முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 226 திலீபன் உண்ணாவிரதம் இருந்து போரைத்தொடங்காமல் இருந்துயிருந்தால் இந்திய இராணுவம் இலங்கையில் நிரந்தரமாக இருந்து இருக்கும் இது மோட்டு சிங்களவனிக்குத்தெரியுமா?

 

சிங்களவர்கள் ஏன் போரை விரும்புகின்றனர்..!


சிங்களவர்கள் ஏன் போரை விரும்புகின்றனர்..! | Sri Lankan Tamils And Sinhalese Conflict
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தியாகத்தின் உச்சத்தை உலகிற்கு உணர்த்திய தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கின்றது.

அவரது நினைவைத் தாங்கிய ஊர்தி வடக்கு, கிழக்கு முழுவதும் பயணம் செய்துகொண்டிருக்கின்றது. இந்த ஊர்தியை ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மக்கள் வரவேற்கின்றனர்.

மலர் சாய்த்து அஞ்சிலிக்கின்றனர். வரலாறு தெரிந்த முதியவர்கள் அழுது – ஆறித் தம் கண்ணீரைத் தியாகி திலீபனுக்குக் காணிக்கையாக்குகின்றனர். வரலாறு தெரியாத இளையவர்கள் கடவுள் உலாவின்போது வெளிப்படும் பயபக்தியைத் திலீப ஊர்திக்குக் காட்டுகின்றனர்.

"மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்" வெளியாகிய கண்டண அறிக்கை

"மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்" வெளியாகிய கண்டண அறிக்கை

அகிம்சையைக் கட்டுப்படுத்த ஆயுதமே தேவை

இவ்வளவு ஆழமாகத் தன் வரலாற்றைப் பதித்துச் செல்லும் திலீபன் குறித்தும், அவரது அகிம்சை போர் குறித்தும் சிங்கள மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.


அவர்களைப் பின்னால் நின்று இயக்கும் இனவாத சக்தி அந்தப் பீதியுணர்வை போதித்திருக்கிறது. எனவே திலீபனுக்கு முந்தைய அகிம்சாவாதியான புத்தபெருமானைத் தம் கடவுளாகக் கொண்டியங்கும் அம்மக்கள், அகிம்சையைக் கட்டுப்படுத்த கூட ஆயுதமே தேவை என்பதை செயலாக்கிக்கொண்டிருக்கின்றனர்.

இதன் வெளிப்பாடாகவே தியாகி திலீபனின் நினைவைத் தாங்கிய ஊர்தி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

திலீப நினைவூர்தியோடு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீதும் தாக்குதல் நடத்த அகிம்சை மீது சிங்கள மக்கள் கொண்டிருக்கும் அச்சவுணர்வே காரணம்.

தீரா வேணவாக் கொள்ளக் காரணம் என்ன?

இவ்வாறு சிங்கள மக்கள் அகிம்சையை வெறுக்கவும், அகிம்சை மீது பயம்கொள்ளவும் – தமிழர்களோடு பொருதிக்கொள்ளத் தீரா வேணவாக் கொள்ளக் காரணம் என்ன?

சிங்களவர்கள் ஏன் போரை விரும்புகின்றனர்..! | Sri Lankan Tamils And Sinhalese Conflict

சிங்கள மக்களின் கடவுளான கௌதம சித்தார்த்தன் உலகிற்கு அகிம்சையைப் போதித்தார். உயிர்களிடத்தில் அன்பு காட்டுதலே உன்னத அறமென்றார்.

ஆனால் இனவாதப் போதையில் சிக்குண்ட சிங்களவர்களால் கௌதம புத்தரின் போதனைகளையே இதயச்சுத்தியுடன் பின்பற்ற இயலாது. அதற்குப் பிரதான காரணமே மகாவம்சப் போதனைகள்தான்.

தேராவாத பௌத்தத்தைச் சாராத அனைவருமே கொல்லப்படவேண்டியவர்கள். அவர்களைக் கொலை செய்பவர்கள் சொர்கத்திற்கு செல்வர் என்கிற அடிப்படைவாத சித்தாந்தத்தம் அவர்களை வெவ்வேறு வழிகளில் வழிநடத்துகின்றது.

அதன் வழியேநடந்துதான் தமிழர்களைக் கொன்றனர். கொல்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மீதான தாக்குதல்

அதற்கான களங்களை வலிந்து திறக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். அந்தக் களமுனையில் ஒன்றாகவே தமிழர்களது அகிம்சையின் அடையாளமான திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மீதான தாக்குதலை நடத்தினர்.

சிங்களவர்கள் ஏன் போரை விரும்புகின்றனர்..! | Sri Lankan Tamils And Sinhalese Conflict

ஓரினம் உயர்வாகக் கௌரவமளிக்கவேண்டிய தேசியக் கொடியை ஆயுதமாக்கினர். இவ்வாறு தமிழர்களை அடக்குமுறைக்குள்ளாக்குவது, சிங்கள மக்களை ஆளுவதற்கான அதிகாரத்தை இலகுவாக வழங்கும் என்கிற நம்பிக்கையும் அவர்களிடம் உண்டு.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த அரசியல் இதுவேதான். முஸ்லிம் வெறுப்பை விதைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், பின்னர் தமிழர் தமிழர் வெறுப்பை விதைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் சிங்கள மக்களின் ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு பகடையாட்டமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பெரும் பொருளாதார எழுச்சி

எனவேதான் ஆட்சியை இழந்த இனவாத சிங்கள அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போரை, அல்லது கலவரத்தை தம் ஆயுதமாகத் தெரிவுசெய்கின்றனர்.

சிங்களவர்கள் ஏன் போரை விரும்புகின்றனர்..! | Sri Lankan Tamils And Sinhalese Conflict

எவ்வித ஜனநாயக சிந்தனைகளுக்குள்ளும் பரிட்சயப்படாத சிங்கள மக்கள் இந்த ஆயுதத்தை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர். இந்த ஆயுதங்கள் அளிக்கும் போதைக்குத் தலைமுறைதலைமுறையாக அடிமையாகிவிடுகின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் திலீபன் தாக்கப்பட்டார். அகிம்சை அவமானப்படுத்தப்பட்டது. எத்தனை பெரிய அழிவுகள் வரினும் அத்தகைய அழிவுகளை நேரில் சந்தித்து, அதிலிருந்து சிறுகச் சிறுகச் சேமித்து மீண்டெழுவது தமிழர்களின் பண்பாட்டியல்பாக இருக்கின்றது.

போர், சுனாமி, மீண்டும் பெரும்போர், கொரோனா என அனைத்து அழிவுகளும் தமிழர்களைப் புரட்டியெடுத்தது.

ஒவ்வொரு அழிவின் பின்னரும் பூச்சியத்திலிருந்தே தமிழர்கள் தம்மை ஆரம்பிக்கவேண்டியிருந்தது. உழைப்பை மட்டுமே நம்பியவர்களால் அவர்தம் எண்ணம்போலவே விரைவாக மீளெழ முடிந்தது.

இந்த எழுச்சியின் சூட்சுமத்தை விளங்கிக்கொள்ளாத – கற்றுக்கொள்ளத்தவறிய சிங்கள மக்கள் போர்களை ஏவிவிடவும், கலவரங்களை ஏற்படுத்திவிடவும் திட்டமிட்டுக்கொண்டே இருந்தனர்.

1983 ஆம் ஆண்டு இனச்சுத்தீகரிப்பின்போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டவைகளுக்கு எந்தக் கணக்கும் இல்லை.

எந்தக் கணக்கெடுப்பும் இல்லை. எந்த நட்டஈடும் இல்லை. அதேபோல 2009 ஆம் ஆண்டில் வன்னி பெருநிலம் முழுவதும் தமிழர்கள் கைவிட்டு வந்த எந்த சொத்துக்களும் மீளவில்லை.

வீட்டுத் தலையணையைக்கூட கிழித்தெறிந்து பரிசோதித்த பின்னரே தமிழர்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். எனவே போர் தமிழர்களுக்கு அழிவைத் தந்தது என்றால், சிங்களவர்களுக்குப் பெரும் பொருளாதார எழுச்சியைத் தந்தது.

நிவாரணம், நன்கொடைகள் 

இத்தீவில் போர் அல்லது கலவரம் நீடித்திருப்பதை விரும்புவதற்கு இன்னொரு காரணம் நிவாரணம், நன்கொடைகள் ஆகும்.

சிங்களவர்கள் ஏன் போரை விரும்புகின்றனர்..! | Sri Lankan Tamils And Sinhalese Conflict

இலங்கை அரசாங்கம் ஏவிய எல்லா போர்களின்போதும், கலவரங்களின்போதும் தமிழர்கள் பெரும் பொருளாதாரத் தடையினை எதிர்கொண்டார்கள். ஆனால் சர்வதேச தொண்டு நிறுவனங்களும், ஆபத்துக்கு உதவும் நாடுகளும் இலங்கைக்கு போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிப்பதற்கென நன்கொடைகளையும், நிவாரணங்களையும் வாரி வழங்கின.

அந்த நிவாரணங்களும், நன்கொடைகளும் பிள்ளையைச்சாட்டி பூதம் தின்ற கதையாகவே முடிவுற்றது.

இந்நாட்டின் பெரும்பான்மையின மக்களான சிங்களவர்கள் இந்த நன்கொடைகளினாலும், நிவாரணங்களினாலும் நன்மையடைந்தார்கள். அவை உழைக்காமலே உயிர்வாழ்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுத்தது.

போர் இத்தீவில் தமிழர் கடத்தல்களை சாதாரணமாக்கியது. தமிழர்களைக் கடத்திவைத்துக்கொண்டு, கப்பம் கோருவதை ஒரு முறைசார் வியாபாரமாக்கியது. சர்வதேச அளவில் ஆட்கடத்தல்கள், கப்பம் கோருதல்கள் குற்றமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருப்பினும், இத்தீவில் அவை பெரியளவான குற்றங்கள் இல்லை.

அப்படியே ஆட்களைக் கடத்தி கைதுசெய்யப்பட்டாலும், அதற்கான தண்டனைகள் வலுவானவையாக இல்லை.

தமிழர்களைக் கடத்துபவர்கள், கடத்திக் கொல்பவர்கள் இந்நாட்டின் தேசியவீரர்களாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதனால், இந்தக் குற்றச்செயல்கள் அதலீடுபடுபவர்களுக்கு கௌரவத்தையும், பொருளாதார பலத்தையும், அரசியல் அதிகாரத்தையும் இலவசமாக வழங்குகின்றது.

இந்த வியாபாரம் தங்குதடையின்றி இடம்பெறுவதற்கு தமிழர் பகுதிகளில் பதற்றமான சூழல் ஒன்று தேவை. அந்தப் பதற்றச்சூழலை போர் அல்லது கலவரங்கள் உருவாக்கிக்கொடுகின்றன.

அரசியல் பண்பாடு 

சிங்களம் மட்டுமே முதன்மையானது என்கிற கோசத்தை முன்னிறுத்தும் அரசியலே சரியானது என்கிற சிந்தாந்தம் சிங்கள மக்களளது அரசியல் புரிதலின் நாளமாக இருக்கின்றது.

சிங்களவர்கள் ஏன் போரை விரும்புகின்றனர்..! | Sri Lankan Tamils And Sinhalese Conflict

தமது இனமும், தமது மொழியும், தமது பௌத்த மதமும் மட்டுமே இந்நாட்டின் அனைத்தையும் அனுபவிக்க உரித்துடையது. ஏனைய இனத்தவர்கள் தம்மால் அடக்கி ஆளப்பட படைக்கப்பட்டவர்கள் என்கிற பழமைவாத சித்தாந்தங்களால் இந்நாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

உலகம் ஜனநாயகத் தளத்திலும், மனித உரிமைகள் மேம்பாட்டு விடயத்திலும், வெறுப்பற்ற வாழ்க்கைச் சூழல் விடயத்திலும் இவ்வளவு தூரம் முன்னேறிவிட்டநிலையிலும் கூட இலங்கை அரசு வெளியிடும் ஒவ்வொரு அரசாரணையிலும், சிங்கள மொழிக்கே முதன்மை வழங்கப்படுகின்றது.

இந்நாடு அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு சட்டத்திலும், சிங்கள இனத்தவர்க்கும், தேராவாத பௌத்த்திற்குமே முதன்மையிடங்கள் வழங்கப்படுகின்றன. அரசின் இத்தகைய அடக்குமுறைப் போக்கை மிகச்சிறந்த முன்னுதாரணமாகக் கொண்ட சிங்கள மக்கள் ஏனைய இனங்களை அடக்குமுறைக்குள்ளாக்குவது, ஏனைய இனமக்கள் தம் அடிமைகள் என்கிற மனநிலையை தக்கவைத்துக்கொள்வதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்.

மனித குலத்துக்கு விரோதமான இந்த உளப்போக்கு, சமூக வலைதளங்களின் தலைமுறைகள் வரை பரவியிருக்கிறது. தமிழர்களை அடக்குமுறைக்குள்ளாக்குவதுதான் நாகரிகச் செயல் எனும் நிலைப்பாட்டோடு சமூகவலைதளங்களில் இயங்கும், கருத்திடும் சிங்கள இளையவர்கள் ஏராளம்.

எனவே ஏனைய இனத்தவரை சமமாக மதிக்காமை, சமவுரிமையளிக்காமை போன்றனவெல்லாம் இத்தீவில் தொடர்ச்சியாக இருக்கவேண்டும்.

அதுவொரு அரசியல் பண்பாடாக சந்ததி கடத்தப்படவேண்டும் என்பதை விரும்பும் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிரான போரை விரும்புகின்றனர். தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்காகக் காத்திருக்கின்றனர். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?