முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 303 தலைவர் பிரபாகரனின் உயரிய பண்புகள்

தலைவர் பிரபாகரனின் உயரிய பண்புகள் !
தலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள். ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது. முகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு, தமிழன் என்று கூறிப்பாருங்கள், உடனே அவர்களிடமிருந்து வரும் கேள்வி “தமிழ்ப் புலியா” எனப் புன்னகையுடன் வெளிவரும்.! தமிழ்மொழியை தாய்மொழியாக்கொண்டவர்களுக்கு புலிகளே இன்று அடையாளம். இங்கே தான் புலி எதிர்ப்பாளர்கள் வெளிவருகின்றனர். பிரபாகரன் என்னும் தாரகமாத்திரம் தமிழரை ஒன்றிணைவதை, தமிழர் விரோத சக்திகள் விரும்புவதில்லை. இதனால் தான் எமது முன்னோர்களான வீரமன்னர்களின் வரலாற்றையும் மறைத்தனர். இப்போது, உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் ஒரே சொல்லாக தலைவர் பிராப்பகரனே இருக்கின்றார் என்பதால், இன்று தலைவரை இளம் தலைமுறையினர் நெஞ்சில் வைத்து சுமக்கின்ரனர். இதன் அபாயத்தை உணர்ந்த புலி எதிர்ப்பு சக்திகள், தலைவர் பிரபாகரனுக்கு சேறடிக்கும் முயட்சியில் இறங்கியுள்ளது. அதற்கு அவர்கள் சமூகவலைத்தளங்களையே பாவிக்கிறனர். இதில் பிரதான பங்கு வகிப்பவர்கள் யாரென்று பார்த்தால் 2009 வரை முக்காடு போட்டு மறைப்பில் திரிந்த சிலரே ஆகும். எமது மக்களால் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு, தமிழர் மரபிலிருந்தே ஒதுக்கப்பட்ட சிலரே இதில் முன்னிக்கின்றனர். இதில் பலர் தங்கள் தவறை உணர்ந்து ஒதுங்கி விட்டனர். சிலர் இப்போது மீள் சுழற்சியில் தயார்படுத்தப்பட்டு களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களின்முக்கிய பணி தலைவருக்கு சேறடிப்பது, புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதே முதல் நோக்கம். அவர்களின் நோக்கம் தலைவரை பெரும் கொலைகாரன் போல சித்தரிப்பதேயாகும்.!
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அல்லது தண்டனைகளை இன்று அது ஒரு குற்றம் போல நிறுவ முற்படுகின்றனர். இந்த தண்டனைகளை புலிகள் ஏன் வழங்கினர் என்பதை நாசுக்காக மறைத்துவிடுகின்றனர். இவர்கள் போன்றவர்களிடம் இளையதலைமுறையினர் மிக அவதானமாக இருக்கவும். தயவு செய்து இவர்களை கடந்து போங்கள். இவர்கள் விரிக்கும் மாயவலையில் சிக்காதீர்கள். எனது பதிவுகள் ஊடாக நான் கடந்துவந்த பாதைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்? அந்த பயணங்களின் போது தலைவருடனான எனது சந்திப்பில் “நான் எவ்வாறு தலைவரைப் புரிந்து கொண்டேன்.? எனது பார்வையில் தலைவர் எப்படியானவர் என்பதை,1988களின் மணலாற்றில் வைத்து ஒரு வருட காலம் அவருடன் பயணித்த போதும், பின்னர் வேறு துறையில் பயணித்தபோது, அவருடனான சந்திப்புகள் மூலம், நான் அவரைப்புரிந்து கொண்டதை, உங்களோடு பகிர விரும்புகின்றேன்.! தலைவரைப்பற்றி பலர் கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் கூறப்போவது எனது பார்வையில் அவர் எப்படியானவர்.? இந்திய இராணுவ முற்றுகையின் போது, அந்த நேரங்களில் முகாமில் போராளிகள் என்ன உணவை உண்டார்களோ, அதுவே அவரது உணவாகவும் இருந்தது. தனக்கென்று ஒருபோதும் சிறப்பான உணவை சமைத்து அவர் உண்டதில்லை.! நேரத்தில் கஞ்சியோ அல்லது பருப்பும் சோறும் என்றாலும் அது போராளிகளுக்கு கிடைத்துவிட்டதா என்பதை உறுதி செய்தபின்பு தான் தனது உணவுக்கு தயாராவார். பருப்பும் சோறும் என்றாலும் அந்த உணவை ரசனையோடு உண்பார். யாரவது தன்னை பார்க்கவந்தால், நலம் விசாரித்தபின் அவரது கேள்வி “சாப்பிட்டியா”..! அவர் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு மட்டுமல்லாது, போராளிகள் அனைவரும் இரவு உணவருந்தியதும் பல் துலக்க வேண்டுமென்றும், மலசல கூடம் சென்று வந்ததும் சவக்காரம் இட்டு கைகழுவ வேண்டும் என்பதையும் தந்தைக்குரிய கண்டிப்புடன் கூறுவார்/அதை நாம் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவார். அதை கடைப்பிடிக்க (மறந்துபோய் விடுதல்) தவறியோரை தண்டனைகள் மூலம் நல்வழிப்படுத்துவார். உணவுகளை வீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை (சம்பூ,சவற்காரம்,உடைகள்,பாதணிகள் போன்றவை) வீணாக்குவதை கடுமையாகக் கடிந்துகொள்வார். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவார். இது எனக்கு கிட்டண்ணை கூறியது.! ஆரம்பகாலங்களில் தானும் ரஞ்சண்ணையும், போராட்டம் சம்பந்தமாக வெளியில் சென்று களைத்துப்போய் முகாம் திரும்பினாள். தாங்கள், கழட்டிப்போட்டுவிட்டு சென்ற அழுக்கான உடைகளை (உள்ளாடைகள் உட்பட) தலைவர் தனது ஆடைகளுடன் சேர்த்து துவைத்து வைத்திருப்பாராம். அத்தோடும் தங்களுக்கு சமைத்து தருவதற்கும் அவர் ஒரு போதும் பின்நின்றதில்லை என்பார் பெருமையாக. இது தான் எங்களின் தலைவர். இதே பழக்கம் போராளிக்குள்ளும் கடைசிவரை இருந்தது.
புலிகளமைப்பில் எல்லா போராளிகளுக்கும் தலைவருடன் நிற்கும் சந்தர்ப்பம் அமைவதில்லை, அவருடன் நிற்கும் போராளிகளுக்கு சுகயீனம் என்றால், ஒரு தாயின் பரிவும், அன்பும் நிச்சையம் கிடைக்கும். அந்த உண்மையான கருணையை நானும் அனுபவித்தேன்.! புன்னகையுடன் தாக்குதலுக்கு போராளிகளை அனுப்பிவிட்டு, தனது மன இறுக்கத்தை வெளிக்காட்டாது, உண்ணும் உணவில் நாட்டமில்லாது, அவர்கள் வரவுக்காக காத்திருப்பார். வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்கள் மீதான அஞ்சலிகளின் போதோ அல்லது பின்னரோ, அவர் அழுததை நான் கண்டதில்லை. ஆனால், அந்த மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் எண்ணத்தை, தன்னுள் விதைத்து, அதை நிச்சையம் ஒரு நாள் நிறைவேற்றுவார். பழிவாங்கும் எண்ணம் எப்போதும் அவருடன் இருப்பதை கண்டுள்ளேன். வரலாற்று நாவல்களைப்படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், அதைப்போராளிகளும் படிக்க வேண்டுமென்று எங்களுக்கும் வலியுறுத்துவார். அதன் தாக்கம் இன்றுவரை என்னுள் தொடர்கின்றது. 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர்போ, ராளிகள் தலைவருக்கு எழுதும் கடிதங்களை, அவரே படிக்கும் பழக்கமுடையவர். இதனால் இரவு நித்திரைக்கு செல்வது தாமதமாகின்றது என்பதால் பொறுப்பாளர்களால், முக்கியமான பிரச்னை இல்லாவிட்டால் தலைவருக்கு கடிதமெழுத்துவதை தவிர்க்கும் படி, அண்ணைக்கு தெரியாமல் அன்புக்கோரிக்கை விடப்பட்டது. காரணம் இரத்த அழுத்த தாக்கம் அன்றைய நேரம் தலைவரிடம் இனம்காணப்பட்டமையே இதற்கு காரணம். தனக்கு தெரியாத எந்த விடையமானாலும், அது பற்றித் தெரிந்த, சிறிய போராளிகளாக இருந்தாலும் கேட்டுத்தெரிந்து கொள்வதற்கு அவர் பின்நின்றதில்லை. அவரிடம், எமது எந்தக்கேள்விக்கும் சரியான பதில் இருக்கும்.! #ஒரு சிறியபோராளியின் கூற்று, சரியாக அவருக்கு தோன்றினால், அதை ஏற்பதற்கு, ஒரு போதும் அவர் தயங்கியதில்லை. # எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் அவர் நிதானம் இழந்ததில்லை. அந்த நேரத்தில் அவரது முடிவுகள் தெளிவாகவே அவரிடமிருந்து பிறக்கும். #போராளிகளுடன் உரிமையுடன் உரையாடுவதே அவரது தனிச்சிறப்பு. அம்மான் தொடங்கி சிறிய போராளிவரை அந்த உரிமை,பாகுபாடின்றி தொடரும். #பொறுப்பாளராக இருந்தாலும் சரி போராளியாக இருந்தாலும் சரி பிழைகளுக்கான(யுத்த பின்னடைவுகளுக்கு) தண்டனை பாகுபாடின்றி கிடைக்கும். இதில் அம்மான் தொடங்கி பானு அண்ணை, பால்ராஜ் அண்ணவரை பெரும் பாலும் எல்லாத்தளபதிகளும் பாகுபாடின்றி தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். #1990இல் ஈழப்போர் தொடங்கிய நேரம், பலாலியில் இருந்து எதிரி முன்னேறிக்கொண்டிருந்தான். அப்போது போராளிகள் அணியொன்று குப்புளான் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த நேரம், அதிகாலை 3மணிக்கு எழுந்து ரோந்தில் சென்று வந்த அணியை, திடீர் என்று அங்குவந்த தலைவர், போராளிகளுடன் உரையாடும் போது, மாசிப்பனியினால் தலைமுழுவதும் ஈரமாக இருந்த போராளிகளை தொட்டுப்பார்த்து மனம் வருந்தினார். தன்னுடன் வந்த ரிச்சர்ட் (இவர் பின்னர் மரணமடைந்துவிட்டார்) என்பவரை அனுப்பி, எல்லோருக்கும் ரெஸ்சீன்(மெழுகுத்துணி) கொண்டு தொப்பி தைத்து கொடுத்தபின்,அவரை முகாம் திரும்பும்படி கூறிச்சென்றார். அன்று இரவே போராளிகள் எல்லோருக்கும் அந்த தொப்பி வந்துசேர்ந்தது.! #ஒரு சந்திப்பின் பின் ஒரு பயணத்தின் போது ஒரு கர்ப்பணிப்பெண்னொருவர், கைவேலிக்கும், சுதந்திரபுரத்துக்கும் இடையில் கொளுத்தும் வெய்யிலில், ஒரு குழந்தையையும் தூக்கி சுமந்தபடி நடக்கமுடியாது சென்றதை கண்டா தலைவர், பாதுகாப்பு போராளிகளின் எச்சரிக்கையை கடிந்து வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்மணியை வாகனத்தில் ஏற்றியபின் தான் தெரியும், சுகவீனமுற்ற கணவனால் வரமுடியாமையால் நிவாரணப்பொருட்கள் வாங்குவதற்கு புதுக்குடியிருப்பு செல்வதை அறிந்து தனது போராளியொருவரையும், அந்த தாயுடன் துணைக்கு அனுப்பி தமிழ்ச்செல்வண்ணை ஊடாக அந்தக் குடும்பத்துக்கு உதவவைத்தார். #அது போலவே தான் தேராவில் பகுதியில் வைத்து கட்டுத்துவக்கு வெடித்து காயமுற்ற ஒருவரை தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வைத்திய சாலைக்கு அனுப்புவதற்கு தான் இறங்கி காட்டில் நின்றுகொண்டு, அவர்களுக்கு உதவ முன்வந்தார். இந்த சந்பவத்தில் கூடயிருந்த அம்மான் பின்னைய நாட்களில் அடிக்கடி எமக்கு சொல்வதற்கு தவறவில்லை. #மன்னார் பேசாலை, இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் கிறிஸ்தவ மக்களின் இறந்தவர்களின் நினைவு நாள் நிகழ்வொன்று அவர்களின் இறந்தோரைப்புத்தைக்கும் சேமக்களையில் பூசையின் நிறைவின் பின் அதில் பங்குபற்றிய இராணுவ உளவுத்துறை அதிகாரியை மேஜர்.ஜோனுடன் சென்ற இன்னொரு போராளி சுட்டு கொன்றுவிட்டார். நீண்டநாள் இலக்கு புலனாய்வுத்துறை போராளிகளால் அன்று அழிக்கப்பட்டது. இதற்கு கிறிஸ்த்தவ மக்கள் தங்கள், புனித நாளில் இந்த தாக்குதல் நிகழ்ந்தமையால் தமது கண்டனத்தை கடிதம் மூலம் தலைவருக்கு தெரிவித்தனர். தலைவர், அந்த தவறை உணர்ந்து, அதற்கான மன்னிப்பை அரசியல்துறை ஊடாக அந்த மக்களுக்கு தெரிவித்தார். இந்த தாக்குதலை வழிநடத்திய புலனாய்வு அதிகாரியை பதவி குறைத்து தாக்குதல் மேற்கொண்ட போராளிக்கு ஒரு மாதம் பங்கரில் அடைக்கப்பட்டார். இது வெளித்தெரியாத போதும், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையில் தலைவரோ அல்லது போராளிகளோ தலையிட்டதில்லை இதுவும் தலைவரின் பெரும் சிறப்பு. இப்படி பல சம்பவங்கள் இருந்தபோதும், இந்த மூன்று சம்பவங்களும் போதும்,” தலைவர் எமது மக்களை எந்தளவு தூரம் நேசித்தார்” என்பதைக்காட்டுவதற்கு.! #1997ம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து, உளவுஇயந்திரத்தில் வந்த சிங்கள இராணுவத்தினர் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்கு பெண் சிப்பாய்கள் உட்பட 14சிங்களப்படையினர் பலியாகியிருந்தனர். இது வெற்றிகரமான தாக்குதல் என்றபோதும், எம் மக்களுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்தபோதும் திடீர் என்று அவ்விடத்துக்கு வந்த இரண்டு மாணவிகளும் பலியாகினர். இதனால் சினம் கொண்ட தலைவர், இந்த தாக்குதலை மேற்கொண்ட அதிகாரியையும், போராளியையும் மூன்று மாதம் 4×4 கம்பிக்கூட்டினுள் அடைத்து தண்டனை வழங்கினார். பொறுப்பாளர் என்ற ரீதியில் அம்மானும் கடும் திட்டை வாங்கினார். வெளித்தெரியாத போதும் இப்படியான அசம்பாவிதங்களை தலைவரின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.! #புத்தூரில் ஒரு சம்பவம். குறிப்பிட்ட இடமொன்றில், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பற்றையினுள், கள்ளிறக்கும் ஒருவரால், ஒரு கானில் கள்ளு மறைத்து வைக்கப்படும். இதை குறிப்பிட்ட காவலரணில் நிக்கும் சிப்பாய்கள் ஒவ்வொருத்தராக வந்து,அந்தக் கள்ளைக் குடித்துவிட்டு செல்வார்கள். இதை அறிந்த உளவுத்துறைப் போராளிகள் அந்த கள்ளுக்கானுக்குள், தங்களிடமிருந்த இரண்டு சயனைட் குப்பிகளை உடைத்து சயனைட் பவுடரை போட்டுவிட்டு வந்தனர். அதை அருந்திய நான்கு இராணுவத்தினர் மாண்டனர். போராளிகளின் பார்வையில் இது வெற்றிகரமான தாக்குதல். ஆனால், இந்த தாக்குதலின் பின் சம்பந்தப்பட்ட போராளியுடன் அம்மானும் தலைவரை சந்திக்கப் போன போது தலைவர் கூறினார். இந்த சம்பவம் என்னைத்தலைகுனிய வைத்துவிட்டது. வீரர்கள் ஒரு போதும் எதிரியை நஞ்சுவைத்து, நயவஞ்சகமாக கொல்லமாட்டார்கள். நேருக்கு நேர் மோதியே வெல்வார்கள் என்பதை மிகுந்த கோபத்துடன் கூறித்திட்டினார். திட்டுவாங்கியபின், அந்த போராளிக்கு ஒரு மாத பங்கரும், பொறுப்பாளருக்கு கடும் திட்டும் கிடைத்தது. போரில் கூட தனக்கென ஒரு விதிமுறையை வைத்து, அதை போராளிகளிடம் எதிர் பாக்கும் தலைவர்.! இப்படி ஆயிரம் விடையங்கள் இருந்த போதும், பதிவின் நீளம் காரணமாக முக்கியமானவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.! இது தான் எங்கள் தலைவன். எதிரிக்கு கூட வீரமரணம் தான் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதிகொண்ட தலைவன்.! உறுதியில் உருக்கை ஒத்த குணம் கொண்ட போதும் மனத்தால் குழந்தை போன்றவர். நகைச்சுவைகளை ரசித்து மனம் விட்டுச்சிரிக்கும் அழகு தனியழகே.. ஒரு சிலரைத்தவிர தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு போதும் கண்ணால் காணாதபோதும், அன்புசெய்யும் ஒரு தலைவன், எமது தலைவன் மட்டுமே.!
நரிகளுக்கும், பச்சோந்திகளுக்கும், அவரை புரிந்துகொள்வது கடினமே.! பெருமையுடன் துரோணர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?