முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 332 இலங்கைக்கு உதவ வேண்டாம்

1 h · இலங்கைக்கு உதவ வேண்டாம் | இந்தியாவுக்கும் IMFக்கும் கடிதம் 1) இலங்கைக்கு உதவி வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி சர்வதேச நாணய நிதியத்துக்கும் இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2) தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் பாரிய நிதி மோசடிகளை செய்துள்ளது. மேலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கினால், அதுவும் ஊழல் செய்யப்படும். எனவே பொறுப்புக்கூறக் கூடிய அரசாங்கம் ஒன்று உருவானதன் பின்னர் அதன் ஊடாக உதவிகளை வழங்குங்கள் என்று ஹூல் தமது கடிதத்தில் கோரியுள்ளார்

c 331 புதிய வகை வைரஸ் தமிழர்களே கவனம்

தமிழர்களே கவனம்: ஈரலை வீங்க வைத்து சிறுவர்களை கொல்லும் புதிய வகை வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது – இந்த செய்தியை பகிருங்கள் கொரோனா வைரசின் தாக்கம் முடிவடையும் நிலையில், தற்போது உலகின் பல பாகங்களில் புது வகையான வைரஸ் ஒன்று பரவி வருகிறது. சிறுவர்களை தாக்கி அவர்களது ஈரலை வீங்க வைத்து பின்னர் செயல் இழக்க வைத்து கொல்லும் இந்த வரைஸ் தற்போது பிரித்தானியா, நோர்வே , டென்மார், தெனர்லாந்து பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் என்று பல நாடுகளில் பரவி வருகிறது. அதிலும் பிரித்தானியாவில் 114 சிறுவர் சிறுமியர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒருவர் இறந்துள்ளதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இந்த வைரசின் தாக்கத்தை முதலில்… கண்டு பிடித்தால் குணமடையச் செய்ய முடியும் என்றும். அதனால் பெற்றோர் விழிப்பாக இருப்பது நல்லது என்றும் பிரித்தானிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்கு ஹெப்ப டைட்டிஸ் 2 என்று பெயர் சூட்டியுள்ளார்கள். Source : Another TWO hepatitis-stricken children in the UK have needed liver transplants, health chiefs reveal as they urge parents to ‘be alert’ to signs

c 330 நால்வர் கொலை - ஒருவர் கைது

லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு நால்வர் கொலை - ஒருவர் கைது தெற்கு லண்டனில் உள்ள சவுத்வார்க்கில் நான்கு பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பெருநகர பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று அதிகாலை சவுத்வார்க்கில் உள்ள ஒரு குடியிருப்பிற்குள் இருந்து மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், "டெலாஃபோர்ட் வீதி, SE16 இல் உள்ள குடியிருப்பு முகவரியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆணின் மரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் கொல்லப்பட்டது தனக்கு மனவேதனை அளிக்கிறது என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 60, 40 மற்றும் 30 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களின் மரணத்தை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 20 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

c 329 உறுதி செய்த நிறுவனம்: இத்தனை கோடியா!

டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்! உறுதி செய்த நிறுவனம்: இத்தனை கோடியா! டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களுக்கு (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி ரூபா) வாங்கியுள்ளதாக அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. உலகின் பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிற்றரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முயன்று வந்தார். இதன்படி அவர் டுவிற்றர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்தார். மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்தார். முன்னதாக, எலான் மஸ்க் டுவிற்றர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், எலான் மஸ்கின் ஆஃபரை டுவிற்றர் நிர்வாகம் ஏற்றதாக தகவல் வெளியாகி இருந்தது. இதன்படி பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்க டாலர் என்ற கணக்கில் வழங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வாரத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் 44 பில்லியன் டாலருக்கு எல

c 328 உதவி வழங்க முன்வந்துள்ள மற்றொரு வெளிநாடு!

இலங்கைக்கு அவசர உதவியை வழங்க முன்வந்துள்ள மற்றொரு வெளிநாடு! அண்மைக்காலமாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நாடுகளின் உதவியை நாடி வருகின்றது. இதற்காக 125 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்குவதாக கொழும்பில் உள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அவசர உதவியை இத்தாலி வழங்குவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) இத்தாலிய இருதரப்பு அவசர நிதியத்தின் மூலம் இந்த பங்களிப்பு வழங்கப்படும் என்று தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சப்ளை செயின் மேனேஜ்மென்ட் செயல்முறைக்கு ஏற்ப சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்ட கொள்முதல் படி வெளிநாடுகளில் உள்ள சப்ளையர்களுக்கு நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கப்படும் என்று இத்தாலிய தூதரகம் மேலும் கூறியது. இந்த தகவலை இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா மன்னெல்லா (Rita mannella) தெரிவித்துள்ளார்.

c327 பதவி நீக்கம் செய்வதாயின், ஒரு வருட காலம்எடுக்கும்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதாயின், ஒரு வருட காலம் எடுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். அரச தலைவரது பதவி நீக்கம் தொடர்பில் டுவிட்டர் தள பயனாளியின் கேள்விக்கு, சுமந்திரன் இவ்வாறு பதிலளித்துள்ளார். குறித்த பதிவில், “அரச தலைவரை பதவி நீக்கம் செய்ய, எந்த அடிப்படையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் உண்மையென உச்ச நீதிமன்றம் கண்டறிந்தால், அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அதன் பின் பதவி நீக்கம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடத்தப்படும். அரச தலைவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை” என அவர் பதிவிட்டுள்ளார்.

c 326 உக்ரைனில் அமெரிக்கா தீட்டும் திட்டம்

உக்ரைனில் அமெரிக்கா தீட்டும் திட்டம் உக்ரைனில் ஏற்பட்ட இழப்புக்கள் மூலம் ரஷ்யாவின் தலைமைத்துவம் மீண்டும் இவ்வாறான யுத்தமொன்றுக்கு செல்லாது என நம்புவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொய்ட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார். சரியான ஆதரவை வழங்கினால் ரஷ்யாவிற்கு எதிரான யுத்ததில் உக்ரைனால் வெற்றிபெற முடியும் எனக் குறிப்பிட்ட லொய்ட் ஒஸ்ரின், உக்ரைன் இராணுவத்தின் முயற்சிகளையும் பாராட்டியுள்ளார். உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்ரின் ஆகியோரை உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உக்ரைன் அரசாங்கத்திற்கு அமெரிக்காவின் பலமான ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக தமது இந்த விஜயம் அமைந்துள்ளதாக அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜோ பைடனின் தலைமைத்துவம் மற்றும் தமது நாட்டிற்கு வழங்கிவரும் ஆதரவு தொடர்பில் உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் உக்ரைன் அதிபருடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க பாதுகாப்பு செய