முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 26 எதிரியை வைத்து எதிரியை அழிக்கும் புதிய திட்டத்தை உருவாக்கிய ரணில்,

தாயகம் யாழ்மாட்டத்தில் நல்லூர் விதியிலே நடைபெற்ற தியாககதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை சிங்கள புலநாய்வுக் கட்டமைப்பான ஐனப்போராளிகள் என்ற கட்டமைப்பின் உறுப்பினர்கள், அங்கே சென்று பிரதான பொதுச்சுடரை தட்டிவீழ்த்தி பாரிய குழப்பதை ஏற்படுத்திமையால், பலர் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர், இருந்தும் பொன் மாஸ்ட்டர் தலைமையில் மீண்டும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது, அதே வேளை அதே சிங்கள அரசாங்கத்தால் புணர்வாழ்வு அளிக்கப்பட சிலவிசமிகள் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 6.30 தியாகதீபம் திலீபன் அவர்களின் நிகழ்வு நடப்பதற்கு சில குறிப்பிட் நேரத்திற்கு முன்னர், facebook நேரலைவளியாகத்தோன்றி நிகழ்விற்கு செல்லும் பொது மக்களை குழப்பிய வண்ணம் இருந்தனர், இருந்தும் வழமையாகவரும் தேசிய உணர்வாளர்கள் வந்து சிறப்பான முறையில் தியாகதீபம் அவர்களின் நிகழ்வு நடைபெற்றது,

d 25 தொடரும் சிங்களக்கைக்கூலிகளின் தமிழர்கள் மீதான கொழ்ளை

தமிழர் பகுதியில் வீடுடைத்து பெருந்தொகை நகை திருட்டு (Photos) கிளிநொச்சி திருவையாறு 2 ஆம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களால் 17 பவுன் தங்க நகைகளும் 2 லட்சம் ரூபா பணமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவையாறு 2 ஆம் பகுதியில் உள்ள கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பவர் வீட்டிற்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையர்கள் முதியவர்கள் இருவரையும் கட்டி வைத்துவிட்டு பணம் நகைகள் எங்கே என விசாரித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். திருட்டு தமிழர் பகுதியில் வீடுடைத்து பெருந்தொகை நகை திருட்டு (Photos) | Kilinochchi Robbery Police Investigation பின்னர் வீட்டுரிமையாளரின் மனைவி அணிந்திருந்த சங்கிலி காப்பு உள்ளிட்ட நகைகளையும். இரண்டு இலட்சம் ரூபா பணத்தையும், கொள்ளையிட்டதுடன் வீட்டிலிருந்து தப்பிச் செல்லும் போது கைத்தொலைபேசிகளை எடுத்துக்கொண்டு வீட்டுரிமையாளரின் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுவிட்டனர். தாக்குதலுக்குள்ளான வீட்டுரிமையாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற

d 24 புலிகளின் அளிவிற்குப்பின்னர் தமிழர்களின் ஒட்டுமொத்த ஈழநாட்டை தங்களின் நாடு என உருமை கோரும் சிங்கள வெறியர்கள்,

தமிழ் மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் ; கொந்தளிக்கும் சரத் வீரசேகர (Video ) இது மிக மோசமான துஷ்ட செயல் எனவும் தமிழ் மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை முல்லைத்தீவு - குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போதே ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் இலங்கை ஒரு பௌத்த நாடு என தெரிவித்த அவர், குருந்தூர் மலை 2000 ஆம் ஆண்டுகள் பழமையானது எனவும் குறிப்பிட்டார். அத்தோடு குருந்தூர் விகாரையில் புனித தாதுவை பிரதிக்ஷ்டை செய்ய இடமளிக்காதது குறித்து முழு தமிழ் மக்களும் வெட்கப்படவேண்டுமெனவும் அவர் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

d 23 யாழில் இப்படியும் ஒரு சம்பவம்

யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்தவரின் உயிர் பிரிந்தது மதுவுக்கு பதில் ஓடிக்கொலோன் யாழ்ப்பாணத்தில் மதுபானத்துக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார். யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்தவரின் உயிர் பிரிந்தது | The One Who Drank Odicolone Was Death இலங்கையில் பொருளாதார நெருக்கடி இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமன்றி மதுபான வகைகளின் விலைகளும அதிகரித்துள்ளன.இதனால் மதுபானத்தை வாங்க முடியாத காரணத்தால் குறித்த குடும்பஸ்தர் ஓடிக்கொலோனை குடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் மதியம் இவர் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதில

d 22 இப்படியும் ஒரு பெண் இலங்கையில் இருந்துள்ளார், ஆனால் முள்ளிவாய்க்காலை நினைத்தால் எமக்கு கவலைதான்,

நாயை காப்பாற்ற தன்னுயிரை தியாம் செய்த பெண் பொலநறுவை பிரதேசத்தில் நாய் ஒன்றின் மீது ரயில் மோதப்போவதை அவதானித்த பெண் ஒருவர் நாயை காப்பாற்றிய போது அவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். அயல் வீட்டு நாயை காப்பாற்றிய போது ரயிலில் மோதுண்டமையினால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை, கதுருவெல பகுதியை சேர்ந்த இரேஷா பிரசாங்கனி என்ற 45 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழப்பு நாயை காப்பாற்ற தன்னுயிரை தியாம் செய்த பெண் | The Woman Who Sacrificed Her Life To Save The Dog கடந்த 17ஆம் திகதி காலை 8.30 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கதுருவெலயில் உள்ள அவரது குடியிருப்புக்கு அருகில் விபத்தில் சிக்கியுள்ளார். அயல் வீட்டவரின் வளர்ப்பு நாய் வீட்டின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடுவதைக் கண்ட பெண், அப்போது ரயில் சத்தம் கேட்டு ரயில் பாதைக்கு ஓடி நாயைக் காப்பாற்றியது விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் படுகாயமடைந்த பெண் பொலன்னறுவை பொது வைத்தி

d 21 குருந்தூர் மலை விவகாரம்: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

திருக்கோணேஸ்வரம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம்: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி "இலங்கை ஜனநாயக நாடு. இங்கு வாழும் சகல இனத்தவர்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் கிடைத்தே ஆக வேண்டும். எனவே, நாட்டில் இன ரீதியில், மத ரீதியில் எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் சகல தரப்பினருடனும் சுமுகமாக பேசி விரைவில் தீர்வு காண்போம்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரம் திருக்கோணேஸ்வரம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம்: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி | Everyone Has Equal Rights As Citizens Of Sri Lanka குருந்தூர் மலை விவகாரம் மற்றும் திருக்கோணேஸ்வரம் விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இடையில் எழுந்துள்ள கருத்து மோதல்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில் "இனவாத, மதவாத ரீதியில் கருத்துக்களை வெளியிடுவோர் நாட்டின் இன நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இனத்தவர்களும் தங்களுக்குரிய முழுமையான உரிமைகளைக் கோரி நிற்பார்கள்

d 20 அவுஸ்திரேலியாவில் மனோ கணேசன், சிங்களவர்கள் மத்தியில் உரையாற்ரினார்.

இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி சிங்கள - பெளத்த நாடு என்ற நிலையில் இருந்து, இலங்கை பன்மைத்துவ நாடாக சட்டரீதியாக மாற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். மெல்பேர்ன் நகரில் சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய மனோ கணேசன், அவுஸ்திரலியாவின் பன்மைத்துவ சூழலில் சந்தோஷமாக வாழும் நீங்கள், தாய்நாடு மாத்திரம், ஒரு மதம், ஒரு இனம் என்ற ஏகபோக சிங்கள பெளத்த நாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது சிற்சில இடங்களில் தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், மக்களும் இணைந்திருந்த போதிலும் பெரும்பாலும் சிங்கள மக்களின் போராட்டமாகவே அவை முன்னெடுக்கப்பட்டதாக மனோ கணேசன் கூறியுள்ளார். இலங்கையில் நாடு பூராவும் போராட்டங்கள் நடைபெற்ற போது, அதற்கு ஆதரவாக உலகெங்கிலும் உள்ள சிங்கள புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கினார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கள மக்களுக்கான பாரிய பொறுப்பு இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு முக்கிய செய்தி | Sinhala Buddhist Coun

d19 இலங்கையில் குழந்தைகளை பெற்று நோட்டில் எறியும் பெண்கள்,

பிறந்த குழந்தையை கைவிட்டு சென்ற பெண் கைது பிறந்த குழந்தையை பண்டாரகொஸ்வத்தை பிரதேசத்தில் குளத்திற்கு அருகில் மைதானத்தில் கைவிட்டுச் சென்ற பெண்ணை இன்று காலை கைது செய்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு அம்பியூலன்ஸ் வண்டியில் குழந்தையை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தையை கைவிட்டு சென்ற பெண் கைது | Woman Arrested For Abandoning Newborn Baby பெண்ணொருவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற போது குழந்தையின் அழு சத்தம் கேட்டுள்ளது. அப்போது தேடிப்பார்த்ததில் உர பைக்குள் போடப்பட்டிருந்த குழந்தையை அந்த பெண் மீட்டுள்ளார். இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து பொலிஸாருக்கு அறிவித்து அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்து குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

d 18 பிரான்ஸில்குழு மோதல் தமிழ் இளைஞன் பலி

பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிஸில் கொலை பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் | Sri Lanka Death In Paris இந்தத் தாக்குதலில் 24 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் 30 வயதான மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் | Sri Lanka Death In Paris இந்த கொலைச்சம்பவம் பழிவாங்கும் நோக்கத்தில் இடம்பெற்றிருக்கக் கூடும் என பாரிஸ் குற்றவியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

d 17 ஈரானில்மக்கள் போராட்டம்,

நாட்டையே உலுக்கிய இளம்பெண்ணின் மர்ம மரணம்! 50 பேர் பலி: போர்க்களமாகிய நாடு ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானில் 80 நகரங்களில் இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் அடங்குவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர் நாட்டையே உலுக்கிய இளம்பெண்ணின் மர்ம மரணம்! 50 பேர் பலி: போர்க்களமாகிய நாடு | 50 Killed Anti Hijab Protests Intensify Iran போராட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக ஈரானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் கறுப்பு உடை அணிந்து தெஹ்ரான் வீதிகளில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதன் காரணமாக பதற்ற நிலை அதிக

d 16 யாரும் எங்கே சென்றாலும் பிரச்சனையில்லை தமிழீழக்கொழ்கை மாறாமல் இருந்தால் காணும்

தேசிய பேரவையில் இணைந்த தமிழ் கட்சி தலைவர்கள் தொடர்பில் சாணக்கியன் விசனம் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.விவிக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது. கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தேசிய பேரவையில் இணைந்த தமிழ் கட்சி தலைவர்கள் தொடர்பில் சாணக்கியன் விசனம் | Shanakyan Tamil Party Leaders National Assembly பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றைய தினம் களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,“சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும். பயங்கரவாத தடை சட்டம் தேசிய பேரவையில் இணைந்த தமிழ் கட்சி தலைவர்கள் தொடர்பில் சாணக்கியன் விசனம் | Shanakyan Tamil Part

d 15 புலம்பெயர் தமிழர்கள் எக்காரணம் கொண்டும் இலங்கை செல்ல வேண்டாம் இந்நிலை உங்களிற்கும் வரலாம்?

யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை! யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மதிவதணன் லக்சாயினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமி நாடகமும், அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்கு பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை (21-09-2022) இருந்து வீடு திரும்பவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.தமிழர்கள் கடத்தப்பட்டு அவர்களின் உடல் உறுப்புக்கள் உயர்ந்த விலையில் வெளிநாடுகளிற்கு விக்கப்படுவதை பல முறை தெரிவித்துள்ளேன், அவதானமாகயிருக்கவும்,

d 14 ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மாபெரும் துரோகி என தமிழர்களால் கருதப்படும் கருணா மீண்டும் திரு வெளியில் .

நீண்ட காலத்தின் பின்னர் பொதுவெளியில் தோன்றிய கருணா -கோட்டாபய மீது கடும் விளாசல் நீண்ட காலமாக பொதுவெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த விநாயகமூர்த்தி -முரளிதரன்(கருணா) தற்போது பொதுவெளியில் வந்து கோட்டாபயவை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். எவரது ஆலோசனையையும் கேட்காமல் அவர் எடுத்த முடிவால் நாடு தற்போது அதலபாதாளத்திற்குள் சென்றுள்ளதாகவும் நாடு தற்போது எதிர் நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி சுமுக நிலைக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகளாவது செல்லுமெனவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலத்தின் பின்னர் பொதுவெளியில் தோன்றிய கருணா -கோட்டாபய மீது கடும் விளாசல் | Karuna Appeared In Public After A Long Time புதிய இளைஞர் அணி கருணா அம்மான் படையணி என புதிய இளைஞர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளோம். காரணம் அடுத்து வரும் காலம் இளைஞர்கள் கையில் கொடுக்க வேண்டும். இன்று எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை தூக்கிச் சென்று நாடாளுமன்றத்தில் அமர்த்த வேண்டும். நடக்க முடியாத நிலையில் நாடாளுமன்றம் சென

d 13 சிங்கள மற்றும் இந்தியா அரசோடு நெருங்கிய உறவில் இருந்த அதிபர் கைது .

சீன அதிபர் சிறைப்பிடிக்கப்பட்டாரா - வெளியானது உண்மை நிலைவரம் சதிப்புரட்சி மூலம் சீன அதிபர் கைது சதிப்புரட்சி மூலம் சீன அதிபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் நம்பத்தகாத செய்தி நிறுவனங்களால் இட்டுக்கட்டப்பட்டது என்றும் சீனத் தூதரகம், தெரிவித்துள்ளது. வடக்கு எல்லையில் சீன மற்றும் இந்திய படைகள் சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. சீன இராணுவ தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16-ம் திகதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போலியான செய்தி எனினும் அதிபர் ஜி ஜின்பிங் தனது மத்திய ஆசிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதாகவும்,

d 12 ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்சென்ற இலங்கையர்கள் பலர் கைது

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்சென்ற இலங்கையர்கள் பலர் கைது ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்குடன் ஹங்கேரி எல்லையூடாக தப்பிச்சென்ற 37 இலங்கையர்கள் உட்பட்ட 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருட்களை ஏற்றச்சென்ற மூன்று லொறிகளில் மறைந்து பயணித்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவது சம்பவத்தில், இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற லொறியில் இருந்து 35 பேர் கைதுசெய்யப்பட்டனர். துருக்கியர்கள் கைது அதேநேரம் போலந்துக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச்சென்ற இரண்டாவது லொறியில் மறைந்திருந்த நிலையில் 20 துருக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது லொறி வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு இத்தாலிக்கு பயணித்த நிலையில் அதில் இருந்து 15 பங்களாதேஸ் மற்றும் எத்தியோப்பியர்கள் கைது செய்யப்பட்டனர். ருமேனியா எல்லைப்படையினர், மோப்ப நாய்களின் உதவியுடனேயே எல்லைக்கடந்து சென்ற இலங்கையர்களையும் ஏனையோரையும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

d 11 இனங்களிற்கு இடைய முறுகலை ஏற்படுத்தும் சிங்களக் கைக்கூலிகள்,

வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை! வவுனியாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இளைஞர் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தியமையால் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் (22-09-2022) பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை! | Attack Tamil Youth Visit Muslim Girlfriend Vavunia இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெளுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு கூடி நின்ற குழு ஒன்று அந்த இளைஞர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன், அவரது தொலைபேசியையும் பறிமுதல் செய்து, மிரட்டி கடிதம் ஒன்றையும் பெற்றுள்ளது. வவுனியாவில் முஸ்லிம் காதலியை பார்க்க சென்ற தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த நிலை! | Attack Tamil Youth Visit Muslim Girlfriend Vavunia இந்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் நெளுக்குளம

d 10 இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள்!

சிறிலங்காவில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள்! சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அதிரடி நடவடிக்கை விசாரணை இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் காட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மோதலின் போது இடம்பெற்ற சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண இலங்கை மீது வலுவான தீர்மானத்தை கோருவதாக மீனாக்ஷி கங்குலி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டூழியங்களில் ஈடுபட்ட இந்திய இராணுவம் சிறிலங்காவில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள்! சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அதிரடி நடவடிக்கை | Indian Army Sri Lanka Should Investigate Ohchr இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய படையினர் போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதாக அனுப்பப்பட்டிருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் முறையாக விசாரிக்கப

d 9ஆரம்பத்தில் இந்த விடயத்தை தட்டிக்களித்து விட்டு ஒற்றை ஆட்சிக்கு தலையாட்டிய கூட்டம்,

தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கை உதாசீனம் - ஐ.நாவுக்கு அதிருப்தி கடிதம் பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகளே முக்கியமாக பிரேரணையில் உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கட்சித் தலைவர்கள், மனித உரிமைப் பேரவை பிரதான அங்கத்துவ நாடுகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில், 22 செப்டம்பர் 2011 புதன்கிழமை அன்று தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்களான மாவை. சேனாதிராஜா, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தர்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ந. சிறீகாந்தா ஆகியோர் ஒன்றிணைந்து ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவை வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். தமிழர் தரப்பின் கோரிக்கை உதாசீனம் தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கை உதாசீனம் - ஐ.நாவுக்கு அதிருப்தி கடிதம் | Un Sri Lanka Issue Icc Letter Tamil Leaders குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கைகள் அடங்கிய கடிதம் தங்களுக்கு ஏற்கனவே நாங்கள் அனுப்பி

d8 மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா)

மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அவர்களின் 36 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்– 22.09.2020. தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய பரமதேவா மட்டு.மண்ணின் முதல் மாவீரனின் 36 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 36 ஆம் ஆண்டு நினைவில், மட்டக்களப்பு மண் பெற்றெடுத்த மறத்தமிழ் வீரன், இந்தமண்ணில் விடுதலைத்தீயை மூட்டிய தமிழ்த்தேசிய் விடுதலைப்போராளி, ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த உன்னதமான இலட்சியத்தின் அடையாளம். வீறுகொண்டெழுந்த தன்னலமற்ற உண்மைப்போராளி. எரியும்தணலாக,அணையா விடுதலை நெருப்பின் தெந்தமிழீழத்தின் மூத்தபோராளி. மட்டக்களப்பின் தன்னலமற்ற தானைத்தளபதி லெப்.ராஜா (இரா.பரமதேவா) கிழக்குமண்ணில் எழுந்த தமிழின விடுதலை உணர்வு தற்கொடையின் உச்சத்தில் தமிழின நெஞ்சங்களைத் தொட்டுநிற்கின்றது.ஒவ்வொரு தமிழ்த்தேசிய உணர்வாளனும்,ஒவ்வொரு விடுதலை வீரனாக மாறினார்கள். சுமார் 6 தசாப்தகால விடுதலைப்போராட்டத்தில் தாயகமண் என்ற அடையாளம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்ததாகவே அரசியல் விடுதலை எழுச்சியிலும், ஆயுதவிடுதலைப் போர் எழுச்சியிலும் அமைந்திருந்தன

d 7 குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சல

விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos) விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று(22.09.2022) நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. நினைவஞ்சலி நிகழ்வு 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு தாக்குதலில் நாகர்கோவில் மகாவித்தியத்தின் 21 மாணவர்கள் பலியாகினர். அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான மாணவர்களுக்கு நினைவஞ்சலி(Photos) | Tribute To Students Air Force Bombing அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த சுந்தரலிங்கம் என்பவர் பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார். தொடர்ந்து நினைவுத் தூபிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மண்டபத்தில் 21 மாணவர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. சிவாஜிலிங்கத்தின் கருத்து

d6 யாழில் தூர் நடத்தை அதிகரிப்பு,

யாழில் பதின்ம வயது சிறுமியை சீரழித்த தாய்! தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமி நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழில் பதின்ம வயது சிறுமியை சீரழித்த தாய்! | Mother Who Spoiled The Teenage Girl அதேசயம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளது . சம்பவத்தில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

d 5 தொடரும் பெண்கள் நீதியானகொலை

சூட்கேசில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்! அதிர்ச்சி சம்பவம் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள 315 லின்வுட் தெருவில் (Linwood street) அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6வது தளத்தில் துர்நாற்றம் வீசப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூட்கேசில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்! அதிர்ச்சி சம்பவம் | Woman Body Found Dismembered In Suitcase New York சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மோப்ப நாய்களுடன் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சூட்கேசில் அழுகிய நிலையில் ஒரு சடலத்தின் துண்டுகள் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சூட்கேசில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்! அதிர்ச்சி சம்பவம் | Woman Body Found Dismembered In Suitcase New York தொடர்ந்து குடியிருப்புவாசிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் அடுக்குமாடி கு

d 4 அனைவரும் அந்த அடக்குமுறையை வெறுக்கின்றார்கள்,

மொட்டையடித்த தலையுடனும் கருப்பு ஆடையுடனும் நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன் - ஜெனீவாவில் பகிரங்கம்! காணாமல் போன கணவருக்காக சளைக்காமல் போராடியதற்காக சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், சிறிலங்கா குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்காத நாடு என சர்வதேச சமூகத்திற்கு முன் தெரிவித்துள்ளார். பன்னிரெண்டு வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வரும் சந்தியா எக்னலிகொட, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், "இன்று நீங்கள் காணும் எனது மொட்டையடிக்கப்பட்ட தலை மற்றும் கறுப்பு ஆடைகள், நான் குற்றவியல் சக்திகளுக்கு தண்டனை கிடைக்காத, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன் என்ற செய்தியை உங்களுக்கு வழங்குகிறது. முடிவில்லாத போராட்டத்தில் சந்தியா எக்னெலிகொட மொட்டையடித்த தலையுடனும் கருப்பு ஆடையுடனும் நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன் - ஜெனீவாவில் பகிரங்கம்! | United Nation Human Rights Session51 Eknaligoda வலுக்கட்டாயமாக காணாமல் ஆக

d 3 தியாகிகளை ஞார் வணங்கினாலும் நாம் அதை வரவேற்போம்

தியாகிகளை ஞார் வணங்கினாலும் நாம் அதை வரவேற்போம் ஆனால் தியாகிகளிற்குவிளக்கு ஏற்றி விட்டு 13 எங்களிற்கு காணும் என்றால் முதலில் நாங்கள் துரோகிகளாக மாறிவிட்டோம் என்பதை முதலில் அவர்கள் மக்களிற்கு வெளிப்பாடாகத் தெரிவிக்க வேண்டும், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..! அனைத்து தமிழ் உறவுகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு தியாக தீபம் திலீபனுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் அனைத்து தமிழ் உறவுகளும் செய்ய வேண்டும் என தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்புக்கும் அரசியல் கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் நடைபெற்றது. இதன் பின்னர் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் கூட்டாக ஊடக சந்திப்பை நடாத்தி இந்த கோரிக்கையை விடுத்தனர். எட்டப்பட்ட தீர்மானங்கள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்..! அனைத்து தமிழ் உறவுகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு | Thileepan Remembrance Day In Jaffna Nallur2022 ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட த

d 2 தயவு செய்து இலங்கைக்கு மனிதர்கள் எவரும் செல்ல வேண்டாம்,

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க சிங்கள அரசால் கிரமப் புற வறிய சிங்கள இளைஞர்களிற்கு பாலியல் உணர்வு ஊட்டப்பட்டது, அது இப்பொழுது நாடுபூராகப்பரவியுள்ளது, எனவே தயவுசெய்து அங்க எவரும்ே செல்ல வேண்டாம், யாழில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 10 பேர்..! ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் யாழில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 10 பேர்..! ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் | Spanish Woman Sexually Harassed In Jaffna காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அதுதொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்

d1 சிலந்திவலையில் சிக்குவார்களா சிக்கள வெறியர்கள்,

ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய 58 இராணுவ அதிகாரிகளுக்கு தடை - மனித உரிமைகள் பேரவை அதிரடி போர்க் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள 58 இராணுவ அதிகாரிகளை தண்டிக்கும் சர்வதேச பொறிமுறையை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வன்னி நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத் தளபதிகள் ஐரோப்பாவில் உள்ள 26 நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளுக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய 58 இராணுவ அதிகாரிகளுக்கு தடை - மனித உரிமைகள் பேரவை அதிரடி | Un Human Rights Council Ban On Military Officers ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றால் கைது அவ்வாறு குறித்த நாடுகளுக்குச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் சர்வதேச சட்டம் பொருந்தும் 100 நாடுகளுக்கு மனித உரிமைகள் பேரவையால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை கொல்லும் நடவடிக்கையை முன்னெடுத்த இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச பொறிமுறையானது விசாரணைக

c 1000 தென்னிலங்கையில் தொடரும் மனித முறன்பாடு கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடும் அரசபடை,

வழிப்பறி முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது குத்திக் கொல்லப்பட்ட இளைஞர் இலங்கையின் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற அதேவேளை, பொருளாதார நெருக்கடியானது அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அரச வங்கியில் மத்திய நிலை ஊழியராக பணிபுரியும் 29 வயதான ரஷிக வினோத் என்பவர், கடத்தல் முயற்சி ஒன்றை தடுக்க முயன்றதால் கொடூரமாக கொல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை (20) இரவு, கம்பஹா மாவட்டம் பஹலகமவில், தனது வீட்டு வாசலில் அபகரிப்பு முயற்சியை முறியடிக்க முயன்ற வினோத் உயிரிழந்தார். அவரின் மனைவியும், மனைவியின் நண்பியும் செவ்வாய்க்கிழமை (20) இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவரது மனைவி வீட்டிற்கு அருகில் வந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ரஷிகவின் மனைவியுடைய கைப்பையை பறிக்க முயன்றனர். வழிப்பறி முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது குத்திக் கொல்லப்பட்ட இளைஞர் | Man Stabbed To Death While Mugging Attempt மனைவியின் வருகைக்காக காத்திருந்த வினோத் இதன்போது, ரஷிக தனது தந்தையுடன் தனது மனைவி வீடு திரும்புவதற்காக வீட்டு வாசலில் காத்திரு

c 999 தமிழர்கள் இடையே கலவரத்தை தூண்டி வேடிக்கை பார்க்கும் சிங்களப் படை,

கிளிநொச்சியில் பயங்கர கலவரம்: குவிக்கப்பட்ட இராணுவம் கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் குடும்ப முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இரண்டு பேர் காயமடைந்த நிலையில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் பயங்கர கலவரம்: குவிக்கப்பட்ட இராணுவம் | Terrible Riot Kilinochchi Family Problem Army இந்த சம்பவம் பிரம்மனந்தாறு - கண்ணகிநகர் கிராமத்தில் நேற்று (21-09-2022) மாலை இடம்பெற்றுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு படையினர் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் பயங்கர கலவரம்: குவிக்கப்பட்ட இராணுவம் | Terrible Riot Kilinochchi Family Problem Army முன்னதாக கடந்த 19 ஆம் திகதி இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக தர்மபுரம் காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்தினர். இந்த கலவரத்தின் தொடர்ச்சியே நேற்றையதினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

c 998 வண்முறைகளிற்கு பின்னால் யார்? குழம்பும் கனடா,

கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் - மூவர் சம்பவ இடத்தில் பலி இருவேறு இடங்களில் கத்திகுத்து தாக்குதல் கனடாவின் ரொறன்ரோவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ரொறன்ரோவின் இட்டாபிகொக்கில் அமைந்துள்ள இஸ்லிங்டன் மற்றும் பெர்காமொட் ஆகிய வீதிகளுக்கு இடையிலும் மற்றும் ரொறன்ரோவின் ஜேன் வீதி மற்றும் டிரிப்வுட் வீதிக்கு அருகாமையிலும் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் - மூவர் சம்பவ இடத்தில் பலி | Another Stabbing Attack In Canada அதிகரிக்கும் தாக்குதல்கள் முதலாவது தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது சம்பவத்தில் இரண்டு பேர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த தாக்கு

c 997 ரணில் அவர்களின் காலத்தில் இலக்கு வைக்கப்படும் சிங்கள இளைஞர்கள் .

காணாமற்போன பல்கலை மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்ப ு அழுகிய நிலையில் மீடடகப்பட்ட சடலம் காணாமற் போன பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனே ஆற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த 16ஆம் திகதி முதல் குறித்த மாணவன் காணாமல் போயிருந்தததாக தெரிவிக்கப்படுகிறது. காணாமற்போன பல்கலை மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு | Missing University Student Body Recovered செயலிழந்த கைபேசி மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16ஆம் திகதி முதல் செயலிழந்திருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் அவரைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றால், அவரது சடலம் மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. காணாமற்போன பல்கலை மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு | Missing University Student Body Recovered இது தொடர்பில், மாணவனின் பெற்றோர் பேராதனை காவல்துறையில் முறைப்பாடு செய்ததையடுத்து, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்ப

c 996 முன்னால்போராளிகள் தொடர்வா தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எமது முன்னாள் போராளிகள் அரசியல் களத்தில்: க.துளசி தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது. ஜனநாயக வழியில் மக்களுக்காகப் போராட்டம் அவர்கள் இன்று ஜனநாயக வழியில் மக்களுக்காகப் போராட முன்வந்துள்ளார்கள். அவர்களின் அர்ப்பணிப்பை உணர்ந்து அவர்களுக்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். மக்களின் ஆணையே ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந்த பல இயக்கங்கள் ஜ