முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

e 263 இலங்கை மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா கவலை

  இலங்கை மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா கவலை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை  By Thulsi  6 நிமிடங்கள் முன்             Report விளம்பரம் இணைய பாதுகாப்பு சட்டமூலம் மற்றும்  பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்   ஊடாக  பொதுமக்களின் உரிமைகள்  பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று  அமெரிக்கத்  தூதுவர் ஜூலி சங் கோரிக்கை விடுத்துள்ளார் . இலங்கை அரசு இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில், தொழில்நுட்பத்துறையினர், சிவில் சமூகத்தினர் மற்றும் பல தரப்பட்ட நிபுணர்களின் கருத்தை உள்வாங்குவது அவசியம் என்றும்  அமெரிக்கத்  தூதுவர் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் . நிபுணர்களின் கருத்து இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சர்வதேச தரம் மற்றும் ஏனைய ஜனநாயக நாடுகளின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப திருத்தியமைக்க இலங்கை அரசு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றுமாறும்  அமெரிக்கத்  தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

e 262 இலங்கையில் குற்றச் செல்களில் ஈடுபடுபவர்களின் கைகளில் எப்படி ஆயும் சென்றது,

   ஆயுத க்  களஞ்சியம் மீட்பு!  By Shankar  2 மணி நேரம் முன்             விளம்பரம் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “கணேமுல்ல சஞ்சீவ” என அழைக்கப்படும் சஞ்சீவ குமார என்ற பிரபல குற்றக் கும்பலின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். விசாரணைகளின் போது சந்தேகநபரால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், பொலிஸாரால் 02 கைக்குண்டுகள், ஒரு மைக்ரோ சிறிய கைத்துப்பாக்கி, ஒரு ரிவோல்வர் மற்றும் 43 T-56 துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். குறித்த அயுதங்கள் நிட்டம்புவ மைம்புல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. "கனேமுல்ல சஞ்சீவ" செப்டம்பர் 13 ஆம் திகதி நேபாளத்திலிருந்து வந்திறங்கிய போது, ​​கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், பாதாள உலகப் பிரமுகரை விசாரிக்க, பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து 90 நாள் காவலில் வைக்கும் உத்தரவை பொலிஸார் பெற்றனர். படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் க

e 261 இலங்கையில் தற்கொலை செய்துகொண்ட 18 வயது இளைஞன்

  இலங்கையில் தற்கொலை செய்துகொண்ட 18 வயது இளைஞன்! அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி  By Shankar  1 மணி நேரம் முன்             விளம்பரம் தெல்தெனிய வைத்தியசாலையின் 5 அவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட 18 வயதுடைய இளைஞன் அலைபேசிக்கு அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அலைபேசியை கைப்பற்றியதையடுத்து கத்தியை எடுத்து தனது உடலின் பல பாகங்களை வெட்டியதால் படுகாயமடைந்து இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பன்வில கந்தேகும்புர பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ என்ற இளைஞனே ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்களை அலைபேசியுடன் தனியாக செலவிடுவதுடன்,தொடர்பு இல்லாமல் நேரத்தை கடத்துவதற்காக பல்வேறு காணொளி கேம்களுக்கு அடிமையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொள்ளவதற்கு முன்னர் குறித்த இளைஞன் தனது பெற்றோருக்கு, கடிதம் ஒன்றையும் எழுதியிருந்ததாகவும் அக்கடிதத்தில் தனது பெற்றோரை கடுமையாக குற்றம் சுமத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்ப

e 260 அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - C.V. Vigneswaran

மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் : சிறிலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை  By Vanan  2 மணி நேரம் முன்             விளம்பரம் இலங்கையில் சிங்கள பௌத்த மேலதிக்கத்தினால் நீதித்துறைக்கு ஏற்படுத்தப்படுள்ள கலங்கத்தை, சிறிலங்கா அரசாங்கம் கட்டுப்படுத்த தவறின், மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நீதித்துறையை சுயாதீனமாகச் செயற்பட வைக்கும் கடமை சிறிலங்கா அரசாங்கத்திற்கு காணப்படுவதாகவும், நீதிபதி விவகாரத்தில் முறையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். நேற்று(30) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சி.வி. விக்னேஸ்வரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பிரித்தானிய அரசியலில் மீண்டும் திருப்பம் அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக காணப்படுகின்றது. நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே, நீதியை நடைமுறைப்படுத்தும் நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே யாராவது நடந்து கொண்டால் உடனடியாக அவர்களுக்கு

e 259 மக்களின் நம்பிக்கையை இழந்த நீதித்துறை

  மக்களின் நம்பிக்கையை இழந்த நீதித்துறை இந்நாட்டில் உருவாகியுள்ளது: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  By Kajinthan  49 நிமிடங்கள் முன்             Report விளம்பரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா இந்நாட்டிலிருந்து வெளியேறிய என்னும் செய்தியானது நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளினை ஏற்படுத்தியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று(29.09.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்டமா அதிபரின் அழுத்தம் குருந்தூர் மலை வழக்கில் உண்மையினை நிலைநாட்டுவதற்காக நடுநிலையுடனும் நீதியுடனும் வழக்கினை விசாரித்து வந்த நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியமை என்பது அப்பட்டமாக இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது விழுந்த மற்றுமொரு கரும்புள்ளியாகும். நீதிபதி ரீ.சரவணராஜா மீளவும் பதவி திரும்ப அரசு வழிவகுக்க வேண்டும்: யா

e 258 மனிதர்களின் ஆரம்ப உருவாக்கத்தை அறிய விரும்பும் விஞ்ஞானிகள்,

  பூமிக்கு கொண்டுவரப்பட்ட விண்கல்லின் விஞ்ஞான விந்தை என்ன? பூமிக்கு கொண்டுவரப்பட்ட விண்கல்லின் விஞ்ஞான விந்தை என்ன? விண்ணில் எண்ணிக்கையற்ற விண்பாறைகள் சுற்றிக்கொண்டுள்ளன. இப்படி உலா வரும் விண் பாறை Asteroid இலிருந்து மிகப்பெரிய sample ஐ அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் NASA எடுத்துள்ளது. Asteroid என்ற விண்பாறை ஒன்றின் மேற்பரப்பிலிருந்து ‘மேற்பரப்பு மாதிரி’ surface sample ஒன்றை NASA விஞ்ஞானிகள் பெற்றுக்கொள்ளும் முயற்சியாக அவர்கள் 7 வருடங்களுக்கு முன்னரேயே விண்கலமொன்றை விண்வெளிக்கு அனுப்பியிருந்தார்கள். விண்ணில் உலாவரும் எண்ணற்ற asteroid களுள் ஒன்றான Bennu உருவாகி 4.5 billion அதாவது சுமார் 450 கோடிவருடங்கள் ஆகியிருக்கவேண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் அகலம் 510 மீட்டர்களாகும். பூமிக்கும் செவ்வாய்க்கிரகத்திற்கும் இடைப்பட்ட விண்வெளியில் இது சஞ்சரிக்கிறது. பூமிக்கும் இந்த விண்பாறைக்குமிடையேயான தூரம் ஏறக்குறைய 84 லட்சம் km ஆகும். 1999இல் இந்த விண்பாறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆறு வருடங்களுக்கு ஒருமுறை இது பூமிக்கு அண்மையில் வருகிறது.  மிகத்தொன்மையான இந்த asteroid இன் மேற்