முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d298 தமிழர் பகுதியில் கவனக்குறைவான செயல்பாடுகள் அதிகரிப்பு?

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து: பரிதாபமாக உயிரிழந்த நபர்!
மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (23-12-2022) பிற்பகல் 6 மணியளவில் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து: பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Motorcycle Collided With A Patient Ambulance Death மல்லாவியில் இருந்து சிறுநீரக நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தனது செய்கை நிலத்தை பார்வையிட்டு, வீதியின் மறுபுறத்துக்கு மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது, நோயாளியுடன் வேகமாக பயணித்த நோயாளர் காவு வண்டி மோதியுள்ளது. மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து: பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Motorcycle Collided With A Patient Ambulance Death நோயாளர் காவு வண்டியின் சமிக்கைகளை அவதானிக்காது, சடுதியாக வீதியை கடக்க முற்பட்டுள்ளமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளர் காவு வண்டியில் பயணித்த நோயாளர் மற்றும் வைத்தியர் ஆகியோர் இன்னுமொரு நோயாளர் காவு வண்டியில் மாற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து: பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Motorcycle Collided With A Patient Ambulance Death விபத்தில் படுகாயமடைந்த நபர் 1990 இலக்க அவசர சேவை ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பார ஊர்திகள் சங்க முகாமையாளராக சேவையாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?