முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 323 அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம்: மகிந்த ராஜபக்ச

அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம்: மகிந்த ராஜபக்ச பரபரப்பு கருத்து
இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தான் பொறுப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலைமைக்குத் தான் காரணம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச அரசு கூண்டோடு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அதனிடையே பிரதமர் மகிந்த ராஜபக்ச உடன் பதவி விலகி சர்வகட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பியின் கோரிக்கையும் ஆளும் கட்சிக்குள் பெரும் புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார் என்றும், இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் தனது தலைமையிலேயே மலரும் என்றும் நேற்று திட்டவட்டமாக அறிவித்திருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, இன்று "இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது" என்று கூறி திடீரென தனது பாணியை மாற்றியுள்ளார். கொழும்புச் செய்தியாளர் ஒருவருக்கு இன்று வழங்கிய குறுகிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, "எனக்குப் பதவி ஆசை அல்ல. ஆனால், என்னைக் குறிவைத்து சிலர் ஏன் பதவி விலகக் கோருகின்றனர் என்று எனக்குப் புரியவில்லை. எனினும், அவர்களின் குறுகிய கால சுயலாப அரசியல் எனக்குப் புரிகின்றது. இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. எனினும், தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு நான் பொறுப்பு அல்ல. அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலைமைக்கும் நான் காரணம் அல்ல. மக்களின் துயரங்களை நான் புரிந்துகொள்கின்றேன். எப்போதும் மக்கள் பக்கமே நான் நிற்பேன். மக்களின் மனநிலையை அறிந்துதான் ஒவ்வொருகட்ட நடவடிக்கையையும் நான் எடுத்து வருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?