடைந்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தமிழர்கள் ஆயுதம் தூக்க தள்ளப்பட்டார்கள். அதனால் தான் யுத்தம் நடந்தது. யுத்தம் நடத்த காரணத்தினால் தான் நாடு அதளபாதாளத்தில் விழ்ந்தது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அது மட்டும்மல்ல, யுத்த வெற்றி காரணமாக தான் “துட்டகைமுனு மறு அவதாரம்” என்ற ஒரு பட்டத்தை தானாகவே கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் பெற்றார்கள். ஆகவே தான் நாடு இந்த நிலைக்கு வந்திருக்கின்றது. அதற்கு காரணம் தமிழர்களுக்கு நியாயம் வழங்க மறுத்தது தான். ஒரு பிரதேச சபை தலைவர் அனுபவம் இல்லாத ஒரு நபரை, ஒரு அடி முட்டாளை, நாட்டின் அரச தலைவர் ஆக்கிவிட்டு இப்போது திண்டாடுகின்றீர்கள் என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர்

c334 உக்ரைன் போரில் புதிய திருப்பம்

உக்ரைன் போரில் புதிய திருப்பம் உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என தான் நம்புவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யப் போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் புடினின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதேவேளை, உக்ரைன் மீதான மாஸ்கோ படையெடுப்பின் ஆரம்பக் கட்டத்தில் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றி, உலகை "பேரழிவின் விளிம்பிற்கு" தள்ளியது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவதற்கு கீவ் நம்பியிருக்கும் போக்குவரத்து உட்கட்டமைப்பை ரஷ்யா குறிவைப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனை தொடர்ந்து ஆதரித்தால், மால்டோவாவுக்கு என்ன நடக்கும் என்பதை ரஷ்யா காட்ட முயற்சி செய்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். டான்பாஸில் உள்ள சிறிய நகரமான டோரெட்ஸ்கில் உள்ள பொதுமக்கள் உயிர்வாழ போராடி வருகிறார்கள் என்றும், போரினை அவர்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புவதாகவும் தகவல் வெ

c 333 கோட்டாபயவிடம் இருந்து பறந்த முக்கிய கடிதம்

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியலில் மகா சங்கத்தினருக்கு கோட்டாபயவிடம் இருந்து பறந்த முக்கிய கடிதம் இலங்கை மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் அறியாதவனாக நான் இல்லை. எனவே தான் நிபுணர்கள் குழுவூடாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன். இந்த நிலையில் குறித்த முன்னெடுப்புக்களில் வெற்றி இலக்கை அடைவதற்கு சிறு காலம் செல்லும் என்பதோடு , இதற்கு தங்களின் மேலதிக ஆலோசனைகளை பாதங்களை வணங்கி கேட்டு நிற்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நான்கு மகா சங்கத்தினரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். தம்மால் கடந்த 4 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடித்திற்கு எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மகா சங்கத்தினரால் கடந்த 20 ஆம் திகதி மகா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரிதொரு கடிதம் அனுப்பப்பட்டது. குறித்த கடிதத்திற்கு ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 4 ஆம் திகதி உங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ள காரணிகளை நாம் ஒரு