முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 330 சீனாவிலிருந்து வருபவர்களை அவதானித்து வரும்ஆஸ்திரேலியா

சீனாவிலிருந்து வருபவர்களுக்கான கோவிட் விதிகள்: நிலைமையை அவதானித்து வரும் ஆஸ்திரேலியா
NSW மற்றும் விக்டோரியாவில் புதிய கோவிட் தொற்றுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன சீனாவிலிருந்து வரும் பயணிகளை ஆஸ்திரேலியா கண்காணிக்கும், ஆனால் இந்த நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை NYEக்கான கோவிட்-பாதுகாப்பு திட்டத்தை கொண்டிருக்குமாறு அதிகாரியகள் ஊக்குவிக்கின்றனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் இந்த வாரம் 27,665 புதிய கோவிட் தொற்றுகளுடன் மற்றொரு வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. இது கடந்த வாரம் 38,610 ஆக இருந்தது. மாநிலத்தில் கோவிட் தொடர்பிலான இறப்புக்களும் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த வாரம் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 78 ஆக இருந்தது. இதேபோல் விக்டோரியா இந்த வாரம் புதிய கோவிட் தொற்றுகள் மற்றும் கோவிட் இறப்பு ஆகிய இரண்டிலும் வீழ்ச்சியைக் கண்டது. Advertisement முந்தைய வாரத்தில் 24,238 தொற்றுகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தவாரம் 16,568 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த வாரம் 69 இறப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 100 ஆக இருந்தது. நாட்டிற்குள் கோவிட் தொற்றுகள் அதிகரித்துள்ள போதிலும் வெளிநாடுகளில் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை ஜனவரி 8 முதல் சீனா முடிவுக்குக் கொண்டுவருகிறது. ஜப்பான், இந்தியா, இத்தாலி மற்றும் தைவானில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டைப்போன்று, ஜனவரி 5 முதல் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்காவும் கட்டாய கோவிட் சோதனையை நடைமுறைப்படுத்தவுள்ளது. சீனாவிலிருந்து வருபவர்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு நிலைமையை "கண்காணித்து வருகிறது" எனவும் "சுகாதார ஆலோசனைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் பிரதமர் Anthony Albanese வியாழக்கிழமை Sunriseஇடம் தெரிவித்தார். "இந்த நேரத்தில், சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை." என்று பிரதமர் தெரிவித்தார். இந்த முடிவை தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly ஆதரித்தார். சீனாவில் பரவலை ஏற்படுத்தும் மாறுபாடுகள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பரவிவிட்டன என்று அவர் விளக்கினார். இருப்பினும், அரசு இவ்விடயங்களில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் மருத்துவ ஆலோசனைகள் வெளியிடப்பட வேண்டும் எனவும், எதிர்கட்சியின் குடிவரவு தொடர்பான பேச்சாளர் Dan Tehan , ரேடியோ நேஷனலிடம் தெரிவித்தார். "முந்தைய அரசு ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தாக அவர் சுட்டிக்காட்டினார். புத்தாண்டை வரவேற்பதற்கான நிகழ்வுக்குச் செல்லும்போது, கோவிட்-பாதுகாப்பு திட்டத்துடன் செல்லுமாறு அதிகாரிகள் மக்களை ஊக்குவிக்கின்றனர். உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் கோவிட் சோதனையை மேற்கொள்ளுங்கள். வெளியில் அல்லது நன்கு காற்றோட்டமான பகுதிகளில் ஒன்றுகூடுங்கள். சமூக இடைவெளியைப் பேணமுடியாத இடங்களில் முகக்கவசத்தை அணியுங்கள். தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அதேநேரம் வாய்வழி உட்கொள்ளும் கோவிட் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தகுதியுள்ளவரா என்பதைச் சரிபார்க்கவும். புத்தாண்டில் உங்கள் மருத்துவருடன் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், தேசிய கொரோனா வைரஸ் ஹெல்ப்லைனை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவை 24 மணிநேரமும், 7 நாட்களும் திறந்திருக்கும். மேலும் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு நீங்கள் தகுதியுள்ளவரா என்பதையும் கேட்டறியலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?