முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 173உன்மையைவெளிப்படுத்தும் சிங்கள மக்கள் தேவையற்ற முள்ளிவாய்க்கால் சுத்தம் என்பதை இப்பொழுது கதைத்து என்ன பலன்?

 

நந்திக்கடலில் பிரபாகரனை விடுவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - நினைவு கூறும் மொட்டு எம்.பி

 By pavan 13 நிமிடங்கள் முன்நந்திக்கடலில் பிரபாகரனை விடுவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - நினைவு கூறும் மொட்டு எம்.பி | Ltte Last War Prabhakaran Alive
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

இறுதிக்கட்ட யுத்தத்தில் நந்திக்கடலில் அகப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ராஜபக்சர்கள் விடுவித்திருந்தால் சனல் 4 இன்று ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்பட்டிருக்காது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன்..! வெளிக்கிளம்பும் சதிப் பின்னணி(காணொளி)

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன்..! வெளிக்கிளம்பும் சதிப் பின்னணி(காணொளி)

சனல் 4 காணொளி

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் 2018.02.10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.


பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத் தாக்குதலின் பின்னர் கத்தோலிக்க, முஸ்லிம் சமூகத்தினர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை. இதனை எவரும் கதைப்பதில்லை.

அசாத் மௌலானா, சானியா பீரிஸ், நிஷாந்த டி சில்வா, லசந்த விக்ரமதுங்களின் சகோதரர் லால் விக்ரமசிங்க ஆகியோர் டொலர் பேராசையால் சர்வதேச மட்டத்தில் இருந்து கொண்டு நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள்.

புலம்பெயர் அமைப்புக்களின் உதவியை நாடும் சிறிலங்கா அரசாங்கம்: பிரச்சினையை தீர்க்க புதிய வியூகம்

புலம்பெயர் அமைப்புக்களின் உதவியை நாடும் சிறிலங்கா அரசாங்கம்: பிரச்சினையை தீர்க்க புதிய வியூகம்

இறுதிக்கட்ட யுத்தம்

இறுதிக்கட்ட யுத்தத்தில் நந்திக்கடலில் பிரபாகரன் அகப்பட்டபோது, அவரை விடுவிக்குமாறு சர்வதேசம் வலியுறுத்தியது. ஆனால் ராஜபக்சர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

ராஜபக்சர்கள் பிரபாகரனை விடுவித்திருந்தால் சனல் 4 இன்று ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்பட்டிருக்காது.

நந்திக்கடலில் பிரபாகரனை விடுவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - நினைவு கூறும் மொட்டு எம்.பி | Ltte Last War Prabhakaran Alive

ராஜபக்சர்கள் மீது வைராக்கியத்துடன் செயற்படுபவர்கள் டொலருக்கு அடிமையாகி செயற்படுகின்றனர். சனல் 4 காணொளிக்கு ஒரு சில ஊடகங்கள் முன்னுரிமை வழங்குகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பணத்தை மோசடி செய்து வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானா புகலிட கோரிக்கைக்காக கூறும் பொய்யை இந்த நாட்டு மக்கள் நம்புவார்களாயின் அனைவருக்கும் கடவுள் துணை புரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?