முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d233 தமிழர்கள் அவதானம்

குயின்ஸ்லாந்தில் mobile phone & seatbelt கமரா மூலம் 12 மாதங்களில் $159 மில்லியன் வருமானம்
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள mobile phone மற்றும் seatbelt கமராக்கள் மூலம், அம்மாநில அரசுக்கு கடந்த 12 மாதங்களில் 159 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தியவர்கள் மற்றும் உரியமுறையில் ஆசனப்பட்டி அணியாதவர்களைக் குறிவைக்கும் இக்கமராக்களில் ஒரு லட்சத்தி 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறிப்பிட்ட காலப்பகுதியில் அகப்பட்டுள்ளனர். இவர்களில் 119,862 பேர் வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தியிருக்கிறார்கள். 52,542 பேர் ஆசனப்பட்டி அணியவில்லை அல்லது சரியானமுறையில் அணியவில்லை. READ MORE Image for read more article 'READ MORE' மெல்பனில் மணித்தியாலத்திற்கு $700 வருமானமீட்டும் கமரா! Advertisement இப்புதிய தரவு அதிர்ச்சியளிப்பதாகவும், குயின்ஸ்லாந்து வாகன ஓட்டிகள் பலர் சாலை விதிகளை மீறுவதன்மூலம் தமது உயிர்களை அபாயத்திற்கு உட்படுத்துவதாகவும், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் Mark Bailey தெரிவித்தார். வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துவது 0.07-0.10 blood alcohol செறிவுடன் வாகனம் ஓட்டுவதற்கு ஒப்பானது என அவர் சுட்டிக்காட்டினார். Mobile phone மற்றும் seatbelt கமராக்கள் ஜூலை 26, 2021 இல் குயின்ஸ்லாந்து முழுவதும் செயல்படத் தொடங்கின, ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் 1 முதல்தான் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. இந்த கமராவில் அகப்படுபவர்களுக்கு $1,078 மற்றும் நான்கு demerit புள்ளிகள் அபராதமாக விதிக்கப்படும். குறித்த கமராக்கள் மூலம் திரட்டப்படும் அனைத்து வருவாய்களும், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 31 வரையான கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய சாலைகளில் 1,196 பேர் கொல்லப்பட்டதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன - இது முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?